disalbe Right click

Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

Saturday, February 17, 2018

ஆன்லைன் மூலம் ரயிலையே புக் செய்யலாம்

நீங்கள்  நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சுற்றுலா செல்வதற்கு தனி ரயில் அல்லது ரயிலின் ஒரு பெட்டியை, .ஆர்.சி.டி.சி., உதவியுடன், இனி, 'ஆன் லைனில்' முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Indian Railway Catering and Tourism Corporation
ரயில்களில் பயண முன்பதிவு, ரயில்களில் உணவுப் பொருள் விற்பனை ஆகியவற்றை, .ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் மேற்கொண்டு உள்ளது.
Image result for irctc
ஆன் லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் முதலில் .ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், தங்கள் விபரங்களை பதிவு செய்து, கணக்கு ஒன்றை துவக்க வேண்டும். அதன்பிறகு, அவர்கள், தங்களுக்கான டிக்கெட்டுகளை அதன்மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதுவரை இருந்த நடைமுறை 
திருமண நிகழ்ச்சிகள், ஆன்மிக சுற்றுலா, கல்வி சுற்றுலா, நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனான இன்ப சுற்றுலா ஆகியவற்றை மேற்கொள்பவர்கள் தனி ரயில் அல்லது ரயிலின் ஒரு பெட்டியை மட்டும் முன்பதிவு செய்யும் வசதி ஏற்கனவே உள்ளது. இருந்தாலும், இந்த சேவையை நாம் பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட ரயில் நிலைய அதிகாரியை சந்தித்து, அதற்காக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், சரியான காரணத்தையும் தெரிவித்து, அதற்கான முன்பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.
இனிமேல் இலகுவான நடைமுறை
இனிமேல் 'தனி ரயில் அல்லது தனி பெட்டியை முன்பதிவு செய்ய இனி, ரயில்வே அதிகாரிகளை நேரடியாக அணுக தேவையில்லை. இந்த சேவையை, .ஆர்.சி.டி.சி., நிறுவனமே  அளிக்கிறது இந்நிறுவனத்திடம் தேவையான தகவல்களை வழங்கி, ரயில், பெட்டியை அல்லது ரயிலை, ஆன் லைனில் முன்பதிவு செய்யலாம்' என, ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
இணையதள முகவரி : https://www.irctc.co.in/
************************************ அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 18.02.2018 

Saturday, October 28, 2017

விமான நிலையத்தில் பயன்படுத்த வேண்டிய ஆவணங்கள்

விமான நிலையத்தில் பயன்படுத்த வேண்டிய ஆவணங்கள் வெளியீடு
புதுடில்லி: விமான நிலைய முனையத்தில் நுழையவும், பாதுகாப்பு சோதனையின் போதும் காண்பிக்கப்பட வேண்டிய சான்று விவரங்களை விமான போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்:
1. பாஸ்போர்ட்
2. வாக்காளர் அடையாள அட்டை
3. ஆதார் அல்லது மொபைல் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதார்
4. பான் கார்டு
5 . டிரைவிங் லைசென்ஸ்
6. பணியிட அடையாள அட்டை
7. மாணவர்களின் அடையாள அட்டை
8. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகம்
9. பென்சன் அட்டை அல்லது புகைப்படத்துடன் கூடிய பென்சன் ஆவணம்
10. மாற்றுத்திறனாளி அடையாளி அட்டை
இதில் ஏதேனும் ஒன்றை காட்டினால் போதுமானது. விமான போக்குவரத்து பாதுகாப்பு வாரிய தலைவர் குமார் ராஜேஷ் சந்திரா கூறுகையில், மேற்குறிப்பிட்ட அட்டைகளை காண்பிக்க முடியாததற்கு நியாயமான காரணம் இருந்தால் அவர்கள், மத்திய மாநில அரசுகளில் பணிபுரியும் குரூப் கெஜடட் அதிகாரியின் லெட்டர் பேடில், புகைப்படம ஒட்டி, கையெழுத்து வாங்கி காண்பிக்கலாம்.
உள்நாட்டு விமான பயணத்தின் போது, பச்சிளம் குழந்தைகள் அல்லது சிறுவர்களை அழைத்து சென்றால், அவர்களின் பாதுகாவலர்களுக்கு உரிய சான்று இருந்தால், அவர்களுக்கு தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 28.10.2017  

