disalbe Right click

Monday, September 4, 2017

மருத்துவ துறையில் படிப்புகள் ஏராளம்!

மருத்துவ துறையில் படிப்புகள் ஏராளம்!
பிளஸ் 2வில், அறிவியல் பாடத்தை முதன்மைப் பாடமாக எடுத்து படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் கனவு எம்.பி.பிஎஸ்., அல்லது பி.டி.எஸ்.,! மருத்துவத் துறையில் இந்த படிப்புகளையும் கடந்து, வாய்ப்புகள் மிகுந்த பல்வேறு பட்டப்படிப்புகள் உள்ளன. அவற்றை இங்கே காண்போம்...
மெடிக்கல் ரேடியாலஜி டெக்னாலஜி
கதிரியக்க தொழில்நுட்பத்தை பற்றி படிக்கும் சிறந்த படிப்பு. மனித உடல் உறுப்புகளின் அமைப்புகள் மற்றும் அதன் செயல்நிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து கொள்ள, இந்த படிப்பு உதவுகிறது. இதில், தேர்ச்சி பெற்றவர்கள் ரேடியாலஜிஸ்ட்என்று அழைக்கப்படுவர்.
கதிர்வீச்சினை (எக்ஸ்ரே) மனித உடம்புக்குள் செலுத்தி, குறிப்பிட்ட உறுப்புக்களை துல்லியமாக்க படம் எடுத்து, நோய்களை கண்டறிவதும் மற்றும் காயங்கள் அல்லது எலும்பு முறிவுகளை அளவிடுவதும் இவர்கள் தான். ரேடியாலஜி படிப்பில், எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. தொழில்நுட்பம் போன்றவற்றை பயன்படுத்தும் மற்றும் பரிசோதனை செய்யும் முறைகள் பற்றி விரிவாகப் படிக்கலாம்.
ஆப்தொமெட்ரி
கண்களின் அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகளை பற்றி படிக்கும் முதன்மை படிப்பு ஆப்தொமெட்ரி. பார்வை குறைபாடு தொடர்பான பரிசோதனை, கண் நோய்களை கண்டறிதல், கண் சிகிச்சை உள்ளிட்டவற்றை இப்படிப்பின் மூலம் கற்றுக்கொள்ளலாம்.
பார்வை தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகளை விலக்கி, கிட்டப் பார்வை அல்லது தூரப் பார்வை உடையவர்கள் என்ன மாதிரியான கண்ணாடிகளை அணிய வேண்டும் என்பது உட்பட கண் தொடர்பான கோளாறுகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதற்கு முன் அனைத்துப் பரிசோதனைகளையும் செய்து, அதற்கேற்ற சிகிச்சை குறிப்புகளை வழங்குபவர்கள், ஆப்தொமெட்ரிஸ்ட்’.
நான்கு ஆண்டுகள் கொண்ட இளநிலை பட்டப்படிப்புடன், கிளினிக்கல் அனுபவம் பெற இன்டர்ன்ஷிப் பயிற்சியை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனைகளில் கண் மருத்துவர்களுக்கு உதவியாளர்களாக இவர்களால் செயல்பட முடியும்.
மெடிக்கல் லேபாரட்டரி டெக்னாலஜி
மருத்துவ ஆய்வுக்கூட பரிசோதனைகள் மூலம் நோய்களை கண்டறிதல், நோயினை பகுத்து ஆராய்தல், மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப ஆய்வுக்கூடத்தில் அனைத்துப் பணிகளையும் ஒருங்கே செய்து கொடுப்பதை பற்றி படிக்கும் படிப்பு.
உடலில் உள்ள நீர், ரத்தத்தின் அளவு, சதை, கெமிக்கல் அனாலிஸ், உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கையை கண்டறியும் முறைகள் பற்றி முழுமையாக இந்த படிப்பின் மூலம் மாணவர்கள் கற்றுக் கொள்ளலாம். ஹெமாட்டாலஜி, இம்யூனலாஜி, கிலினிக்கல் பெதாலஜி, பிலெட் பேங் டெக்னாலஜி, மாலிக்குலர் பெதாலஜி, பயோ கெமிஸ்டரி, மைக்ரோபயாலஜி மற்றும் சிரோலஜி உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்ற முடியும்.
ஆக்குபேஷனல் தெரபி
இயல்பு நிலையிலிருந்து மாறுபட்ட மனிதர்களின் செயல்பாடுகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சை அளிப்பது ஆக்குபேஷனல் தெரபி’. மனநலம் சார்ந்த இந்தப் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு பாலிகிளினிக், மருத்துவமனைகள், மாற்றுத் திறனாளிப் பள்ளிகள், மனநல சிகிச்சை மையங்கள், கல்லூரிகள் போன்றவற்றில் வேலை வாய்ப்புகள் உள்ளன. இயந்திரங்களாக மாறிக்கொண்டிருக்கும் இன்றைய மனித சமுதாயத்துக்கு ஆக்குபேஷனல் தெரபிபடித்தவர்களின் சேவை அதிகம் தேவைப்படுவதால், இத்துறையில் வாய்ப்புகள் அதிகம். இத்துறையில், பிஎஸ்.சி., எம்எஸ்.சி., மற்றும் டிப்ளமோ படிப்புகள் வழங்கப்படுகின்றன.
பிசியோதெரபி (பி.பீ.டி.,)
துணை மருத்துவப் படிப்புகளில், அதிக முக்கியத்துவம் நிறைந்த படிப்பாக கருதப்படும் படிப்பு இது. முறையாக செயல்படாமல் இருக்கும் உடல் இயக்கத்தை சீர் செய்ய மருந்துகளோடு சேர்த்து பிசியோதெரபி சிகிச்சையும் அவசியமான ஒன்றாகி உள்ளது. எலும்பு முறிவு, சதைப் பிடிப்பு, மூட்டு வலி போன்றவற்றுக்கு சிகிச்சை அளித்து வலியைப் போக்குவதில் பிசியோதெரபிஸ்டுகள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். மருத்துவர்களுக்கு எங்கெல்லாம் வாய்ப்புகள் இருக்கிறதோ, அங்கெல்லாம் பிசியோதெரபிஸ்ட்களுக்கும் வாய்ப்பு உண்டு. இப்பிரிவில், பிஎஸ்.சி., எம்எஸ்.சி., மற்றும் டிப்ளமோ படிப்புகள் உள்ளன.
நியூரோ டெக்னாலஜி
மருத்துவத் துறையில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் துறை நியூரோ டெக்னாலஜி’! நியூரோ சயின்ஸ், செல்லுலார் இன்ஜினியரிங் மற்றும் சிக்னல் பிராசசிங் உள்ளிட்டவற்றை விரிவாகப் படிப்பதினால், நரம்பியல் மருத்துவர்க்கு இணையாக, இத்துறையில் பட்டப்படிப்பை படித்தவர்கள் செயல்படுகின்றனர். எலக்ட்ரோ டயக்னாஸ்டிக் முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இத்துறை மிகவும் முக்கியத்துவம் நிறைந்ததாக கருதப்படுகின்றது. இதில், பிஎஸ்.சி., மற்றும் டிப்ளமோ படிப்புகள் உள்ளன.
பெர்பியூஷன் டெக்னாலஜி
அனைத்து விதமான இதய அறுவை சிகிச்சையின் போதும் உடலின் ரத்த ஓட்டம், நின்றுவிடாமல் இருக்கவும், சீராக செயல்படுகின்றதா என்பதை கண்காணிக்கவும், மயக்கவியல் வல்லுநர்களுக்கும் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும் பெர்பியூஷனிஸ்ட்பெரிதும் உதவுகின்றனர். அதனால், ‘பெர்பியூஷனிஸ்ட்இல்லாமல் இருதய அறுவை சிகிச்சை என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. மூன்று ஆண்டுகள் கொண்ட பிஎஸ்.சி.,- பெர்பியூஷன் டெக்னாலஜி படிப்பை படிக்கும் மாணவர்கள், மருத்துவர்களுக்கு நிகராக செயல்பட முடியும். அதனால், மருத்துவ துறையில் இவர்களுக்கான தேவைகள் அதிகம். மேலும், ஒரு சில தனியார் கல்லூரிகள், இன்டர்ன்ஷிப் படிப்புடன் நான்கு ஆண்டுகள் கொண்ட பிஎஸ்.சி., பட்டப்படிப்பை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஆப்ரேஷன் தியேட்டர் டெக்னாலஜி

அறுவை சிகிச்சை அறையில் தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் பற்றி முழுவதுமாக படிக்கும் முக்கியத்துவம் நிறைந்த படிப்பு. அறுவை சிகிச்சையின் போது, மருத்துவருக்கு இணையாகவும், அறுவை சிகிச்சைக்கு முன், அறை மற்றும் தேவைப்படும் கருவிகளை சுத்தப்படுத்தி வைப்பது என பல்வேறு வேலைகளை மேற்கொள்கின்றனர், ஆப்ரேஷன் தியேட்டர் டெக்னீஷியன்ஸ். இதில், ஆப்ரேஷன் தியேட்டர் டெக்னாலஜி, ஆப்ரேஷன் தியேட்டர் மேனேஜ்மென்ட், ஆப்ரேஷன் தியேட்டர் டெக்னிக்ஸ் மற்றும் சர்ஜரிக்கல் டெக்னாலஜி ஆகிய பிஎஸ்.சி., படிப்புகளும், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படுகிறது.
டயாலிசஸ் டெக்னாலஜி
மனித உடலின் ஆரோக்கியத்திற்கு, இரத்தத்தை சுத்தப்படுத்தும் சிறுநீரகத்தின் பங்கு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. சிறுநீரகங்கள் நன்கு வேலை செய்கையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், சிறுநீரகங்கள் சேதமடைதல், பிற நோய் தொற்றுகளால் ஏற்படும் சிறுநீரக பாதிப்பு போன்ற காரணங்களால் சிறுநீரகங்கள் செயல் இழந்தால், மேற்கொள்ளப்படும் சிகிச்சை தான் டயாலிசஸ். இந்த சிகிச்சைக்கு, டயாலிசஸ் டெக்னிஷியன்களின் தேவை அவசியம். அதனால், அனைத்து மருத்துவம் மற்றும் சுகாதார துறைகளில் வேலைவாய்ய்புகளை எளிதில் பெற முடியும்.
பிஎஸ்.சி., டயாலிசஸ் டெக்னாலஜி படிப்பில், டயாலிசஸ் இயந்திரத்தை பொருத்துதல், ஸ்டெர்லிலைசேஷன் கலவை தயாரித்தல், நோயாளியை கண்காணித்தல், டயாலிசஸ் இயந்திரத்தை இயக்குதல், மேற்பார்வை செய்தல், இரத்த ஓட்டத்தை கணக்கிடுதல், இயந்திரத்தை சுத்தம் செய்தல் மற்றும் ஆய்வு செய்தல் உள்ளிட்டவற்றை படிக்கலாம்.
ஆடியாலஜி அண்ட் ஸ்பீச் லேங்குவேஜ் பெதாலஜி
கேட்பதில் மற்றும் பேசுவதில் குறைபாடுள்ள குழந்தைகள், கேட்கும் திறன் பேசும் திறனை இழந்தவர்கள், திக்குவாய் போன்ற பிரச்சனைக்கு உட்பட்டவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களது குறைபாடுகளை கண்டறிந்து, அதைக் குணப்படுத்தும் சிகிச்சை முறைகள் பற்றி கற்றுக் கொடுக்கும் படிப்பு இது!
பிளஸ் 2வில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களை முதன்மை பாடமாக படித்து, தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மூன்று வருட பி.எஸ்சி., படிப்புடன், ஒரு வருட இன்டன்ஷிப் பயிற்சியும் சேர்த்து மொத்தம் 4 ஆண்டுகள், இந்த படிப்பை படிக்க வேண்டும். மருத்துவமனைகள் மற்றும் காது கேளாதோர் கல்வி நிறுவனங்களில், ஆடியாலஜிஸ்ட் மற்றும் ஸ்பீச் தெரபிஸ்ட்களுக்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், இத்துறையில் பட்டப்படிப்பை படித்தவர்கள் தனியாக கிளினிக் வைக்கலாம் அல்லது தனிப்பட்ட முறையில் குறைபாடு இருக்கிறவர்களின் வீடுகளுக்குச் சென்று சேவை செய்யலாம். வெளிநாட்டிலும் நல்ல வேலைவாய்ப்பு உள்ளது.
மெடிக்கல் ரெக்காடு சயின்ஸ்
நர்சிங் ஹோம் தொடங்கி சூப்பர் மல்டி ஸ்பேஷாலிட்டி ஹாஸ்பிட்டல்கள் அனைத்திலும், நோயாளிகளின் விவரங்கள் மற்றும் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் பற்றின முழு விவரங்களை பதிவு செய்து வைத்திருப்பது கட்டாயம். எனவே, தொழில்நுட்ப காலத்திற்கு ஏற்றவாரு, மின்னணு சாதன அமைப்பில் எவ்வாறு விவரங்களை பதிவு செய்வது, அதன் விதிமுறைகள், எத்தகைய தகவல்கள் இடம்பெற வேண்டும் உள்ளிட்டவற்றை பற்றி படிக்கும் படிப்பு!
