disalbe Right click

Showing posts with label RTI. Show all posts
Showing posts with label RTI. Show all posts

Tuesday, February 18, 2020

மூத்த குடிமக்களுக்கு RTI சட்டம் தருகின்ற சலுகை

மூத்த குடிமக்களுக்கு RTI சட்டம் தருகின்ற சலுகை

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, விண்ணப்பம்
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 6(1)ன் கீழ் தகவல்கள் மற்றும் ஆவண நகல்களை கேட்டு நாம் விண்ணப்பிக்கும் போது, அதனை பெற்றுக் கொண்ட  நாளில் இருந்து 30 நாட்களுக்குள் அதற்குரிய தகவல்களை வழங்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, முதல் மேல்முறையீடு
அவ்வாறு பொது தகவல் அலுவலர் அவர்கள், தகவல்கள் எதையும் தரவில்லை என்றாலோ அல்லது சில தகவல்களை மட்டும் வழங்கியிருந்தாலோ அல்லது வழங்கிய தகவல்கள் முழுமையாக இல்லை என்றாலோ அல்லது தவறாக இருந்தாலோ, விண்ணப்பம் செய்து தகவல் பெற்று இருக்க வேண்டிய நாளில் இருந்து 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.
முதல் மேல்முறையீடு பெற்ற நாளில் இருந்து 30 நாட்களுக்குள் அதற்கு மேல்முறையீட்டு அலுவலர் பதில் வழங்க வேண்டும். அதனை 30 நாட்களுக்குள் வழங்க இயலவில்லை என்றால், 45 நாட்கள் வரை நீடித்துக் கொள்ளலாம். ஆனால், அதற்கான காரனத்தை அவர் பதிவு செய்திருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, இரண்டாம் மேல்முறையீடு
முதல் மேல்முறையீடு செய்து 30 நாட்களுக்குள்  தகவல்கள் ஏதும் வழங்கவில்லை என்றால், அதிலிருந்து 90 நாட்களுக்குள் மாநில தகவல் ஆணையத்திற்கு நாம் இரண்டாம் மேல்முறையீடு செய்ய வேண்டும். 
இரண்டாவது மேல்முறையீடு செய்தவர்களுக்கு இத்தனை நாட்களுக்குள் தகவல் ஆணையர் பதில் வழங்க வேண்டும் என்று சட்டம் சொல்லவில்லை.
ஆனால், மனுதாரர் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருந்தால் ஒரு சலுகை வழங்குகிறது.
அது என்ன சலுகை?
மனுதாரர் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருந்தால், தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு அவர் அனுப்புகின்ற புகார் அல்லது மேல்முறையீட்டு மனுவுடன் அவரது வயதை குறிப்பிடும் சான்றுகளான, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பிறப்புச் சான்றிதழ், கல்விச்சான்றிதழ், பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களின் நகல்களில் ஏதாவது ஒன்றை இணைத்து விண்ணப்பித்தால், 
மாநில தகவல் ஆணையருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம், பிரிவு 15(4)ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, அந்த மனுக்கள் 8 வாரங்களுக்குள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இது கீழ்க்கண்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



********************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 18.02.2020 

Thursday, April 4, 2019

தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005, முக்கியப்பிரிவுகள்


தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005, முக்கியப்பிரிவுகள்
சமூக ஆர்வலர்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகவும் பயன் தரக்கூடிய சட்டங்களில் முதன்மையானது என்றால் அது தகவல் அறியும் உரிமைச் சட்டம்தான். அதனை பயன்படுத்தக் கூடியவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பிரிவுகள் பற்றிய தகவல்களை இந்தப் பதிவில் வழங்கியுள்ளேன். பார்த்து, படித்து பயன் பெறுங்கள்!






