disalbe Right click

Showing posts with label மாதவிடாய். Show all posts
Showing posts with label மாதவிடாய். Show all posts

Sunday, August 13, 2017

மழலைப் பருவத்திலேயே மலரும் மொட்டுகள்!

Image may contain: one or more people, people standing, ocean, text, water and outdoor
மழலைப் பருவத்திலேயே மலரும் மொட்டுகள்!
''பட்டுப் பாவாடை, இரட்டைச் சடைன்னு துள்ளித் திரிந்த இந்தக் குட்டிப் பெண்ணா பெரிய மனுஷியாகிவிட்டாள்!?'' - சற்றே அதிர்ச்சி கலந்த இந்த ஆச்சரியக் குரல்களை இப்போது அதிகம் கேட்க முடிகிறது.
10 வயதில் பாவாடை அணிந்த பட்டாம்பூச்சியாகக் குதூகலித்தப் பருவத்தை இன்று நினைத்தாலும் நமக்குத் தித்திக்கிறது. உறவுக்காரர்களின் மடியில் படுத்துறங்கி, அவர்களின் விரல் பிடித்து வெளியிடங்களுக்குச் சென்று ஆனந்தப்படும் வாய்ப்புகள் இப்போதைய சிறுமிகளுக்கு வாய்ப்பது இல்லை. காரணம், பள்ளிக்குச் செல்லும் பால்யம் மாறாத பருவத்திலேயே உடலாலும் உணர்வாலும் அவர்கள் பெரும் மாற்றத்தைச் சந்திக்கின்றனர்.
10 வயதுக்குள்ளாகவே பூப்பெய்திவிடும்போது, உடல் - மனரீதியாக ஒரு சிறுமி எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்னென்ன? அவர்களுக்கான தீர்வு என்ன என்பதைப் பற்றி ஒவ்வொரு பெற்றோரும் அவசியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய தருணம் இது.
''சமீப காலமாக 8-9 வயதிலேயே சிறுமிகள் பூப்பெய்திவிடுகின்றனர். இதற்கு மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் என இரண்டு காரணங்கள். சுற்றுச்சூழல் சார்ந்த காரணியில், உடல் பருமன் அதிகரிப்பதுதான் பெண்கள் பூப்பெய்துவதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. அவர்கள் சாப்பிடும், உபயோகப்படுத்தும் சில பொருட்களில் பெண் ஹார்மோன் என்று சொல்லக்கூடிய ஈஸ்ட்ரோஜென் அதிகமாக இருக்கிறது. ஈஸ்ட்ரோஜென்னில் ஜீனோ ஈஸ்ட்ரோஜென், பைட்டோ ஈஸ்ட்ரோஜென் என்று இரண்டு வகைகள் உண்டு. இதில் ஜீனோ ஈஸ்ட்ரோஜென் என்பது பிளாஸ்டிக் பொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், பதப்படுத்தப்பட்ட சில உணவுகள், ஃபேஷியல் போன்ற காஸ்மெட்டிக் பொருட்களில் அதிகமாக இருக்கிறது. சோயா போன்ற உணவுப் பொருட்களில் பைட்டோ ஈஸ்ட்ரோஜென் அதிகமாக உள்ளது. ஹார்மோன் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற பொருட்கள் மற்றும் உணவு வகைகளைப் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு ஈஸ்ட்ரோஜென் அதிகமாகி, பூப்பெய்தலும் மிகக் குறைந்த வயதிலேயே நிகழ்கிறது.
மரபியல் ரீதியான பிரச்னையில், பூப்பெய்துவதைத் தூண்டும் எல்.ஹெச். மற்றும் எப்.எஸ்.ஹெச். ஹார்மோன்கள் இளம் வயதிலேயே அதிகமாகச் சுரப்பது ஒரு முக்கியக் காரணம். இவை தவிர, பிட்யூட்டரி சுரப்பியின் அருகிலேயே கட்டி உண்டாகுதல், தலையில் அடிபடுவது, மூளைக்காய்ச்சல் நோய், கருப்பையில் நீர்க்கட்டி உண்டாதல் போன்ற பிரச்னைகளால் பெண் குழந்தைகளுக்கு மேற்கண்ட ஹார்மோன்கள் முன்கூட்டியே சுரக்க ஆரம்பிக்கின்றன. சிறுவர்களுக்கு பிட்யூட்டரி சுரப்பி அருகில் கட்டி அல்லது பிட்யூட்டரி சுரப்பியில் பாதிப்பு, விரைப்பையில் கட்டி போன்ற காரணங்களால் பருவம் அடைதல் விரைவாக நடக்கிறது (இது வெளியே தெரிவது இல்லை என்றாலும், மன ரீதியாக சில மாற்றங்களை ஏற்படுத்தும்).
ஒரு சிறுவனுக்கோ அல்லது சிறுமிக்கோ பருவம் அடைவதற்கான அறிகுறிகள் 7-8 வயதுக்கு முன்பாகவே தெரிய ஆரம்பித்தால், உடனடியாக என்டோகிரைனாலஜி அல்லது மகப்பேறு மருத்துவர்களைச் சந்தித்து உரிய சிகிச்சை பெற வேண்டும்.
மிக சீக்கிரத்தில் பருவம் அடைவதால், 'என்ன பிரச்னை?’ என்று நினைக்கலாம். ஒரு ஆண் அல்லது பெண் பருவம் அடையும்போது அவர்களின் எலும்பின் வளர்ச்சி நின்று, ஒன்றுகூடுகிறது. இதனால் கடைசிக் கட்ட உயரம் என்பது குறைகிறது. பெண்களுக்கு உடல் ரீதியாக, சமூக ரீதியாகப் பல்வேறு பிரச்னைகளும் வர ஆரம்பிக்கிறது. இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க, மருத்துவச் சிகிச்சை மூலம் பூப்பெய்துதலை சில வருடங்கள் தள்ளிப்போட முடியும்'' என்கிறார் சென்னை செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் முதுநிலை நாளமில்லா சுரப்பிகள் சிகிச்சை நிபுணர் (என்டோகிரைனாலஜிஸ்ட்) ஆர்.பரத்.
குழந்தைகள் இளம் வயதில் பூப்பெய்துவதைத் தவிர்க்க, ஊட்டச்சத்து மற்றும் உடல் எடை மேலாண்மை நிபுணர் ஷைனி சந்திரன் கூறும் யோசனை இது...