வேலை வாய்ப்புகள் அதிகம் இருக்கும் இத்துறையில், பி.எஸ்சி., பட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள், பிளஸ் 2வில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவை எடுத்து படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கவனம் சிதறாமல் வேலை பாக்கும் திறன், நேரத்தை நிர்வகிக்கும் திறன், தகவல்களை சேகரிக்கும் திறன்களை வளர்த்து கொள்வது அவசியம்.
ரெஸ்பிரேடரி தெரபி
புற்றுநோய், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா மற்றும் இருதய நோய்களால் ஏற்படும் சுவாச பிரச்சனைகளுக்கு தீர்வுகாண கூடிய துணை மருத்துவ படிப்பு இது. மருந்துகளை நிர்வகித்தல், கார்டியோ பல்மோனாரரி சிகிச்சை தொடர்பான உபகரணங்களை கையாள்வது, ஆக்ஸிஜன் மற்றும் பிற வாயுக்களின் அளவை தீர்மானிப்பதற்கு இரத்த மாதிரிகள் பகுப்பாய்வு செய்தல், செயற்கை மூச்சுக் குழாய்களை நிர்வகித்தல், ஜெஸ்ட் எக்ஸ்ரேஸ், முக்கிய சுவாச அறிகுறிகளை மதிப்பீடு செய்தல், நோயாளிகளுக்கு மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் என பல்வேறு பிரிவுகளைப் பற்றி விரிவாக கற்றுக் கொடுக்கும் படிப்பு. இதில், இன்டர்ன்ஷிப் பயிற்சியுடன் பி.எஸ்சி., பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
அனஸ்திஸ்யா டெக்னாலஜி
நோயாளிகளின் உடல் தகுதிகளை ஆராய்ந்து, அறுவை சிகிச்சையின் போது அவர்களுக்கு போடப்படும் மயக்க மருந்தின் அளவை நிர்ணயிக்கும் முக்கிய பணியினை மேற்கொள்பவர்கள் தான் அனஸ்திஸ்யா டெக்னாலஜிஸ்ட்கள்! மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும், தீவிர மருத்துவ பராமரிப்பு பிரிவுகளிலும் இவர்களது பணி பெறும் அளவில் தேவைப்படுகிறது.
மயக்க மருந்து உபகரணங்கள், மயக்க மருந்தின் நுட்பங்கள் மற்றும் நோயாளிகளின் உடல் தகுதிக்கு ஏற்றவாறு மயக்க மருந்தின் அளவை கணக்கிடும் முறைகள் மற்றும் மயக்க மருந்தை செலுத்தியவுடன் கண்காணிக்கும் விதிமுறைகள் போன்றவை, இளநிலை பி.எஸ்சி.,-அனஸ்திஸ்யா டெக்னாலஜி பட்டப்படிப்பில் கற்றுத்தரப்படுகிறது. சி.சி.யு., மற்றும் ஐ.சி.யு., பிரிவிலும், அறுவை சிகிச்சைக்கு முன் மயக்க மருந்து வழங்கும் மயக்க மருந்து வல்லுநர்களாகவும், அறுவை சிகிச்சை அறையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் இணைந்தும் வேலை செய்யலாம். எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு பிறகு அனஸ்திஸ்யா பிரிவில் ஸ்பெஷலைஸ் செய்பவர்களுக்கு வாய்ப்புகள் பிரகாசம்.
கார்டியோ வாஸ்குலர் டெக்னாலஜி
இதயம் மற்றும் அதன் தொடர்பான வாஸ்குலர் பிரச்சினைகளை கண்டறிந்து, அதற்கு தகுந்த சிகிச்சையளிக்க மருத்துவர்களுக்கு, கார்டியோ வாஸ்குலர் டெக்னாலஜிஸ்ட்கள் (சி.வி.டி.,) உதவுகின்றனர். இரத்த ஓட்ட நிலைகள் மற்றும் இருதயத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை மிக துல்லியமாக கண்காணித்து மருத்துவ அறிக்கையை தயார் செய்வதும் இந்த கார்டியலஜி தொழில்நுட்ப வல்லுநர்களே!
அல்ட்ராசவுண்ட் மூலம் இதய படங்களை எடுக்கும் தொழில்நுட்ப முறைகள், எடுத்த படங்களை பகுப்பாய்வு செய்தல் மற்றும் நோய் கண்டறியும் செயல்முறைகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர். இவர்களுக்கான தேவைகள் மருத்துவ துறைகளில் மிக அதிகம். அதனால், இப்பாடப் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பின்மை என்பது இல்லை.                 
நன்றி : தினமலர் – கல்வி மலர் – 04.09.2017 