******************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 05.04.2019 

Wednesday, October 24, 2018

தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005ன் கீழ்

நிலஅளவை தொடர்பான ஆவணங்களும் அவை பாதுகாக்கப்படும் அலுவலகங்களின் விவரமும்
1. ஆரம்ப நிலஅளவை புலப்படச் சுவடிகள் (Blue Print Copies) 
பாதுகாக்கப்படும் அலுவலகம்:- மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 
பொது தகவல் அலுவலர் : மாவட்ட ஆட்சியர் நேர்முகஉதவியாளர் (பொது
மேல்முறையீட்டு அலுவலர்:- மாவட்ட வருவாய் அலுவலர்
2. கிராம படங்கள்
பாதுகாக்கப்படும் அலுவலகம்:- மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 
பொது தகவல் அலுவலர் : மாவட்ட ஆட்சியர் நேர்முகஉதவியாளர் (பொது
மேல்முறையீட்டு அலுவலர்:- மாவட்ட வருவாய் அலுவலர்
3. அச்சிடப்பட்ட பழைய செட்டில் மெண்ட் பதிவேடுகள்
பாதுகாக்கப்படும் அலுவலகம்:- மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 
பொது தகவல் அலுவலர் : மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது
மேல்முறையீட்டு அலுவலர்:- மாவட்ட வருவாய் அலுவலர்
4. நிலவரித்திட்ட அலுவலர் அலுவலக வழக்கு கோப்புகள்
பாதுகாக்கப்படும் அலுவலகம்:- மாவட்டஆட்சியர் அலுவலகம் 
பொது தகவல் அலுவலர் :மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது
மேல்முறையீட்டு அலுவலர்:- மாவட்ட வருவாய் அலுவலர்
5. நிலவரித்திட்ட அலுவலகத்தில் தயாரிக்கப்பட்ட நிலவரித்திட்ட நிலப் பதிவேடு நகல் (S.L.R. COPY)
பாதுகாக்கப்படும் அலுவலகம்:- மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 
பொது தகவல் அலுவலர் :மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது
மேல்முறையீட்டு அலுவலர்:- மாவட்ட வருவாய் அலுவலர்
6. நகர நில அளவை மூல ஆவணங்கள்
பாதுகாக்கப்படும் அலுவலகம்:- நிலஅளவை மத்திய அலுவலகம் 
பொது தகவல் அலுவலர் :உதவி இயக்குநர் (வரைபடம்), மத்திய நிலஅளவை அலுவலகம் சென்னை
மேல்முறையீட்டு அலுவலர்:- இணை இயக்குநர் மத்திய நிலஅளவை அலுவலகம், சென்னை.
7. நிலஉடைமை பதிவேடு திட்ட புலப்படச் சுவடி
பாதுகாக்கப்படும் அலுவலகம்:- வட்டாட்சியர் அலுவலகம் 
பொது தகவல் அலுவலர் :தலைமையிடத்து துணை வட்டாட்சியர் 
மேல்முறையீட்டு அலுவலர்:- வட்டாட்சியர்
8. நில உடைமை பதிவேடு திட்ட - பதிவெடு
பாதுகாக்கப்படும் அலுவலகம்:- வட்டாட்சியர் அலுவலகம் 
பொது தகவல் அலுவலர் : தலைமையிடத்து துணை வட்டாட்சியர் 
மேல்முறையீட்டு அலுவலர்:- வட்டாட்சியர்
9. நில உடைமை பதிவேடு திட்ட சிட்டா
பாதுகாக்கப்படும் அலுவலகம்:- வட்டாட்சியர் அலுவலகம் 
பொது தகவல் அலுவலர் : தலைமையிடத்து துணை வட்டாட்சியர்
மேல்முறையீட்டு அலுவலர்:- வட்டாட்சியர்
10 . நில உடைமை பதிவேடு திட்ட கிராம படங்கள்
பாதுகாக்கப்படும் அலுவலகம்:- வட்டாட்சியர் அலுவலகம் 
பொது தகவல் அலுவலர் :தலைமையிடத்து துணை வட்டாட்சியர் 
மேல்முறையீட்டு அலுவலர்:- வட்டாட்சியர்
11 . நில உடைமை பதிவேடு திட்ட மூல ஆவணங்கள் (புலப்படம்)
பாதுகாக்கப்படும் அலுவலகம்:- நிலஅளவை மத்திய அலுவலகம் 
பொது தகவல் அலுவலர் :உதவி இயக்குநர் (வரைபடம்) மத்திய நில அளவை அலுவலகம் சென்னை
மேல்முறையீட்டு அலுவலர்:- இணை இயக்குநர் மத்திய நில அளவை அலுவலகம் சென்னை
12. வட்ட வரைபடங்கள் (விற்பனை பிரதிகள்)
பாதுகாக்கப்படும் அலுவலகம்:- நில அளவை பதிவேடுகள் துறை.உதவி இயக்குநர் அலுவலகம் 
பொது தகவல் அலுவலர் : ஆய்வாளர் நில அளவை பதிவேடுகள் துறை 
மேல்முறையீட்டு அலுவலர்:- உதவி இயக்குநர், நில அளவை பதிவேடுகள் துறை 
13 மாவட்ட வரைபடங்கள் (விற்பனை பிரதிகள்)
பாதுகாக்கப்படும் அலுவலகம்:-நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் அலுவலகம் 
பொது தகவல் அலுவலர் : ஆய்வாளர் நில அளவை பதிவேடுகள் துறை 
மேல்முறையீட்டு அலுவலர்:- உதவி இயக்குநர், நில அளவை பதிவேடுகள் துறை
தகவல் உதவி : முகநூல் நண்பர் திரு Chandru Karur  

