disalbe Right click

Wednesday, December 26, 2018

விசாரணையில் கலந்து கொள்ள மனுதாரருக்கு ஆன போக்குவரத்துச் செலவு

விசாரணையில் கலந்து கொள்ள மனுதாரருக்கு ஆன போக்குவரத்துச் செலவு 
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)ன் கீழ் விண்ணப்பிக்கப்படுகின்ற மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் தகவல் வழங்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.  ஆனால், இப்போதுள்ள பொதுத் தகவல் அலுவலர்கள் யாருமே வரையறுக்கப்பட்ட  30 நாட்களுக்குள் தகவல் வழங்குவதே இல்லை. அப்படியே வழங்கினாலும், அது முழுமையானதாக இருப்பதில்லை. 
வீண் அலைச்சல், மன உளைச்சல், செலவு
முதல் மேல்முறையீடு செய்து பலனில்லாமல்,  தகவல் ஆணையத்தில்  இரண்டாம் மேல்முறையீடு செய்து வருடக்கணக்கில் காத்திருந்து, தகவல் ஆணையர் அவர்களின் உத்தரவுக்குப்பிறகே தகவல்களை பெற முடிகிறது. இதனால், மனுதாரருக்கு, தேவையான நேரத்தில் தகவல்கள் கிடைப்பதில்லை. அதனால், அதிகம் மன உளைச்சலுக்கு மனுதாரர் ஆளாக்கப்படுகிறார்.  விசாரனையில் கலந்து கொள்ள சென்னை செல்ல செலவும் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு மனுதாரர் தள்ளப்படுகிறார்.  
யார் பொறுப்பு?
தேவையே இல்லாமல், மனுதாரருக்கு ஏற்படுத்தப்படுகின்ற வீண் அலைச்சல், மன உளைச்சல் மற்றும் செலவுகளுக்கு பொதுத் தகவல் அலுவலர் அவர்களே காரணம். அவர் மனுதாரர் கேட்ட தகவலை முதலிலேயே கொடுத்திருந்தால், மனுதாரர் ஏன் தகவல் ஆணையத்திற்கு செல்லப் போகிறார்?. அப்படி என்றால், அதற்கான செலவுத்தொகையை பொதுத் தகவல் அலுவலர் அவர்கள் மனுதாரருக்கு கொடுக்கவேண்டும் என்று  தகவல் ஆணையம் உத்தரவிடலாமா?
உத்தரவிடமுடியும்
உத்தரவிட முடியும். செலவுத்தொகையை மனுதாரருக்கு நஷ்ட ஈட்டுடன் மனுதாரருக்கு  கொடுக்க, பொதுத் தகவல் அலுவலருக்கு தகவல் ஆணையர் அவர்கள் உத்தரவிட முடியும்.
வழக்கு
அது போன்ற வழக்கு ஒன்றின் தீர்ப்பு நகல் பெற  இணைப்பு  கொடுக்கப்பட்டுள்ளது. அதனை கிளிக் செய்து படித்துப் பார்த்து பயனடையுங்கள்.

நன்றி : முகநூல் நண்பர்  திரு Basheer Acf அவர்கள்

No comments:

Post a Comment