disalbe Right click

Showing posts with label சான்றிதழ்கள். Show all posts
Showing posts with label சான்றிதழ்கள். Show all posts

Thursday, February 8, 2018

இனி பிறப்புச் சான்றிதழ் பெற....

குழந்தை நல எண் அவசியம்
நகரங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், தாய் சேய் நலத் திட்டத்தில் செவிலியர்களின் மூலம் கர்ப்பிணிப் பெண்கள் பற்றிய விபரம் பெறப்பட்டு பிக்மி என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதன்பிறகு அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு 12 இலக்கம் கொண்ட பேறுசார் அடையாள எண் வழங்கப்படுகிறது.  இந்த எண்ணை RCH (Rural Child Health) வழங்குகிறது. 
அரசு மருத்துவமனைக்குச் செல்லாதீர்கள்!
இதனைப் பெற கர்ப்பிணிப் பெண்கள் தாங்கள் வசிக்கும் பகுதியின் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மட்டுமே அணுக வேண்டும். அரசு மருத்துவமனைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.
இந்த எண்ணின் அவசியம் என்ன?
குழந்தையினுடைய பிறப்புச் சான்றிதழ், அரசு வழங்குகின்ற மகப்பேறு நிதியுதவி பெறுவதற்கு இந்த எண் மிகவும் அவசியமாகும். தனியார் மருத்துவமனையில் மகப்பேறு சேவை பெறுகின்ற கர்ப்பிணி பெண்களும் இந்த 12 இலக்க பேறுசார் குழந்தை எண்ணைப் அவசியம் பெற வேண்டும். எனவே, கர்ப்பிணிப் பெண்கள் அந்தந்தப் பகுதியில் பணிபுரிகின்ற செவிலியர்களிடம் தங்களைப் பற்றிய விபரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.  
தொலைபேசி மூலமாகவும் பதியலாம்.
ஆரம்ப சுகாதார நிலையம் சென்று பதிய முடியாத (நாடு முழுவதிலும் உள்ள)  கர்ப்பிணிப் பெண்கள் 102 என்ற எண் மூலமாகவும் பதிவு செய்யலாம். பதிவு செய்யப்பட்ட பின் உங்களது செல்போனுக்கு அவர்கள் 12  இலக்க பேறுசார் குழந்தை எண்ணை அனுப்புவார்கள். .
விருதுநகர் மாவட்டம்
சிவகாசி சுகாதார மாவட்டத்திற்கு உட்பட்ட சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, ராஜபாளயம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு ஆகிய வட்டாரங்களில் வசித்து வருகின்ற கர்ப்பிணிப் பெண்கள் மேற்கண்ட 12 இலக்க பேறுசார் குழந்தை எண்ணை இதுவரை பெறாமல் இருந்தால் உரிய விபரங்களைப் பெற 04562-255623 என்ற தொலைபேசி மூலமாகவும்87789 64401 என்ற செல்போன் எண் மூலமாகவும் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெறலாம்.
************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 08.02.2018 

Friday, December 29, 2017

பதியாமல் விட்ட பிறப்புச் சான்றிதழ்

நீதிமன்றம் செல்ல வேண்டியதில்லை
பிறப்பு மற்றும் இறப்புகளை ஒவ்வொருவரும் கண்டிப்பாக சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்அஜாக்கிரதையாக சிலர் பிறப்பு மற்றும் இறப்புகளை பதிவு செய்யாமல் விட்டுவிடுகிறார்கள். அந்த குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்ற காலகட்டத்தில்தான் அவர்களுக்கு அந்த ஞாபகமே வரும். ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டால், அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்றுதான் அதனை பெற வேண்டிய நிலை இதுவரை இருந்து வந்தது. இதனால், பொதுமக்களுக்கும், நீதிமன்றத்திற்கும் அதிக வேலைப்பளுவும்  இருந்து வந்தது.
அதனை நீக்கும்விதமாக பிறப்பு மற்றும் இறப்புகளை ஒரு வருடத்திற்கும் மேலாக பதிவு செய்யாமல் விட்டவர்கள் இனி தங்கள் பகுதிக்குட்பட்ட வருவாய் கோட்டாட்சியர் அவர்களை அணுகி பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களை பெறுவதற்குண்டான   உத்தரவைப்   பெறுவதற்கு தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன் நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.




******************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 30.12.2017 

Friday, October 27, 2017

டிஜி' லாக்கரில் மாணவர் சான்றிதழ்

'டிஜி' லாக்கரில் மாணவர் சான்றிதழ்: புதிய திட்டம் துவக்கம்
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், மாணவ - மாணவியரின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2, மதிப்பெண் சான்றிதழ்களை, 'டிஜி லாக்கர்' திட்டத்தின் கீழ், பாதுகாக்கும் திட்டம் துவக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ், www.digilocker.gov.in என்ற இணையதளத்தில், முக்கிய ஆவணங்களை, 'டிஜிட்டல்' வடிவில் சேமித்து வைக்கும் திட்டம் அமலில் உள்ளது. அதில், ஆதார் எண் வழியாக, ஒருவரின் வாகன உரிமம், வாகன பதிவுச்சான்று போன்ற அசல் ஆவணங்களை பதிவேற்றி, பாதுகாப்பாக வைக்கும் வசதி உள்ளது.
தற்போது, தமிழக அரசு பள்ளிகளில், 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவ - மாணவியரின், மதிப்பெண் சான்றுகளை, பதிவேற்றம் செய்யும் திட்டத்தை துவக்கி உள்ளோம். முதல் கட்டமாக, சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளி, மாணவர்களின், மதிப்பெண் சான்றிதழ்கள், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன
இதுபோல, படிப்படியாக, அனைத்து அரசு பள்ளிகளிலும் அமல்படுத்தப்படும். இதனால், நேர்முக தேர்வு, சேர்க்கை போன்ற நேரங்களில், அசல் சான்றை, மாணவர்கள் எடுத்து செல்ல தேவை இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 28.10.2017


Sunday, August 13, 2017

’கட்டண பாக்கிக்காக மாணவர்கள் சான்றிதழை நிறுத்தக்கூடாது

கட்டண பாக்கிக்காக மாணவர்கள் சான்றிதழை நிறுத்தக்கூடாது
கட்டண பாக்கியை வசூலிக்க, மாணவர்களின் சான்றிதழ்களை, தராமல் நிறுத்தி வைக்கக்கூடாதுஎன, இன்ஜி., கல்லுாரிகளுக்கு அண்ணா பல்கலை எச்சரித்துள்ளது.
சான்றிதழ் நிறுத்திவைப்பு:
அண்ணா பல்கலை இணைப்பில், தமிழகம் முழுவதும், 550க்கும் மேற்பட்ட இன்ஜி.,கல்லுாரிகள், ஆர்கிடெக்சர்மற்றும் மேலாண் நிர்வாக கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
கடந்த கல்வி ஆண்டில் நடந்த, இறுதி தேர்வுக்கு பின், அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, பட்ட சான்றிதழ்கள் வழங்கும் பணி துவங்கி உள்ளது. இதில், பல இன்ஜி., கல்லுாரிகள், கட்டணம் பாக்கி வைத்துள்ளமாணவர்களுக்கு, பட்ட சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளன.
இதனால், உயர் கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும் செல்ல முடியவில்லை என, மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளுக்கான, மாணவர் விவகாரத்துறை இயக்குனர், இளைய பெருமாள், அனைத்து கல்லுாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
நடவடிக்கை:
அதில், ’கட்டண பாக்கி மற்றும் நிர்வாக பிரச்னைகளுக்காக, மாணவர்களின் சான்றிதழ்களை வழங்காமல், கல்லுாரிகள் நிறுத்தி வைக்கக்கூடாது. சான்றிதழ்களை தரவில்லை என, புகார் வந்தால், சம்பந்தப்பட்ட கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்என, தெரிவிக்கப் பட்டுள்ளது.
நன்றி : தினமலர் - வாரமலர் - 12.08.2017 

இறங்குரிமைச் சான்றிதழ் என்றால் என்ன?

