disalbe Right click

Monday, January 29, 2018

போக்குவரத்து காவலர்கள் பணி

தமிழ்நாடு காவல் ஆணையர் .கே.விஸ்வநாதன் அவர்கள் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்களை அழைத்து தானே நேரடியாக ஆலோசனை வழங்கி, போக்குவரத்து  காவலர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை நேற்று வழங்கியுள்ளார்.
போக்குவரத்து  காவலர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள்
1. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாயிண்டில் நியமிக்கப்பட்ட இடத்தில் நின்று பணி  முடியும் நேரம் வரை அலுவல் புரிய வேண்டும். நியமிக்கப்பட்ட இடத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்லக்கூடாது. அவ்வாறு செல்லும் பட்சத்தில் உதவி ஆய்வாளர் அனுமதி பெற்று வேறு ஒருவரை அந்த இடத்தில் நிற்க வைத்துவிட்டுத்தான் செல்ல வேண்டும்.
பாயிண்டில் நிற்பவரை தவிர வேறு இடத்தில் உள்ள காவலர்கள் ஒரே இடத்தில் சேர்ந்து நின்று கொண்டு அலுவல் புரிய கூடாது. சுத்தமான சீருடையில் பணிக்கு வரவேண்டும்.
2. பாயிண்ட் அலுவலின் போது செல்போனில் குறுந்தகவல்களை அனுப்பிக்கொண்டோ அல்லது பேசிக்கொண்டோ இருக்ககூடாது. தவிர்க்க முடியாத முக்கியமான அழைப்பாக இருந்தால் மட்டும் சிறிது நேரத்தில் பேசி முடித்து விட்டு பணியாற்ற வேண்டும். நீண்ட நேரம் கைப்பேசியில் பேசிக்கொண்டிருக்க கூடாது.
3. காவலர்கள் சாதாரண  உடையிலோ, சீருடையிலோ இருசக்கர வாகனத்தில் செல்லும் போது கட்டாயம் ஹெல்மேட் அணிய வேண்டும். இதை மீறிச்சென்றால் உயர் அதிகாரிகள் தணிக்கையின் போது கடும் நடவடிக்கை இருக்கும்.
4. காவலர்கள் தன்னிச்சையாக வாகனங்களை நிறுத்தி ஆவணங்களை தணிக்கை செய்யக்கூடாது.  போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மீது பி-டயரி (B,diary) வழக்குகள் பதிவு செய்து காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் விதி மீறும் வாகனங்களை துரத்தி பிடிக்க கூடாது.
5. J,walk- ஜெ.வால்க் பணியாற்றும் காவலர்கள் பாதசாரிகளை விசில் ஊதித்தான் சைகையில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும். பாதசாரிகள் சுரங்கப்பாதையை உபயோகிக்காமல் சாலையை கடக்கும் போது விசில் ஊதி அவர்களை ஒழுங்குப்படுத்த வேண்டும்.
6. காவல் ஆணையர் உத்தரவுப்படி மாலை 6 மணிக்கு மேல் பாயிண்ட் அலுவலில் உள்ள காவலர்கள் ரிஃப்லக்ட் ஜாக்கெட், மற்றும் மிளிரும் விளக்கு கொண்டு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பு : J,walk என்றால் என்ன? Jay walk என்ற வார்த்தையையே சுருக்கி J,walk என்று குறிப்பிடுகிறார்கள். J,walk என்றால் பாதசாரிகள் நடக்க தடைசெய்யப்பட்ட சாலையில் பொதுமக்களை வழிநடத்துகின்ற போக்குவரத்து காவலர்கள் பார்க்கின்ற பணியாகும்.
************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 30.01.2018 

No comments:

Post a Comment