disalbe Right click

Sunday, May 3, 2020

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்)

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (Employees Provident Fund) என்னும் பி.எஃப். என்பது தொழிலாளர்களின் ஓய்வுக்காலத்துக்கான உருப்படியான ஒரு முதலீடு ஆகும்.  இந்த திட்டத்தின் கீழ்தான் தொழிலாளர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் (Family Pension) வழங்கப்படுகிறதுபி.எஃப். பிடிக்க அரசு வகுத்துள்ள விதிகள் என்ன?   இந்த பென்ஷன் தொகை எவ்வளவுபென்ஷன் பெறுவதற்கான தகுதி என்னஎன்பதைப் பற்றி காண்போம்.
பி.எஃப்.  பிடிப்பதற்கான விதி என்ன? எவ்வளவு பிடிக்க வேண்டும்?
ஒரு தனியார் நிறுவனத்தில் அல்லது தொழிற்சாலையில் 20 தொழிலாளர்களுக்கு  மேல் வேலை பார்த்தால் கண்டிப்பாக பி.எஃப். பிடித்தம் செய்யவேண்டும். இந்த விதியின் கீழ் வருகின்ற தொழிலாளரின் அடிப்படை மற்றும் டி.சேர்ந்த  சம்பளத்தில் இருந்து  12 சதவிகிதமும், அதே அளவுள்ள தொகையை நிறுவனமும்  தொழிலாளரின் பெயரில் கட்டாயம்  செலுத்த வேண்டும். தொழிலாளி விருப்பப்பட்டால் இன்னொரு 12% தொகையை தனது ஊதியத்திலிருந்து கூடுதலாக  தொழிலாளர் சேமநல நிதி கணக்கில் பிடிக்கச் சொல்லலாம். ஆனால், இதற்கு இணையாக எந்தத் தொகையையும் நிறுவனம் செலுத்தாது.
பென்ஷன் எப்படி கிடைக்கிறது?
நிறுவனம் செலுத்துகின்ற 12 சதவிகித தொகையில் 8.33% பென்ஷன் திட்டத்திற்காகவும், 3.66% வருங்கால வைப்பு நிதித் திட்டத்திற்காகவும் பிரித்து வரவு வைத்து வரப்படும்.  தற்போது இந்தத் தொகைக்கு  9.5% வட்டி தரப்படுகிறது. இன்றைய நிலையில் குறைந்த பட்சம் 6,500 ரூபாய் வரையில் சம்பளம் வாங்குபவர்களுக்கு ( பி.எஃப்.) பிடித்தம் கட்டாயம் பிடிக்க வேண்டும் என்பது சட்டமாகும்.   ஒரு தொழிலாளியின்   கணக்கில்  பென்ஷனுக்காக அதிகபட்சம் மாதம் 541 ரூபாய் மட்டுமே இதிலிருந்து எடுத்து வரவு வைக்கப்படும். தொழிலாளி ஓய்வு பெறும்போது இந்தத் தொகையிலிருந்து தான் மாதா மாதம் ஒரு தொகை பென்ஷனாக கிடைக்கும்
தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம்
தொழிலாளர் குடும்ப ஓய்வூதியத் திட்டம் 1971 என்று செயல்பட்டு வந்த திட்டமானது  1995-ம் ஆண்டு தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் என்று மாற்றி இந்திய அரசு அறிமுகப்படுத்தியதுதொழிலாளர் குடும்ப ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தொழிலாளர் ஒருவர் மரணமடைந்தால் அவருடைய குடும்பத்துக்கு ஓய்வூதியம் கிடைக்கும்படி  செய்யப்பட்டு இருந்தது. ஆனால், 1995-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் தொழிலாளரின் 50 வயதுக்கு பிறகு அவருக்கு விருப்ப ஓய்வு ஊதியமும், 58 வயதுக்குப் பிறகு கட்டாய ஓய்வூதியமும் கிடைக்கும். பென்ஷன் பெறுவதற்கு குறைந்தபட்ச தகுதி என்பது வயது மற்றும் பணிக்காலம்தான். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பி.எஃப். கணக்கு வைத்திருப்பதோடு குறைந்தபட்சம் 50 வயதாகி இருக்க வேண்டும்.
தொழிலாளர்கள் பலருக்கும் பென்ஷன் குறித்த விழிப்பு உணர்வு இல்லாத காரணத் தினால் ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்குச் செல்லும்போது பி.எஃப். கணக்கில் உள்ள பணத்தை எடுத்துவிடுகிறார்கள். இதுபோன்ற சமயங்களில் 10 ஆண்டுகளுக்கு குறைவாக கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பென்ஷனுக்காக ஒதுக்கப்பட்ட தொகை குறிப்பிட்ட சதவிகிதத்தில் திரும்பக் கிடைக்கும். (சம்பளத்தில் எவ்வளவு மடங்கு என்பதை மேலே உள்ள அட்டவணையில் பார்க்க).

