disalbe Right click

Sunday, July 16, 2017

நேரடியாக ஹைகோர்ட்டில் கிரிமினல் புகாரை பதிவு செய்யலாம்!

நேரடியாக ஹைகோர்ட்டில் கிரிமினல் புகாரை பதிவு செய்யலாம்!
நேரடியாக வழக்குப்பதிவு செய்ய எங்களை அணுகாதீர்கள்! என்று முன்பு சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதில் கிரிமினல் புகாரை பதிவு செய்ய உயர்நீதிமன்றத்தை அணுகலாம்! என்று தற்போது சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது பற்றி தினமலர் நாளிதழில் 16.07.2017 அன்று வந்த செய்தி தங்கள் பார்வைக்காக கீழே தரப்பட்டுள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் பழைய உத்தரவும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
*********************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி  
நன்றி : தினமலர் நாளிதழ் - 16.07.2017
***************************************************************************
28.09.2016 அன்று ஹைகோர்ட் டைரக்‌ஷன் பற்றி தினமலர் நாளிதழில் வெளிவந்த செய்தி
சென்னை: 'ஒரு புகாரின் மீது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, நேரடியாக உயர் நீதிமன்றத்தை அணுகுவது ஏற்புடையதல்ல' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
போலீஸ் நிலையங்களில் அளித்த புகார்களை, பதிவு செய்ய உத்தரவிடும்படி, தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது, வழக்கறிஞர் ஒருவர், ''உச்ச நீதிமன்றம், ஒரு வழக்கில், சட்ட அம்சங்களை வரையறுத்துள்ளது;
அதன்படி, போலீஸ் அதிகாரிகள், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஆகியவற்றை அணுகிய பின் தான், உயர் நீதிமன்றத்தை அணுக முடியும்,'' என்றார்.
இதையடுத்து, உயர் நீதிமன்றத்தை நேரடியாக அணுகுவது குறித்து, மூத்த வழக்கறிஞர்கள், அரசு குற்றவியல் வழக்கறிஞர் மற்றும் வழக்கறிஞர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
ஒரு குற்றம் தொடர்பாக, யார் புகார் அளித்தாலும், அதை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள போலீஸ் நிலைய அதிகாரிகள் பெற வேண்டும். ஆரம்ப விசாரணை நடத்த விரும்பினால், சி.எஸ்.ஆர்., எனப்படும், சமூக பணி பதிவேட்டின் நகல் வழங்க வேண்டும். 
புதுச்சேரி என்றால், அதற்கென தனி ரசீது வழங்க வேண்டும்
.ஆரம்ப விசாரணைக்கு பின், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தேவையில்லை என்றால், புகாரை முடித்து வைத்ததற்கான அறிக்கை நகலை வழங்க வேண்டும்.
அந்த அறிக்கையை பெற்ற பின், புகார்தாரர் விரும்பினால், மாஜிஸ்திரேட்டிடம் மனு தாக்கல் செய்யலாம்; 
அந்த மனு மீது, போலீசார் விசாரணை நடத்தும்படி, மாஜிஸ்திரேட் உத்தரவிடலாம்.
புகாரை பெற, போலீஸ் நிலைய அதிகாரி மறுத்தால், பதிவு தபாலில், எஸ்.பி., அல்லது துணை ஆணையருக்கு அனுப்ப வேண்டும். 
அவர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டை அணுகலாம்.
புகாரை பெற்ற பின், 15 நாட்களுக்குள், மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்;
 அதன் நகல், புகார் மனுவின் நகலை, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியின் விசாரணைக்காக, மாஜிஸ்திரேட் அனுப்ப வேண்டும்.
உத்தரவுக்கு பின், ஒரு வாரத்துக்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை என்றால், அந்த போலீஸ் அதிகாரி மீது, மாஜிஸ்திரேட் நடவடிக்கை எடுக்கலாம்; 
உயர் நீதிமன்றத்தை, புகார்தாரர் அணுகலாம்.
ஆரம்பகட்ட விசாரணையை, ஆறு வாரங்களில் போலீசார் முடிக்கவில்லை என்றாலும், உயர் நீதிமன்றத்தை புகார்தாரர் அணுகலாம்.
 உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தவறினால், அந்த அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்; 
அது மட்டுமல்லாமல், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 28.09.2016

No comments:

Post a Comment