disalbe Right click

Tuesday, January 9, 2018

சீரகத்தின் மகத்துவம்

நமது வீட்டின் சமையலறையில் இருக்கும் சீரகத்தின் மகத்துவம் அளவிடமுடியாதது. அகம் என்று சொல்லக்கூடிய உடலின் உட்புறத்தை சீராக்குவதாலேயே இதனை நமது முன்னோர்கள் சீரகம் என்றனர்.
அதன் பயன்களை கீழே காணலாம்.
சீரகத்தை கொஞ்சம் எடுத்து வாயில் போட்டு, குளிர்ந்த தண்ணீரை குடித்தால், தலைச் சுற்றல், மயக்கம் ஆகியவை நீங்கி விடும்.
திராட்சை ஜூஸுடன், சீரகத்தை கலந்து பருகி வந்தால், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
அகத்திக்கீரையுடன், சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் போட்டு குடித்து வந்தால், மன நோய் குணமாகும்.
சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்து, பிசைந்து புளியங்கொட்டை அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால், நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
சீரகத்துடன் எலுமிச்சை சாறு கலந்து காயவைத்து, அதனை துாளாக இடித்து, ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதை, தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் எடுத்து சாப்பிட்டு, அதன்பிறகு மோர் குடித்து வந்தால், மார்பு வலி நீங்கும்.
மோருடன் சீரகம், இஞ்சி கலந்து, சிறிது உப்பு சேர்த்து பருகினால், வாயுத் தொல்லை நீங்கும்.
சீரகத்தை இஞ்சி மற்றும் எலுமிச்சைப் பழச் சாற்றில் கலந்து, ஒருநாள் ஊற வைத்துக் கொண்டு அதனை, தினம் இருவேளை வீதம், மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் குறையும்.
சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றை பொடியாக இடித்து, தேனில் கலந்து சாப்பிட்டால், உடலிலுள்ள எல்லா உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்யும். மனித உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து, தேகத்தை பளபளப்பாக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.
சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு மிளகு சேர்த்து அதனை வாயில் போட்டு மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.
சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி இலைகளை சேர்த்து வைத்து அரைத்து, எலுமிச்சை சாறுடன் சேர்த்து பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
சீரகத்தை லேசாக பொன்னிறமாக வறுத்து, அத்துடன், கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெற்று, நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
சீரகத்தை அரைத்து பவுடராக்கி. அதனை தேனுடன் கலந்து லேகியமாக சாப்பிட்டால் ஒல்லியாக இருப்பவர்கள், குண்டாக மாறுவார்கள்.
******************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 10.01.2018

No comments:

Post a Comment