முதல் தகவல் அறிக்கை குறித்த புகழ் பெற்ற தீர்ப்பு!


முதல் தகவல் அறிக்கை குறித்த புகழ் பெற்ற தீர்ப்பு!
பிடியாணை இன்றி காவல்துறையினர் கைது செய்யக்கூடிய புகார் ஒன்றை, அதற்குரிய ஆவணங்களுடன் கடந்த 2016ம் ஆண்டில் எங்கள் பகுதியில் உள்ள காவல்நிலையம் ஒன்றில் அளித்தேன். இது பொய் புகார் என்று கைப்பட எழுதியே அந்தப் புகாரை தள்ளுபடி செய்து விட்டனர். மேலதிகாரிகளுக்கு முறையீடு செய்தும் ஒன்றும் நடக்கவில்லை.
2017ம் ஆண்டில் அந்தப் புகாரை, குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 156(3)ன் கீழ் கோர்ட் டைரக்‌ஷன்கேட்டு "PARTY IN PERSON" ஆக உரிய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தேன். நீதிமன்றம் டைரக்‌ஷன் வழங்கியது. எனது வழக்கைலலிதகுமாரி வழக்கின்அடிப்படையில் விசாரித்து அறிக்கை அளிக்குமாறு ஷை நீதிமன்றம் எங்கள் ஊர் காவல் நிலைய ஆய்வாளர் அவர்களுக்கு உத்தரவிட்டது. அப்போதுதான் எனக்கு இந்த லலிதகுமாரியின் வழக்கு பற்றி அறிந்து கொள்ளும் ஆவல் ஏற்பட்டது.
தேடினேன், கிடைத்தது!
ந்ண்பர்களிடம் கேட்டுப் பார்த்தேன். தகவல் கிடைக்கவில்லை. பொறுமையாக காத்திருக்க என்னால் முடியவில்லை. நானே இணையத்தில் தேட ஆரம்பித்தேன். வழக்கின் தகவல்கள் கிடைத்தது. கிடைத்த தகவல்களை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
Lalita Kumari vs Govt. of U.P., (2014) 2 SCC 1
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள, காஜியாபாத் (Ghaziabad) என்ற நகரைச் சேர்ந்தவர் லலிதகுமாரி என்ற பெண்மணி. இவர் தன்னுடைய மகள் கடத்தப்பட்டது சம்பந்தமாக அங்குள்ள காவல்துறையில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்ய காவல்துறையினர் மறுத்துவிட்டனர். இதனை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். மேலும், அதனுடன் காவல்துறை சீர்திருத்தங்களில் மற்றும் வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை (F.I.R.) பதிவு செய்வது தொடர்பாக, சரியான வழி காட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் வகுக்க வேண்டும் என்று சில மனுக்களும் சேர்த்து அவரால் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றத்தின், 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, முரண்பாடான தீர்ப்புகளை வழங்கியதைத் தொடர்ந்து, இந்த வழக்கானது தலைமை நீதிபதி பி.சதாசிவம் அவர்கள் தலைமையில், நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், ரஞ்சன் பி.தேசாய், ரஞ்சன் கோகாய், எஸ்.ஏ.பாப்டே ஆகிய 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இந்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வரலாற்று சிறப்பு மிக்க அதிரடி தீர்ப்பை 13.11.2013 அன்று வழங்கியது.
தீர்ப்பு விவரம்
ஒரு குற்றம் தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள புகாரில், குற்றம் நடந்திருப்பதை காவல்துறையினர் வெளிப்படையாக உணர்ந்து கொண்டாலே, உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.
அவ்வாறு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யத் தவறுகின்ற காவல்துறை அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதைப் போன்ற புகார்களில், வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பு காவல்துறையினர் பூர்வாங்க விசாரணை நடத்த தேவை இல்லை.
மற்ற புகார்களின் தொடர்பாக, காவல்துறையினர் பூர்வாங்க விசாரணை நடத்தி அதன்பின்னர் வழக்குப்பதிவு செய்யலாம். ஆனால், இந்த விசாரணை நடத்த அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளாமல் 7 நாட்களுக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.
இதைப் போன்ற புகார்களில், ஆதாரங்களின் அடிப்படையில் காவல்துறையினர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருமண பந்த பிரச்சினை, ஊழல், நிதி முறைகேடு போன்ற புகார்களில், முதல் கட்ட விசாரணைக்கு காவல்துறையினர் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டு உள்ளனர்.
கடுமையான குற்றங்கள் சம்பந்தமான புகார்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது சம்பந்தமான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு நமக்கு வழங்கியுள்ள இந்த தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
எனவே இனி காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுக்கும் நேரத்தில் மனுதாரர் இந்த வழக்கின் தீர்ப்பை எடுத்துக் கூறி காவல்துறையினருக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தலாம்.
************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

