disalbe Right click

Thursday, March 1, 2018

அதிகாரிகள் செய்த நிலமோசடி!

வழக்கின் சுருக்கம்
கோவையில் உள்ள 14 ஏர்ஸ் பரப்பளவு கொண்ட ஒரு நிலத்தை வி.வி.ஆனந்தபாரதி என்பவரிடமிருந்து 06.11.1992 அன்று எம்.விஜயமோகன் என்பவர் கிரையம் பெறுகிறார். அந்த நிலத்தை எம்.விஜயமோகனிடமிருந்து 31.01.2005 அன்று உதயகுமார் என்பவர் கிரையம் பெறுகிறார். உதயகுமார் பெயரில் பட்டாவும் வாங்கப்படுகிறது. இந்த இடத்தின் சர்வே எண்:27/4 ஆகும். எதிர்பாராவிதமாக உதயகுமார் இறந்துவிடுகிறார். இவரது நிலமானது கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகளால் மோசடியாக புல எண்:27/4-A, 27/4-B என்று உட்பிரிவு செய்யப்படுகிறது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உதயகுமாரின் மனைவி திருமதி கே.மலர் என்பவர் கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கடந்த 19.02.2014 அன்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)ன்கீழ் மூலம் மேற்கண்ட மோசடி குறித்து சில தகவல்கள் கேட்கிறார். தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 7(1)ன்கீழ் 30 நாட்களுக்குள் தகவல் வழங்காத காரணத்தால், தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 19(1)ன்கீழ் முதல் மேல்முறையீட்டு மனுவை 21.03.2014 அன்று (கோவை வட்டாட்சியர் அவர்களுக்கு அனுப்புவதற்கு பதிலாக, தவறுதலாக) வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கு அனுப்பிவிடுகிறார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 6(3)ன்கீழ், வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் அந்த முதல் மேல்முறையீட்டு மனுவை 5 நாட்களுக்குள் கோவை வடக்கு வட்டாட்சியர் அவர்களுக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால், அவர் 15 நாட்கள் கழித்து, காலதாமதமாக, அந்த மனுவை கோவை வடக்கு வட்டாட்சியர் அவர்களுக்கு அனுப்பி வைக்கிறார். அந்த மனுவை 07.04.2014 அன்று பெற்றுக் கொண்ட கோவை வடக்கு வட்டாட்சியர் அவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 19(6)ன்கீழ் மனுதாரருக்கு தகவல் வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மனுதாரர் கே.மலர் அவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 19(3)ன்கீழ் மாநில தகவல் ஆணையத்தில் இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்கிறார்.
மாநில தகவல் ஆணையமானது அவரது மனுவை ஏற்றுக் கொண்டு 12.02.2015 அன்று விசாரனை செய்து சில ஆனைகளை பிறப்பிக்கிறது. அந்த வழக்கின் தொடர்ச்சியாக 23.04.2015 அன்று மாநில தகவல் ஆணையம் மீண்டும் விசாரனையை நடத்தி கீழ்க்கண்ட ஆணையை பிறப்பிக்கிறது.
குறிப்பு: கீழ்க்கண்ட ஆணையை மட்டும் பார்த்தால் எதுவும் புரியாது என்பதற்காக வழக்கைப் பற்றிய விபரம் என்னால் மேலே இணைக்கப்பட்டுள்ளது.
*********************************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 01.03.2018




நன்றி : ஆவண காப்பகர் திரு   A Govindaraj Tirupur 

No comments:

Post a Comment