இறங்குரிமைச் சான்றிதழ் என்றால் என்ன?
இறங்குரிமை சான்றிதழ் (Succession certificate)
இறந்து போன ஒரு  நபரினுடைய பெயரில் இருக்கின்ற முதலீடுகள்/பங்குகள் மற்றும் அவருக்கு பிறரிடம் இருந்து வரவேண்டிய கடன்கள் போன்ற பணப் பலன்களைப் பெறுவதற்கு தனக்குத்தான்/தங்களுக்குத்தான் சட்டபூர்வமாக உரிமை இருக்கின்றது என்பதைக் தெரிவிக்க ஒருவர்/பலர் நீதிமன்றம் மூலம் பெறுகின்ற சான்றிதழ்தான் இறங்குரிமை சான்றிதழ் ஆகும்.
உதாரணமாக, இறந்து போன நபருக்கு ஆறு வாரிசுகள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களின் ஆறு பெயரையும் உள்ளடக்கிய வாரிசுச் சான்றிதழ் ஏற்கனவே பெறப்பட்டு இருக்கும். 
இவர்கள் ஆறு பேருக்கும் இறந்தவர் பெயரிலுள்ள சுமார் 12 லட்ச ரூபாய் பங்குகளிலோ அல்லது முதலீடுகளிலோ  உரிமை இருப்பதாகக் கொண்டால் அந்த முதலீட்டையோ அல்லது பங்குகளையோ ஆறு பேர்களின் பெயருக்கும் மாற்றினால், பிற்காலத்தில் வேறு யாராவது உரிமை கோருவார்களோ? என்ற பயம் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கோ, நிறுவனங்களுக்கோ வரலாம்.
இதற்காக இந்த ஆறு பேரும் நீதிமன்றத்தை அணுகி தாங்கள் ஆறு பேர்கள்தான் வாரிசுகள் என்பதற்கு வாரிசுச் சான்றிதழை தாக்கல் செய்து, வேறு யாரும் வாரிசுகள் இல்லை என உறுதிமொழியையும் கொடுத்து தங்களில் யாராவது ஒருவருக்கோ அல்லது ஆறு பேருக்குமோ அந்த முதலீட்டை பெயர் மாற்றம் செய்து கொடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுதாக்கல் செய்ய வேண்டும்.
அந்த நிறுவனங்களில் இறந்தவர் பெயரில் எவ்வளவு முதலீடுகள் அல்லது பங்குகள் உள்ளது? என்பதை மதிப்பிட்டு அதற்குரிய நீதிமன்ற கட்டணத்தைச் செலுத்தினால் நீதிமன்றம், மனுவை பரிசீலணை செய்து அவர்களுக்கு இறங்குரிமை சான்றிதழை வழங்கும். 
அந்த இறங்குரிமை சான்றிதழின் அடிப்படையில் நிறுவனங்கள் முதலீடுகளை அல்லது பங்குகளை  பெயர் மாற்றம் செய்தோ அல்லது பணமாக, பிரித்து கொடுப்பதையோ தயக்கமில்லாமல் செய்யும்.
****************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

Saturday, May 27, 2017

பிறப்பு, இறப்பு பதிவு சான்று : தமிழக அரசு புது உத்தரவு

பிறப்பு, இறப்பு பதிவு சான்று : தமிழக அரசு புது உத்தரவு
'ஓராண்டுக்கு மேல் பிறப்பு, இறப்புக்களை பதிவு செய்யாவிட்டாலும், அதற்கான சான்றிதழ் பெற, நீதிமன்றம் செல்லாமல், கோட்டாட்சியர்களான, ஆர்.டி..,க்களிடம் விண்ணப்பிக்கலாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வேலுார், திருவண்ணாமலை, கடலுார், விழுப்புரம், கிருஷ்ணகிரி மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த, ஆர்.டி..,க்களுக்கு, பிறப்பு, இறப்பு பதிவு செய்வது தொடர்பான, சிறப்பு பயிற்சி முகாம், வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சமீபத்தில் நடந்தது.
இது குறித்து, பிறப்பு, இறப்பு கூடுதல் பதிவாளரும், பொது சுகாதாரத் துறை இணை இயக்குனருமான, ஈஸ்வரன் கூறியதாவது:
பிறப்பு, இறப்பை ஓராண்டுக்கு மேல் பதிவு செய்யாமல் இருந்தால், நீதிமன்ற அனுமதி பெற்றே, பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. தற்போது, அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி, நீதிமன்றம் செல்ல வேண்டியதில்லை.
சம்பந்தப்பட்ட, ஆர்.டி..,க்களிடம் விண்ணப்பிக்கலாம். அதை, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆய்வு செய்த பின், ஆர்.டி.., பிறப்பு, இறப்பை பதிவு செய்து, சான்றிதழ் வழங்குவார்.இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி : தினமலர் நாளிதழ் – 26.05.2017
நன்றி : தினமலர் நாளிதழ் - 25.10.2018