disalbe Right click

Showing posts with label உணவே மருந்து. Show all posts
Showing posts with label உணவே மருந்து. Show all posts

Tuesday, November 14, 2017

வெங்காயத்தை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் பலன்கள்
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம். அதில் உள்ளஅலைல் புரோப்பைல் டை சல்பைடுஎன்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.
⧭  வெங்காயம் ஒரு சிறந்த உணவு. இதை அன்றாடம் நமது உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு மண்டலம் பல மடங்கு அதிகரிக்கும். உணவில் சேர்த்துக் கொண்டால் மட்டும் போதாது, தட்டில் இருந்து ஒதுக்காமல், அதை நன்கு மென்று சாப்பிட வேண்டும்.
⧭  உணவில் வெக்காயம், பூண்டு சேர்த்து சாப்பிட டான்ஸில், ரத்த அழுத்தம், இருமல், ஆஸ்துமா, காய்ச்சல், காமாலை முதலியன குணமாகும். மேலும் கொலஸ்ட்ரால் குறையும்.
⧭  ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுத்தும் கொழுப்பைக் கரைக்கும் ஆற்றல் வெங்காயத்துக்கு உண்டு. எனவே, மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய் உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.
⧭  தயிர், மோர், நெய் போன்ற மற்ற உணவுப் பொருட்களோடு சேர்த்துச் சாப்பிடும்போது, உடல் குளிர்ச்சியை ஏற்படுத்தும் குணம்கொண்டது வெங்காயம். வெங்காயத்தில் கார்போஹைட்ரேட், புரதம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நீர்ச் சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.
⧭  யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.
⧭  முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.
⧭  சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.
⧭  புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.
⧭  வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.
⧭ வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
⧭  பாதத்தில் தேங்காய் எண்ணெய் தேய்க்கவும். பிறகு உங்கள் அடி பாதத்தின் வளைவு பகுதியில் வெங்காயத்தை வைத்து அதன் மேல் சாக்ஸ் அணிந்துக் கொள்ளுங்கள். ஓர் இரவு முழுக்க இதை விட்டுவிடுங்கள். இது நச்சுக்கள் குறைய பெருமளவு உதவும்.