disalbe Right click

Showing posts with label தேர்வு. Show all posts
Showing posts with label தேர்வு. Show all posts

Thursday, December 14, 2017

SET EXAM - 2018

பேராசிரியர் தகுதிக்கானசெட்தேர்வு
சென்னை: பேராசிரியர் பணிக்கான, ’செட்தகுதி தேர்வு, மார்ச், 4ல் நடக்கிறது.
இதற்கான, ’ஆன்லைன்விண்ணப்ப பதிவு, வரும், 18ல், துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைகள், கல்லுாரிகளில் பேராசிரியர் பணியில் சேர, தேசிய அளவிலான, ’நெட்அல்லது தமிழக அளவிலான, ’செட்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்தமிழகசெட்தேர்வை, அரசின் சார்பில், கொடைக்கானல் தெரசா மகளிர் பல்கலை, இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
இந்த ஆண்டுக்கான தேர்வை, தெரசா பல்கலையே நடத்துகிறது. இதற்கான அறிவிப்பு, தெரசா பல்கலையின், www.motherteresawomenuniv.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான, செட் தகுதி தேர்வு, மார்ச், 4ல் நடக்க உள்ளது.
இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, வரும்,2017 Dec. 18 ல், துவங்குகிறது. பிப்.,9க்குள் விண்ணப்பிக்க, தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்
கூடுதல் விபரங்களை, தெரசா பல்கலையின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி : தினமலர் (கல்விமலர்) - 15.12.2017 

Thursday, August 24, 2017

’நெட்’ தகுதி தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயம்

 
நெட்தகுதி தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயம்
பேராசிரியர் பணிக்கான, நெட் தகுதி தேர்வுக்கு, ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, தேசிய அளவில், ’நெட்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2016 வரை, ஆண்டுக்கு இரண்டு முறை இந்த தேர்வு நடத்தப்பட்டது. இனி, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான, ’நெட்தேர்வு, நவ., 5ல் நடக்கிறது. இதற்கு, ஆக., 11ல் ஆன்லைன் பதிவு துவங்கியது; செப்., 12 வரை பதிவு செய்ய, அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்ப பதிவில் பலர், ஆதார் எண் விபரங்களை குறிப்பிடாமல் உள்ளனர்.
இது குறித்து, தேர்வை நடத்தும், சி.பி.எஸ்.இ., வெளியிட்ட அறிவிப்பு: தேர்வர்களின் சுய விபரங்களில் தவறு ஏற்படாமல் இருக்க, ஆதார் எண், பிறந்த தேதி போன்ற விபரங்கள், கட்டாயம் தேவை. காஷ்மீர், அசாம் மற்றும் மேகாலயா மாநிலத்தவர் மட்டும், பாஸ்போர்ட், ரேஷன் அட்டை, வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 24.08.2017 

Wednesday, August 2, 2017

பிளஸ் 1 பொது தேர்வில் சட்ட சிக்கல்!

பிளஸ் 1 பொது தேர்வில் சட்ட சிக்கல்!
பிளஸ் 1 பொதுத் தேர்வு குறித்த வழக்கை விரைந்து முடிக்க, பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்என, பெற்றோரும், ஆசிரியர்களும் தெரிவித்து உள்ளனர்.
தமிழகத்தில், பல ஆண்டு களாக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும், பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த மதிப்பெண் அடிப்படையில், உயர் கல்வி வாய்ப்பு வழங்கப்படுகிறது. எனவே, பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் இருப்பதால், பெரும்பாலான பள்ளிகள், பிளஸ் 1 மாணவர்களுக்கும், பிளஸ் 2 பாடங்களே நடத்தி வந்தன.
உயர் கல்விக்கான, மத்திய அரசின் பல்வேறு நுழைவுத் தேர்வுகளில், பிளஸ் 1 பாடங்கள் அதிகளவில் இடம் பெற்றன. அதனால், தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள், நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாமல் தவித்தனர்.
இதையடுத்து, ’பிளஸ் 1 மாணவர்களுக்கும், இந்த ஆண்டு முதல், பொதுத் தேர்வு நடத்தப்படும்என, தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து, மதுரை உயர் நீதிமன்றத்தில், பெற்றோர் சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
அதில், ’ஏற்கனவே, 10ம் வகுப்பு; பிளஸ் 2வில், பொதுத் தேர்வு உள்ளது. பிளஸ் 1க்கு பொதுத் தேர்வு வந்தால், மாணவர்களுக்கு, மன அழுத்தம் ஏற்படும்என, கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில், தமிழக பள்ளிக்கல்வித் துறை, இன்னும் சரியான முடிவு எடுக்காமல் திணறுகிறது.
அதனால், வழக்கு விசாரணை, ஆக., 7க்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.இதனிடையே, வழக்கின் முடிவு எப்படி வரும் என்ற எதிர்பார்ப்பில், மீண்டும் பல பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பில் பாடம் நடத்துவதில் ஆர்வம் குறைந்துள்ளது.
தேர்வுக்கான விதிமுறைகள் வெளியிடப்படாததால், பிளஸ் 1 தேர்வு குறித்து, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர்.
இது குறித்து, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கூறுகையில், ’பள்ளிக்கல்வி அதிகாரிகள், உரிய முறையில் விளக்கம் கொடுத்து, சட்ட ரீதியான பிரச்னையை விரைந்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால், ’நீட்தேர்வு பிரச்னை போல், கடைசி வரை மாணவர்களை காத்திருக்க வைப்பது, இறுதியில் சிக்கலாகி விடும்என்றனர்.
நன்றி : தினமலர் - கல்விமலர் - 02.08.2017

