disalbe Right click

Friday, January 12, 2018

மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?
பலபேரிடம் பணத்தை வசூல் செய்து, அதை எதில் முதலீடு செஞ்சா நிறைய லாபம் கிடைக்குமோ அதுல பணத்தைப் போட்டு அவர்களுக்கு சம்பாதித்துக் கொடுப்பதுதான் மியூச்சுவல் ஃபண்ட் ஆகும். இதில் முதலீட்டாளர்களுக்கும் இதனை நடத்துகின்ற நிதி நிறுவனங்களுக்கும் லாபம் கிடைக்கும். இருதரப்புக்கும் லாபம்ங்கிற அர்த்தத்தில்-தான் ‘மியூச்சுவல் ஃபண்ட்னு பெயர் வைக்கப்பட்டுள்ளது. பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யத் தெரியாத முதலீட்டாளர்கள் இதனை தெர்வு செய்கிறார்கள். இதனை  பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள்  மட்டுமல்ல, வங்கிகளும் நடத்துகின்றன.
நிறுவனங்கள் என்ன செய்கின்றன?
முதலீட்டாளர்களிடம் பெற்ற பணத்தைப் பிரிச்சு பல திட்டங்கள்ல அவங்க முதலீடு செய்கிறார்கள். ஏதாவது ஒன்றில் லாபம் குறைஞ்சாலும் மற்றோரு திட்டத்தில் செய்த முதலீடு நமக்கு லாபத்தை தந்துவிடும்.  ஆகையால் முதலுக்கு மோசம் என்ற கவலை நமக்கு  வராது. நாம் முதளிடு செய்த  பணம் எப்படிப் பெருகிக் கொண்டு இருக்கிறது என்பதை பார்க்கும் வசதியும் உண்டு. 
இதில் ரிஸ்க் உண்டா?
யாரோ ஒருவரின் தவறான வழிகாட்டுதலினால் ஷேர் மார்க்கெட்டில் நேரடியாக நுழைஞ்சு  திறமையின்மை காரணமாக நஷ்டம் என்பது இதில் ஏற்படாது. முதலில், நமக்குப் பிடிச்ச திட்டத்தை தேர்ந்தெடுக்கும்போது மட்டும் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. 
நமது இருப்புத் தொகை எவ்வளவு? எவ்வளவு முதலீடு செய்யலாம்? என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். முதலீடு செய்த திட்டத்தில் திருப்தி இல்லை என்றால் அதிலிருந்து விலகியும் கொள்ளலாம். 
கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்யலாம்
ரியல் எஸ்டேட்டில் போடுவது போல அதிகமான தொகையை  மொத்தமா முதலீடு செய்ய வேண்டும் என்பது இதில் இல்லை.  மாசா மாசம் ஒரு தொகையை முதலீடு செய்யலாம். மாதாமாதம் 1000/- ரூபாயைக்கூட நாம் முதலீடு செய்யலாம்.  Equity Linked Saving Schemes (ELSS) என்று சொல்லக்கூடிய சில திட்டங்களில்  நாம் செய்யும் முதலீட்டுக்கு வருமான வரி பிரிவு 80-சியின் கீழ் வரி விலக்கும் கிடைக்கும்.
மியூச்சுவல் ஃபண்டு இரண்டு விதம்.
Open ended, Closed ended என்று  இரண்டு விதமாக மியூச்சுவல் ஃபண்டுகளைப் பிரித்துக் கொள்ளலாம்.
Open endedல் எப்போது வேண்டுமானாலும் பணத்தைப் போடலாம், எப்போது வேண்டுமானாலும் பணத்தைப் எடுக்கலாம்.
Closed endedல்  ஒரு முறை முதலீடு செய்துவிட்டால், அது முதிர்ச்சி அடைந்த பிறகுதான் எடுக்க முடியும். சில நிறுவனங்கள் மட்டும், இடையில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு முதலீட்டை எடுத்துக் கொள்ள வாய்ப்புகளை முதலீட்டாளர்களுக்கு வழங்குகிறது.   Closeended   திட்டத்தில் போட்ட முதலீட்டை பொதுவாக மூணு   வருஷத்துக்கு  எடுக்க முடியாது
லாபத்தில் நமக்கு கிடைக்கும் பங்கு
மியூச்சுவல் ஃபண்டில் நாம முதலீடு செய்த தொகை வளரும்போது, கிடைக்கின்ற லாபத்தை  நமக்குப் பிரித்துக் கொடுப்பார்கள். இதில் Dividend, Growth என்று இரண்டு முறைகள் இருக்கு. முதலீடு செய்த தொகை முதிர்ச்சியடையும் காலத்திற்குள் நமக்குத் பணம் தேவை என்று  நினைக்கிறவர்கள் Dividend  முறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்த  முதலீடு வேகமாக வளர்ந்தால்தான் உங்களுக்கு டிவிடெண்ட் தொகை கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்Dividend வருமானத்துக்கு வரி எதுவும் கிடையாது.
மொத்தமாக கடைசியில் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைப்பவர்கள் Growth  முறையை  தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்
முதலீட்டுக் காலம் எவ்வளவு?
அது நமது இஷ்டம்தான். முதலீட்டுக் காலம் எவ்வளவு என்பதை நாம் தீர்மானித்துக் கொள்ளலாம்.
Systematic Investment Plan' (SIP)
மியூச்­சு­வல் பண்ட் திட்­டங்­களில், எஸ்..பி., (Systematic Investment Plan) எனப்­படும், தவணை முறை­யில் முத­லீடு செய்­யும் திட்­டத்­திற்கு, தற்போது வர­வேற்பு அதி­­ரித்து வரு­கிறது. இத்­திட்­டத்­தில் இணைந்து நீங்கள் வாரம், மாதம், காலாண்­டு­களில் குறைந்­­பட்­சம், 500 ரூபாய் முத­லீடு செய்­­லாம்.
அன்­றாட பங்­குச் சந்­தை­யினுடைய ஏற்ற, இறக்­கத்தை நாம் கவ­னிக்க தேவை­யின்றி, முத­லீட்­டில் ஒழுங்­கு­மு­றையை ஏற்­­டுத்த, இந்த எஸ்..பி., திட்­டம் நமக்கு உத­வு­கிறது. 2017 அக்­டோ­­ர் வரை இத்­திட்­டத்­தில், 5,600 கோடி ரூபாய் முத­லீடு செய்­யப்­பட்டு உள்­ளது என்பது குறிப்பிடத்தக்கது.
*********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 12.01.2018 

