disalbe Right click

Sunday, November 26, 2017

காவல் துறை அழைக்கிறது (3)

சிறப்பு மதிப்பெண்கள்: (என்சிசி, என்எஸ்எஸ் மற்றும் விளையாட்டு சான்றிதழ்கள்): இதில் என்சிசிக்கு 2 மதிப்பெண்களும், என்எஸ்எஸ்க்கு 1 மதிப்பெண்ணும் மற்றும் விளையாட்டு துறையில் சாதனைகளுக்கு 2 மதிப்பெண்களும் என மொத்தம் 5 சிறப்பு மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் என்சிசில் சேர்ந்திருந்து ஓராண்டு உறுப்பினர் என்றால் 1/2 மதிப்பெண்ணும், பி சான்றிதழ் பெற்றிருந்தால் 1 மதிப்பெண்ணும், சி சான்றிதழ் பெற்றிருந்தால் 2 மதிப்பெண்களும் வழங்கப்படும். நீங்கள் என்எஸ்எஸ்சில் பங்கு பெற்றிருந்தால் 1/2 மதிப் பெண்ணும், என்எஸ்எஸ் திட்டத்தின் தலைவர் / சிறந்த மாணவர் என்றால் 1 மதிப்பெண்ணும் வழங்கப்படும்.
விளையாட்டுச் சான்றிதழ்கள் பள்ளிசார்பாக பள்ளிகளுக்கு இடையே கல்வி மாவட்டங்கள் நடத்தும் போட்டியில் கலந்துக்கொண்டவர்கள், கல்லூரி சார்பாக கல்லூரிகளுக்கு இடையேயான மண்டல போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு 1/2 மதிப்பெண்ணும், பல்கலைகழகங்கங்கள் சார்பாக பல்கலைகழகங்களுக்கு இடையே நடைபெறும் போட்டிகள் கலந்து கொண்டவர்கள் மற்றும் மாவட்டங்கள் சார்பாக மாவட்டங்களுக்கு இடையேயான போட்டியில் பங்கு பெற்றவர்களுக்கு 1 மதிப்பெண்ணும், மாநிலத்தின் சார்பாக மாநிலங்களுக்கு இடையேயான போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் மற்றும் தேசத்தின் சார்பாக சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு 2 மதிப்பெண்களும் வழங்கப்படும்.
மருத்துவத் தேர்வு எழுத்துத் தேர்வு, உடல்திறன் தேர்வு மற்றும் சிறப்பு மதிப்பெண் ஆகியவற்றில் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலி இடங்களுக்கு வகுப்புவாரி விகிதாச்சாரத்தின்படி தகுதியானவர்கள் மட்டுமே மருத்துவ தேர்வு மற்றும் காவல் விசாரணைக்கு தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குனர், சென்னை4 அவர்களால் அழைக்கப்படுவர். அப்போது விண்ணப்பதாரருக்குசிறு ஊனங்கள், கண்பார்வை, இதய துடிப்பு, காசநோய் உட்பட பல மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படும். இதில் லேசர் சிகிச்சை மூலம் கண் பார்வை பெற்றிருந்தால் அது செல்லதக்கதல்ல.
மருத்துவத் தேர்வில் தகுதி பெறாதவர்களுக்கு முதல் மருத்துவகுழுமத்தின் அறிக்கையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய 3 மாதகால அவகாசம் வழங்கப்படும். இரண்டாவது மருத்துவகுழுமத்தால் அளிக்கப்படும் அறிக்கையே முடிவானதாக கருதப்படும். இறுதி பட்டியலில் தேர்வு செய்யப்படுவதற்கான மதிப்பெண் இலக்கு ஆண்டுக்கு ஆண்டு வேறுபடும். இறுதிகட்டமாக பணிநியமண ஆணை பதிவு தபால் மூலமாக விண்ணப்பதாரரின் முகவரிக்கு அனுப்பப்படும்.
விளையாட்டுத் துறைக்கான ஒதுக்கீடு மற்றும் விண்ணப்பிக்கும்போது   கவனிக்கவேண்டிய நடைமுறைகள் 
விளையாட்டு துறையில் சிறந்து விளங்குபவர்கள் (ஆண், பெண்), விளையாட்டுக்கான ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க வேண்டும். இந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்பவர்களும் மற்றவர்களை போலவே எல்லா தகுதிகளும் பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவு அல்லது விளையாட்டுக்கான ஒதுக்கீடு ஆகிய இரண்டில் ஒன்றில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இரண்டிலும் விண்ணப்பிக்க கூடாது.