Wednesday, July 26, 2017

நவம்பர் 19-இல் 'நெட்' தேர்வு, ஜூன் மாதத் தேர்வு ரத்து!

நவம்பர் 19-இல் 'நெட்' தேர்வு, ஜூன் மாதத் தேர்வு ரத்து!
நடப்பு ஆண்டான 2017ல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான நெட்எனப்படும் தேசிய அளவிலான தகுதித் தேர்வுநவம்பர் மாதம் 19ம் தேதியில் நடத்தப்பட உள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தகுதியைப் பெறுவதற்கும், உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற தகுதி பெறுவதற்கும், ஆண்டுக்கு இருமுறை இந்தத் தேர்வை பல்கலைக்கழக மானியக்குழு என்று சொல்லப்படக்கூடிய University Grants Commission (UGC) நடத்தி வந்தது.
கடந்த 2014ம் ஆண்டு முதல் இந்தத் தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்று சொல்லப்படக்கூடிய The Central Board of Secondary Education (CBSE) நடத்தி வருகிறது.
கடந்த 2016ம் ஆண்டுத்தேர்வை இந்த ஆண்டின் துவக்கத்தில் (ஜனவரி) நடத்திய CBSE அதற்கு முன்னதாக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது.
அதில் ஏராளமாக தேர்வுகளை நடத்தி வருவதன் மூலம் தங்களுக்கு பணிச்சுமை அதிகரித்திருப்பதால் நெட் தேர்வை தங்களால் இனி நடத்த இயலாது என்பதை CBSE தெரிவித்திருந்தது.
இது சமபந்தமாக நடந்த கலந்தாலோசனைக்குப் பிறகு CBSE தொடர்ந்து நெட் தேர்வை நடத்தும் என்று UGC அறிவித்தது.
நவம்பர் 19ல் நெட் தேர்வு
2017ம் ஆண்டிற்கான நெட் தேர்வு நவம்பர் மாதம் 19ம் தேதி நடத்தப்படும். இதற்காக ஆன்லைன் மூலமாக ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்விற்கான கட்டணத்தை ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வரை செலுத்தலாம். இது தொடர்பான முழுமையான அறிவிப்பு, 2017 ஜூலை 24ம் தேதி CBSE இணையதளத்தில் http://cbsenet.nic.in  வெளியிடப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத் தேர்வு ரத்து
கடந்த (2017) ஜூன் மாதத்தில் நடந்திருக்க வேண்டிய தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது. டிசம்பரில் நடக்க வேண்டியத் தேர்வு நவம்பரில் நடத்தப்பட உள்ளது. இனி ஆண்டுக்கு ஒருமுறைதான் நெட் தேர்வை நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளதாக CBSE அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(15.07.2017 - தினமணி நாளிதழில் வெளிவந்த செய்தியினைத் தழுவி எழுதப்பட்டுள்ளது)
அன்புடன் செல்வம் பழனிச்சாமி



Thursday, March 30, 2017

வழக்கறிஞராக பணியாற்ற என்ன செய்ய வேண்டும்?

Image may contain: 1 person, text

வழக்கறிஞராக பணியாற்ற என்ன செய்ய வேண்டும்?

இந்திய பார் கவுன்சில் தேர்வு! 
கோவை அரசு சட்டக் கல்லுாரியில் நேற்று நடந்த, அனைத்து இந்திய பார் கவுன்சில் தேர்வை, 458 பேர் எழுதினர்.

நாடு முழுவதும், 2010ம் ஆண்டு முதல், அனைத்து  இந்திய பார் கவுன்சில் தேர்வு நடத்தப்படுகிறது. இவ்வாண்டுக்கான வழக்கறிஞர் தகுதிகான் பார் கவுன்சில் தேர்வு, கோவை உட்பட, 48 மையங்களில் நடந்தது.