''உடல் பருமன் அதிகரிப்பது மட்டும் அல்ல... உடல் உழைப்பு குறைந்துபோனதும்கூட இந்தப் பிரச்னைக்கான காரணம். எனவே, குழந்தைகளை ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கச் செய்யாமல், ஓடியாடி விளையாட உற்சாகப்படுத்த வேண்டும்.
கொழுப்புமிக்க உணவு வகைகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடலாம். இறைச்சிக்காக பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளின் எடையை அதிகரிக்க ஹார்மோன் மருந்து வகைகள் தரப்படுகின்றன. எனவே பிராய்லர் வகைக் கோழிக் கறியைத் தவிர்த்து, நாட்டுக் கோழி இறைச்சியைச் சாப்பிடலாம்.
கால்சியம் சத்துக்காக அதிக அளவில் பால் அருந்துவது தவறு. இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட காய்கறி, பழங்கள், கீரை வகைகளைச் சாப்பிடலாம். இவற்றில் கால்சியமும் நிறைய உள்ளது'' எனப் பட்டியல் இடுகிறார் ஷைனி.
சிறுமிகள் பூப்பெய்தும்போது ஏற்படும் மன ரீதியான பாதிப்புகளைச் சரிசெய்வது குறித்துப் பேசும் மன நல மருத்துவர் செந்தில்வேலன், ''நம் கலாசாரத்தில், 'ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டால், அவள் திருமணத்துக்குத் தயார்’ என்பதை ஊராருக்குத் தெரியப்படுத்தும் நோக்கில் சடங்கு செய்வார்கள். இது அந்தப் பெண்களுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு பெண் பூப்படைந்துவிட்டாள் என்றாலே, 'ஆண்கள் எதிரில் செல்லக் கூடாது; தொட்டுப் பேசக் கூடாது’ என ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் போடுவார்கள். நேற்றுவரை தன்னுடன் விளையாடிய பையன்களுடன் பேசவே கட்டுப்பாடு எனும்போது, அது அவர்களது மனதில் பெரும் குழப்பத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தும்.
பருவம் அடையும்போது செக்ஸ் ஹார்மோன்கள் அதிக அளவில் சுரக்க ஆரம்பிக்கின்றன. இதனால் மன ரீதியாக சில பிரச்னைகள் எழும். வளர்நிலைப் பருவத்தில் ஒரு பெண் தன் வயதுக்கு நிகரான மற்ற பெண்களைப் பார்த்துத்தான் தன்னை ஒப்பிட்டுக்கொள்வார். பூப்பெய்தும் பருவத்தில், சக வயது நண்பர்களைவிட அவர்களது உயரம், உடல் எடை போன்றவை அதிகரிக்கும். இது அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.
தவிர, முகப்பரு, மாதவிடாய் போன்ற மாற்றங்கள் அசௌகரியமாக, தினசரி வாழ்க்கையைப் பாதிக்கக் கூடியவையாக இருப்பதால், மன ரீதியான பாதிப்புகளும் அதிகரிக்கும்.
சிறு வயதிலேயே ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டாலும், மனதளவில் அவள் இன்னமும் குழந்தையாகத்தான் இருப்பாள். இந்த மாதிரியான நேரத்தில் பெற்றோர்கள் அவளுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிப்பதற்குப் பதில், அன்பாக, ஆதரவாக இருக்க வேண்டும். அவளுக்குப் புரியும் விதத்தில் சில விஷயங்களை பக்குவமாக, நாசூக்காகச் சொல்லித்தர வேண்டும். பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் அவளுக்கு ஆதரவாக இருப்பதன் மூலமும் மன ரீதியாக எழும் ஏற்றத்தாழ்வுகளைத் தவிர்க்கலாம்'' என்கிறார் நம்பிக்கையோடு.
தள்ளிப்போடுவது சாத்தியமே!
சென்னை அடையாறைச் சேர்ந்த சைல்ட் மற்றும் அடலசன்ட் நியூராலஜிஸ்ட் மருத்துவர் வி.முருகன், ''சங்க காலத்தில், 'பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை’ என வகைப்படுத்தப்பட்ட பெண்ணின் வாழ்க்கைப் பருவங்களுக்கு இடையே இருந்த இடைவெளி இப்போது சுருங்கிவிட்டது. 100 வருடங்களுக்கு முன்பு, சராசரியாக 15 முதல் 17-வது வயதில்தான் பெண்கள் பூப்பெய்தினார்கள். ஆனால், இன்றோ, 6 முதல் 13 வயதுக்குள் சிறுமிகள் பூப்பெய்திவிடுகின்றனர்.
நம் மூளையில் 'ஹைபோதலாமஸ்’(hypothalamus) எனும் ஒரு பகுதி பிறந்ததில் இருந்தே சுவிட்ச் ஆஃப் மோடில்தான் இருக்கும். உரிய வயது வரும்போது அந்த சுவிட்ச் ஆன் ஆகி பால் உணர்வுத் தூண்டுதலை ஏற்படுத்தும். அடுத்து, 'ஹைபோதலாமஸ்’ பிட்யூட்ரியைத் தூண்டிவிட்டு, மாதவிடாய் சுழற்சிக்கான ஹார்மோனைத் தூண்டும். அப்போது கட்டிகள் தோன்றும். இந்த கட்டிகள் ஹைபோதலாமஸிலும் வரலாம்; பிட்யூட்ரியிலும் வரலாம். பூப்பெய்தும் பருவத்தில், பெண்கள் உடல்வாகைப் பொறுத்து இந்தக் கட்டிகள் உருவாகும். சிறு வயதிலேயே கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டால், அதற்கான சிகிச்சைகள் செய்து பூப்பெய்தும் காலத்தை தள்ளிப் போடலாம்.
குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்துக்கொண்டு, பாரம்பரிய உணவுப் பழக்கத்தையும் போதிய உடல் பயிற்சிகளையும் கற்றுத் தருவது பெற்றோர்களின் கடமை!''
- ரேவதி (டாக்டர் விகடன் - 31.01.2012)