Highlights of Judgment of Lalita Kumari v. Govt. of U.P

Lalita Kumari v. Govt. of U.P., (2014) 2 SCC 1

Criminal Procedure Code, 1973 Ss. 154, 155, 156 and 157 - FIR in cognizable case - Registration of - Whether is mandatory or police officer has option, discretion or latitude of conducting preliminary inquiry before registering FIR - Mandatory registration of FIR on receipt of information disclosing a cognizable offence as the general rule - Situations/cases in which preliminary inquiry is permissible - Scope of, and safeguards to be followed in cases where such preliminary inquiry (time-bound) is permissible - Held,

the registration of FIR is mandatory under S. 154, if the information discloses commission of a cognizable offence and no preliminary inquiry is permissible in such a situation - This is the general rule and must be strictly complied with - However, where information received does not disclose a cognizable offence a preliminary inquiry may be conducted to ascertain whether cognizable offence is disclosed or not - Also, matrimonial disputes/family disputes, commercial offences, medical negligence cases, corruption cases, or cases where there is abnormal delay/laches in initiating criminal prosecution are illustrations and not exhaustive of all cases which may warrant preliminary inquiry - Emphasised however, that scope of preliminary inquiry even when permissible in such limited classes of cases, is not to verify the veracity or otherwise of the information received but only to ascertain whether the information reveals any cognizable offence - Proper stage for such verification of the veracity of the information received is after registration of FIR, and not before registration of FIR - A preliminary inquiry should be time-bound and in any case it should not exceed 7 days - The fact of such delay and the causes of it must be reflected in the General Diary entry - If preliminary inquiry ends in closing the complaint, a copy of entry of such closure must be supplied to first informant forthwith disclosing reasons therefor - If inquiry discloses commission of a cognizable offence, FIR must be registered -

