disalbe Right click

Friday, May 19, 2017

சங்க நிதி மோசடி - வழக்கு பதிவு செய்ய கோர்ட் உத்தரவு

சங்க  நிதி மோசடி - வழக்கு பதிவு செய்ய கோர்ட் உத்தரவு
மோசடியில் சங்க நிர்வாகிகள் : விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
திருநெல்வேலி: திருநெல்வேலியில், செஞ்சிலுவை சங்கத்தின் பெயரில், பண மோசடி செய்ததாக எழுந்த புகாரில், முந்தைய நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், 10 பேர் மீது, வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. திருநெல்வேலி மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் தலைவராக, பிரபாகர் என்பவர், பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார். இவரது காலத்தில், போலி ஆவணங்கள் மூலம் பணம் பெற்றுக் கொண்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
திருநெல்வேலியைச் சேர்ந்த, வழக்கறிஞர் பிரம்மா என்பவர், இது குறித்து, தகவலறியும் உரிமை சட்டத்தில், பல்வேறு தகவல்களை சேகரித்தார். அவற்றின் அடிப்படையில் ஊழல் நடந்திருப்பது தெரிய வந்ததால், போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தினர். இதனிடையே, கலெக்டர் கருணாகரன் உத்தரவின்படி, செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் பிரபாகர் உள்ளிட்டவர்கள், அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்த மோசடி குறித்து, போலீசார் விசாரிக்க வலியுறுத்தி பிரம்மா, நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, மாநில செஞ்சிலுவை சங்க தலைவர் மேத்தா, பிரபாகர் உட்பட, 10 பேர் மீது, நெல்லை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்க, மாஜிஸ்திரேட் ராமதாஸ் உத்தரவிட்டார்.
நன்றி : தினமலர் நாளிதழ் – 19.05.2017

No comments:

Post a Comment