Tuesday, October 16, 2018

பள்ளிகளில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் நிலை என்ன

பள்ளிகளில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் நிலை என்ன?
அரசு மானியம், சலுகைகள் பெறும் அனைத்து பள்ளிகளும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வரம்புகளுக்கு உட்பட்டவைதான்: மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு கல்வியாளர்கள் வரவேற்பு
அரசிடம் மானியம், சலுகைகள் பெறும் அனைத்து பள்ளிகளும் தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்கு உட்பட்டவைதான் என மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதற்கு கல்வியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் கொண்டா புரத்தைச் சேர்ந்த ஜெ.முகமது அலி சித்திக் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் சில தகவல்களைக் கோரியிருந்தார்.
அதில், “வேலூரில் உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்புக்கு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தப் பள்ளி வளாகம், பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த அறிக்கையை அளிக்க வேண்டும். பள்ளியில் உள்ள கோப்புகளை ஆய்வு செய்யவும் அனுமதி அளிக்க வேண்டும்என்று தெரிவித்திருந்தார்.
ஆய்வாளருக்கு உத்தரவு
இதையடுத்து, அந்தத் தகவல்களை அளிக்குமாறு திருவண்ணாமலை மாவட்ட மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளருக்கு உத்தரவிடப்பட்டது. ஆனாலும், எந்தத் தகவலும் அளிக்கப்படவில்லை. இதையடுத்து முகமது அலி சித்திக் மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் நிதியைப் பெறுகின்றன. அறக்கட்டளை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிகளுக்கு பல்வேறு நிதிச் சலுகைகள் அளிக்கப்படுகின்றன. மேலும், பள்ளிகளுக்கு வருமானவரி விலக்கு அளிக்கப்படுகிறது.
இதுதவிர, பள்ளிகள் பயன்படுத்தும் மின்சாரம், தண்ணீருக்கு மாநகராட்சிகள், நகராட்சிகள் மானியம் அளிக்கின்றன. பள்ளி வாகனங்கள் பதிவின்போதும் சலுகை அளிக்கப்படுகிறது.
எனவே, அரசிடமிருந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ மேற்கண்ட மானியம், நிதி, சலுகைகள் பெறும் பள்ளிகள் அனைத்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 2(எச்)-ன்படி பொது நிறுவனமாகவே கருதப்படும். பொது முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து தகவல்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டப்பிரிவு 4-ன் கீழ் பொது தகவல் அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும்.
சில கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றுள்ளன. எனவே, பள்ளியை நிர்வகிக்கும் நபர்கள், பணியாற்றும் ஆசிரியர்கள், இதர பணியாளர்கள் குறித்தும் தெரிந்துகொள்ளும் உரிமை பெற்றோருக்கு உண்டு.
வழக்குகள் நிலுவையிலிருந்தால்
எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் தங்களது வலை தளத்தில் தங்கள் பள்ளியின் தலைவர், அறங்காவலர்கள், முதல்வர், ஆசிரியர்கள், ஓட்டுநர் உள்ளிட்ட இதர பணியாளர்கள் யார் மீதாவது குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தால் அதைத் தெரிவிக்க வேண்டும்.
இந்தத் தகவல் இருப்பதை உறுதிப்படுத்துமாறு பள்ளி கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். குற்ற வழக்குகள் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்கும் தகவல்களை அளிக்குமாறு மாவட்ட குற்ற ஆவண காப்பகங்களுக்கு மாநில குற்ற ஆவண காப்பகத்தின் இயக்குநர் அறிவுறுத்த வேண்டும்.
16-ம் தேதிக்குள்...
இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரக பொது தகவல் அலுவலர், மாநில குற்ற ஆவண காப்பக பொது தகவல் அலுவலர் ஆகியோர் ஆணையத்தில் ஜூலை 16-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் உத்தர விட்டுள்ளார்.
அரசிடம் சலுகைகள் பெறும் தனியார் பள்ளிகளும் ஆர்டிஐ வரம்புக்குள் வரும் என தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது குறித்துமாற்றம் இந்தியாஅமைப்பின் இயக்குநர் .நாராயணனிடம் கேட்டதற்கு, “தகவல் அறியும் உரிமை சட்டம் வந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு மாநில தகவல் ஆணையம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது. தாமதமாக வந்தாலும் இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது. பெற்றோர்கள், கல்வியாளர்கள் இந்த உத்தரவை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்என்றார்.
அரசாங்கத்தின் ஓர் அங்கம்
கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும்போது, “பள்ளிகளை யார் நடத்தினாலும் அது அரசாங்கத்தின் ஓர் அங்கமாகவே கருதப்படும். அதை தனி நிறுவனமாகக் கருத முடியாது. எனவே, மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவு வரவேற்கத்தக்கது.
பள்ளிகள் குறித்த பொதுவான தகவல்களை ஒளிவுமறைவின்றி பெற்றோர்கள், மக்கள் தெரிந்துகொள்ள இந்த உத்தரவு வழி வகுக்கும்என்றார்.
**********************************************நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் -15.07.2018