கோவை அரசு சட்டக் கல்லுாரியில், தமிழ் வழித்தேர்வை, 229 பேர், ஆங்கில வழித்தேர்வை, 229 பேர் என, மொத்தம் 458 பேர் எழுதினர்.

கோவை அரசு சட்டக்கல்லுாரி முதல்வரும், தேர்வு ஒருங்கிணைப்பாளருமான கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ”சட்டப்படிப்பு முடித்து (பி.எல்.,) பார் கவுன்சிலில் பதிவு செய்த, மூன்றாண்டு களுக்குள் அனைத்து இந்திய பார் கவுன்சில் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, வழக்கறிஞராக வாதாட முடியும்.

”தேர்வில், 100 ’அப்ஜெக்டிவ்’ வகை வினாக்கள் கேட்கப்பட்டன. இரண்டரை மாதங்களுக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகலாம்,” என்றார்.

நன்றி : தினமலர் (கல்விமலர்) - 27.03.2017

Tuesday, February 7, 2017

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கு தயாராவது எப்படி?


டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கு தயாராவது எப்படி?

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் மாநில அரசு தேர்வுகளுக்கு தயாராவதற்கு ஒரு தேர்ந்த திட்டமிடல் அவசியம்! அத்தகைய திட்டமிடல் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு சில முக்கிய ஆலோசனைகள் உங்களுக்காக: 

* தேர்வுக்கான அறிவிப்பு வந்த காலம் முதல் பாடத்திட்டத்திற்கேற்ப நமது நேரத்தைப் பகுத்து, படிக்க வேண்டும்.

* தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சமச்சீர் கல்வி புத்தகங்கள் தான் முதல் அடித்தளம். 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள புத்தகங்கள் பொதுவாக மாநில அரசு தேர்வுகளுக்கான அடிப்படை புரிதலை வழங்குகின்றன.

* ஒரு நாளைக்கு 8 மணி நேரமாவது தேர்வுக்கான தயாரிப்பில் ஈடுபடுவது அறிவுறுத்தத் தகுந்தது.

* நாம் எவ்வாறு தேர்வுக்கான பாடத்திட்டத்தை அறிந்து வைத்திருக்கிறோம் என்பதே தேர்வுக்கான வழிகாட்டியாகும். முந்தைய ஆண்டுகளுக்கான தேர்வுக் கேள்விகளை எவ்வாறு ஆய்ந்தறிந்துள்ளோம் என்பதும், அதற்கடுத்தாற்போல் எவ்வளவு சுய பயிற்சிகளை தேர்வுக்கு முன் எடுத்துக் கொள்கிறோம் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

* தேர்வுக்கான ஊக்குவிப்புகளை புத்தகங்களில் தேடுவதை விட, எந்தப் பதவிக்கு தேர்வு எழுதுகிறோமோ அது பற்றிய விவரங்களையும், அதற்கான உங்களின் பாடங்களையும் தினசரி நினைவில் நிறுத்திக்கொள்வது சிறந்தது.
பாடத்திட்ட அடிப்படையிலான தயாரிப்பானது, பின்வரும் முறையில் மேற்கொள்ளப்படலாம்.

அறிவியல்:

* தமிழக அரசு தேர்வுகளுக்கு அறிவியல் பாடமானது முக்கிய பாடமாக கருதப்படுகிறது. இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களை உள்ளடக்கியுள்ளது.

* அறிவியல் பாடம், தேர்வுக்கான மதிப்பெண்களில் முக்கிய இடம் வகிப்பதால், அதில் சிறப்பு கவனம் செலுத்துதல் அவசியம்.

* வைட்டமின்கள், நோய்களும் காரணிகளும், நோய்த்தடைகாப்பு மண்டலம் - இரத்தம், நரம்பு மண்டலம், இயற்கை வளங்கள் (மரபு சார்ந்த மற்றும் மரபுசாரா வளங்கள்), கனிம வளம் மிகுந்த பகுதிகள் ஆகியவை சிறப்பு கவனம் பெறும்.

* ஒளிச்சேர்க்கை - செல் - செல்லின் அமைப்பு - செல்லின் பாகங்கள் - கணிகள் - விதைகள் - மகரந்த சேர்க்கை - இனப்பெருக்கம் - தாவர நோய்கள் - சுவாசித்தல் ஆகியவையும் இடம் பெறலாம்.

* சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்கள், பொதுத் தாள் புத்தகங்கள் அறிவியல் பாடத் தயாரிப்பிற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

இந்திய அரசியலமைப்பு:

* போட்டித் தேர்வுகளில் எளிதாக மதிப்பெண் பெறும் பகுதியாக இது கருதப்படுகிறது. 

* பொதுவாகவே இவற்றிலுள்ள பெரும்பாலான தலைப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. குறிப்பாக அடிப்படை உரிமைகள், அரசு நெறிப்படுத்தும் கொள்கைகள், பாராளுமன்றம், மத்திய மாநில உறவுகள், பஞ்சாயத்து தொடர்பான தலைப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

வரலாறு:

* வரலாறு பாடத்திற்கு 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான சமச்சீர் புத்தகங்கள் ஆரம்பக் கட்ட புரிதலுக்கு உதவிகரமாக இருக்கும்.

* இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு (1857-1947), கவர்னர்கள் (1757-1947), புத்த சமயம், சமணசமயம், சமூக சீர்திருத்த இயக்கம், ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ நாகரீகம், குப்தர்கள், மௌரியர்கள், சேர, சோழர், பாண்டியர் காலம், சுல்தான்கள் மராத்தியர்கள் ஆகியவற்றை அறிந்துகொள்வது நல்லது.

பொருளாதாரம்:

* குறிப்பிட்ட சில பகுதிகளிலிருந்தே பொருளாதாரத்தில் வினாக்கள் கேட்கப்படுகிறது. ஆனாலும் அவற்றை அலட்சியப்படுத்தாமல் கவனம் செலுத்த வேண்டும்.

* மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கிடையேயான பொருளாதார உறவுகள் போன்ற பகுதிகளில் கவனம் செலுத்தலாம்.

பொதுஅறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள்:

* போட்டித் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற முக்கியமான பகுதிகளாக பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் கருதப்படுகின்றன. நாள்தோறும் நாளிதழ் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

* பிரபல நபர்கள், அரசாங்க திட்டங்கள், தமிழக நடப்பு நிகழ்வுகள் மற்றும் தேசிய நிகழ்வுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தலாம்.

புவியியல்: 

இந்திய, தமிழக வரைபடங்கள், உயர்ந்த சிகரங்கள், மலைத்தொடர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

மனத்திறன் பயிற்சி மற்றும் அறிவுக்கூர்மை திறன்: வினாத்தாளில் நான்கில் ஒரு பகுதிக் கேள்விகள் இப்பகுதியில் இருந்து கேட்கப்படுகின்றன.

சில குறிப்புகள்:

*  முக்கிய ஆண்டுகளை நினைவில் வைத்திருத்தல் அவசியம். இதில் தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கும் முறை இல்லாத காரணத்தால் 200 கேள்விகளுக்கும் விடையளிப்பதே சிறந்தது.

* குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் 200 கேள்விகளுக்கும் விடையளிப்பதற்கு பயிற்சி மிக அவசியம். ஆகவே தினமும் இரண்டு முந்தைய வருட வினாத்தாள்களை கொண்டு பயிற்சி பெறுதல் சிறந்தது.

* குரூப் 2, குரூப் 4 மற்றும் குரூப் 8 ஆகிய தேர்வுகளுக்கு நடப்பு அரசியல் பொருளதாரம் மற்றும் சமூக நிகழ்வுகளை அறிந்து வைத்திருத்தல் கூடுதல் பயனளிக்கும்.

முறையான மற்றும் தேவையான கையேடுகளை மட்டும் படித்தாலே இத்தேர்வுகளில் வெற்றி பெறலாம். அனைத்து பாடபுத்தகங்களையும் கைப்பேசி அல்லது கணினி உதவியோடு இணையத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அரசு வேலைவாய்ப்பு என்பது எப்போதும் நிரந்தரமானது. அதற்கான முயற்சியில் தற்காலிகமாக நாம் சிரமப்படுவது ஒன்றும் கடினம் அல்ல. வாழ்த்துக்கள்!

-எம்.கார்த்திகேயன், கல்வியாளர்.

நன்றி : தினமலர் (கல்விமலர்) - 30.09.2016

Monday, February 6, 2017

உதவி பேராசிரியர் பணி; ’செட்’ தேர்வு அறிவிப்பு


உதவி பேராசிரியர் பணி; ’செட்’ தேர்வு அறிவிப்பு

’உதவிப் பேராசிரியர் பணிக்கான, ’செட்’ தகுதித் தேர்வு, ஏப்ரல் 23ல் நடக்கும்’ என, தெரசா பல்கலை அறிவித்து உள்ளது.

கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், உதவிப் பேராசிரியர் பணியில் சேர, தேசிய அளவிலான, ’நெட்’ மற்றும் மாநில அளவிலான, ’செட்’ தேர்வுகளில், ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற வேண்டும். ’நெட்’ தேர்ச்சி பெற்றால், நாடு முழுவதும் எந்த பல்கலையிலும் பணியில் சேரலாம்.

