disalbe Right click

Monday, June 5, 2017

லோக் ஆயுக்தா ஏற்படுத்த இதுவரை செய்தது என்ன?

லோக் ஆயுக்தா ஏற்படுத்த இதுவரை செய்தது என்ன?
சென்னை: ஊழல் புகார்களை விசாரிக்கும், 'லோக் ஆயுக்தா' அமைப்பை, தமிழகத்தில் ஏற்படுத்தக் கோரிய வழக்கில், அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனு: பார்லிமென்டில், மத்திய அளவில் லோக்பால், மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்புகளை ஏற்படுத்துவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை, இந்த அமைப்புகள் விசாரிக்க முடியும். 20 மாநிலங்களில், லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்பட்டு விட்டது.

தமிழகம் உட்பட, சில மாநிலங்களில் இன்னும் ஏற்படுத்தவில்லை. எனவே, தமிழகத்தில் லோக் ஆயுக்தா ஏற்படுத்தவும், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான, கூடுதல் அட்வகேட் ஜெனரல் இது குறித்து, அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய, நான்கு வாரங்கள் அவகாசம் கோரினார்.

இதையடுத்து, நான்கு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி, அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஜூலை, 10க்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

நன்றி : தினமலர் நாளிதழ் - 06.06.2017





No comments:

Post a Comment