disalbe Right click

Showing posts with label நுகர்வோர் கோர்ட். Show all posts
Showing posts with label நுகர்வோர் கோர்ட். Show all posts

Monday, October 30, 2017

பட்டா வழங்கவில்லையா? நுகர்வோர் கோர்ட் இருக்கு!

நன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள்
முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து, தனது நிலத்திற்கு, “பட்டா” வாங்குவது மிகவும் சிரமமாகவே உள்ளது.  இது அரசு நமக்கு வழங்குகின்ற கட்டணச்சேவை ஆகும். இதில் குறை இருந்தால் பாதிக்கப்பட்ட எவர் ஒருவரும் நுகர்வோர் கோர்ட்டை தாராளமாக நாடலாம். செலவும் அதிகம் ஆகாது. வழக்கும் சீக்கிரம் முடிவுக்கு வந்துவிடும். வழக்கின் செலவோடு, உங்களுக்கு நஷ்ட ஈடும் வழங்கப்படும். இது சம்பந்தமான தீர்ப்புகளின் நகல்கள் உங்களுக்காக.
*********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி
No automatic alt text available.

Image may contain: text
Image may contain: text
Image may contain: text
No automatic alt text available.
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text

Saturday, August 26, 2017

பாதிக்கப்பட்டவருக்கு ரூ.13 லட்சம் இழப்பீடு!

மண்டபம் தராததால் கோவிலில் திருமணம், 
பாதிக்கப்பட்டவருக்கு ரூ.13 லட்சம் இழப்பீடு!
சென்னை : முன்பதிவு செய்தபடி, திருமண மண்டபத்தை வழங்காத நிர்வாகம், வாடிக்கையாளருக்கு 13 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, மாநில நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை, மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில், பீர்க்கன்காரணையைச் சேர்ந்த நடேசன் தாக்கல் செய்த மனு:
சென்னை, குரோம்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், 2009ம் ஆண்டு, பிப்., 1ம் தேதி திருமண வரவேற்பும், 2ம் தேதி திருமணம் நடத்தவும் முன்கூட்டியே முன்பதிவு செய்தேன். மண்டப வாடகை மற்றும் அலங்காரம் செய்வதற்கான கட்டணமாக, 93 ஆயிரம் ரூபாய் செலுத்தினேன். 
திட்டமிட்டபடி, 1ம் தேதி மதியம், 2:00 மணிக்கு திருமண மண்டபத்திற்கு சென்றபோது, அங்கு, வேறு ஒருவரின் திருமணத்திற்கு மண்டபம் கொடுக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த நான், நிர்வாகி மற்றும் மேலாளரிடம் கேட்டதற்கு, பதில் ஏதும் சொல்லாமல் மழுப்பினர். 
உடனடியாக குரோம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். போலீசார் விசாரிக்க வந்தபோது, நிர்வாகியும், மேலாளரும் வெளியேறி விட்டனர். இக்கட்டான நிலையில், உடனடியாக வேறு திருமணம் மண்டபம் கிடைக்காததால், அருகில் உள்ள கோவிலில் திருமணம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. 
திருமணத்திற்கு, உணவு, இசை நிகழ்ச்சி, வாகன ஏற்பாடுகளுக்காக, 3.43 லட்சம் ரூபாய் சம்பந்தப்பட்டவர்களிடம் முன் கூட்டியே கொடுத்து விட்டேன். அனைத்தும் வீணானது. கடும் மன உளைச்சலுக்கு ஆளானோம். இதனால், நாங்கள் திருமண மண்டபத்திற்கு செலுத்திய வாடகை மற்றும் உணவு மற்றும் இசை நிகழ்ச்சி உட்பட செலவான தொகையும் உரிய இழப்பீடும் வழங்க வேண்டும். 
இவ்வாறு மனுவில், கோரி இருந்தார்.
இந்த வழக்கில், நீதித்துறை உறுப்பினர் ஜெயராம், உறுப்பினர் பாக்கியவதி, 'பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: 
திருமண மண்டப நிர்வாகம், ஒப்புக்கொண்டபடி நடந்து கொள்ளாததால், மனுதாரர் மன உளைச்சலுக்கு ஆளானது விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால், மண்பட வாடகை, விருந்து மற்றும் இசை நிகழ்ச்சிக்காக செலவிடப்பட்ட, 3.35 லட்சம் ரூபாயும், மன உளைச்சலுக்கு, 10 லட்சம் ரூபாயும், வழக்கு செலவு, 20 ஆயிரம் ரூபாயும், மனுதாரருக்கு, திருமண மண்டப நிர்வாகிகளும், மேலாளரும் வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிடப்பட்டது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 17.02.2016

