disalbe Right click

Showing posts with label அரசாணை. Show all posts
Showing posts with label அரசாணை. Show all posts

Friday, December 30, 2016

பிறப்பு & இறப்புச் சான்றிதழ்களை பெற புதிய அரசாணை


பிறப்பு & இறப்புச் சான்றிதழ்களை பெற புதிய அரசாணை

பிறப்பு மற்றும் இறப்புகளை ஒவ்வொருவரும் சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலகத்தில் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.
அஜாகிரதையாக சிலர் பிறப்பு மற்றும் இறப்புகளை பதிவு செய்யாமல் விட்டுவிடுவார்கள். ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டால், அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்றுதான் அதனை பெற வேண்டிய நிலை இதுவரை இருந்து வந்தது. இதனால், பொதுமக்களுக்கு சிரமமும், நீதிமன்றத்திற்கு அதிக வேலைப்பளுவும் இருந்து வந்தது.
அதனை நீக்கும்விதமாக பிறப்பு மற்றும் இறப்புகளை ஒரு வருடத்திற்கும் மேலாக பதிவு செய்யாமல் விட்டவர்கள் இனி தங்கள் பகுதிக்குட்பட்ட வருவாய் கோட்டாட்சியர் அவர்களை அணுகி பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களை பெறுவதற்கு உத்தரவு பெறுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Image may contain: text

No automatic alt text available.


தகவல் உதவி: வழக்கறிஞர் பஞ்.ரமேஷ் அவர்கள்




Friday, October 21, 2016

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால்


விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால் இனி பிரச்சனையில்லை!

சென்னை: 'விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்வோர், எந்தவொரு சமூக மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக மாட்டார்கள்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசாணை விபரம்:

* விபத்தில் காயமடைந்தவர்களை, கண்கூடாக பார்த்தவர்கள், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம். 

அவர்களை எந்த கேள்வியும் கேட்காமல், முகவரியை பெற்று வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும். 

விபத்தில் சிக்கியோருக்கு உதவி செய்பவர்கள், எந்தவொரு சமூக மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக மாட்டார்கள்* 

பெயர் மற்றும் சொந்த விபரங்களை தெரிவிக்கும்படி கட்டாயப்படுத்தக் கூடாது; அவற்றை தெரிவிப்பது, அவர்களின் விருப்பத்தை பொறுத்தது. 

மருத்துவ துறையினரால் வழங்கப்படும் படிவங்களில், பூர்த்தி செய்யவும் கட்டாயப்படுத்தக் கூடாது* 

அப்படி கட்டாயப்படுத்தும் அலுவலர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். 

உதவி செய்பவர்கள், தாமாக சாட்சி சொல்ல விருப்பத்தை தெரிவிக்கும் போது, அவரிடம் போலீசார் ஒரு முறை மட்டுமே விசாரணை மேற்கொள்ளலாம்; 

கட்டாயப்படுத்தவோ, துன்புறுத்தவோ கூடாது* 

உதவி செய்வோர், காயமடைந்தோரின் உறவினராக இல்லாதபட்சத்தில், மருத்துவமனைகள் பணம் செலுத்தும்படி கோரக் கூடாது;

உடனடியாக, சிகிச்சை அளிக்க வேண்டும். 

சிகிச்சையில் அக்கரை செலுத்தவில்லை என்றால், மருத்துவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்* 

அனைத்து மருத்துவமனைகளின் நுழைவாயிலிலும், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநில மொழியில், இதுதொடர்பான அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். 

அனைத்து பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளும், இந்த நடைமுறைகளை, உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். 

இவ்வாறு அரசாணை யில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர் நாளிதழ் - 22.10.2016

Friday, August 5, 2016

சான்றொப்பம் தேவையில்லை


சான்றொப்பம் தேவையில்லை-என்ன செய்ய வேண்டும்?

தமிழக அரசு அரசாணை  எண்:96 - நகல் இணைக்கப்பட்டுள்ளது

சான்றிதழ்கள், சான்றிதழ் நகல்களில் அரசு அதிகாரிகளின் சான்றொப்பம் வழங்கும் நடைமுறையை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.







அதற்குப் பதிலாக, சான்றிதழ்கள், சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பமிடுவதை அனுமதிக்க வேண்டும் என அரசுத் துறைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் பணியாளர்- நிர்வாக சீர்திருத்தத் துறையின் செயலாளர் பி.டபிள்யூ.சி. டேவிதார் வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்:

குரூப் "ஏ', "பி' பிரிவு அரசு அதிகாரிகள் சான்றிதழ்கள், சான்றிதழ் நகல்களில் சான்றொப்பம் வழங்க அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டது. ஆனால், இந்த நடைமுறை மக்களுக்குப் பயனளிக்காததோடு, அவர்களின் நேரத்தையும், அரசு அதிகாரிகளின் நேரத்தையும் வீணடிக்கும் வகையில் உள்ளது. எனவே, இந்த நடைமுறையை மாற்ற வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

மக்களின் சிரமத்தைக் குறைப்பது, விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிப்பதில் உள்ள பிரச்னைகள், அரசு அலுவலகங்களில் தேவையற்ற கோப்புகள் தேங்குவதைக் குறைத்தல், நடைமுறைகளை எளிமையாக்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் சான்றொப்பம் அளிக்கும் நடைமுறை மறுபரிசீலனை செய்யப்பட்டது.

சான்றிதழ் சரிபார்ப்பின்போது சான்றொப்பம் இடப்பட்ட நகல்களோடு, அசல் சான்றிதழ்களும் தேவைப்படுகின்றன. எனவே, சான்றொப்பம் இடும் நடைமுறை உண்மையில் எவ்விதப் பயனையும் தரவில்லை. மறு ஆய்வுக்குப் பிறகு அனைத்து அரசுத் துறைகளிலும் சான்றொப்பமிடும் நடைமுறையை நீக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து அரசுத் துறைகளிலும் குரூப் "ஏ', "பி' பிரிவு அதிகாரிகள் சான்றொப்பம் அளிக்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். அதற்குப் பதிலாக, சுய சான்றொப்பமிடுவதை அனுமதிக்க வேண்டும். நேர்காணல் அல்லது பணி நியமனத்தின்போது அசல் சான்றிதழ்களை காண்பிக்குமாறு அறிவுறுத்த வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தினமணி நாளிதழ் - 13.10.2014