disalbe Right click

Friday, November 24, 2017

தமிழ்நாட்டில் பொதுமக்களின் முக்கியச் சான்றாவணமான பிறப்பு, இறப்பு சான்றிதழ்களைப் பெறுவதற்கு உரிய கட்டணங்களை தமிழ்நாடு அரசு  20 முதல் 50 மடங்கு உயர்த்தியுள்ளது.
பிறப்பு, இறப்பு சான்றிதழ்களைப் பெற பொது மக்கள் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக விண்ணப்பிக்கின்றனர். இதற்கு குறைந்தபட்ச கட்டணமாக இரண்டு ரூபாய் மட்டுமே பல ஆண்டுகளாக வசூலிக்கப்பட்டதுஇந்த நிலையில், அந்த கட்டணத்தை பல மடங்குகள் உயர்த்தி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது




ஷை அரசாணையின்படி  
பிறப்பு  மற்றும் இறப்புகளை 21 நாட்களுக்கு மேல், 30 நாட்களுக்குள் காலதாமதமாக பதிவு செய்தால், 2 ரூபாய் பழைய கட்டணம் வசூலிக்கப்பட்டதற்கு பதிலாக 100 ரூபாய் வசூலிக்கப்படும்.
 பிறப்பு  மற்றும் இறப்புகளை பதிவு செய்வதற்கு 30 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டால், ஒரு வருடத்திற்குள் 200 ரூபாய் செலுத்தி  ஆணையாளர் அனுமதியும் பெற வேண்டும். இதற்கு, கட்டணத்தொகையாக முன்பு, 5 ரூபாய்தான்  வசூலிக்கப்பட்டது.
 பிறப்பு  மற்றும் இறப்புகளை ஒரு வருடத்திற்குப் பிறகு  பதிவு செய்பவர்கள், 500 ரூபாய் கட்டணம் செலுத்தி வருவாய் கோட்டாட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். இதற்கு, முன்பு 10 ரூபாயாக இருந்த கட்டணத்தொகை, தற்போது 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
 பிறந்த குழந்தையின் பெயரை பதிவு செய்ய ஒரு ஆண்டிற்கு மேல் என்ற போது, பதிவு கட்டணம், 5 ரூபாயாகத்தான் இருந்தது.  தற்போது, 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
 பிறப்பு, இறப்பு சான்றிதழ் மற்றும் பதிவில்லா சான்றிதழைப் பெறுவதற்கு தேடுதல் கட்டணமாக, ஒரு வருடத்திற்குள் என்றால், 2 ரூபாய்தான் முன்பு பெறப்பட்டது. தற்போது, அதற்கு 100 ரூபாய் வரை வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
 கூடுதலாக ஒவ்வொரு வருடத்திற்கும், 5 ரூபாய் கட்டணத்திற்கு பதிலாக, 100 ரூபாய் பெறப்படும். பிறப்பு, இறப்பு சான்றிதழின் நகல் வழங்க கட்டணம், 5 ரூபாயாகத்தான் இருந்தது. அது தற்போது, 200 ரூபாயாகவும், கூடுதலாக ஒவ்வொரு நகலுக்கும், 200 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.  
 பதிவில்லா சான்றிதழ் வழங்க பெறப்பட்ட, 2 ரூபாய் கட்டணத்துக்கு பதிலாக, 100 ரூபாய் பெறப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனால் பொது மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு இரண்டரை மடங்கு ஊதிய உயர்வு கொடுத்ததை சரிக்கட்ட இது போன்று பொதுமக்களிடம் இருந்து பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாகவே அனைவரும் கருதுகின்றனர்.
************************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி 

No comments:

Post a Comment