disalbe Right click

Wednesday, September 19, 2018

பிரிக்கப்படாத மனை

அடுக்கு மாடி கட்டிடங்களில் UDS என்பது பிரிக்கப்படாத மனை என்பதைக் குறிக்கும். அதாவது UnDivided Share என்று அர்த்தம்.
உதாரணமாக 2,400 சதுர அடி கொண்ட மனை பரப்பில் 500 சதுர அடியில் இரண்டு வீடுகள் (500*2=1000), 750 சதுர அடியில்  (750*4=3000) நான்கு வீடுகள் என மொத்தம் 4,000 சதுர அடி பரப்பளவில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதாவது, , 2,400 சதுர அடி பரப்பில் உள்ள மனையில், 4,000 சதுர அடியில் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதன் விகிதம் 2400/4000 = 0.6 ஆகும். இதனைக் கொண்டு நீங்கள் வாங்குகின்ற வீட்டின் சதுர அடியால் பெருக்கினால் அதுதான் அதற்கான பிரிக்கப்படாத மனை.
அதாவது 500 சதுர அடி வீட்டுக்குப் பிரிக்கப்படாத மனையின் அளவு (UDS) 300 சதுர அடி. 750 சதுர அடி வீட்டுக்குப் பிரிக்கப்படாத மனையின் அளவு 450 சதுர அடி.
பிரிக்கப்படாத மனையின் அளவு சரியா என்பதைக் கண்டுபிடிக்க மொத்தம் உள்ள ஃபிளாட்டுகளுக்கான பிரிக்கப்படாத மனையின் அளவைக் கூட்ட வேண்டும். அப்படி கூட்டும் போது மொத்த மனையின் பரப்பு வர வேண்டும்.
உதாரணமாக மேலே நாம் பார்த்த கணக்குப்படி 500 சதுர அடி உள்ள இரண்டு வீடுகளின் பிரிக்கப்படாத மனையின் பரப்பு 600 (300*2) சதுர அடி. 750 சதுர அடி உள்ள நான்கு வீடுகளின் மொத்த பிரிக்கப்படாத மனையின் பரப்பு 1,800 (450*4) சதுர அடி. இரண்டையும் கூட்டினால் மொத்தம் பிரிக்கப்படாத மனையின் பரப்பு 2,400 சதுர அடி வந்துவிட்டதா? கணக்குச் சரியாக வராவிட்டால், அதில் குறைபாடு உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.
***************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 19.09.2018 

No comments:

Post a Comment