Thursday, September 14, 2017

தாம்பரம் செங்கோட்டை சிறப்பு கட்டண ரயில் இயக்கம்

தாம்பரம் செங்கோட்டை சிறப்பு கட்டண ரயில் இயக்கம்
சென்னை: காவிரி புஷ்கர விழாவை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு விருத்தாசலம் திருச்சி வழியாக இயக்கப்படும்.    
மேலும் தாம்பரம்- செங்கோட்டை ரயில் செப்.,15, 16, 18. 20, 21, 22, 23, 25, 27, 28, 29 ஆகியதேதிகளில் அதிகாலை மணிக்கு புறப்பட்டு இரவு 8.05க்கு செங்கோட்டை வந்து சேரும்.
அதே போல் செங்கோட்டை-தாம்பரம் ரயில் 16, 17, 19, 21, 22, 23, 24, 26, 28, 30 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது செங்கோட்டையிலிருந்து காலை 6.35 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30க்கு தாம்பரம் சென்றடையும்.
இதற்கான முன்பதிவு  செப்.,14 காலை 8 மணி முதல் துவங்கப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 13.09.2017
நன்றி : தினமலர் இபேப்பர் - மதுரை பதிப்பு - 29.09.2017 பக்கம்-6

Wednesday, September 13, 2017

முன்பதிவு பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

முன்பதிவு பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!
ரயில்வேயில் 'எம் ஆதார்': புதிய வசதி அறிமுகம்
புதுடில்லி: ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்யும் பயணியர், பயணத்தின்போது, தங்கள் மொபைலில் உள்ள டிஜிட்டல் வடிவ ஆதாரை அடையாள அட்டையாக ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது: 
இந்திய ஆதார் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள, 'எம் ஆதார்' என்ற, 'ஆப்'பை பயன்படுத்தி, ஒருவர், தன், ஆதார் அடையாள அட்டையை, மொபைல்போனுக்கு பதிவிறக்கம் செய்யலாம். ஆதார் அட்டையில், எந்த மொபைல் எண் உள்ளதோ, அந்த எண் பயன்படுத்தப்படும் மொபைல்போனில் மட்டுமே, இந்த, 'ஆப்'பை பதிவிறக்கம் செய்ய முடியும். ரயில்களில், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்யும் பயணியர், பயணத்தின்போது, தங்கள் மொபைலில் உள்ள இந்த, 'ஆப்'பை பயன்படுத்தி, டிஜிட்டல் வடிவ ஆதாரை காட்டினால், அதை அடையாள அட்டையாக ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் -14.09.2017 

Wednesday, August 9, 2017

கத்தார் நாட்டுக்குச் செல்ல, இனி விசா நமக்கு தேவை இல்ல!

கத்தார் நாட்டுக்குச் செல்ல, இனி விசா நமக்கு தேவை இல்ல! 
இந்தியா உட்பட 80 நாடுகளுக்கு சலுகை.. விசா இல்லாமல் இனி கத்தாருக்கு செல்லலாம்! 
துபாய்: விசா இல்லாமல் 80 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கத்தாருக்கு இனி சென்று வர முடியும். இது உடனடியாக அமலுக்கு வருகிறது என அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 
கத்தாருக்கு செல்ல விரும்பும் 80 நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசாவிற்கு இனி விண்ணப்பிக்க வேண்டாம். பணமும் கட்டத் தேவையில்லை. இந்த சலுகையைப் பெற வரையறை எதுவும் கிடையாது. பல முறை பயணம் செய்யும் வகையில் இந்தச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சலுகைகள் பெற்றுள்ள நாடுகளின் பட்டியலையும் அந்நாடு அறிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் விசா இன்றி கத்தாருக்கு பயணிக்கலாம்.
இந்தச் சலுகையைப் பெற விரும்புவோர் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்குச் செல்லுபடியாகும் வகையிலான பாஸ்போர்ட் மற்றும் நாடு திரும்புவதற்கான டிக்கெட்டை ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். 
இதுகுறித்து, கத்தார் சுற்றுலாத்துறை தலைவர் ஹாசன் அல் இப்ராஹிம், கத்தார் இப்போது மிகவும் திறந்தவெளி நாடாகிவிட்டது என்றும் புகழ்பெற்ற விருந்தோம்பல், கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கை பொக்கிஷங்களை பார்க்க பயணிகளை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என்றும் கூறியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இலவச டிரான்சிட் விசாவை கத்தார் அறிமுகம் செய்தது. இதன் மூலம் பயணிகள் குறைந்தபட்சம் 5 மணி நேரம் முதல் நான்கு நாட்கள் வரை டிரான்சிட் விசாவில் கத்தாரில் இருக்கலாம். இதனைத் தொடர்ந்து தற்போது 80 நாடுகள் விசா இல்லாமல் பயணிக்கும் சலுகையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி : ஒன் இந்தியா தமிழ் செய்திகள் - 09.08.2017