Friday, March 24, 2017

மறக்காமல் பேசுவோம்........ மாதவிடாய்!

Image may contain: 1 person, text and closeup

மறக்காமல் பேசுவோம்........ மாதவிடாய்!

நோயை வெல்வதற்கான முதல் படி, அதைப் பற்றிய விழிப்பு உணர்வை வளர்த்துக்கொள்வதுதான்.
அந்த வகையில் தொடர்ந்து நோய்களைப் பற்றிய வெளிச்சம் தந்துவரும் ‘நோய்நாடி’ தொடரில்… பெண்களுக்கு மாதவிடாய் தொடர்பாக நேரும் பிரச்னைகள், அதற்கான தீர்வுகள் பற்றிப் பேசுகிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் சிறப்பு மருத்துவர் பிரபா.
‘‘நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து வாழ்க்கை முறை ஹைடெக்காக மாறி வந்தாலும், இந்த நூற்றாண்டிலும் மாதவிடாய் என்பதை உடல் ஆரோக்கியம் என்ற தளத்தில் பேச யாரும் முன்வருவதில்லை. இன்னும் அதை ரகசியமாகவே மூடிமறைக்கிறார்கள். அது பற்றிய விழிப்பு உணர்வு அவசியம் தேவை.
மாதவிடாய் என்பது…சினைப்பையில் உருவாகும் கருமுட்டைகள், ஹார்மோன் சுழற்சிக்கு உட்பட்டு, முழு வளர்ச்சியடைந்து, உடைந்து, பின்னர் வரக்கூடிய ஹார்மோன் மாற்றத்தின் முடிவில், கர்ப்பப்பையில் உதிரப்போக்கு ஏற்படுவதை மாதவிடாய் என்கிறோம். சினைப்பையின் செயல்பாட்டை மூளையின் உதவியோடு நாளமில்லாச் சுரப்பிகள் கவனித்துக் கொள்ளும்.
பொதுவாக, 9 – 15 வயதுக்குள் பெண் பிள்ளைகள் பூப்பெய்துவார்கள் (முதல் தடவை மாதவிலக்கு ஏற்படுவது). இந்த வயதுக்குக் குறைவான/அதிகமான வயதில் பெண் பிள்ளைகள் பூப்பெய்துவது அப்நார்மல். அந்தச் சிறுமிகளை மருத்துவரிடம் அழைத்துச்சென்று, பூப்பெய்துதல் பிரச்னைக்கான காரணத்தை பரிசோதனை மூலம் கண்டறிந்து, சரிசெய்ய வேண்டியது மிகவும் அவசியம்.
தவறினால், அந்தச் சிறுமி பெரியவளாகி வளரும்போது குழந்தை பிறப்பில் சிக்கல் ஏற்படுவதில் தொடங்கி கேன்சர் உள்ளிட்ட பிரச்னைகள் வரை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
பூப்படையும் முன்…பெண் பிள்ளைகள் பூப்படைவதற்கு 3, 4 வருடங்களுக்கு முன்பிருந்தே, உயரம் அதிகரிப்பது, எடை கூடுவது, மார்பகம் வளர்ச்சியடைவது என அதற்கான மாற்றங்கள் அவர்கள் உடலில் வெளிப்பட ஆரம்பிக்கும். அப் போதிருந்தே அவள் அம்மா, அந்தச் சிறுமியை மாதவிடாய் நாட்களுக்குத் தயார்படுத்த வேண்டும்.
`மாதவிடாய் ஏன் ஏற்படுகிறது, எப்படி ஏற்படும்’ என்பதை பூப்பெய்வதற்கு முன்கூட்டியேவும், முதல் மாதவிலக்கு நிகழ்ந்த பின்னர் மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலியும், சோர்வும் இயல்பானவையே என்பதையும், அந்நாட்களில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடவடிக்கைகள், நாப்கின் பயன்பாடு, எடுத்துக்கொள்ள வேண்டிய சத்துணவின் அவசியம் என… மாதவிடாயை அந்தச் சிறுமி இயல்பானதொரு உடல் மாற்றமாக கடப்பதற்கான விழிப்பு உணர்வை அளிக்க வேண்டும்.
பாலியல் சம்பந்தமான கேள்விகளை அவர்கள் எழுப்பினால், அவற்றைத் தவிர்க்காமல், ‘அதெல்லாம் பேசக்கூடாது’ என்று அவர்களை அடக்காமல், உரிய பதிலை எளிமையாக அவர்களுக்கு அளிக்க வேண்டும். பள்ளிக்கு முன்பாக, வாழ்க்கைக் கல்வியின் அடிப்படை குழந்தைகளுக்குத் தரப்பட வேண்டிய இடம், வீடுதான்.
சிறுமிகளுக்கு சுழற்சி மாறலாம்..!
சில சிறுமிகளுக்கு பூப்படைந்த முதல் மூன்று வருடங்கள்வரை, மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை என மாதவிடாய் சுழற்சி சீரற்று இருக்கலாம். அது இயல்பானதே. காரணம், பருவமடையும்போது அந்தச் சிறுமியின் நாளமில்லாச் சுரப்பிகளின் வளர்ச்சி முழுமையடையாமல் இருக்கலாம்.
