disalbe Right click

Saturday, February 17, 2018

'கிரெடிட் கார்டு' பரிவர்த்தனை:

இழப்பீடு வழங்க உத்தரவு
சென்னையிலுள்ள, பாரிமுனையைச் சேர்ந்தவர், அபுதாகீர். இவர், கோட்டூர்புரத்தில் உள்ள, ஒரு தனியார் வங்கியில், கிரெடிட் கார்டு வாங்கியிருந்தார்இவர், இந்தக் கார்டை பயன்படுத்தி, 2005ம் ஆண்டு  ஜூலை மாதத்தில், 20 ஆயிரத்து, 735 ரூபாய்க்கு, வாகன எரிபொருள் வாங்கியுள்ளதாகவும், அதனால், அந்தக் கடன் பணத்தை செலுத்த வேண்டும் என, ஷை வங்கி கோரியது.
அதிர்ச்சியடைந்த அபுதாகீர்
 அந்தக்'கார்டை, நான் பயன்படுத்தவில்லை; பொருட்களை நான் வாங்கவில்லை: ஏதோ தவறாக பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது' என, அபுதாகீர் வங்கியினரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதனை வங்கி ஏற்றுக் கொள்ளவில்லை. அந்தக்  கடன் தொகையை கட்டினால்தான், நீங்கள் கணக்கை தொடர முடியும் என்று, வங்கி நிர்வாகம் தெரிவித்தது.
நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு
இதனால், வேறு வழியின்றி அந்த வங்கியில்  20 ஆயிரத்து, 735 ரூபாயை, அபுதாகீர் செலுத்தினார். செலுத்திய தொகையுடன், உரிய இழப்பீடும், வழக்குச் செலவும் அந்த வங்கி  தனக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என, சென்னை மாவட்ட, தெற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில்,  வழக்கு தொடர்ந்தார்
நீதிபதி உத்தரவு
வழக்கை விசாரித்த நீதிபதி மோனி அவர்கள், இந்த வழக்கில், 'வங்கி, முறைகேடாக வர்த்தகம் செய்துள்ளது அபுதாகீர்  செலுத்திய, 20 ஆயிரத்து, 735 ரூபாயுடன், இழப்பீடாக, 10 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவுக்கு, 5,000 ரூபாயும் என, மொத்தம், 35 ஆயிரத்து, 735 ரூபாயை, மனுதாரருக்கு, வங்கி நிர்வாகம் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.
**************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 18.02.2018 

ஆன்லைன் மூலம் ரயிலையே புக் செய்யலாம்

நீங்கள்  நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சுற்றுலா செல்வதற்கு தனி ரயில் அல்லது ரயிலின் ஒரு பெட்டியை, .ஆர்.சி.டி.சி., உதவியுடன், இனி, 'ஆன் லைனில்' முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Indian Railway Catering and Tourism Corporation
ரயில்களில் பயண முன்பதிவு, ரயில்களில் உணவுப் பொருள் விற்பனை ஆகியவற்றை, .ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் மேற்கொண்டு உள்ளது.
Image result for irctc
ஆன் லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் முதலில் .ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், தங்கள் விபரங்களை பதிவு செய்து, கணக்கு ஒன்றை துவக்க வேண்டும். அதன்பிறகு, அவர்கள், தங்களுக்கான டிக்கெட்டுகளை அதன்மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதுவரை இருந்த நடைமுறை 
திருமண நிகழ்ச்சிகள், ஆன்மிக சுற்றுலா, கல்வி சுற்றுலா, நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனான இன்ப சுற்றுலா ஆகியவற்றை மேற்கொள்பவர்கள் தனி ரயில் அல்லது ரயிலின் ஒரு பெட்டியை மட்டும் முன்பதிவு செய்யும் வசதி ஏற்கனவே உள்ளது. இருந்தாலும், இந்த சேவையை நாம் பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட ரயில் நிலைய அதிகாரியை சந்தித்து, அதற்காக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், சரியான காரணத்தையும் தெரிவித்து, அதற்கான முன்பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.
இனிமேல் இலகுவான நடைமுறை
இனிமேல் 'தனி ரயில் அல்லது தனி பெட்டியை முன்பதிவு செய்ய இனி, ரயில்வே அதிகாரிகளை நேரடியாக அணுக தேவையில்லை. இந்த சேவையை, .ஆர்.சி.டி.சி., நிறுவனமே  அளிக்கிறது இந்நிறுவனத்திடம் தேவையான தகவல்களை வழங்கி, ரயில், பெட்டியை அல்லது ரயிலை, ஆன் லைனில் முன்பதிவு செய்யலாம்' என, ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
இணையதள முகவரி : https://www.irctc.co.in/
************************************ அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 18.02.2018 

பொது நல வழக்கில் .........!