Saturday, June 10, 2017

40 ரூபாய்க்காக 3 ஆண்டுகள் போராடிய 70 வயதுப்போராளி!

40 ரூபாய்க்காக 3 ஆண்டுகள் போராடிய 70 வயதுப்போராளி!
40 ரூபாய்க்காக 3 ஆண்டுகள் போராடி நீதிமன்றத்தால் புகழப்பெற்ற 70 வயதுப்போராளி!
தனக்கு நிகழ்ந்தது அநீதி என நினைக்கும் எந்த ஒரு மனிதனும் கிடைக்கிறதோ இல்லையோ, இறுதிவரை நீதியைத் தேடுவான். இதன் சமீபத்திய உதாரணம் இமாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த லேக்ராஜ். வெறும் 40 ரூபாய் பெனால்டியை எதிர்த்து, இந்த 70 வயது முதியவரின் நெடும்பயணம், தலைநகர் டெல்லியில் வெற்றிகரமாக முடிந்துள்ளது.
தேசிய நுகர்வோர் ஆணையத்தில், கடந்த வார இறுதியில் இவருக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இவரிடம் வசூல் செய்யப்பட்ட 40 ரூபாயைத் திரும்ப அளிக்கச் சொன்ன அந்தத் தீர்ப்பின் பின் மூன்றாண்டு நெடிய பயணம் இருக்கிறது.
இமாச்சலப்பிரதேசத்தின் உனா மாவட்டத்தை லேக்ராஜ், ஓர் எழுத்தாளர். இவர் அந்த மாநில வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் கட்டி விற்கப்படும் வீடுகளில் ஒன்றுக்காக விண்ணப்பித்திருந்தார். அதன்படி இவருக்கு வீடும் ஒதுக்கித் தரப்பட்டது. அந்த வீட்டுக்காக நிர்ணயிக்கப்பட்ட தொகையைச் செலுத்திய பிறகு, இதர செலவுகள் எனக் குறிப்பிட்டு 808 ரூபாய் கட்டச் சொன்னார்கள். அதே கடிதத்தில் 808 ரூபாயை உரிய நேரத்தில் கட்டாத காரணத்தால், 40 ரூபாய் தண்டத்தொகையும் சேர்த்து 848 ரூபாய் கட்டச்சொல்லி லேக்ராஜுக்குத் தகவல் வந்தது.
அந்தத் தொகையைக் கட்டவேண்டிய இறுதி நாள் இன்னும் இருக்கும் நிலையில், `ஏன் 40 ரூபாய் அதிகம் கட்ட வேண்டும்? முடியாது' என்று லேக்ராஜ் மறுத்தார். `உடனடியாகக் கட்டவில்லை என்றால் குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் துண்டிக்கப்படும்' என வீட்டுவசதி வாரியத்திடமிருந்து தகவல் வந்தது. இதனால் உடனடியாக 848 ரூபாயைச் செலுத்திய லேக்ராஜ், சட்டரீதியான நடவடிக்கை எடுத்தார்.
`மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தமக்கு மன உளைச்சல் ஏற்படுத்தி, 40 ரூபாய் அதிகம் வசூல் செய்துவிட்டனர்' எனப் புகார் அளித்தார். மிக மெதுவாக நடந்த அந்த விசாரணையின் தீர்ப்பு, 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் வழங்கப்பட்டது. `லேக்ராஜுக்கு விற்கப்பட்டபோது வழங்கப்பட்ட வீடு ஒதுக்கீடு கடிதத்தில் உள்ள 'விதிகள் மற்றும் நிபந்தனை'களின் அடிப்படையில் தண்டத்தொகை பெறப்பட்டது தவறில்லை' என்று அவரின் மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பால் லேக்ராஜ் மேலும் மன உளைச்சல் அடைந்தார். காரணம், அப்படி ஒரு 'விதிகள் மற்றும் நிபந்தனைகள்' என்ற ஒன்றுகுறித்துத் தெரிவிக்கப்படவே இல்லை. அதன் பிறகு சிம்லாவில் உள்ள மாநில நுகர்வோர் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். அங்கும் கீழ்கோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்தது மட்டுமல்லாமல், 1,000 ரூபாய் தண்டமும் கட்டச்சொல்லி உத்தரவிட்டனர். இது அவரின் மன உறுதியைச் சிதைக்கவில்லை. மாறாக அதிகப்படுத்தியது. தனி ஒருவனாக அரசு நிர்வாகத்தின் அநீதியை எதிர்க்க இன்னும் தீவிரமாக முடிவுசெய்தார்.
சிம்லாவைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள தேசிய நுகர்வோர் ஆணையத்தில் இந்த ஆண்டு முறையீடு செய்தார். ஒருவழியாக டெல்லியில் லேக்ராஜின் போராட்டத்துக்கு முடிவு கிடைத்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.கே.ஜெயின், எழுத்தாளர் லேக்ராஜை வெகுவாகப் புகழ்ந்தார். ``அவரின் மன உறுதியைப் புகழ சொற்களே இல்லை'' எனத் தெரிவித்த அவர், `இந்த வழக்கின் மூலம் அறிவார்ந்த ஒரு மூத்த குடிமகன் அடையாளம் காணப்பட்டுள்ளார். எவ்வளவு குறைவான பணமாக இருந்தாலும் உயர்ந்த அதிகாரப் பீடங்களுக்கு எதிராக வீடு கொடுக்காமல் அதைப் போராடிப் பெறுவதற்கும் பெரிய போர்க்குணம் வேண்டும். அது லேக்ராஜிடம் இருக்கிறது. மேற்படி தண்டம் செலுத்தவேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. காரணம், அவரின் ஒதுக்கீட்டுக் கடிதத்தில் அப்படி ஒன்றைக் குறிப்பிடவே இல்லை. எனவே, அவரின் பணமான 40 ரூபாயையும் இவரின் சட்டப் போராட்டத்துக்கு ஏற்பட்ட செலவுகளுக்காக 5,000 ரூபாயையும் உடனடியாக வழங்க உத்தரவிடுகிறேன்' என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
வரவனை செந்தில்
நன்றி : விகடன் செய்திகள் - 10.06.2017