மூன்று வருடங்களுக்குள் வளர்ச்சி முழுமையடைந்து, நாளமில்லாச் சுரப்பிகள் சரியாக வேலைசெய்யத் தொடங்கிவிடும், மாதவிலக்கு சுழற்சியும் சீராகிவிடும். ஆனால், பூப்படைந்த மூன்று வருடங்களுக்குப் பிறகும் சுழற்சி சீராகவில்லை எனில், மருத்துவ ஆலோசனை அவசியம்.
மாதவிடாய் சுழற்சி… எது சரி, எது பிழை?
21 – 35 நாட்களுக்குள் சுழற்சி முறையில் உதிரப்போக்கு ஏற்படலாம். ஆரம்ப கட்டங்களில் ஒவ்வொரு முறையும் 2 – 8 நாட்கள்வரை உதிரப்போக்கு இருக்கலாம். ஒரு சுழற்சியில் 15 முதல் 80 மில்லி அளவுக்கு உதிரப்போக்கு வெளிப்படலாம். இவையெல்லாம் நார்மல்.
மாதவிடாய், இயல்பைவிட அதிகளவில் வித்தியாசப்பட்டால், அது இரண்டு மாதங்களுக்குப் பின்னும் இதேபோன்ற சுழற்சியாகவே நீடித்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
ஹார்மோன் ஏற்ற இறக்கம் முதல், சினைப்பையில் நீர்க்கட்டி, அதிக அல்லது குறைந்த எடை, இனப்பெருக்க உறுப்புகளில் பிரச்னை, இன்சுலின் குறைபாடு, மன அழுத்தம், மனச்சோர்வு, ரத்தம் உறைவதில் சிக்கல் ஏற்படுத்தும் பிளீடிங் டிஸார்டர் (bleeding disorder) வரை இதற்கான காரணங்கள் எதுவாகவும் இருக்கலாம்.
அதைக் கண்டறிந்து, உரிய சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம். தவறினால், பின்னாளில் அது குழந்தை பிறப்பில் சிக்கல் ஏற்பட வாய்ப்பை ஏற்படுத்திவிடலாம்.
அந்த மூன்று நாட்களில்…
மாதவிடாய் நாட்களின் வலியும், உதிரப்போக்கும் இயற்கை யானது என்பதால், அச்சம் தேவையில்லை. சிலரால் சாப்பிட முடியாது, சிலருக்கு பசிக்காது. இருந்தாலும், சத்துணவு அவசியம். ஜூஸ் எடுத்துக்கொள்வது நல்லது.
இந்நாட்களில் ஓய்வு அவசியம் என்றாலும், ஒரேயடியாக முடங்கி இருக்கத் தேவையில்லை. மாறாக, உடலுக்கு அதிக வேலை கொடுக்காமல் சிறு சிறு வேலைகளை செய்யலாம். சுகாதாரமாக இருப்பதுடன், அரிப்பு, துர்நாற்றம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
கெமிக்கல்கள் கொட்டி தயாரிக்கப்படும் நாப்கின்கள் தவிர்த்து, காட்டன் பேடுகள், காட்டன் உள்ளாடைகள் பயன்படுத்துவது பரிந்துரைக்கத்தக்கது. மிக முக்கியமாக, ஒரு பெண் தன் மாதாந்தர சுழற்சி தேதி, அப்போது ஏற்படும் உடல் மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணித்து, அதில் மாற்றங்களை உணர்ந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
நடுத்தர வயது முதல் மெனோபாஸ்வரை..!
மாதவிடாய் காரணிகளைப் பொறுத்தவரை, 15 – 25 வயதுக்குள் படிப்புச்சுமை, வேலை அழுத்தம், திருமணம் என ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டம் என்பதால், அதனால் அவர்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் மாதவிடாய் சுழற்சியிலும் பிரதிபலிக்கலாம்.
இந்த வயதுகளில் மாதவிடாய் பிரச்னை ஏற்பட்டால், மருத்துவரைச் சந்தித்து நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும்.
ஒரு பெண்ணுக்கு முதல் குழந்தை 21 – 26 வயதுக்குள் பிறக்க வேண்டும். அதுதான் ஆரோக்கியமானது.
ஒருவேளை தள்ளிப்போடுவதாக இருந்தால், மருத்துவ ஆலோசனை அவசியம். இன்றைய சூழலில் 28, 30 வயதில் திருமணம் செய்துகொள்ளும் பெண்கள், அதன் பின்னரும் சில பல காரணங்களுக்காக 3, 4 ஆண்டுகளுக்கு கருத்தரிப்பதைத் தள்ளிப் போடுகிறார்கள்.
இப்படி அளவுக்கு அதிகமாகக் காலம் தாழ்த்துவதால், பின்னர் குழந்தை பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்படும். எனவே, அதுபோன்ற முடிவில் இருக்கும் பெண்களுக்கும் மருத்துவ ஆலோசனை கட்டாயம் தேவை.
