disalbe Right click

Showing posts with label பி.எஃப். Show all posts
Showing posts with label பி.எஃப். Show all posts

Friday, March 16, 2018

பி.எஃப் பேலன்ஸ் விவரங்களை செல்போன் மூலமாகப் பெற

பி.எஃப். பேலன்ஸ் விவரங்களை செல்போன் மூலமாகப் பெற என்ன செய்ய வேண்டும்?
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எனப்படும் பி.எஃப். கணக்கை வைத்துள்ளவர்கள் எஸ்எம்எஸ் அல்லது மிஸ்டு கால் மூலமாக பிஎப் பேலன்ஸ் விவரங்களை தற்போது பிராந்திய மொழிகளிலேயே எளிதாக பெற முடியும்.  இதற்கெல்லாம் ஸ்மார்ட்போன் வேண்டுமே என்று நீங்கள்  கவலை அடைய வேண்டாம். சாதாரண போனிலேயே இதனைப் பெறலாம். 

Universal Account Number - UAN

தங்களுடைய செல்போன் எண், ஆதார் எண் ஆகிய சுய விபரங்களை அளித்து  www.epfindia.gov.in  இணையதளத்தில், பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் 011-22901406 என்ற தொலைப்பேசி எண்ணை அழைப்பதன் (மிஸ்டு கால் கொடுப்பதன்) மூலமாக பிஎப் பேலன்ஸ் விவரங்களைப் பெறலாம். ஆனால்,   இந்த சேவையினை பெறுவதற்கு பி.எஃப். கணக்கு வைத்துள்ள தொழிலாளர்கள் தங்களது யூஏஎண் எண்ணை https://unifiedportal-mem.epfindia.gov.in/ memberinterface/ என்ற இணைப்பிற்குச் சென்று, முதலில் ஆக்டிவேட் செய்து கொள்ள வேண்டியது அவசியம்..
Universal Account Number - UAN எண்ணை ஆக்டிவேட் செய்ய ....
மேற்கண்ட இணையதளத்திற்குச் சென்று தொழிலாளர்கள் தங்களது யூஏஎன் எண் அல்லது பி.எஃப். உறுப்பினர் ஐடி அல்லது ஆதார் எண் அல்லது பான்கார்டு எண்ணுடன் தங்களது பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் விவரங்களை அளிக்க வேண்டும்.
எஸ்எம்எஸ் மூலமாக பி.எஃப். பேலன்ஸ் விவரங்களை பெறுவது எப்படி?
யூஏஎன் எண்ணை ஆக்டிவேட் செய்த பிறகு 7738299899 என்ற மொபைல் எண்ணிற்கு EPFOHO UAN Number என டைப் செய்து அனுப்புவதன் மூலம் பி.எப். பேலன்ஸ் விவரங்களை எஸ்எம்எஸ் வழியாகவும் தொழிலாளர்கள் தங்கள் மொபைல் எண்ணில் பெறலாம்.
தமிழில் பி.எஃப். பேலன்ஸ் விவரங்களை பெற என்ன செய்ய வேண்டும்?
பி.எஃப். சம்பந்தமான விவரங்களைத் தமிழ் ஆங்கிலம், இந்திய, பஞ்சாபி, மராத்தி, கன்னடா, தெலுங்கு, மலையாளம், பெங்காலி என 10 பிராந்திய மொழிகளில் பெற முடியும். தமிழில் பெற "EPFOHO UAN Number TAM" என டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்புவதன் மூலம், தமிழில் தொழிலாளர்கள் பி.எஃப். பேலன்ஸ் குறித்த விவரங்களைப் பெறலாம்.
ஆனால், எஸ்எம்எஸ் சேவையினை தொழிலாளர்களின் யூஏஎன் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணின் வழியாக மட்டுமே பெற முடியும். மிஸ்டு கால் மற்றும் SMS போன்ற வழிகள் மட்டுமல்லாமல் உமங் செயலி மூலமாகவும் தொழிலாளர்கள் பி.எஃப். பேலன்ஸ் குறித்த விவரங்களைப் பெறலாம்.
***********************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 16.03.2018