Tuesday, June 6, 2017

பைனான்ஸ் நிறுவனத்துக்கு ரூ.55 லட்சம் அபராதம்: நுகர்வோர் ஆணையம் அதிரடி

பைனான்ஸ் நிறுவனத்துக்கு ரூ.55 லட்சம் அபராதம்: நுகர்வோர் ஆணையம் அதிரடி
புதுடெல்லி: டெல்லியை சேர்ந்தவர் தன்கர். இவர் கடந்த 2004ம் ஆண்டு அசோக் லைலேண்ட் பைனான்ஸ் என்ற நிறுவனத்திடம் (தற்போது இந்த நிதி நிறுவனம் இண்டஸ்இண்ட் பாங்க்)  இருந்து லாரி இன்ஜின் ஒன்றை வாங்கினார். இதற்கு அந்நிறுவனம் அவருக்கு ரூ.8.5 லட்சம் கடன் வழங்கியிருந்தது. அசலுடன் வட்டியும் சேர்த்து ரூ.9,64,750 பணத்தை ஒரேயடியாகவோ அல்லது மாதம் ரூ.28,375 என 34 மாதங்களில் வழங்கலாம் என நிறுவனம் தன்கரிடம் அறிவுறுத்தி இருந்தது. மேலும் இது தொடர்பாக இருவருக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டு, தன்கரிடம் இருந்து 39 வெற்று காசோலைகளையும் பைனான்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. ஆனால் ஒப்பந்தம் நகல் தன்கருக்கு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
 