அதேபோல, நிரந்தரமாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று நினைப்ப வர்கள் அதற்கான மருத்துவ ஆலோசனைகள், வழிமுறைகளை மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
30 – 40 வயதில் அதிகமான உதிரப்போக்கு இருந்தால், அதற்கு கர்ப்பப்பை கட்டி உள்ளிட்டவை காரணங்களாக இருக்கலாம். மாதவிடாய் இல்லாத சமயத்தில் உதிரப்போக்கு, உடலுறவுக்குப் பின் உதிரப்போக்கு போன்றவை ஏற்பட்டால், அது உள் உறுப்பு பிரச்னையின் அறிகுறியென உணர்ந்து, உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
40 – 45 வயதை மெனோபாஸுக்கு முந்தைய நிலை எனலாம். இந்தச் சமயத்தில் பெண்களுக்கு கட்டுக்கடங்காத உதிரப்போக்குடன் அதிக சோர்வு, இடுப்பு வலி, மூட்டு வலி, சர்க்கரை, உடல் பருமன், ரத்த அழுத்தம், இதயப் பிரச்னை போன்றவை வர வாய்ப்புள்ளது. இதனால் அதிக மன அழுத்தம் உண்டாகும்.
45 வயதுக்கு மேல் ஓராண்டு காலம் தொடர்ந்து உதிரப்போக்கு ஏற்படவில்லை என்றால், அது முழுமையான மெனோபாஸ் ஆகும். அதற்குப்பிறகு 52 வயது வரை திடீரென உதிரப்போக்கு ஏற்பட்டால் அதை புற்றுநோய்க்கான அறிகுறி என எடுத்துக்கொண்டு உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
மொத்தத்தில், ஏன், எதனால், எப்படி என மாதவிடாயின் நிகழ்வுகளை ஒவ்வொரு பெண்ணும் அறிவியல் ரீதியாக அறிந்து வைத்துக்கொள்ள வேண்டியதும், அதில் மாற்றங்கள் ஏற்படும்போது தாமதிக்காமல் மருத்துவரை அணுகவேண்டியதும் மிக முக்கியம்’’ என்று வழிகாட்டினார், டாக்டர் பிரபா.
சத்தான உணவு… மிக முக்கியம்!
பெண்களின் மாதவிலக்கு உதிரம், கழிவு அல்ல. ஒவ்வொரு மாதமும் அது அவர்களின் உடல் உருவாக்கி வெளியேற்றும் குருதி. ஒவ்வொரு சுழற்சிக்கும் அவர்கள் தங்களின் உடலில் 80 மில்லி வரை உதிரம் இழக்கிறார்கள் எனில், அதை ஈடுகட்டும் அளவுக்கு அவர்கள் சத்தான உணவு எடுத்துக்கொள்ள வேண்டியது எவ்வளவு முக்கியம்?!
குறிப்பாக கீரை, பச்சைக் காய்கறிகள், பேரீச்சை என இரும்புச்சத்து நிறைந்த உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இரும்புச் சத்தை உடல் கிரகிக்க வைட்டமின்-சி அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆண்களுக்கு சில வார்த்தைகள்…
ஒரு வீட்டுப் பெண்ணின் நலம், அந்தக் குடும்பத்துக்கான ஆதாரம். கணவர், குழந்தைகள் என ஒரு பெண், தன் வீட்டினரின் ஆரோக்கியத்துக்கான விஷயங்களைப் பார்த்துப் பார்த்துச் செய்கிறாள்.
பதிலுக்கு, அவர்கள் அவளின் ஆரோக்கியத்துக்கு பங்களிப்பதில்லை என்பதைவிடக் கொடுமையானது, அவள் ஆரோக்கியம் குன்றியிருக்கும்போதுகூட கண்டும் காணாமல் இருப்பது!
மாதவிலக்கு, பிரசவம், கருச்சிதைவு, மெனோபாஸ் என்று எந்த நிலை உதிரப்போக்கால் பெண் உழன்றுகொண்டிருந்தாலும், ‘இதெல்லாம் இயல்பானதுதான்’ என்று கரிசனமற்று இருப்பதுதான் பல வீடுகளின் இயல்பு.
மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் அவளுக்கு ஏற்படும் ‘மூடு ஸ்விங்ஸ்’ (mood swings), அவள் மனதை படாதபாடுபடுத்தும். பிரசவ உதிரப்போக்கு அவளுக்கு ஏற்படுத்தும் ரத்தச்சோகை, கவனிக்காமல் விட்டால் உயிரிழப்புவரை ஏற்படுத்தும். மெனோபாஸ் கட்டத்தில் ஏற்படும் மிக அதிகமான உதிரப்போக்கு, வாழ்க்கையையே வெறுக்கும் புள்ளியில் அவளை நிறுத்தும்.
உதிரப்போக்கு நாட்களில் அவள் படும் துயரங்களைப் புரிந்துகொள்ளுங்கள். அவள் சுமைகள் குறைத்து, அந்நாட்களில் பலமிழந்து இருக்கும் அவள் வேலைகளைப் பகிர்ந்து, ஓய்வு கொடுங்கள்.
நன்றி : அவள் விகடன் 05.04.2016

