disalbe Right click

Tuesday, December 12, 2017

முதல் தகவல் அறிக்கை

ஒரு புகார் மனு மூலம் காவல்துறையில் புகார் அளிக்கிறோம். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய மறுக்கிறார்கள். இது பற்றி உயர் காவல் அதிகாரியிடம் புகார் செய்கிறோம். அவர்களும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க குற்றவியல் நடைமுறை சட்டம் 156(3)ன் கீழ் உத்தரவிடுமாறு நீதிமன்றம் செல்கிறோம். குற்றவியல் நடுவர் நீதிமன்றம், (தகுந்த முகாந்திரம் இருந்தால்) அந்தப் புகாரை காவல்துறை விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடும். அது போன்ற ஒரு உத்தரவில், முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தெளிவாக குறிப்பிடாவிட்டாலும், காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று கீழே கண்ட வழக்கில்  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Police to register FIR, even if Magistrate directs investigation under S.156 (3) of Cr.P.C.

Absence of direction for registration of  Duty of police,  Where Magistrate does not direct police in explicit words to register FIR but directs for investigation u/s. 156(3) Cr.P.C., police should register an FIR - Because S. 156 falls within Chap. XII which deals with powers of police officers to investigate cognizable offences.
Case:*Hamant Yashwant Dhage Vs. State of Maharashtra* 2016 ALL MR (Cri) 1360(S.C.)

 நன்றி : முகநூல் நண்பர் திரு  Adv Muthusamy 

No comments:

Post a Comment