மாத தவணை தொடர்பாக நிறுவனத்துடன் தன்கருக்கு பிரச்னை இருந்து வந்த நிலையில், கடந்த 2005ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி அவர் வாகனத்தை ஓட்டி சென்றபோது, திடீரென அவரை வழிமறித்து சிலர் தாக்கியுள்ளனர். பின் நிலுவை தொகையை கட்டாமல் இருந்து வருவதாக கூறி, அவர்கள் லாரியை பறிமுதல் செய்தனர்.அதன்பின் அந்நிறுவனம் தன்கருக்கு எவ்வித முன்னறிவிப்பும் தெரிவிக்காமல், அந்த வாகனத்தை வேறு ஒரு நபருக்கு மலிவான விலைக்கு விற்பனை செய்துள்ளது. எனினும் சம்பந்தப்பட்ட நிறுவனம், தன்கர் வழங்கிய வெற்று காசோலைகளை நிரப்பி, அவர் மீது மோசடி வழக்கை தொடர்ந்தது.ஆனால் தன்னை ஏமாற்றி வாகனத்தை அபகரித்த அந்நிறுவனத்திடம் இருந்து தான் செலுத்தியதிலிருந்து குறிப்பிட்ட தொகையை பெற்று தரவேண்டும் என மாவட்ட நீதிமன்றத்தில் தன்கர் வழக்கு தொடர்ந்தார். 

வழக்கை விசாரித்த நீதிமன்றம், குறிப்பிட்ட நிறுவனம் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தது தொடர்பான எந்த ஆதாரத்தையும் தன்கர் தாக்கல் செய்யவில்லை என்பதோடு, முறைப்படி தவணை தொகை செலுத்தாதபட்சத்தில், நிறுவனம் வாகனத்தை பறிமுதல் செய்ததாக வழக்கு தொடர முடியாது எனக் கூறி நீதிமன்றம்மனுவை தள்ளுபடி செய்தது. 

எனினும் தன்கர் மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மாநில நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவில் தன்கர், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதிலும், 2004ம் ஆண்டு வழங்கிய வெற்று காசோலையை தவறாக பயன்படுத்தி தன் மீது மோசடி வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இவ்வழக்கு மீதான விசாரணை நேற்று முன்தினம் மாநில நுகர்வோர் நீதிமன்ற உறுப்பினர் என் பி கவுஷிக் முன் நடந்தது. 

அப்போது, நிறுவனம் இதேபோல் எத்தனை செக் மோசடி வழக்குகளை கடன் பெற்றோர் மீது பதிவு செய்துள்ளது? என ஆச்சரியப்பட்டார். 
மேலும் அவர் கூறுகையில், இந்திய நீதிமன்றங்களில் ஐபிசி சட்டம் 138ன் கீழ், பல செக் மோசடி வழக்குகள் பொய்யாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை எத்தனை கடன்காரர்கள் மீது இந்நிறுவனம் இதுபோல் பொய் மோசடி வழக்குகளை பதிவு செய்துள்ளது என்பதை யாராலும் யூகித்து பார்க்க முடிகிறதா என கேள்வி எழுப்பினார். 