Monday, March 20, 2017

ரத்தசோகையை ஏற்படுத்தும் உதிரப்போக்கு


ரத்தசோகையை ஏற்படுத்தும் உதிரப்போக்கு
வயதிற்கேற்ப மாதவிடாய் பிரச்னை மாறுபடும். பெண்களின் பருவத்தை பதின்பருவம், நடுத்தர வயது, மாதவிடாய் நிற்கும் பருவம் என பிரிக்கலாம்.
பூப்பெய்தியவுடன் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வரும் என எதிர்பார்க்க முடியாது.

இரண்டு மாதங்கள் முதல் ஓராண்டு கழித்துகூட வரலாம்.
கருப்பை மற்றும் சினைப்பை சரியாக முதிர்ச்சி அடையாமல் இருப்பதே இதற்கு காரணம்.
பதின்பருவ பெண்கள் சிலருக்கு அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு ரத்தசோகையில் முடியலாம்.
ஹார்மோன் மாற்றங்களினால் அதிகமான உதிரப்போக்கு ஏற்பட வாய்ப்புண்டு. இதை மாத்திரைகளால் சரிசெய்ய முடியும். பதின்பருவ பெண்கள் சினைப்பை நீர்கட்டி நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
உடற்பயிற்சி, சரிவிகித உணவின் மூலம் உடல்பருமனை குறைத்து இந்நோயை ஓரளவு கட்டுப்படுத்தலாம். மிகவும் அரிதாக ரத்தம் உறைதலில் குறைபாடுள்ள பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு ஏற்படலாம்.
நடுத்தர வயது பிரச்னை நடுத்தர வயதுகளில் 22 முதல் 35 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் வருவதும், 4 - 5 நாட்கள் வரை உதிரப்போக்கு இருப்பதும் இயல்பானது.
சில பெண்கள் எவ்வளவு அதிகமாக உதிரம் வெளியேறினாலும், நான்கு நாட்கள் தானே என நினைக்கின்றனர்.
இரண்டு நாட்களுக்கு மிக அதிகமாக உதிரப்போக்கு என்றாலும், அது பிரச்னைக்குரியது. மாதவிடாய் சம்பந்தமாக எந்த சந்தேகத்தையும் நாமாக அனுமானிக்காமல் மகளிர் மருத்துவரை அணுகுவதே நல்லது.
சிலபெண்களுக்கு மாதவிடாய் பிரச்னையாக உள்ளது என்பதே அவர்களது ஹீமோகுளோபின் அளவு மிகவும் குறைவாக இருப்பதை வைத்து தான் கண்டுபிடிக்க முடியும்.
சுழற்சி காலம் 20 நாட்களுக்குள் இருந்தாலோ, 35 நாட்களுக்கு மேல் வந்தாலோ, ஐந்து நாட்களுக்கு மேல் தொடர்ந்து உதிரப்போக்கு ஏற்பட்டாலோ மருத்துவரை அணுக வேண்டும்.
காரணங்கள் என்ன?
மாதவிடாய் தள்ளி போவதற்காக அடிக்கடி உட்கொள்ளும் ஹார்மோன் மாத்திரைகள்; காப்பர் டி எனப்படும் கருத்தடை சாதனம்; கர்ப்பப்பையின் உட்புறசுவரில் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் விளைவுகள்; கர்ப்பப்பை வாய்ப்பகுதியில் ஏற்படும் புண், கட்டிகள்; கருப்பையில் ஏற்படும் கட்டிகள் ஆகியவையே மாதவிடாய் பிரச்னைக்கான காரணங்கள்.
கர்ப்பப்பையின் வாய் பகுதியில் நாள்பட்ட புண் இருந்தாலோ 'பாலிப்' எனப்படும் சிறுகட்டிகள் இருந்தாலோ உதிரப்போக்கு ஏற்பட வாய்ப்புண்டு.
மாதவிடாய் நிற்கும் நேரத்தில், அதிக உதிரப்போக்கு ஏற்படுவது இயல்பானதல்ல.
சுழற்சிநாட்கள் மாறலாம். அதிக உதிரப்போக்கால் ரத்தசோகை ஏற்படும். இதனால் உடல் வலுவிழந்து மூச்சுதிணறல், படபடப்பு, நெஞ்சுவலி, தலைசுற்றல் ஏற்பட வாய்ப்புள்ளது.
ரத்தசோகைக்கு பல காரணங்கள் இருந்தாலும் மாதவிடாய் கோளாறே முக்கிய காரணம்.
பதின்பருவத்தினரோ, பெரியவர்களோ மாதவிடாய் பிரச்னையாக இருக்கிறது எனில், மகளிர் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதே நல்லது. ஹார்மோன் மாத்திரைகள் மருத்துவர் கண்காணிப்பின் கீழ் உட்கொள்ள வேண்டும்.
-டாக்டர் சுஜாதா சங்குமணி, மதுரை, 94422 72876
நன்றி : தினமலர் நாளிதழ் - 20.03.2016

Monday, December 12, 2016

மாதவிடாய் கோளாறுகள்


மாதவிடாய் கோளாறுகள் நீங்க என்ன செய்ய வேண்டும்?