Thursday, January 11, 2018

வாட்ஸ் ஆப் அட்மின்களே

அட்மின்களுக்கு எச்சரிக்கை
பேஸ் புக் வந்தபோதுதனது கணக்கில் பல நண்பர்களை சேர்த்துஎனக்கு 1,000 பேஸ்புக் 
நண்பர்கள் என்று பெருமைபடும் காலம் ஒன்று இருந்ததுஅது இப்போது சற்று மாறிவாட்ஸ்ஆப்பில் நான் அட்மின் ஆக இருந்து ஒரு குருப் ஆரம்பித்துள்ளேன்அதில் இத்தனை நபர்கள் சேர்ந்துள்ளார்கள் என்று பெருமைப்படும் காலம் இதுஇன்று வாட்ஸ்ஆப்பில் குருப் ஆரம்பிக்காத நபர்களோ அல்லது குருப்பில் இல்லாத நபர்களே மிக மிக குறைவு.
பேஸ்புக் கொடுத்துள்ள அதிகாரம்
.பேஸ்புக்கில் ஒரு குருப் ஆரம்பித்தால்அந்த குருப்பின் அட்மின் (நிர்வாகி), அந்த குருப்பில் 
இருக்கும் உறுப்பினர்கள் பதிவிடும் பதிவுகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் உண்டு
உதாரணமாகஒரு உறுப்பினர் இடும் பதிவைகுருப் அட்மின் அனுமதி கொடுத்த பிறகுதான்அந்த குருப்பில் வெளியிடுமாறு செய்யலாம்அல்லது உறுப்பினர் இடும் பதிவுகளை அட்மின் உடனடியாக அழித்து விடலாம்ஆகஅந்த குருப்பின் முழு அதிகாரம் அட்மினிடம் இருக்கும்.
பதிவுகளை முற்றிலும் அழிக்க முடியாது
.ஆனால்வாட்ஸ்ஆப் குருப் அப்படிப்பட்டதல்லஇதில் அட்மின் ஆக இருப்பவர் உறுப்பினர்கள் இடும் பதிவுகளின் அனுமதியை மறுக்க முடியாது மற்றும் உறுப்பினர்கள் இட்ட பதிவுகளை அழிக்க முடியாதுஅவ்வாறு அழிக்க முயற்சித்தாலும்அட்மினின் மொபைலில் இருந்து மட்டுமே அந்த பதிவு அழிக்கப்படும் ஆனால் மற்ற உறுப்பினர்களின் மொபைலில் அந்த பதிவு தொடர்ந்து இருக்கும்.
அட்மின்களின் பொறுப்பு அதிகம்.
.பேஸ்புக்கை விட வாட்ஸ் ஆப் அட்மின்னிற்கு பொறுப்புநிலை அதிகமாகின்றதுஅவரது குருப்பில் உள்ள உறுப்பினர்களானவர்கள் யவரை பற்றியான அவதுாறான பதிவுகளை இடாமல் இருக்க வேண்டும்அரசியல் தலைவர்கள்அரசியல் கட்சிகள்பிரதமந்திரிமுதல்வர் மற்றும் அமைச்சர்கள்அதிகாரிகள்தனிநபர்கள் மீது ஆதரமற்ற அவதுாறான தகவல்களை பரப்பினால் (அந்த தகவல்கள் அவருடைய தகவலாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை...மாறாக மற்றவர் அவருக்கு அனுப்பிய தகவலை குருப்பில் பரப்பினாலும்) அதற்கு அட்மின்தான் அவ்வாறான தகவலை பதிவு செய்தவருடன் சேர்ந்து இந்திய தண்டணை சட்டம்தீங்கியல் சட்டம் மற்றும் .டி.சட்டம் 2000-ன் படி தண்டணைக்குள்ளாவர்கள்
