disalbe Right click

Sunday, October 22, 2017

சொத்து மதிப்பீட்டாளருக்கு அங்கீகாரம்: அரசாணை வெளியீடு

சொத்து மதிப்பீட்டாளருக்கு அங்கீகாரம்: அரசாணை வெளியீடு
புதுடில்லி : தனி­­பர்­கள் மற்­றும் நிறு­­னங்­கள், சொத்துமதிப்­பீட்­டா­­ராக பதிவு செய்து, அங்­கீ­கா­ரத்­து­டன் தொழில் செய்­­தற்­கான அர­சா­ணையை, மத்­திய அரசு வெளி­யிட்டு உள்­ளது
Insolvency and Bankruptcy Board of India 
இதன்­படி, .பி.பி.., எனப்­படும், இந்­திய திவால் ஒழுங்­கு­முறை வாரி­யத்­தில், மதிப்­பீட்­டா­ராக பதிவு செய்து, ஒரு நிறு­­னத்­தின் சொத்­து­கள், பங்­கு­கள், கடன் பத்­தி­ரங்­கள், கடன்­கள் உள்­ளிட்­­வற்றை மதிப்­பீடு செய்­யும் தொழி­லில் ஈடு­­­லாம்இவ்­வாறு பதிவு செய்­வோர், அங்­கீ­கா­ரம் பெற்ற, மதிப்­பீட்டு நிறு­­னங்­கள் கூட்­­மைப்­பி­லும், உறுப்­பி­­ராக பதிவு செய்ய வேண்­டும்
மதிப்­பீட்­டா­ளர் பணிக்­கான தகு­தி­கள், சொத்து மதிப்­பீட்டு கல்வி திட்­டம், பயிற்சி மையங்­கள் உள்­ளிட்­டவை தொடர்­பான விதி­மு­றை­கள், 2017ம் ஆண்­டின் நிறு­­னங்­கள் சட்­டத்­தில் இடம் பெற்­றுள்ளனதற்­போது, சொத்து மதிப்­பீட்டு பணி­யில் ஈடு­பட்­டுள்ள தனி­­பர்­கள், நிறு­­னங்­கள், கூட்டு நிறு­­னங்­கள் ஆகி­யவை, 2018 மார்ச், 31க்குள், .பி.பி..,யில் பதிவு செய்து, அங்­கீ­கா­ரத்­து­டன் தொழில் செய்­­லாம்.
இந்த புதிய நடை­முறை, 18ம் தேதி முதல் அம­லுக்கு வந்­துள்­ளது. இருந்த போதி­லும், ஏற்­­னவே மதிப்­பீட்டு சேவை­யில் ஈடு­பட்­டுள்­ளோர், பதிவு செய்­யா­மலே, தொடர்ந்து தொழில் புரி­­லாம். அவர்­கள், பதிவு செய்து கொள்­­தற்கு, 2018 மார்ச் இறுதி வரை அவ­கா­சம் ­உள்ளது. ‘மதிப்­பீட்­டா­ளர் துறைக்­கான கண்­கா­ணிப்பு மைய­மாக, .பி.பி.., அமைப்பை      நிய­மிக்­கும் அர­சாணை, தனியே வெளி­யி­டப்­படும்என, மத்­திய நிறு­வன விவ­கா­ரங்­கள் அமைச்­­கம் தெரி­வித்­துள்­ளது.

 நன்றி : தினமலர் நாளிதழ் - 22.1.2017
சொத்து மதிப்பீட்டாளரின் வேலை என்ன?
ஒரு காலி மனையையோ அல்லது ஒரு வீட்டையோ வாங்கும்போது அதனை மதிப்பீடு செய்வது மிகவும் முக்கியமானது. ஒரு சொத்தின் மதிப்பீடு என்பது, அந்த  சொத்தினை வாங்க இருப்பவரும், அந்த சொத்தை விற்க இருப்பவரும் சேர்ந்து அதனைப் பற்றி விவாதித்து ஒரு தொகைக்கு வாங்கவோ, விற்கவோ ஒப்புக் கொள்வது ஆகும். இந்த சூழ்நிலையில் அந்த சொத்தின் மதிப்பு வாங்குபவருக்கோ அல்லது விற்பவருக்கோ தெரியவில்லை என்றால்,   இருவரும் சேர்ந்து  ஒரு சொத்து மதிப்பீட்டாளரை அணுகலாம்.
எதனை வைத்து கணக்கிடுவார்கள்?
சொத்து மதிப்பீட்டாளர் அந்த சொத்து அமைந்துள்ள மனையின் மதிப்புகட்டிடம் இருந்தால் அதன் மதிப்பு, அதில் உள்ள வசதிகள் மற்றும் இதர அம்சங்கள் ஆகிய நான்கு விஷயங்களைக் கொண்டு அந்த சொத்தின் மதிப்பைக் கணக்கிட்டுக் கூறுவார்.
காலி மனையின் மதிப்பு அப்போதுள்ள சந்தை மதிப்பைக் கொண்டு அவர் கணக்கிடுவார். கட்டிடத்தைப் பொறுத்தவரை, அது எத்தனை சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது?, எந்த ஆண்டு கட்டப்பட்டது?சுவர்களின் அகலம், அதன் உறுதித் தன்மை, இன்னும் எத்தனை வருடங்களுக்கு அந்தக்  கட்டிடம் உறுதியாக இருக்கும், அந்த கட்டிடத்தைக்  கட்டிய கட்டுநர் போன்றவற்றை வைத்து அவர் அதன் மதிப்பைக் கணக்கிடுவார். 
தேய்மானச் செலவு எவ்வளவு தெரியுமா?
பொதுவாக ஒரு கட்டிடத்தின் மதிப்பானது, அது கட்டப்பட்ட வருடத்திலிருந்து ஒவ்வொரு வருடத்திற்கும் சுமார் ஒன்றரை சதவீதம் அதன் மதிப்பு குறைந்து கொண்டே வரும்.  ஒரு கட்டிடம் கட்டி 10 வருடங்கள் ஆகி இருந்தால், அதன் மதிப்பிலிருந்து 15 சதவீதம் தேய்மான மதிப்பாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.. குறிப்பாக 10 வருடத்திற்கு முன் ஒரு கட்டிடம் கட்ட ரூ.50 லட்சம் செலவாகி இருந்தால், தற்போது அந்த கட்டிடத்தின் உத்தேச மதிப்பு ரூ.42 லட்சத்து 50 ஆயிரம் எனக் கணக்கிடலாம்.
அதற்கு அடுத்தது, அந்த கட்டிடம் வீடாக இருந்தால், அதில் உள்ள வசதிகள். உள் அறைகளில் உள்ள அலங்கார வேலைப்பாடுகள்சமையலறை ,  மர சாமான்கள், இரும்பு ஜன்னல்கள், பூஜை அறை, வாசல் கதவுகள், மின் மோட்டார்கள், காம்பவுண்டு சுவர்  உள்ளிட்ட அம்சங்கள் கணக்கிடப்படும்.  இவைகளுக்கும் மேற்கண்ட 15 சதவீத தேய்மானம் உண்டு. இதனையே Present Worth  என்கிறோம்.
இதைத் தவிர, அந்த மனை அமைந்துள்ள இடமானது கோவில், பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், முக்கிய சாலைகள், பேருந்து நிறுத்தம் ஆகியவற்றிற்கு அருகில் இருந்தால் -Present Worth ஐவிடச் சற்று அதிகமாகவும்,  தெருவுற்கு நேராக இருந்தாலோ அல்லது கிணறு மற்றும் பள்ளத்திற்கு எதிரில் இருந்தாலோ, பொதுக் கழிப்பிடம், மீன் மார்க்கெட், மதுபானக்கடை, பம்பிங் ஸ்டேஷன், பெரும் சப்தம் வரக்கூடிய தொழிற்சாலை, தூசிகள் பரப்பும் தொழிற்சாலை ஆகியவற்றின் அருகிலேயோ, தாழ்வான பகுதியிலேயோ இருந்தாலோ Present Worth- விடச் சற்றுக் குறைவாகவே மதிப்பீடு செய்யப்படும். கையில் ரொக்கமாக பணம் வைத்துக் கொண்டு வீடு வாங்குவதாக இருந்தால் இத்தனை அம்சங்களையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஏதாவது ஒரு வங்கியின் மூலம் கடன் பெற்று வீடு வாங்குவதாக இருந்தால், மேற்கண்ட அனைத்து நடைமுறைகளையும் அந்த வங்கி நிர்வாகமே மேற்கொள்ளும் ஒவ்வொரு வங்கியிலும் இதற்கெனவே  மதிப்பீட்டாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
எவ்வளவு கட்டணம்?
சொத்து மதிப்பீட்டாளர்கள்ரூ.1 கோடி மதிப்புள்ள வீட்டை மதிப்பிட சுமார் ரூபாய் பத்தாயிரமும், சுமார் ரூபாய் ஐம்பது லட்சம் மதிப்புள்ள ஒரு வீட்டை மதிப்பீடு செய்வதற்கு சுமார் ரூபாய் ஏழு ஆயிரமும் கட்டணமாக பெறுகிறார்கள் என்றும், ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை மதிப்பீடு செய்ய முதல் கோடி ரூபாய்க்கு பத்தாயிரமும், அதன் பின் வருகின்ற ஒவ்வொரு கோடிக்கும் ஐந்து ஆயிரம் வீதம், மொத்தம் ரூபாய் முப்பத்து ஐந்து ஆயிரம் வசூலிக்கிறார்கள் என்றும் தெரிய வருகிறது..
************************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி 

No comments:

Post a Comment