மாதவிடாய்க் கோளாறு நீக்கும் நத்தைச் சூரி!  – நாட்டு வைத்தியம்
புல் – பூண்டு, செடி, கொடி, மரம் என இயற்கையின் கொடைகள் அனைத்துமே மனித இனத்துக்கு ஏதோ ஒருவகையில் பயன்படக்கூடியவையே. வெறுமனே பயன்படக்கூடியவை என்று சொல்வதைவிட இவற்றில் பல, நோய் தீர்க்கும் குணம் கொண்டவையாக உள்ளன. இதனால்தான் சித்தர்கள் இவற்றை மூலிகைகளாகக் கொண்டு பலவிதமான நோய்களைக் குணப்படுத்தி இருக்கின்றனர்.  அந்த வகையில் நாம் இங்கே நத்தைச் சூரி என்ற ஒரு மூலிகையைப் பார்ப்போம்.

நத்தைச் சூரி என்றதும் சிலர் ஏதோ ஒரு உயிரினத்தின் பெயர் என்று நினைப்பார்கள். இது அரிய வகை மூலிகைளில் ஒன்றாகும். இந்த மூலிகை பல்வேறு நோய்களைக் குணமாக்கப் பயன்பட்டதால், சித்தர்கள் இதை மகாமூலிகை என்று அழைத்தனர். நத்தைச் சூரிக்கு குழி மீட்டான், தாருணி, கடுகம், நத்தைச்சுண்டி, தொலியாகரம்பை என பல பெயர்கள் உண்டு. 
இது, பூண்டு வகையைச் சேர்ந்த தாவரமாகும். இதன் விதை, வேர் ஆகியவை மருத்துவக் குணம் கொண்டவை. 

நத்தைச் சூரியின் விதையை, லேசாக வறுத்துப் பொடியாக்கி, ஒரு ஸ்பூன் அளவு எடுத்து பாலில் கொதிக்கவைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து, காலை, மாலை அருந்தி வந்தால், உடல் சூடு தணிவதுடன், உடலில் உள்ள தேவையற்ற, வேதிப் பொருட்களை வெளியேற்றி, சிறுநீரகக் கல்லடைப்பை தடுக்கும். மேலும், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.  

நத்தைச் சூரியின் விதையைப் பொடித்து, தினமும் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து, தேனில் குழைத்துச் சாப்பிட்டால், சீதபேதி மற்றும் வயிற்றோட்டம் சரியாகும்.

நத்தைச் சூரியின் விதைகளை, சட்டியில் போட்டு, பொன் வறுவலாக வறுத்து, பொடித்து, நீரில் கலந்து கொதிக்க வைத்து… சுண்டவைத்து, அத்துடன் ஒரு டம்ளர் பசும்பால் கலந்து… காலை, மாலை என இரண்டுவேளை வீதம் தொடர்ந்து குடித்து வந்தால்,  ஊளைச் சதை குறையும். 

ஆண், பெண் இருவருக்கும் வரக்கூடிய  வெள்ளை நோய், வெட்டை நோய் குணமாகும்.  

பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் வரக்கூடிய அதிக உதிரப்போக்கைத் தடுப்பதோடு, வெள்ளைப்படுதலைக் குணமாக்கும். 

10 கிராம் நத்தைச் சூரி வேரை, காயவைத்து, பொடியாக்கி, பசும்பாலில் கலந்து, கொதிக்க வைத்து அருந்தி வந்தால், தாய்ப்பால் பெருகும். 

இதேபோல் ஆண்கள் அருந்தி வந்தால் ஆண்மை பலம் அதிகரிக்கும். நத்தைச் சூரியின் சமூலத்தை (முழு தாவரம்) அரைத்துப் பற்று போட்டு வந்தால், கல் போன்ற வீக்கமும் கரைந்து ஓடிவிடும்.

நன்றி : அவள்விகடன் - 13.12.2016

Wednesday, October 26, 2016

மாதவிலக்கை தள்ளிப் போடலாமா


மாதவிலக்கை தள்ளிப் போடலாமா - என்ன செய்ய வேண்டும்?

பீரியட்ஸ் பில்ஸ் சரியா? தப்பா?

மிக முக்கியமான திருமணம், கோயில் திருவிழா, சுற்றுலா, குடும்ப விழாக்கள்… என விசேஷ நாட்கள் வரும்போதெல்லாம்,  ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு திட்டமிடும்போது எல்லாம் பெண்கள் வேகமாய் காலண்டரைப் புரட்டுவார்கள். 

முக்கியமான நாட்களில் மாதவிலக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பதற்றமும் பரபரப்பும் அவர்களிடம் தொற்றிக்கொள்ளும். இதுவே, அவர்களுக்கு ஒருவித மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும்.

இப்போதுள்ள இளம் பெண்கள் அப்படிப் பரபரப்படைவது இல்லை. ‘நாளைக்கு ஃபங்ஷனா? நோ ப்ராப்ளம்! அதுதான் மாத்திரை இருக்கே…’ என கூலாக இருக்கிறார்கள். 

மாதவிடாய் நாட்களை எளிதாகத் தள்ளிப்போடும் மாத்திரைகள் இப்போது அனைத்து மருந்துக்கடைகளிலும் கிடைக்கின்றன. இவற்றைப் பெண்களும் சர்வ சாதாரணமாக வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். இது சரியா? 

இப்படி இந்த மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக்கொள்ளலாமா? 

இதனால் பக்கவிளைவுகள் ஏதும் உண்டா?

பூப்பெய்திய பிறகு, மெனோபாஸ் வரை… 

பெண்ணுக்கு 28 முதல் 30 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும். அதாவது, கருத்தரிக்க ஏதுவாக,  சினைப்பையில்  முட்டை வளர்ச்சியடைய ஆரம்பிக்கும். கடந்த மாதம் கரு உருவாகாததால், கரு தங்கி வளர்ச்சியடைய கர்ப்பப்பையில் உருவாகியிருந்த எண்டோமெட்ரியம் என்ற மெத்தைபோன்ற அமைப்பு வெளியேறும். இதையே மாதவிலக்கு என்கிறோம்.

 ஹார்மோன்கள் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்போடு வேலை செய்தால்தான், இந்தச் சுழற்சி சீராக நடக்கும். மாதவிடாய் நாட்களைத் தள்ளிப்போட நினைத்து மாத்திரை சாப்பிடுவதன் மூலம், இந்தச் சுழற்சியை நாம் இடையூறு செய்கிறோம். 

இதனால் உடலின் ஒட்டுமொத்தச் செயல்பாட்டில் இருக்கும் சீர்மை பாதிக்கப்படுகிறது. இது, ஒரு கட்டத்தில் நம் உடலையும் பாதிக்கிறது. நன்றாக இயங்கிக்கொண்டிருக்கும் கம்ப்யூட்டரின்  செயல்பாட்டில் வைரஸ் ஏதாவது புகுந்து தடை செய்வது போலத்தான், இந்த மாத்திரையைச் சாப்பிட்டு மாதாந்திர சுழற்சியை பாதிப்படைய வைக்கிறோம்.

மாதவிடாயைத் தள்ளிப்போடப் பயன்படுத்தும் மாத்திரைகளில் உள்ள உட்பொருட்கள், ‘புரோஜெஸ்ட்ரான்’ (Progesterone) எனும் ஹார்மோனை தற்காலிகமாக நிறுத்தி மாதவிலக்கை தாமதப்படுத்த செயல்படுகிறது. அதாவது இயற்கையான ஒரு நிகழ்வை தடுத்து நிறுத்தும் வேலையை செய்வதுதான் இந்த மாத்திரைகளின் வேலை. இந்த மாத்திரையைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், புரோஜெஸ்ட்ரான் சுரப்பில் பாதிப்பும் ஏற்படலாம்.

என்னென்ன பாதிப்புகள்?

தலைவலி, உடலில் நீர் கோத்தல் போன்ற பிரச்னை, மார்பகங்களில் வலி,  ஹார்மோன் கோளாறுகள், வலியுடன் கூடிய மாதவிலக்கு, பக்கவாதம், ரத்த உறைவுப் பிரச்னை ஆகியவற்றுடன் சிலருக்கு மாதவிடாய் சுழற்சி சீரற்ற முறையில் நடக்காமல் போகவும் வாய்ப்பு உள்ளது.

உயர் ரத்த அழுத்தம் வர வாய்ப்பு உள்ளவர்கள், 40 வயதைக் கடந்த பெண்கள் ஆகியோர் மாத்திரையை தவிர்ப்பது நல்லது.

பொதுவாக, மாதவிலக்கு வந்த நாளில் இருந்து 14ம் நாளில், சினைப்பையில் இருந்து முட்டை வெளிப்படுதல் (Ovulation) நிகழும். இந்த மாத்திரையை எடுத்துக் கொண்டால், முட்டை வெளிப்படுதல் தாமதமாகலாம். 

இதனால், திருமணம் ஆனவர்கள், குழந்தைப்பேறை தற்காலிமாகத் தள்ளிப்போட அல்லது தவிர்க்க கர்ப்பத்தடை மாத்திரை எடுத்துக்கொள்ளும்போது, ஓவலேஷன் ஆகும் தினத்தை கணிக்க முடியாமையால் கர்ப்பம் தரிக்கவும் வாய்ப்புகள் உண்டு. அந்தக் கருவின் (Fetus) வளர்ச்சியும் ஆரோக்கியமானதாக, இயல்பானதாக இல்லாமல் இருக்கும். எனவே, பீீரியட்ஸை தாமதமாக்கும் மாத்திரைகளை தவிர்ப்பதுதான் நல்லது.

பாதுகாப்பாக எப்படி பயன்படுத்துவது?

மாதவிலக்கைத் தள்ளிப்போடும் மாத்திரையைப் பொறுத்தவரை பாதுகாப்பான முறை என்று எதுவுமே கிடையாது. மருந்து கடைகளில் வாங்கி சுயமாக சாப்பிட்டால், பக்க விளைவுகள் வரும்.

தவிர்க்கவே முடியாது என்றால், மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையின்படி, எப்போதாவது ஒருமுறை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அடிக்கடி இது தொடரும்போது, அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளைத் தவிர்க்க முடியாது. எனவே, பெண்களே உஷார்!

மிருதுபாஷினி,
மகளி்ர் நல மருத்துவர், கோவை.

நன்றி : டாக்டர் விகடன் - 01.11.2016