யாரோ செய்த தவறு
யாரோ செய்த தவறுக்கு அட்மின்னும் சிறைக்குள் செல்ல வேண்டியது இருக்கும் என்பதை அட்மின்கள் உணரவேண்டும்ஒருவர் தவறாக இட்ட ஒரு பதிவை ஸ்கிரின்ஷாட் எடுத்து தகுந்த அதிகார அமைப்பிடம் நடவடிக்கை எடுக்க யாராகிலும் கொடுத்தால்அட்மின்னிற்கு ஆபத்துதான்.
எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம்!
.குருப்பின் அளவு பெரிய அளவில் ஆகும்போது அட்மினின் பொறுப்புநிலையும் அதிகமாகின்றதுஅவர் அடிக்கடி அந்த குருப்பை கண்காணிக்கும் நிலை ஏற்படுகின்றதுஇவ்வாறு கண்காணித்தாலும்குருப்பில் இட்ட பதிவுகளை அட்மினால் அழிக்க முடியாது என்பதால்அட்மின் நிலையானது எப்போதுமே “கத்தி மேல் நின்று கொண்டிருக்கும் நிலைதான்”.
எச்சரிக்கையாக இருங்கள்
.ஆகவேவாட்ஸ்ஆப் குருப்பில் அட்மின் ஆக இருப்பது பெருமையான விஷயம் அல்லமாறாகஇன்றை சூழ்நிலையில் ஆபத்தான விஷயமும்கூடஆகவேஒரு குருப்பை நானும் நிர்வாகிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுதேவையற்ற வகையில்குருப்பை உருவாக்குவதை தவிருங்கள்அதையும் மீறி ஒரு குருப் நிர்வாகிக்க வேண்டும் என்றால்,  “அவதுாறான பதிவுகள் போடவேண்டாம்“ என்று அடிக்கடி எச்சரிக்கை விடுங்கள்உறுப்பினர்கள் யாராவது அவதுாறான பதிவுகள் போட்டால் உடனேஅந்த உறுப்பினரை நீக்கம் செய்யுங்கள் மற்றும் உறுப்பினர்கள் தொடர்ந்து அந்த செயலை செய்தால்அந்த குருப்பை உடனே மூடி விடுங்கள்அதுதான் அட்மின்களுக்கு நல்லது.
.அடுத்தவர் செய்யும் தவறுக்கு
.அடுத்தவர் செய்யும் தவறுக்குநீங்கள் சிறைக்கு செல்ல வேண்டுமா என்பதை ஒரு குருப்பை உருவாக்கி அதற்கு அட்மின் ஆவதற்கு முன்னால் ஒரு முறைக்கு பல முறை யோசியுங்கள்.
*************************************************************
முகநூல் நண்பரும் வழக்கறிஞருமான திரு Leenus Leo Edwards அவர்கள் முகநூலில் பதிவிட்ட இன்றைய (12.01.2018) அருமையான எச்சரிக்கைப் பதிவு இது.
********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி