disalbe Right click

Saturday, June 24, 2017

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை விதிகள் வெளியீடு

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை விதிகள் வெளியீடு
சென்னை: தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை விதிகளை, அரசு வெளியிட்டு உள்ளது. மத்திய அரசின், ரியல் எஸ்டேட் சட்டத்திற்கேற்ப, தமிழக அரசு விதிகளை உருவாக்கி வெளியிட்டுள்ளது.
ஒழுங்குமுறை குழுமத்தின் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை தேர்வு செய்யும் வரை, வீட்டு வசதி செயலர்,குழுமமாக செயல்படுவார். குழுமத்தின் அலுவலகம், சென்னை, எழும்பூரில் உள்ள, சி.எம்.டி.ஏ., அலுவலகத்தின், மூன்றாம் தளத்தில், தற்காலிகமாக இயங்கும் என, அரசு அறிவித்துள்ளது.
முக்கிய அம்சங்கள்:
500 சதுர மீட்டர் நிலப்பரப்புள்ள, அனைத்து கட்டட மனை விற்பனைதிட்டங்கள் மற்றும் முகவர்கள், கட்டாயம்குழுமத்தில் பதிவு செய்ய வேண்டும். இவ்விதிகள், தற்போதைய திட்டங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் அனைத்திற்கும் பொருந்தும்.
குழுமத்தில் பதிவு செய்யாமல், எந்த கட்டட மனையையும், விற்பனை செய்ய முடியாது.
ஒவ்வொரு மேம்பாட்டாளரும், தன் திட்டத்திற்கான நிலத்தில், எவ்வித வில்லங்கமும் இல்லை; சட்டப்பூர்வ உரிமை தனக்கே உண்டு என்பதற்கான, உறுதிமொழி பத்திரம் அளிக்க வேண்டும். அத்திட்டம் நிறைவு பெறும் காலத்தையும் குறிப்பிட்டு, பிரமாண பத்திரத்தில் சான்றளிக்க வேண்டும்.
எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் இல்லாமல், ஒதுக்கீட்டாளரிடம் இருந்து, திட்ட மதிப்பீட்டில், 10 சதவீதத்திற்கும் மேல், பணம் பெறக்கூடாது. அப்பத்திரத்தில், அதன் மொத்த மதிப்பையும் குறிப்பிட்டு பெற வேண்டும்.
ஒதுக்கீட்டிற்கு பின், ஐந்து ஆண்டுக்குள், கட்டுமானத்திலோ, வேலைப்பாட்டிலோ, தரத்திலோ, சேவையிலோ குறைபாடு காணப்பட்டால், அதை மேம்பாட்டாளர், தன் சொந்த செலவில், 30 நாட்களுக்குள் சரி செய்து தர வேண்டும்.
இந்த சட்டத்தின் கீழ், பல்வேறு அபராதங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீட்டில், 10 சதவீதம் அபராதம் அல்லது மூன்றாண்டு சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 24.06.2017

No comments:

Post a Comment