அதன்பின் நுகர்வோர் ஆணையம் தனது தீர்ப்பில் கூறியதாவது
விசாரணையில் பைனான்ஸ் நிறுவனம் மனுதாரர் மீது பொய்யான செக் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது உறுதியாகிறது.  இதுபோன்ற நிறுவனத்தின் மோசடி வழக்குக்கு தீர்வு காண வேண்டுமானால், சம்பந்தப்பட்ட நிறுவனம் நுகர்வோர் ஆணையத்துடன் தொடர்புடைய நலவாரியத்துக்கு ரூ.50 லட்சம் அபராதமாக செலுத்த வேண்டும். மேலும் இந்த மோசடி வழக்கு மூலம் பாதிப்புக்குள்ளான டெல்லிவாசி தன்கருக்கு ரூ.5.1 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
நன்றி : தினகரன் நாளிதழ் - 07.06.2017


Sunday, June 4, 2017

ரயில் பயணிக்கு ரூ.75,000/- இழப்பீடு!

ரயில் பயணிக்கு ரூ.75,000/- இழப்பீடு!
முன்பதிவு செய்த இருக்கையில் வேறு ஒருவர் பயணம்: பயணிக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடு; ரயில்வே துறைக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவு
முன்பதிவு செய்த இருக்கையை வேறு ஒருவர் ஆக்கிரமித்து பயணம் செய்ததால் பாதிக் கப்பட்ட பயணிக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ரயில்வே துறைக்கு டெல்லி மாநில நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த விஜய் குமார் மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் ஒரு புகார் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:
கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து டெல்லிக்கு தக்சின் விரைவு ரயிலில் பயணம் செய்வதற்காக கீழ் படுக்கை இருக்கையை முன்பதிவு செய்தேன். ஆனால் மத்திய பிரதேச மாநிலம் பினா ரயில் நிலையத்தில் ஏறிய ஒருவர் எனது இருக்கையில் வந்து அமர்ந்திருந்தார்.
மேலும் முன்பதிவு செய்யாத சில பயணிகள் அந்தப் பெட்டிக்குள் ஏறி இன்னல் கொடுத்தனர். இதனால் நான் உட்பட முன்பதிவு செய்த பயணிகள் அனைவருக்கும் சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து புகார் செய்வதற்கு பயணச் சீட்டு பரிசோதகரை தேடினேன். ஆனால் அவரைக் காணவில்லை. எனக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இதை விசாரித்த மாவட்ட நுகர்வோர் மன்றம், சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவிட்டது. ஆனால் யாரும் ஆஜராகாததால், சேவைக் குறைபாடு காரணமாக பயணிக்கு ரூ.75 ஆயிரம் வழங்க உத்தரவிட்டது. இந்தத் தொகையை அதிகரித்து வழங்க உத்தரவிடக் கோரி விஜய் குமார் டெல்லி மாநில நுகர்வோர் ஆணையத்தில் மேல் முறையீடு செய்தார்.
அதிகாரி சம்பளத்தில்..
இதை விசாரித்த ஆணையத் தின் தலைவர் நீதிபதி வீனா பீர்பால், மாவட்ட நுகர்வோர் மன்ற உத்தரவுப்படி ரூ.75 ஆயிரத்தை பயணிக்கு வழங்க உத்தரவிட்டார். இந்தத் தொகை யில் 3-ல் ஒரு பங்கை கடமையை செய்யத் தவறிய அதிகாரியின் சம்பளத்தில் பிடித்தம் செய்யவும் உத்தரவிட்டார். அதேநேரம், இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க ஆணையம் மறுத்து விட்டது.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 05.06.2017

