disalbe Right click

Monday, July 17, 2017

அரசு சட்டக் கல்லூரிகளில் தமிழ்வழிக் கல்வி

அரசு  சட்டக் கல்லூரிகளில் தமிழ்வழிக் கல்வி
அரசு சட்டக் கல்லூரிகளில் தமிழ்வழியில் படிப்பு: கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு
அரசு சட்டக் கல்லூரிகளில் இந்த ஆண்டு முதல் தமிழ்வழியில்சட்டப்படிப்புகள் தொடங்கப்பட வுள்ளன. இதனால் கிராமப்புற மாணவர்கள் சட்டம் படிக்க நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த கல்வி ஆண்டில் (2017-2018) செங்கல்பட்டு, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய அரசு சட்டக்கல்லூரிகளில் தமிழ் வழியில் சட்டப்படிப்புகள் தொடங்கவுள்ளன. இதன்மூலம் மாணவர் கள் பாடத்தை எளிதாக புரிந்து கொள்ள முடியும். கிராமப்புற மாணவர்களுக்கும் இது உதவி யாக இருக்கும். மேலும் திருச்சி, கோவை, நெல்லை போன்ற இடங்களில் உள்ள சட்டக் கல்லூரி களிலும், 3 மற்றும் 5 வருட சட்டப்படிப்பு தமிழ்வழியில் தொடங்கப்படவுள்ளது. அந்த கல்லூரிகளில் தலா 60 இடங்கள் ஒதுக் கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு சட்டக் கல்லூரியில் ஐந்து வருட சட்டப்படிப்புக்கு மட்டும் தமிழ் வழியில் அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து செங்கல்பட்டு சட்டக் கல்லூரி முதல்வர் என்.தேவநாதன், ‘தி இந்துவிடம் கூறியதாவது:
240 இடங்கள் கொண்ட இந்த கல்லூரியில், சட்டப் பாடங்கள் அனைத்தும் ஆங்கில வழியில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு தமிழ்வழியில் சட்டப் படிப்பு தொடங்கப்படுகிறது. வழக்கறிஞர் தொழிலின் மீதான கவர்ச்சி மாணவர்களிடையே குறையாமல் உள்ளது. சட்டப் படிப்புக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நல்ல வரவேற்பு உள்ளது. சென்னை, மதுரை சட்டக் கல்லூரிகளில் மட்டும் தமிழ்வழியில் சட்டப்படிப்பு இருந்தது.
தற்போது செங்கல்பட்டு உள்ளிட்ட பிற சட்டக் கல்லூரிகளில் இந்த ஆண்டு தமிழ்வழியில் சட்டப்படிப்பு தொடங்கப்படவுள்ளது. இதனால் கிராமப்புற மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் கல்லூரி வளர்ச்சிக் காக தமிழக அரசு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இக்கல்லூரியில் முதன்முறையாக கணினி குற்றங்கள் தொடர்பாக முதுகலைபட்டப்படிப்பும் தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பெ. ஜேம்ஸ்குமார்
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 18.07.2017



No comments:

Post a Comment