’செட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றால், எந்த மாநில, ’செட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றனரோ, அந்த மாநில கல்லுாரிகளில் மட்டுமே பணியில் சேர முடியும். ’நெட்’ தேர்வை, ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் எழுதலாம். தமிழக, ’செட்’ தேர்வில், ஆங்கிலம் அல்லது தமிழில் தேர்வு எழுதலாம்.

தமிழகத்தில், ’செட்’ தேர்வானது, கடந்த ஆண்டு முதல், கொடைக்கானல் தெரசா பல்கலை மூலம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு, ஏப்., 23ல் நடக்கும் என, ’செட்’ தேர்வு கமிட்டிஅதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும், 16 பொறுப்பு மையங்கள் மூலம், 25 பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது. தேர்வுக்கு, பிப்., 12 முதல் மார்ச் 12 வரை, ஆன்லைனில், http://www.tnsetexam2017mtwu.ac.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 

தாமத கட்டணத்துடன், மார்ச் 19 வரை விண்ணப்பிக்க முடியும். கூடுதல் விபரங்களை, ’செட்’ தேர்வு இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

நன்றி : தினமலர் (கல்விமலர்) நாளிதழ் - 06.02.2017

Friday, January 27, 2017

IES - Indian Economic Service

No automatic alt text available.

IES - Indian Economic Service

இந்தியா பொருளாதார வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை தீட்டுவதில், நீங்கள் பங்கேற்கவும், பொருளாதாரம் சார்ந்த துறைகளில் ஓர் உயரிய பொறுப்பை வகிக்கவும் உங்களுக்கு ஆசை இருக்குமானால் அல்லது பொருளாதாரத்தில் அதீத ஆர்வம் இருக்குமேயானால், நீங்கள் ஐ.இ.எஸ்., ஆக கனவு காணலாம்!
உலகளவில் பொருளாதார வளர்ச்சியை கண்காணித்து, அவற்றை மதிப்பீடு செய்து, நம் நாட்டில் உள்ள அத்தியாவசிய பொருள்களின் விலைகளை நிர்ணயம் செய்வதிலிருந்து, பல பொருளாதார சீர்திருத்தங்களை கையாள்வதில் ஐ.இ.எஸ்., அதிகாரிகளின் பங்கு மிகவும் முக்கியமானது.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், நாட்டின் தேசிய மற்றும் மாநில நிர்வாகங்களில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பங்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு தான் நாட்டின் பொருளாதார திட்டங்களை வகுப்பதில் ஐ.இ.எஸ்., அதிகாரிகளின் பங்கும். இத்தகைய பொறுப்பு மிக்க அதிகாரிகளை நேரடியாக தேர்வு செய்ய நடத்தப்படும் தேர்வே ‘இந்தியன் எக்னாமிக் சர்வீஸ்’!
யார் எழுதலாம்?
இந்திய பொருளாதாரப் பணிக்கான தேர்வுகளை எழுத அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் எகனாமிக்ஸ், அப்ளைடு எகனாமிக்ஸ், பிசினஸ் எகனாமிக்ஸ், எகனோமெட்ரிக்ஸ் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முதுநிலை பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தற்போது, இளநிலை பட்டப் படிப்பில் பொருளாதாரம், படிக்கும் மாணவர்கள் இத்தேர்வை எழுத முடியாது.
வயது வரம்பு: 
ஐ.இ.எஸ்., தேர்வு எழுத ஜனவரி 1ம் தேதி கணக்கீட்டின்படி, 21 முதல் 30 வயதிற்குள் இருத்தல் வேண்டும். அரசாங்க விதிமுறைப்படி, வயது வரம்பில் தளர்வும் உண்டு.
பணி விபரம்: 
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) நடத்தும் இத்தேர்வு மூலம், ‘ஹயர் அட்மினிஸ்ரேடிவ் ஆபிசர்/பிரின்சிபல் அட்வைசர் மற்றும் சீனியர் எகனாமிக் அட்வைசர், சீனியர் அட்மினிஸ்ட்ரேட்டிவ் கிரேடு/எகனாமிக் அட்வைசர் ஆகிய உயர்நிலைபொறுப்புகளை வகிக்க முடியும்.
ஆரம்ப நிலையில் ‘குரூப்-4’ பிரிவின் கீழ் ஜூனியர் டைம் ஸ்கேல், அசிஸ்டன்ட் டிரைக்டர் மற்றும் ரீசர்ச் ஆபிசர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
இவற்றில், 60 சதவீத பணியிடங்கள் நேரடி நியமனம் மூலமாகவும், 40 சதவீத பணியிடங்கள் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.
தேர்வு முறைஆயிரம் மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் 200 மதிப்பெண்களுக்கு ’வைவா’ எனப்படும் நேர்முகத் தேர்வு, ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலும் மற்றும் மருத்துவ பரிசோதனை மூலமும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு: பொது ஆங்கிலம் (100 மதிப்பெண்கள்),
பொது அறிவு (100 மதிப்பெண்கள்),
பொருளாதாரம் தாள் 1 (200 மதிப்பெண்கள்),
 பொருளாதாரம் தாள் 2 (200 மதிப்பெண்கள்),
பொருளாதாரம் தாள் 3 (200 மதிப்பெண்கள்) மற்றும்
இந்திய பொருளாதாரம் (200 மதிப்பெண்கள்).
இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மத்திய அரசின் சார்பில் பல்வேறு பயிற்சிகள், இலவசமாக வழங்கப்பட்டு மதிப்புமிக்க ஐ.இ.எஸ்., பணியிடங்களில் நியமனம் செய்யப்படுகிறனர்.
மேலும் விவரங்களுக்கு: www.ies.gov.in