Tuesday, November 21, 2017

இனி பி.எஃப். கணக்கு தானாக மாறும்

இனி பிஎப் கணக்கை ஒவ்வொரு நிறுவனத்திற்கு மாற்றவேண்டிய அவசியம் இல்லை.. எல்லாமே ஆட்டோமேடிக்..!
ஈபிஎப்ஓ அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இனி ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தை விட்டுப் புதிதாக வேறு ஒரு நிறுவன பணியில் சேர்ந்தால் பிஎப் கணக்கை புதிய நிறுவனத்திற்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை, ஈபிஎப்ஓ அமைப்புப் புதிதாக நடைமுறைப்படுத்தியுள்ள மென்பொருள் மூலம் ஆட்டோமேடிங் முறையில் புதிய நிறுவனத்திற்குப் பிஎப் கணக்கு மாறிவிடும்.
ஒரு ஊழியர் புதிதாக ஒரு நிறுவனத்தில் சேர்ந்த பின்பு அந்த நிறுவனம் அவருக்கான பிஎப் கணக்கை யுஏஎன் எண்ணுடன் துவங்கும்போது, தத்தம் ஊழியரின் அனைத்து பிஎப் கணக்கும் புதிதாகக் கணக்கை திறந்திருக்கும் நிறுவனத்தின் கட்டுப்பாடிற்கு வரும் வகையில் யுஏஎன் மூலம் நடவடிக்கை எடுக்க மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படி ஆட்டோ டிரான்ஸ்பர் செய்ய அடிப்படையாகச் சில விதிமுறைகளை வைத்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டே இந்தப் பரிமாற்றங்கள் நடக்கும் எனவும் ஈபிஎப்ஓ அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆட்டோ டிரான்ஸ்பர்
1) புதிதாக வேலையில் சேர்ந்துள்ள நிறுவனம் தனது ஊழியரின் யுஏஎன் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்யும்போது, அதனை ஒத்துப்போகும் யுஏஎன் இணைப்பில் உள்ள கணக்குகள் புதிய நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்கு ஆட்டோமோடிக் முறையில் மாற்றப்படும்.
இணைப்பு மற்றும் உறுதி
2) யுஏஎன் உடன் ஆதார் இணைக்கப்பட்டு உறுதி (verified) செய்யப்பட்டு இருந்தாலே ஆட்டோமோடிக் பரிமாற்றத்திற்குத் தகுதி பெறும்
முழுமையான தகவல்
3) ஒரு ஊழியர் பணியாற்றிய முன்னாள் நிறுவனம், அந்த ஊழியர் வேலையில் சேர்ந்த தேதி, வெளியேறிய தேதி, வெளியேறியதற்கான காரணம் ஆகியவற்றைப் பதிவு செய்ய வேண்டும்.
மொபைல் எண்
4) ஊழியரின் யுஏஎன் எண் செயல்பாட்டிலும், மொபைல் எண் ஆகியவை கண்டிப்பாக இருக்க வேண்டும்.
எஸ்எம்எஸ் மற்றும் ஈமெயில்
5) ஆட்டோ டிரான்ஸ்பர் முறையிலான சேவை ஒரு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டால், அதற்கான குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் அந்த ஊழியருக்கு வரும்.
இணைய வழி
6) ஒரு ஊழியர் விரும்பினால் பிஎப் கணக்குகளின் ஆட்டோ டிரான்ஸ்பரை நிறுத்த முடியும். இதனை இணையம் வாயிலாக ஈபிஎப்ஓ தளத்தில் ஆன்லைன் சர்விசஸ் பிரிவின் கீழ் "track claim status" கீழ் உள்ள "stop auto initiated claim cases" பயன்படுத்துவதன் மூலம் நிறுத்த முடியும்.
10 நாட்கள்
ஆட்டோ டிரான்ஸ்பர் குறித்த எஸ்எம்எஸ் வந்த 10 நாட்களுக்குள் ஒரு ஊழியர் நேரடியாக ஈபிஎப்ஓ அலுவலகத்திற்குச் சென்றும் இதனைச் செய்யலாம்.
Written By: Prasanna VK
Thanks to : One India Tamil – 21.11.2017