ஆதாரம் இல்லாமல் வழக்கு தாக்கல் செய்தால் அபராதம்!

சாதாரண காரணங்களுக்காக எந்தவித ஆதாரமும் இல்லாமல்  பொது நல வழக்குகள் தாக்கல் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த வழக்கு
டிராபிக் ராமசாமி அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதியின்றி வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களை அகற்ற உத்தரவிடக் கோரியும், கடமையை செய்யத் தவறும் அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை சட்டப்படி எடுக்க கோரியும்  பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர்கள் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, அனைத்து பேனர்களும் அகற்றிவிட்டதாக அரசுத் தரப்பில் அரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 
ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை
வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்டவிரோதமாக பேனர்கள் வைக்க அனுமதியளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஆளுநர், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு அளித்த மனுக்களின் நகல்களை மட்டுமே இணைத்துள்ள மனுதாரர், வேறு எந்த ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை என்றும், எந்த சட்டப் பிரிவின் கீழ் எந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடவில்லை என்றும், நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய அதிகாரிகள் யார் யார்? என்று அவர்கள் பெயரை தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்து இந்த மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி தள்ளுபடி செய்தனர்.
அபராதம் விதிக்கப்படும்
இதுபோல எந்த ஆதாரங்களும் இல்லாமல்எதிர்காலத்தில் சாதாரண காரணங்களுக்காக  பொதுநல வழக்கு தாக்கல் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
****************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 17.02.2018 

வேட்பாளர்களுக்கு சிக்கல்

வேட்பாளர்கள் தங்களுக்குரிய வருமானத்திற்கு ஆதாரம் காட்ட வேண்டும்
தேர்தல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி
இனி தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்களுடைய சொத்து கணக்கை தாக்கல் செய்வதுடன், அதற்கான ஆதாரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும்' என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக    தீர்ப்பு அளித்துள்ளது.
பொதுநல வழக்கு
'லோக் பிரஹாரிஎன்றஅரசு சாரா அமைப்பு ஒன்று தேர்தல்களில் போட்டியிடுபவர்கள், தங்களுடைய சொத்து கணக்குடன், அதற்கான வருவாய் ஆதாரத்தையும் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது.
'லோக் பிரஹாரிஎன்றஅரசு சாரா அமைப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'கடந்த இரு தேர்தல்களுக்கு இடைப்பட்ட காலத்தில்தற்போது லோக்சபாஎம்.பி.,யாக உள்ள 
நான்கு பேரின் சொத்து மதிப்பு, 12 மடங்கு உயர்ந்து உள்ளது. 'அதே நேரத்தில், 22 பேரின் சொத்து மதிப்புஐந்து மடங்கு உயர்ந்து உள்ளதுஎனகுறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போதுமத்திய நேரடி வரி வருவாய் வாரியம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் அறிக்கையில், 'ஏழு லோக்சபாஎம்.பி.,க்கள் மற்றும், 98 எம்.எல்..,க்கள் தாக்கல் செய்துள்ள சொத்து கணக்குகளில்தவறான தகவல்கள் உள்ளது தங்களுக்குத் தெரிய வந்துள்ளதுஎன்று கூறியுள்ளது. 
உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:
தேர்தல்களில் போட்டியிடுபவர்கள் தங்களுடைய மற்றும் குடும்பத்தாரின் சொத்து கணக்கை தாக்கல் செய்கின்றனர். இந்தத் தேர்தல் நடைமுறைகளில், வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தும் வகையில், இனிமேல், இந்த சொத்துக்கான வருவாய் எங்கிருந்து கிடைத்தது என்பதற்கான ஆதாரங்களையும் அவர்கள் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 17.02.2018