Monday, December 26, 2016



ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு ஒரு வார கால அவகாசம்

ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற உயர் கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பு, நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, ஒரு வாரமே அவகாசம் உள்ளது.

ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - தஞ்சையிலுள்ள இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், சென்னையில் உள்ள காலணிகள் தயாரிப்பு தொழில் நுட்ப கல்லுாரி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, இந்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், திருச்சி என்.ஐ.டி., போன்றவற்றில் சேர, நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தும், ஜே.இ.இ., மெயின் நுழைவு தேர்வுக்கு, டிச., 1 முதல், ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்படுகிறது. தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஜன., 2ல், விண்ணப்ப பதிவு முடிகிறது.

இந்த ஆண்டு, ஜே.இ.இ., மெயின் தேர்வுக்கு, ஆதார் எண் கட்டாயம். மேலும், பிளஸ் 2 தேர்வில், குறைந்த பட்சம், 75 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தேர்வுக்கு பின், இந்த மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

நன்றி : தினமலர் நாளிதழ் – 26.12.2016

Saturday, November 26, 2016

ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு


JEE ENTRANCE EXAM - என்ன செய்ய வேண்டும்?
டிச., 1 முதல் விண்ணப்பிக்கலாம்!
ஐ.ஐ.டி., என்ற உயர்கல்வி தொழில்நுட்ப கல்லுாரிகளில் இன்ஜினியரிங் படிப்பதற்கான, ஜே.இ.இ., மெயின் நுழைவுத் தேர்வுக்கு, டிச., 1 முதல் விண்ணப்பிக்கலாம்.

ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.டி.எம்., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., மற்றும் பி.பிளான் போன்ற படிப்புகளில் சேர, ஜே.இ.இ., மெயின், அட்வான்ஸ் என்ற, இரண்டு கட்ட நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். 

வரும் கல்வி ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு, சி.பி.எஸ்.இ., மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, ஏப்., 3ல் எழுத்துத் தேர்வும், ஏப்., 9, 10ல், ஆன்லைன் வழி தேர்வும் நடத்தப்படுகிறது. 

இதற்கு, டிச., 1 முதல், 31 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வில் பங்கேற்க, தமிழக அரசு பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ., உட்பட, 54 பாடத்திட்ட மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உட்பட நாடு முழுவதும், 132 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. 

வெளிநாட்டில் இருப்போர், ஜே.இ.இ., மெயின் தேர்வை எழுத, துபாய், பக்ரைன், மஸ்கட், ரியாத் மற்றும் ஷார்ஜா ஆகிய நகரங்களில், தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.

குஜராத்தியில் எழுதலாம்: 
ஜே.இ.இ., மெயின் தேர்வை, ஆங்கிலம் அல்லது இந்தி என, ஏதாவது ஒரு மொழியில் எழுத அனுமதி உள்ளது. தமிழிலும், இத்தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. 

இந்நிலையில், இந்த ஆண்டு முதல் குஜராத்தியிலும், ஜே.இ.இ., தேர்வை எழுதலாம் என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் சென்னை, கோவை, திருநெல்வேலி, ஈரோடு, திருப்பூர் உட்பட, பல மாவட்டங்களில் குஜராத்தி மொழி பேசுவோர் பரவலாக உள்ளனர்.

நன்றி : தினமலர்-கல்விமலர் - 26.11.2016


Wednesday, October 12, 2016

தேசிய தகுதித் தேர்வு


தேசிய தகுதித் தேர்வு - என்ன செய்ய வேண்டும்?

