disalbe Right click

Showing posts with label கல்வித்துறை. Show all posts
Showing posts with label கல்வித்துறை. Show all posts

Saturday, June 3, 2017

CBSE பள்ளி நடத்துவதற்குரிய அரசு விதிமுறைகள்

CBSE பள்ளி நடத்துவதற்குரிய அரசு விதிமுறைகள்
Central Board of Secondary Education எனப்படுகின்ற மத்திய அரசு இடைநிலைக் கல்வி வாரிய அனுமதி   பெறாமல், பல பள்ளிகள், சி.பி.எஸ்.இ., என, விளம்பரம் செய்து மாணவர்களிடம் வசூல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.
'நீட்' தேர்வுமருத்துவப் படிப்புக்கான, 'நீட்' தேர்வு;
மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள்; ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வுகளுக்கு, சி.பி.எஸ்.இ., என்ற மத்திய அரசின் இடைநிலைக் கல்வி பாடத்திட்டத்தின் அடிப்படையில், பெரும்பாலான வினாக்கள் கேட்கப்படுகின்றன.
இதனால், தமிழகத்தில் செயல்படும், பல தனியார் மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., கல்வித் திட்டத்திற்கு மாறி வருகின்றன.
இக்கல்வி திட்டத்தை செயல்படுத்த, பல கட்ட ஆய்வுகள் இருக்கின்றன. சில பள்ளிகளே, அவற்றை முறையாக கடைபிடித்து அனுமதி பெற்றுள்ளன. பெரும்பாலான பள்ளிகள் அனுமதி பெறுவதற்காக, விண்ணப்பங்களை மட்டும் அனுப்பி உள்ளன.இன்னும் சில பள்ளி கள் விண்ணப்பிக்காமலேயே, சி.பி.எஸ்.இ., என விளம்பரம் செய்து, பெற்றோரிடம் கட்டண வசூலில் மும்முரம் காட்டுகின்றன. பெற்றோரும், சி.பி.எஸ்.இ., பள்ளிக்கான அனுமதி அல்லது அங்கீகாரம் இருக்கிறதா எனப் பார்க்காமலேயே பிள்ளைகளைச் சேர்த்து வருகின்றனர்.
விதிமுறைகள்
·  பள்ளி பரப்பளவு, 2 ஏக்கர் இருக்க வேண்டும்.
·  வகுப்பறை, 500 ச.அடி; ஆய்வகம் 600 ச. அடியில் இருக்க வேண்டும்.
· நுாலகம், படிக்கும் அறையுடன், 14 மீ.,க்கு 8மீ., என்ற அளவில் இருக்க வேண்டும்.
· கணிப்பொறி, கணித ஆய்வகங்கள் தனித்தனியாக இருக்க வேண்டும்.
· பள்ளிக்கான தற்காலிக அனுமதி பெறுவோர், அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரியிடம் தடையில்லா சான்று பெற்று, அத்துறை மூலம், மத்திய கல்வி வாரியத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
· தமிழக அரசின் அங்கீகாரத்தையும், மத்திய அரசு இடைநிலைக் கல்வி வாரியத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
·  ஒரு வளாகத்தில், மெட்ரிக் அல்லது சி.பி.எஸ்.இ., பள்ளி மட்டுமே இயங்க முடியும்.
· அனுமதி எண்ணை, பள்ளி அறிவிப்பு பலகையில் கட்டாயம் எழுத வேண்டும் என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தெரிவித்து உள்ளது. அதன்படி பள்ளிகள் செயல்படுகின்றனவா என பெற்றோர் அறிவது அவசியம்.
· பள்ளி முதல்வராக இருக்கும் ஆசிரியர்கள் அதற்கான தகுதித் தேர்வை (Principal Eligibility Test-PET) எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
· புத்தகங்கள், நோட்டுகள், சீருடை உள்ளிட்டவற்றை விற்கும் கடைகளாக, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மாறக் கூடாது.
இணையத்திலிருந்து (04.06.2017)
*********************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி


Tuesday, May 23, 2017

பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்

பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்
மொத்த மதிப்பெண் 600 ஆக குறைகிறது
சென்னை: வரும் கல்வியாண்டு முதல், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, கட்டாய பொதுத்தேர்வு அமலுக்கு வருகிறது. இரண்டு தேர்வுகளின் மொத்த மதிப்பெண், 1,200க்கு பதிலாக, 600 ஆக குறைக்கப்படுகிறது.
பள்ளிக்கல்வி துறையில், ஆறு ஆண்டுகளுக்கு பின், தற்போது, பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில், மாநில, மாவட்ட, பள்ளி அளவிலான, 'ரேங்க்' முறை ஒழிக்கப்பட்டுள்ளது.
வரும் கல்வி ஆண்டு முதல், மூன்று நிறங்களில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, சீருடைகள் மாற்றப்பட உள்ளன. அதேபோல, பிளஸ் 1 வகுப்புக்கு, கட்டாய பொதுத்தேர்வும் அமலாக உள்ளது.
புதிய மதிப்பெண் முறை
இந்நிலையில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வில், வினாத்தாள் முறை மற்றும் மதிப்பெண்ணில் மாற்றம் செய்யப்பட உள்ளது. முதலில், பிளஸ் 1க்கும், அடுத்த கல்வி ஆண்டில், பிளஸ் 2க்கும் புதிய மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்த, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இதன்படி, தற்போது பிளஸ் 1, பிளஸ் 2வகுப்புகளுக்கு, தலா, 1,200 ஆக இருக்கும் மொத்த மதிப்பெண், 600 ஆக குறைக்கப்படும்.
மொழிப் பாடம் மற்றும் ஆங்கிலத்திற்கு, தலா, 100 மதிப்பெண்களும், முக்கிய பாடங்களுக்கு தலா, 100 மதிப்பெண்களும் வழங்கப்படலாம் என, ஆலோசிக்கப்படுகிறது.
அரசாணையாக
இதில், செய்முறை தேர்வு இருக்கும் பாடங்களில் அகமதிப்பீடு மற்றும் செய்முறை தேர்வுக்கு, தலா, 10 மதிப்பெண்களும், எழுத்துத் தேர்வுக்கு, 80 மதிப்பெண்களும் இருக்கும் என, தெரிகிறது.
மேலும், நான்கு முக்கிய பாடங்களில், ஒரு பாடம் மட்டும், விருப்பப் பாடமாக வழங்கப்பட உள்ளது.
அதேபோல், தேர்வு எழுதும் நேரத்தையும், மதிப்பெண்ணுக்குஏற்ப குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.'இதற்கான கோப்பு, முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் அளித்த பின், அரசாணையாக வெளியிடப்படும்' என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வினாத்தாளும் மாறுகிறது!
பொதுத்தேர்வுகளில் மாற்றம் வரும் போது, வினாத்தாள் தயாரிப்பு முறையும் மாற்றப்பட உள்ளது. மாணவர்கள், புத்தகத்தில் உள்ள வரிகளை மனப்பாடம் செய்து, கட்டுரை வடிவில் எழுதும் தேர்வு முறை, தற்போது உள்ளது.
இதில், அதிக மதிப்பெண் பெற்றாலும், போட்டி தேர்வுகளிலும், உயர் கல்வியிலும், மாணவர்களால் ஜொலிக்க முடிவதில்லை. எனவே, வினாத்தாளில், சி.பி.எஸ்.இ., போல் மாற்றம் செய்யப்பட உள்ளது.
அதில், சரியான விடையை தேர்வு செய்யும், 'அப்ஜெக்டிவ்' முறை வினாக்கள் அதிகமாக இருக்கும். மேலும், பாடத்தில் உள்ள அடிப்படை சூத்திரங்களை பயன்படுத்தி, சிந்தித்து விடை எழுதும் வகையிலான, புதிய வினாக்களும் இடம்பெற உள்ளன.
நன்றி : தினமலர் நாளிதழ் – 22.05.2017