Saturday, April 15, 2017

நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு

நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு
ஜூபிட்டர் ஸ்கூட்டரை திரும்பப்பெற அகமதாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வாங்கிய பொருட்கள் தரமற்று இருந்தால், அதற்காக சட்டரீதியான அனுகுமுறைகளை பற்றி தெரியாமல் இருந்தது எல்லாம் தற்போது மலையேறி விட்டது. அதற்கான எடுத்துக்காட்டான ஒரு சம்பவம் அகமதாபாத்தில் நடைபெற்றுள்ளது.
நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பு
ஊடகங்களில் தெரிவித்தது போன்ற மைலேஜ் கிடைக்கவில்லை என்பதால் டி.வி.எஸ் ஜுப்பிட்டர் ஸ்கூட்டரை சரிசெய்து கொடுங்கள் அல்லது திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள் என அகமதாபாத்தில் உள்ள நுகர்வோர் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.
குன்வென்ட் மெகத்தா என்பவர் 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ராஜ்காட் பகுதி டீலரிடம் ரூ.52,150 விலையில் ஜுபிட்டர் ஸ்கூட்டரை வாங்கியுள்ளார்.
லிட்டருக்கு 62 கிமீ மைலேஜ் தரும் என விளம்பரப்படுத்தப்பட்ட நிலையில் அப்பொது அவரிடம் ஜுபிட்டர் ஸ்கூட்டர் விற்கப்பட்டுள்ளது. குன்வென்ட் மெகத்தா ஸ்கூட்டரை பயன்படுத்த தொடங்கிய பின்னர், விளம்பரப்படுத்தப்பட்ட மைலேஜ் கிடைக்க பெறவில்லை. இதற்காக அவர் சர்வீஸ் மையங்களில் சோதனை செய்தும் பார்த்தார்,
தொடர்ந்து அவர் எதிர்பார்த்த மைலேஜ் வராத காரணத்தால் மெகத்தா ராஜ்காட் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினார். இவரது வழக்கை ஏற்று விசாரித்த ராஜ்கோட் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம், விளம்பரப்படுத்தப்பட்ட மைலேஜ் கிடைக்கபெறும் வகையில் ஸ்கூட்டரை பழுது பார்த்து தரவேண்டும் அல்லது ஜுபிட்டர் ஸ்கூட்டரின் விலையான ரூ. 52,150 தொகையுடன் சேர்த்து 9 சதவீத வட்டியை குன்வென்ட் மெகத்தாவிற்கு கூடுதலாக தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
வாடிக்கையாளர் குன்வென்ட் மெகத்தா தொடர்ந்து வழக்கிற்கு டி.வி.எஸ் நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவில், மெக்தா வாங்கிய ஜுபிட்டர் ஸ்கூட்டரில் மே 2015ம் ஆண்டு மைலேஜ் லிட்டருக்கு 43 கி.மீ வந்ததாகவும், பிறகு செப்டம்பர் 2015ல் மைலேஜ் லிட்டருக்கு 55 கி.மீ கிடைத்ததகவும், 2017 மார்ச்சில் ஜுபிட்டர் ஸ்கூட்டர் லிட்டருக்கு 65.51 கிமீ மைலேஜ் வழங்கியதாகவும் டி.வி.எஸ் நிறுவனம் தனது மனுவில் குறிப்பிட்டுயிருந்தது.
இதனை திட்டவட்டமாக மறுத்த வாடிக்கையாளர் மெகத்தா , அவர் வாங்கிய டி.வி.எஸ் ஜுபிட்டர் ஸ்கூட்டரின் மைலேஜ் சாரசரியாக 45 கிமீ மட்டுமே வந்ததாக நீதிமன்றத்தில் பதில் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நுகர்வோர் நீதிமன்றம், இது போன்ற வழக்குகளில் நாடு முழுவதும் வழங்கப்பட்ட 6 தீர்ப்புகளை அடிப்படையாக வைத்து இந்த வழக்கில் ராஜ்காட் நுகர்வோர் குறைதீர் மன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
அதாவது, ஜுபிட்டர் ஸ்கூட்டருக்கு விளம்பரப்படுத்தப்பட்ட மைலேஜ் பெற்றுத்தரும் வகையில் வாகனத்தை பழுது பார்த்து தரவேண்டும், அல்லது வாடிக்கையாளர் வாங்கிய விலையை திருப்பி தர வேண்டும் என அதிரடி தீர்ப்பை ராஜ்கோட் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் வழங்கியுள்ளது.
*********************************************************டிரைவ் ஸ்பார்க்14.04.2017