’நெட்’ தகுதி தேர்வு; சி.பி.எஸ்.இ., அறிவிப்பு

கோவை: நெட் தகுதி தேர்வுக்கு, 2017 ஜன., 22ம் தேதி நடக்கவுள்ளது. இதற்கு, வரும், 17ம் தேதி முதல் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் என, சி.பி.எஸ்.இ., கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

பல்கலை, கல்லுாரிகளில் உதவி பேராசிரியர்களாக பணியில் சேர்வதற்கும், பி.எச்.டி., மாணவர்கள் உதவித்தொகை பெறுவதற்கும், மத்திய கல்வி வாரியத்தால் நெட் தகுதி தேர்வு, ஆண்டுக்கு இரு முறை நடத்தப்பட்டு வருகிறது. 

இதன்படி, 2017ம் கல்வியாண்டிற்கான தேர்வு, ஜன., 22ம் தேதி நடக்கவுள்ளது.

தேர்வர்கள் வரும், 17ம் தேதி முதல் நவ., 16ம் தேதி வரை,  "ஆன்-லைன்" மூலமாக விண்ணப்பிக்கலாம். 

இதற்கான கட்டணங்களை, நவ.,17ம் தேதிக்குள் செலுத்துவது அவசியம். 

தேர்வுக்கான நுழைவுச்சீட்டு, டிச., 21ம் தேதி சி.பி.எஸ்.இ., இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த, தெளிவான விபரங்களை சி.பி.எஸ்.இ., இணையதளம் www.cbsenet.nic.in மூலம் அறிந்து கொள்ளலாம்.

நன்றி : தினமலர் - கல்வி மலர் - 12.10.2016



Thursday, October 6, 2016

சிமேட் தேர்வு


சிமேட் தேர்வு - என்ன செய்ய வேண்டும்?
Common Management Admission Test - CMAT)  ’சிமேட்’   நுழைவுத்தேர்வு; 
10.10.2016 முதல் ஆன்லைன் பதிவு

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி ( All India Council for Technical Education - AICTE)  கவுன்சிலான, அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளில், எம்.பி.ஏ., படிப்புகள் உள்ளன.

அதில், முதுநிலை டிப்ளமோ மேலாண் நிர்வாகம்;முதுநிலை டிப்ளமோ நிறுவன நிர்வாகம் போன்ற படிப்புகளில் சேர, சிமேட் நுழைவுத் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.

ஆண்டுக்கு, இரு முறை இந்த தேர்வு நடத்தப்பட்டது.
நடப்பு கல்வி ஆண்டு முதல், ஒரு முறை மட்டுமே தேர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, ஜன., 28, 29ம் தேதிகளில்,ஆன்லைன் தேர்வு நடத்தப்படும்;
10.10.2016ம் தேதி முதல், ஆன்லைன் பதிவு துவங்குகிறது; டிச., 10வரை விண்ணப்பிக்கலாம்.

அனைத்து இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்களும், இளங்கலை இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விபரங்களை, www.aicte-cmat.in/college/faq.aspx என்ற இணையதளத்தில் அறியலாம்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 06.10.2016

Thursday, February 4, 2016

JEE தேர்வில் வெற்றி பெற


JEE தேர்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?

1. JEE நுழைவுத் தேர்வு:
இது மெயின் பேப்பர்-I, மெயின் பேப்பர்-II என இரு பிரிவுகளாக நடத்தப்படும். பேப்பர்-I தேர்வில் தேர்ச்சிபெறும் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் 60%க்கும், ப்ளஸ் டூ மதிப்பெண்கள் 40%க்கும் வெயிட்டேஜ் பார்க்கப்பட்டு, தரவரிசையின் அடிப்படையில் நாட்டில் உள்ள 30 NIT கல்லூரிகள், 18 IIT கல்லூரிகள், 18 GFTI கல்லூரிகளிலும் இடம் கிடைக்கப்பெறுவார்கள். தவிர, மத்திய அரசின் கீழ் இயங்கும் 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலும் B.E., B.Tech பிரிவுகளில் சேரும் வாய்ப்பும் கிட்டும்.
2. JEE அட்வான்ஸ்:

டாப் ரேங்க் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள், அட்வான்ஸ் எனப்படும் இரண்டாம் கட்டத் தேர்வு எழுதலாம். மெயின் பேப்பர்-I எழுதியவர்களின் மதிப்பெண் மற்றும் மத்திய அரசால் வகுக்கப்பட்ட இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தர வரிசையில் முதல் ஒன்றரை லட்சம் இடங்களுக்குள் வரும் மாணவர்கள் மட்டுமே அட்வான்ஸ் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். இந்தத் தேர்வு முடிவின் தரவரிசைப் பட்டியலில் வரும் பதினெட்டாயிரம் மாணவர்களில், முதல் பத்தாயிரம் பேர் IIT, ISM Dhanbad கல்வி நிறுவனங்களிலும், அடுத்து வரும் எட்டாயிரம் மாணவர்கள் IIST, RGIPT, IISTC, ஆறு IISER கல்வி நிறுவனங்களிலும், சேர்க்கை பெற முடியும்.
3. JEE மெயின் பேப்பர்-II: 

இதில் தேர்ச்சிபெறும் மாணவர்கள் ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர், NIT-ல் உள்ள ஆர்க்கிடெக்சர் பிரிவு மற்றும் எல்லா மாநிலங்களிலும் உள்ள மத்திய அரசின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் B.Arch, B.Planning பிரிவுகளில் சேர்க்கை பெற முடியும்.
4. கொஸ்டின் பேப்பர்:

மெயின் பேப்பர் I, அட்வான்ஸ் பேப்பர்-I, அட்வான்ஸ் பேப்பர்-II இந்தத்தேர்வுகளுக்கெல்லாம் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பின் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களே சிலபஸ். மெயின் பேப்பர்-II எழுதுபவர்களுக்கு கணிதம், ஆர்க்கிடெக்சர், ஆப்டிட்யூட், படம் வரைதல் தொடர்பான மூன்று மணி நேரத் தேர்வு நடைபெறும்.
எல்லாப் பிரிவு தேர்வுகளுக்கும் தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.
5. விண்ணப்பம்: 

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போதே, அந்தக் கல்வியாண்டின் நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதத்துக்குள் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைச் செலுத்தி இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
6. இணைக்க வேண்டியவை: 
விண்ணப்பத்துடன் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து இணைக்க வேண்டியவை...
* மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட சாதிச்சான்று
* 10-ம் வகுப்புத் தேர்ச்சி மதிப்பெண் பட்டியல்
* வெள்ளை நிறப் பின்னணி பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
* கறுப்பு நிற மையில் மாணவரின் கையொப்பம்
* மாணவரின் கைரேகை
* மாற்றுத்திறனாளிகள், சிறப்புப் பிரிவினருக்குரிய சான்று.
7. தேர்வு முறை: 

மெயின் பேப்பர்-I தேர்வு, ஆன்லைனிலேயே எழுதலாம். ஏப்ரல்/மே மாதங்களில் மத்திய அரசால் அறிவிக்கப்படும் ஏதேனும் மூன்று தேதிகளில் தேர்வு நடைபெறும். அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். மெயின்-II மற்றும் அட்வான்ஸ் தேர்வுகள், தேர்வு மையத்தில்தான் எழுத வேண்டும்.
8. போனஸ் வாய்ப்புகள்: 

JEE தேர்வு எழுத, மாணவர்களுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. 12-ம் வகுப்பு முடித்தவுடன் ஒரு வாய்ப்பும், 12-ம் வகுப்பு முடித்த அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தேர்வு எழுதும் வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன. ஆனால், அட்வான்ஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு 12-ம் வகுப்பு முடித்த வருடம், அதற்கு அடுத்த வருடம் மட்டுமே வாய்ப்பளிக்கப்படும்.
9. தமிழ்வழிக் கல்வி மாணவர்கள் கவனத்துக்கு: 

வினாக்கள் அனைத்தும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருக்கும். தமிழ்வழிக் கல்வி மாணவர்களுக்கு மெயின் பேப்பர் I-ஐ விட, பேப்பர்-II எளிமையாக இருக்கும். முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை என்பதை மனதில் வைக்கவும்.
10. எப்போதில் இருந்து படிக்க வேண்டும்: 

சிலர் 6-ம் வகுப்பில் இருந்தே தயாராக வேண்டும் என்பார்கள். உண்மையில் தேர்வு முறை மற்றும் மதிப்பெண் வழங்கும் முறையானது ஒவ்வோர் ஆண்டும் மாறிக்கொண்டே இருக்கும் என்பதால், அது பயனற்றது. 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்புப் பாடங்களைப் புரிந்து படித்தாலே தேர்ச்சி பெற்றுவிடலாம்.
11. கவனிக்க:
மாணவர்கள் எந்த மாநிலத்தில் மேல்நிலைக் கல்வி கற்கிறார்களோ, அந்த மாநிலத்தில் மட்டுமே JEE தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
12. மேலும் விவரங்களுக்கு... 

www.jeemain.nic.in
,
www.indiacollegefinder.org
,
www.jeeadv.iitk.ac.in
என்ற இணையதள முகவரிகளைப் பார்வையிடலாம்.
சு.சூர்யா கோமதி
நன்றி அவள்விகடன் - 17.11.2015