disalbe Right click

Sunday, May 7, 2017

கார் இன்சூரன்ஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

கார் இன்சூரன்ஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
இந்தியாவில் கார் காப்பீடு கட்டாயமானதாகும். எனவே உங்களிடம் கார் இருந்தால், உங்களிடம் காருக்கான இன்சூரன்ஸூம் இருக்க வேண்டும். உங்கள் கார் ஒரு துரதிர்ஷ்ட வசமான விபத்தைச் சந்திக்கும் ஒரு நிகழ்வில், உங்கள் கார் காப்பீட்டுத் திட்டமானது உங்கள் காருக்கு ஏற்பட்ட சேதங்கள் மேலும் மூன்றாம் தரப்பினருக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான பழுது பார்ப்பதற்கான செலவுகளுக்குக் காப்பீடு அளிக்கக்கூடிய அளவிற்குப் போதுமானதாக இருக்க வேண்டும்.
3 வகைப் பாலிசிகள்
கார் காப்பீட்டில் மூன்று வகையான பாலிசிகள் உள்ளன, மேலும் ஒருவர் தனது தேவைகள் மற்றும் நோக்கங்களை எதிர்கொள்ளக்கூடிய திட்டத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம். அவை பின்வருகின்றன...
1. விரிவான காப்பீட்டுத் திட்டம்
இது பிரபலமான காப்பீட்டுத் திட்டமாகும் இந்தத் திட்டமானது காப்பீட்டுதாரருக்கு விரிவான காப்பீட்டுப் பாதுகாப்பை அளிக்கிறது. இந்தத் திட்டத்தில் வழங்கப்படும் காப்பில், ஒரு விபத்தினால் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைப்பதற்கு ஆன செலவுகளைத் திருப்பிக் கொடுத்துவிடும் திட்டம், விபத்தினால் ஏற்பட்ட காயங்களுக்கு ஆகும் மருத்துவச் சிகிச்சைகளுக்கான செலவுகளுக்கு நஷ்டஈடு செலுத்தும் காப்பு, வாகனம் திருடப்பட்டால் அதற்கான நஷ்ட ஈட்டைச் செலுத்தும் காப்பு, மற்றும் பாலிசிதாரரால் நிகழ்ந்த விபத்தினால் எழுந்த மற்றொரு நபரின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிருக்கு ஆபத்து மற்றும் அங்கங்களுக்குக் காயம் ஆகியவற்றிற்கு மூன்றாம் தரப்புப் பொறுப்பு காப்புறுதி ஆகியவை அடங்கும்.
2. மூன்றாம் தரப்புப் பொறுப்பு காப்பீட்டுத் திட்டம்:
மூன்றாம் தரப்புப் பொறுப்புக் காப்பு இந்தியாவில் கட்டாயமாகும். இது மற்றொரு மூன்றாம் தரப்பு நபருக்கோ அல்லது அவரின் சொத்துக்கோ உங்கள் காரினால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது காயங்களுக்குக் காப்பீடளிக்கிறது.
3. வாகன மோதலுக்கான காப்பீடு:
இந்தக் காப்பீடு பாலிசிதாரருக்கு அவரது சொந்த காருக்கு விபத்தினால் ஏற்படும் சேதங்களுக்கு எதிராகப் பாதுகாப்பு அளிக்கிறது. இருப்பினும், இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் வாகனத்தைக் காழ்ப்புணர்ச்சியால் செய்யப்படும் வன்முறை சேதங்கள் அல்லது திருட்டு ஆகியவற்றிலிருந்து காப்பீடு அளிக்கப்படுவதில்லை.
உங்கள் தேவைக்கேற்ப தேர்ந்தெடுங்கள் எனவே, ஒருவரின் எந்தத் தேவைகள் மற்றும் நோக்கங்களுக்காக வாகனம் பயன்படுத்தப்படுகிறது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும் பிறகு உங்களுக்கு எந்த வகைக் கார் காப்பீட்டுத் திட்டம் மிகவும் பொருத்தமானது என்பதை முடிவு செய்யுங்கள்.
Written by: Mr. Prasanna VK
நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » 02.05.2017

No comments:

Post a Comment