ஒருவர் 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தபிறகு வேறு நிறுவனத்திற்கு வேலை மாறுகிறார் அல்லது சொந்த தொழில் செய்கிறார் அல்லது இனிமேல் வேலைக்குப் போகவேண்டாம் என்று முடிவெடிக்கும் சூழ்நிலையில் அவரின் வயது 50-க்கு குறைவாக இருந்தால் பென்ஷன் கணக்கில் இருக்கும் தொகை உடனடியாகக் கிடைக்காது. இதற்கு பதிலாக பி.எஃப். அலுவலகத்திலிருந்து திட்ட சான்றிதழ் (ஸ்கீம் சர்ட்டிஃபிகேட்) வாங்கி வைத்துக் கொள்ளலாம். இதில் நீங்கள் எத்தனை வருடம் வேலை பார்த்தீர்கள், உங்கள் கணக்கில் எவ்வளவு பென்ஷன் தொகை உள்ளது, எந்த தேதியிலிருந்து நீங்கள் பென்ஷன் பெற முடியும் என்பது புரியும். இரண்டு, மூன்று திட்டச் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் அனைத்துச் சான்றிதழ்களையும் பி.எஃப். அலுவலகத்தில் தந்து கூட்டுத் தொகையை பென்ஷனாகப் பெறலாம். சுமார் ரூ.3,500 வரை அதிகபட்சமாக பென்ஷன் கிடைக்க வாய்ப்புண்டு.

பென்ஷன் திட்டத்திற்கு நாமினி நியமன வசதி உள்ளது. இதன்படி ஓய்வூதியம் பெறும் தொழிலாளர் இறந்துவிட்டால் பென்ஷன் தொகை மனைவிக்கு ஆயுள் முழுக்கவும், இரு குழந்தைகளுக்கு அவர்களின் 25 வயது வரைக்கும் பென்ஷன் கிடைக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு நிரந்தர ஊனம் இருந்தால் ஆயுட்காலம் முழுக்க பென்ஷன் கிடைக்கும்.
ஒரு தொழிலாளிக்கு திருமணம் ஆகாத நிலையில், உறவினர் யாரும் இல்லை எனில் அவர் மரணம் அடைந்தால் அவருடைய பெற்றோருக்கு பென்ஷன் தரப்படும். தொழிலாளர் பணியில் இருக்கும்போது இறக்க நேரிட்டாலோ, நிரந்தர ஊனம் ஏற்பட்டாலோ பென்ஷன் கிடைக்கும். இதுபோன்றோருக்காக மத்திய அரசு தனியாக நிதி ஒதுக்கீடு செய்கிறது.
பி.எஃப். பென்ஷன் பெறுபவர் மரணம் அடைந்தபிறகு அவரது துணைவர் (கணவன் அல்லது மனைவி) அரசு வேலை பார்த்து அதன் மூலம் பென்ஷன் கிடைத்தாலும், அவர்களுக்கு இந்த பி.எஃப். பென்ஷனும் கிடைக்கும்.
பென்ஷன் திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு ஆரம்பம் முதலே எந்த வட்டியும் அரசு வழங்குவதில்லை.

- இரா. ரூபாவதி.

தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டுத் திட்டம்!

***************************************************************

வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் கீழ் உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆயுள் இன்ஷூரன்ஸ் கவரேஜ் கிடைக்கும். இதற்காக தொழிலாளர் எந்தவிதமான பிரீமியமும் செலுத்தத் தேவையில்லை. நிறுவனம் இதற்காக தொழிலாளரின் மொத்த ஊதியத்தில் 0.5 சதவிகிதம் தொகையைச் செலுத்துவார்கள். இதன் அடிப்படையில் பணியிலிருக்கும்போது மரணம் ஏற்பட்டால் அவருடைய வாரிசுதாரர்களுக்கு 60,000 முதல் 1,30,000 ரூபாய் கிடைக்கும்.
ஓய்வூதியம் கணக்கீடு எப்படி?

ஓய்வூதியத்திற்கான ஊதியம் X ஓய்வூதிய திட்ட உறுப்பினர் பணிக் காலம் / 70.

ஓய்வூதியத்துக்கான ஊதியம் என்பது அதிகபட்சமாக 6,500 ரூபாய் என்று கணக்கிடப்படும்.
25 வயதில் வேலைக்குச் சேரும் ஒருவருக்கு ஆரம்பத்திலே ரூ. 541 குடும்ப பென்ஷனுக்காக பிடித்தம் செய்யப்படுகிறது. அவர் 58 வயதில் ஒய்வு பெறுகிறார் என வைத்துக்கொள்வோம். அவர் மொத்தமாக பணிபுரிந்தது 33 வருடம் ஆகும். எனவே, (6500X33/70) அவருக்கு மாதத்திற்கு 3,094 ரூபாய் குடும்ப பென்ஷனாக கிடைக்கும் 

No comments:

Post a Comment