All information relating to cognizable offences, whether resulting in registration of FIR or leading to an inquiry, must be mandatorily and meticulously reflected in the said Diary and the decision to conduct a preliminary inquiry must also be reflected,


S. 154 - FIR - Nature and requirements of - There must be information and it must disclose a cognizable offence,

Ss. 154, 155 and 172 - FIR - Promptness in filing FIR - Compulsory registration of earliest information as FIR - Two fold objective - Criminal process is set in motion and is well documented from very start preventing embellishments later - Ensures transparency in the criminal justice delivery system and functioning of police, providing for an efficient means to check powers of police as also for judicial oversight of the same,


Criminal Procedure Code, 1973

Ss. 154(1) and 157(1) - FIR -

Generally - Kinds of FIR - Two kinds of FIRs: duly signed FIR under S. 154(1) is by the informant to police officer and second kind of FIR is one registered by police itself on any information received other than by way of an informant - Registration of both kinds of FIR, obligatory -


Inherent advantages of registration of FIRs, outlined - Non-registration of FIR, consequences - Burking of crime and negative impact on the rule of law, discussed,


Ss. 154, 156 and 157 - FIR - Powers, Role and Duty of Police in respect of FIR -


Police officer cannot avoid his duty of registering a FIR if cognizable offence is disclosed - Action to be taken against erring officers who do not register FIR on receipt of such information,


S. 154 - FIR - Generally - Object - Main object from informant's point of view is to set criminal law in motion; and from point of view of investigating authorities to obtain information about alleged criminal activity to be able to take suitable steps to trace and to bring to book the guilty,

S. 154 - FIR - Compulsory registration of FIR - Historical background of the provision and corresponding provisions existing in previous enactments of the Criminal Procedure Code, examined - Legislative intent in both old and the new Code is for compulsory registration of FIR in a case of cognizable offence without conducting any preliminary inquiry, Ch. XII (Ss. 154 to 176) - Procedure to be followed during investigation - Object - To set the criminal law in motion and to provide for all procedural safeguards so as to ensure that the investigation is fair, is not mala fide and there is no scope of tampering with the evidence collected during the investigation, Penal Code, 1860


S. 166-A [ins. vide Criminal Law (Amendment) Act, 2013] and S. 154 CrPC - Punishment of non-registration of FIR for cognizable offences specified under S. 166-A IPC held, does not imply that registration of FIR is not compulsory for offences other than those specified in S. 166-A IPC and police has discretion to hold a preliminary inquiry if there is doubt about correctness of the information given - S. 166-A IPC is to be read in consonance with S. 154(1) CrPC and not contrary to it - Object of S. 166-A IPC and intention of the legislature in putting forth this amendment was to tighten the already existing provisions to provide enhanced safeguards to women - It is expressly to punish police officers for their failure to register FIRs in cases of crimes against women,

S. 154 - Duty of police officer to register FIR on information disclosing a cognizable offence - Word shall occurring in S. 154(1) - Nature of - Literal construction - Held, for cognizable offences a duty has been cast upon the police to mandatorily register a FIR - Shall given its ordinary meaning of being mandatory in character - Regard to context in and object with which word is used and consequences following infringement of the direction to register FIRs, ascertained - Mandate of S. 154(1), held, does not confer any discretion on officer in charge of the police station for embarking upon a preliminary inquiry prior to registration of FIR, Ss. 39 and 154(1) - Shall occurring in both provisions - Relevance - It would be incongruous to suggest that though it is the duty of every citizen to inform about commission of an offence under S. 39, but it is not obligatory for the officer in charge of a police station to register the report under S. 154 - The word shall occurring in S. 39 has to be given the same meaning as the word shall occurring in S. 154(1), (2014) 2 SCC 1

Ss. 154 and 172 - FIR - Recording of, in FIR book and General Diary - Distinction between - FIR to be registered first in FIR book - In addition, gist of FIR may also be mentioned simultaneously in General Diary as mandated in respective Police Act or Rules of State concerned - In case of inconsistency between provisions of S. 154 Cr.P.C and S. 44 of the Police Act, 1861, with regard to whether FIR is to be registered in FIR book or General Diary, provisions of S. 154 shall prevail and S. 44 of Police Act, 1861 shall be void to the extent of the repugnancy, as Police Act, 1861 being an existing law must give way to Cr.P.C, 1973, a law enacted by India's Sovereign Parliament - Hence, contention that information will first be recorded in the General Diary and only after preliminary inquiry, if required, shall the information be registered as FIR, rejected,

S. 154 - FIR - General Diary - Held, all information relating to cognizable offences, whether resulting in registration of FIR or leading to an inquiry, must be mandatorily and meticulously reflected in the General Diary and the decision to conduct a preliminary inquiry must also be reflected therein Ss. 154 and 41 [before and after its amendment vide Act 5 of 2009] - FIR - Form and language of FIR - Information relating to commission of a cognizable offence - Mandatory duty of police under S. 154 to register FIR upon receipt of - Expression information in S. 154 is not qualified by prefix reasonable or credible - Distinguished from use of such expressions in Ss. 41(1)(a) and (g) [as they stood before Act 5 of 2009] and Ss. 41(1)(b), (ba) and (g) [as they stand after Act 5 of 2009 w.e.f. 1-1-2010] - Held.

reasonableness or credibility of the information is not a condition precedent for the registration of a case under S. 154,

S. 154 - FIR - Duty of police to file FIR on receipt of information disclosing cognizable offence - Mandatory nature of - Maxim expressio unius est exclusio alterius - Information provided about commission of a cognizable offence must be registered as an FIR and every cognizable offence must be investigated promptly in accordance with law - Held, there is no discretion or option left with the police to register or not to register an FIR when information is given about the commission of a cognizable offence, Constitution of India


Art. 21 - Procedure established by law - Registration of FIR before investigation -

Right of the accused under Art. 21 is protected if the FIR is registered first and then the investigation is conducted in accordance with the provisions of law,

S. 154 and Ss. 2(g), 159, 202 & 340 - Inquiry and preliminary inquiry under Ss. 2(g), 159, 202 & 340 - Distinguished from such acts envisaged under S. 154 - Held, inquiry in Ss. 2(g), 159, 202 and 340 is relatable to a judicial act, and not to the steps taken by the police which are either investigation after the stage of S. 154 or termed as preliminary inquiry prior to the registration of FIR, even though no entry in the General Diary/Station Diary/Daily Diary has been made,


Ss. 154, 4(2) and 5 - FIR in cognizable case - Preliminary inquiry before lodging FIR - Rules in CBI Crime Manual - Applicability of, to S. 154 CrPC - Contention as to, rejected - Held,

CBI Crime Manual cannot be relied upon to import the concept of holding of preliminary inquiry into the scheme of CrPC - CBI Crime Manual is not a statute and has not been enacted by the legislature and is a set of administrative orders issued for internal guidance of CBI officers - It cannot supersede CrPC - Powers of CBI under Delhi Special Police Establishment Act, 1946 cannot be equated with the powers of the regular State Police under CrPC,


Ss. 154, 41, 151, 157, 173 and 438 - Mandatory registration of FIR before conducting preliminary inquiry - Apprehension of misuse by indiscriminate arrest in violation of rights of accused under Art. 21 of Constitution, held, is misplaced - Sufficient safeguards exist against misuse, abuse and arbitrary exercise of power - Held, arrest of a person and registration of FIR are not directly and/or irreversibly linked and they are entirely different concepts operating under entirely different parameters - There are several safeguards available against arrest - Besides, CrPC gives power to the police officer to close a matter both before and after investigation if it appears to him that there are insufficient ground(s) to investigate the same - Sufficient safeguards are provided in CrPC which duly protect the liberty of an individual in case of registration of false FIR,

