disalbe Right click

Friday, August 24, 2018

விபத்து நிவாரணத் திட்டங்கள்

தமிழ்நாடு அரசு விபத்து நிவாரண திட்டங்கள் 
விபத்து நிவாரணத் திட்டம்-1
இந்த விபத்து நிவாரணத் திட்டம் ஒன்றின் கீழ் மரணமடையும் நபர்களின் வாரிசுகளுக்கு இந்திய அரசின் உதவித் தொகை ரூ.10,000/- மற்றும் மாநில அரசின் உதவித் தொகை ரூ. 5,000/- ஆகியவை சேர்த்து மொத்தம் ரூ. 15,000/- வழங்கப்படும்.
பயன் பெறுவதற்கான தகுதியுடையவர்கள்
தமிழ்நாடு அரசாணை 471, நிதித்துறை, (மு..பொ.நி.நி) நாள் 23.5.1989)-ல்
கீழே குறிப்பிடப்பட்ட 44 வகை தொழிலாளர்களின் ஏழை வாரிசுதாரர்கள்.
சலவைத் தொழிலாளி
 காலணித் தொழிலாளி
 தச்சர்கள், மரவண்டி கட்டுவோர்.
 விலங்குகள் இழுத்துச் செல்லும் வண்டியோட்டிகள்
 கருமார், சுத்தியல் கருமார்
 பொன் வேலை செய்வோர் வெள்ளி வேலை செய்வோர்.
 கூடை முடைவோர்.
 கல் தச்சர்கள், கல்லில் குடைவோர், கட்டிடத் தொழிலாளி
 ஓடு தொழிலாளாகள்
 செங்கல் அடுக்குவோர்
 கிணறு தோண்டுவோர்
 கிணறு கட்டுவோர்கள்
 வேளாண்மைத் தொழிலாளர்கள் சிறுவிவசாயிகள் மற்றும் குறு விவசாயிகள் 
       (2.5 ஏக்கருக்கு குறைவாக நில முள்ளவர்கள்)
 பதனீர் இறக்குவோர்
 கழிவு நீர் அகற்றும் தொழிலாளர்கள்
 பூச்சி மருத்து தெளிப்பவர்கள்
 பனை மரம் / தென்னை மரம் ஏறுவோர்.
 மீனவர்கள் (கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினராக அல்லாதவர்).
 கட்டிடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள்.
 டிரக் ஓட்டுபவர்கள்.
 ஆட்டோ, ரிக்சா ஓட்டுநர்கள்
 தனியார் கார், வாடகைக்கார் மற்றும் பஸ் ஓட்டுபவர்கள்.
(வாகனங்கள் சொந்தமாக இல்லாதவர்கள் மட்டுமே தகுதி பெற்றவர்கள்.)
 முடி திருத்துபவர்.
 கை வண்டி இழுப்போர்.
 மிதி வண்டி ஓட்டுநர்
 தனியார் துறையிலுள்ள கைத்தறி நெசவாளர்கள்.
 மண்பாண்டம் மற்றும் மண் பொம்மைகள் செய்யும் குயவர்,குல்லாளர் மற்றும் வேளார்.
 வீடுகளில் பணிபுரிவோர்.
 பாம்பு பிடிக்கும் தொழில் ஈடுபடுவோர்.
 சினிமா படப்பிடிப்பின்போது சம்பந்தப்பட்ட சினிமா தொழிலாளர்கள் என்ற வகையில் அமையும் சினிமா நடிகர்கள்.
 தினக்கூலி பெறும் செங்கல் தொழிலாளர்கள்
 லாரிகளில் பாரம்/ ஏற்றி இறக்கும் ஏழைத் தொழிலாளர்கள்
 ஏழைத் தையல் தொழிலாளர்கள்.
 வெள்ளை அடிப்போர் வண்ணம் பூசுவோர் மற்றும் மின்வினைஞர்கள்.
 கிராமிய நடனக் கலைஞர்கள்
 சமையல் தொழில் செய்பவர்கள்.
 மாவு மில்லில் வேலை செய்யும் தொழிலாளர்கள்
 தனியார் பேருந்தில் பணிபுரியும் நடத்துநர்கள்.
 பந்தல் மேடை, மண்டபம், மாநாடு திருமணப் பந்தல், அலங்கார வளைவுகள் அமைக்கும் தொழிலாளர்கள்
 மலைகளிலுள்ள மரங்கள் மற்றும் பாறைகளில் ஏறி கல்பாசம் கடுக்காய் மற்றும் தேன் போன்ற வனப்பொருள்களைச் சேகரம் செய்யும் தொழிலாளர்கள் 
(கூட்டுறவுச் சங்கத்து உறுப்பினர்களாக இல்லாதவர்கள் மட்டும்).
 தனியாருக்குச் சொந்தமான கார், லாரி, டிரக் வேன்களில் வேலை பார்க்கும் டிரைவர் மற்றும் கிளீனர்கள்.
 பிளம்பர்.
 பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள்.
 ஓவியர்கள்.
மேற்குறிப்பிட்ட 44 வகை தொழில்களில் ஏதாவது ஒன்று செய்பவராக இருக்க வேண்டும். அவ்வாறு மேற்குறிப்பிட்ட 44 தொழில்களில் ஏதாவது ஒரு தொழில் செய்பவராக இருந்து தொழிலில் ஈடுபட்டிருக்கும் போதோ அல்லது சாதாரணமாக இறப்பு நேரிட்டாலோ நிவாரணம் பெற தகுதியுடையவராவார்.
விண்ணப்பப் படிவம்
வட்டாட்சியர் அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பப்படிவத்தைப் பெற்று, முழுமையாக நிரப்பி செய்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அல்லது சமூகப் பாதுகாப்புத் திட்டத் துணை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். நிரப்பப்பட்ட இந்த விண்ணப்பத்துடன் முதல் தகவல் அறிக்கைஇறப்புச் சான்று சான்றுகளையும் இணைக்க வேண்டும். (மரணமடைந்த தேதியிலிருந்து 1.5 வருடங்களுக்குள் மனு செய்ய வேண்டும்)
விபத்து நிவாரணத் திட்டம்-2
இந்த விபத்து நிவாரணத் திட்டம் இரண்டின் கீழ் மரணமடையும் நபர்களின் வாரிசுகளுக்கு இந்திய அரசின் உதவித் தொகை ரூ.10,000/- மற்றும் மாநில அரசின் உதவித் தொகை ரூ. 5,000/- ஆகியவை சேர்த்து மொத்தம் ரூ. 15,000/- வழங்கப்படும்.
பயன் பெறுவதற்கான தகுதியுடையவர்கள்
 கட்டிடத் தொழிலாளர்களின் வாரிசுதாரர்கள்
விண்ணப்பப் படிவம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பப்படிவத்தைப் பெற்று, முழுமையாக நிரப்பி செய்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். நிரப்பப்பட்ட இந்த விண்ணப்பத்துடன் முதல்   தகவல்  அறிக்கை.   பிரேதப் பரிசோதனை அறிக்கை, இறப்புச் சான்று சான்றுகளையும் இணைக்க வேண்டும்
(மரணமடைந்த தேதியிலிருந்து 1.5 வருடங்களுக்குள் மனு செய்ய வேண்டும்.)
http://ta.vikaspedia.in  இணையதளத்திலிருந்து
****************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 24.08.2018 

No comments:

Post a Comment