disalbe Right click

Thursday, December 14, 2017

ஆளில்லா ட்ரோன் விமானங்கள்

நான்கு மூலைகளில் எதிர் எதிர் புறத்தில் சுழல்கின்ற நான்கு இறக்கைகள் ஒரு பொருளை மேல் எழும்பச் செய்யும் என்ற அடிப்படை விதியின் கீழ்தான் இந்த வகையான குட்டி விமானங்கள் உருவாக்கப்படுகின்றன. வேவு பார்க்க என்று ஆரம்பித்த இந்த அரிய வகை விமானங்களின் மூலமாக வேவு பார்க்க, புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்க, அத்தியாவசியப் பொருட்களை மிக அவசரமாக ஒரு இடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு அனுப்ப மற்றும் மலர்களில் மகரந்த சேர்க்கை ஏற்படுத்த என்று பல பயன்களை நாம் பெற்று வருகின்றோம்.
ட்ரோன் விமானங்கள் பற்றிய வீடியோவை காண இதனை https://youtu.be/rGK6Bpc8pH0 கிளிக் செய்யுங்கள்.
இன்றைய ராணுவத்தில் உயர் ரக இயந்திர துப்பாக்கிகளை ஏந்தி சென்று, எதிரிகளின் தளத்தை தாக்கும் ட்ரோன்கள் மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. அதே நேரத்தில் இதனை தீவிரவாதிகளும் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளதை நாம் யாரும் மறுக்க முடியாது.
நமது நாட்டிலும் ட்ரோன்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். சினிமாத் துறையில்ஏரியல் ஷாட்என்று சொல்லக்கூடிய வானத்தில் இருந்து எடுக்கும் காட்சிகள் ட்ரோன் கேமராக்களை வைத்துதான் எடுக்கப்படுகிறது. இதனால், சினிமாத் தயாரிப்பாளர்களுக்கு நேரமும், செலவும் மிகவும் குறைகின்றது. வசதியான வீட்டுத் திருமணங்களிலும்கூட இந்த ட்ரோன் காமிராக்கள் பயன்படுத்தப்படுகின்றது.



இங்கிலாந்து நாட்டில் உயிருக்கு ஆபத்தான நிலையில் விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிப்பதற்குப் பதிலாக, தேவைப்படுகின்ற மருந்தை அந்த இடத்திற்கு ட்ரோன் விமானம் மூலம் அனுப்பி அங்கேயே சிகிச்சையை அளிக்கிறார்கள்.
இது பற்றிய வீடியோவைக் காண இதனை https://youtu.be/y-rEI4bezWc கிளிக் செய்யுங்கள். 
இந்த ட்ரோன் விமானங்களின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் ஆகும்.
சமீபத்தில் நமது தமிழ்நாட்டில் கோவையில் .டி.எம் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த வடமாநில கொள்ளையர்கள் சிலர் இன்று நாமக்கல்லில் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் அருகிலுள்ள சோளக்காட்டிற்குள் பதுங்கியிருந்த கொள்ளையர்ளை ட்ரோன் கேமிராவைப் பயன்படுத்திதான் போலீஸார் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..
 ************************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி 14.12.2017

No comments:

Post a Comment