இந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்பவர்கள், கூடைப் பந்து, கால்பந்து, ஹாக்கி, கைப்பந்தாட்டம், எறிபந்தாட்டம், கபடி, மல்யுத்தம், குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், ஜூடோ, பளுதூக்குதல், நீச்சல், தடகளம், குதிரையேற்றம் ஆகிய 14 விளையாட்டுகளில் ஏதாவது ஒன்றில் சர்வதேச அளவிலான போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகள் அல்லது
பல்கலைக்கழகங்கள் அளவிலான போட்டிகள் ஆகியவற்றில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் அல்லது பங்கு பெற்றிருக்க வேண்டும்.
வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து 5 ஆண்டுகளுக்கு முன் வரை இவர்கள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்பவர்களும், எழுத்துத் தேர்வு, உடல்கூறு அளத்தல், உடல்தாங்கும் திறன் தேர்வு, உடல்திறன் தேர்வு ஆகியவற்றில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற வேண்டும் என்கிற தேர்வு விதி பொருந்தும். இவர்களுக்கு விளையாட்டுப் போட்டித் தேர்வுகள் எதுவும் நடத்தப்படாது.
சர்வதேச அளவில் நடைப்பெறும் போட்டிகளில் கலந்துகொண்டதற்கான அல்லது வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்
Form-1
தேசிய அளவில் நடைப்பெறும் போட்டிகளில் கலந்துகொண்டதற்கான அல்லது வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்
Form-2.
பல்கலைகழகங்களுக்கு இடையே நடைப்பெறும் போட்டிகளில் கலந்துகொண்டதற்கான அல்லது வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்
Form-3
விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள், எழுத்துத் தேர்வு, உடல்திறன் தேர்வு மற்றும் சிறப்பு மதிப்பெண் ஆகியவற்றில் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலி இடங்களுக்கு வகுப்புவாரி விகிதாச்சாரத்தின்படி தேர்வு செய்யப்படுவார்கள்.
பொதுஅறிவு மற்றும் உளவியல் தேர்வுத்தொடர்பான அறிவுரைகள் போலீஸ் தேர்வில் மிக முக்கியமானது எழுத்துத்தேர்வு. எழுத்துத்தேர்வு மட்டும் மொத்த மதிப்பெண்ணான 100க்கு 80 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. காவலர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முதன் முதலில் நடத்தப்படுவதும் எழுத்துத்தேர்வுதான். இதில் குறிப்பிட்ட மதிப்பெண் பெற்றால் மட்டுமே உடல்திறன் தகுதித்தேர்வுக்கு செல்ல முடியும். உடல்திறன் தேர்வில் 15க்கு 15 மதிப்பெண் எடுத்திருந்தால் கூட, எழுத்துத்தேர்வில் மதிப்பெண் குறைந்தால் காவலர் பணியில் சேர முடியாது.
நல்ல திடமான உடல் கட்டு உடையவர்கள் போலீஸ் வேலை கிடைக்காமல் ஏமாந்து போவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும். இதை உணர்ந்து எழுத்துத் தேர்விற்கு திட்டமிட்டு படித்தால் நிச்சயமாக போலீஸ் வேலை கிடைக்கும்.
எழுத்துத்தேர்வை பொறுத்தவரை பொது அறிவு, உளவியல் தேர்வு ஆகிய இரண்டு தாள்களை கொண்டது. இரண்டு தாள்களும் ஒரே நாளில் நடைபெறும். அப்ஜெக்டிவ் டைப் எனப்படும் கொள்குறி வகை முறையில் கேள்விகள் அமைந்திருக்கும். இது குறித்த விவரங்களை ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன். கீழ்காணும் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
- சைலேந்திர பாபு .பி.எஸ்.,
(தொடரும்

No comments:

Post a Comment