Thanks to : http://www.lawweb.in - 04.09.2017 

Saturday, September 2, 2017

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம்: விதிமுறைகள்

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம்: விதிமுறைகள் என்னென்ன?
ஒரு பொருளை வாங்குபவர்கள் அதன் தரத்தை ஒருமுறைக்கு இரண்டு முறை விற்பனையாளரிடம் கேட்டறிந்த பின்னரே வாங்குகின்றனர். உலகமயமாக்கல் காரணமாக டார்ச் லைட் முதல் செல்போன் வரை மலிவு விலையில் கிடைத்தாலும், வாங்கிய பொருள் தரமானதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அனைத்துத் தரப்பு மக்களிடமும் பொதுவானதாகவே இருக்கும். 500 ரூபாய் மதிப்பில் வாங்கும் டார்ச் லைட் எவ்வளவு தரமாக இருக்கிறது என்பதைப் பலமுறை யோசித்து வாங்கும் மக்கள், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு வீட்டை வாங்கும் போது எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஒரு வீடு கட்டி முடிக்கப்பட்டு, விற்கப்படும்போது, அதனை வாங்குபவர், கட்டுமான நிறுவனம் அல்லது பில்டரின் வாய்மொழி உறுதியை நம்பித்தான் வாங்குகிறார். ஆனால், சில ஆண்டுகளிலேயே கான்கிரீட் தூண் (Pillar) போன்ற முக்கியக் கட்டுமானங்களில் விரிசல் அல்லது சேதம் ஏற்படும் போது, வீட்டை வாங்கியவர் யாரிடம் போய் நஷ்ட ஈடு கேட்க முடியும். இந்தப் பிரச்சினைக்கு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் (RERA) தீர்வு தரும் வகையில் விதிமுறைகளை வகுத்துள்ளது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது.
அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட RERA சட்டத்தில் அடுக்குமாடி அல்லது தனி வீடு என்று எந்த வகையான குடியிருப்பாக இருந்தாலும் அதற்கு 5 ஆண்டுகள் வரை எந்தவிதச் சேதமும் ஏற்படாது என்ற உறுதிமொழியை (Warranty) பில்டர்கள் தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை சம்பந்தப்பட்ட பில்டர் கட்டிய வீட்டுக்கு ஏதாவது சேதம் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர், பில்டரிடம் முறையிட்டுத் தீர்வு பெறலாம் என்றும் RERA சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, வீட்டை வாங்கிய தேதியில் இருந்து 5 ஆண்டு காலம் வரை அந்தக் கட்டுமானத்தின் உறுதித்தன்மை மற்றும் நிலைத்தன்மையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பில்டரையே சேரும் எனவும் RERA சட்டம் தெளிவாக வரையறுத்துள்ளது. ஒருவேளை கட்டுமானத்துக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், வீட்டின் உரிமையாளர் பில்டரிடம் முறையிட்டால், அந்தப் பிரச்சினையை 30 நாட்களுக்குள் பில்டர் சரிசெய்து தர வேண்டும்.
ஆனால், இதற்காக வீட்டின் உரிமையாளரிடம் இருந்து எந்தவிதக் கட்டணமும் பில்டர் பெறக் கூடாது என்றும் RERA அறிவுறுத்தியிருக்கிறது. பில்டரின் அலட்சியம் அல்லது மெத்தனம் காரணமாக 30 நாட்களில் வீட்டின் உரிமையாளருக்குத் தீர்வு கிடைக்காத பட்சத்தில், இழப்பீட்டுத் தொகையை பில்டர் வழங்கவும் RERA சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் RERA சட்டம் தொடர்பாகக் கடந்த மாதம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பிரபல பில்டர்கள் பலரும், இந்தச் சட்டம் தொடர்பாகப் பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர். அதில் குறிப்பாக, ரியல் எஸ்டேட் துறையில் பல ஆண்டுகாலம் நீடிக்க விரும்பும் எந்த ஒரு பில்டரும் இனித் தரமற்ற முறையில் கட்டுமானங்களை மேற்கொள்ள முடியாது என்பதை மட்டும் தெளிவாக ஒப்புக் கொண்டனர்.
இதனை RERA சட்டத்தால், முதலீட்டாளர்களுக்கும், வீட்டின் உரிமையாளருக்கும் கிடைத்த சட்ட ரீதியான பாதுகாப்பாகவே கருத வேண்டும். ஒருவேளை பில்டர்கள் தங்கள் தவறுக்காக, காண்ட்ராக்டர்களைக் குற்றம்சாட்டினால், அது எந்த அளவுக்கு எடுபடும் என்றும் அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
எனினும், இனிவரும் காலங்களில் பில்டர்கள், தாங்கள் பணிகளை அளித்த காண்ட்ராக்டர்கள் மற்றும் சப்- காண்ட்ராக்டர்களின் நம்பகத் தன்மை தொடர்பாகத் தெளிவாகக் கோப்புகளைப் பராமரிப்பதன் மூலமே, RERA சட்டத்தின் பிடியில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதையும் முன்னணிக் கட்டுமான நிறுவனங்களின் உரிமையாளர்கள் எடுத்துரைத்தனர்.
வீட்டுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை எந்த அடிப்படையில் வரையறுக்க வேண்டும் என்பது தொடர்பாக RERA சட்டம் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. ஆனால், RERA சட்டத்தில் இந்த விதிமுறை வருவதற்கு முன்பாகவே, ஹரியானா மாநில அரசு இதுபோன்ற ஒரு சட்டத்தைத் தனது மாநிலத்தில் அமல்படுத்தியுள்ளது. அந்தச் சட்டத்தின் படி, சுவர்கள், ஸ்லாப், பில்லர்கள், கான்கிரீட் தளம் ஆகியவற்றில் சேதம் ஏற்பட்டால் மட்டுமின்றி, கட்டுமானப் பணியாளர்களின் கவனக் குறைவால் ஏற்படும் பாதிப்புகள், திட்டமிட்ட வகையில் கட்டுமானம் செய்யாததால் கட்டிடத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்றுக்கும் பில்டர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என ஹரியானா மாநிலம் வகுத்துள்ள சட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, RERA சட்டத்தால் பில்டர்களுக்குப் பல கட்டுப்பாடுகள் புதிதாக உருவானாலும், ரியல் எஸ்டேட் துறையின் எதிர்கால வளர்ச்சிக்கும் வீடு வாங்குபவரின் பாதுகாப்புக்கும் அது பெரிதும் உதவும் என்பதே ரியல் எஸ்டேட் துறை வல்லுநர்களின் கருத்து.
எம்.சூரியா
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 02.09.2017

Friday, September 1, 2017

ஒரிஜினல எல்லாத்துகிட்டயும் கேக்கமாட்டோங்க!

ஒரிஜினல எல்லாத்துகிட்டயும் கேக்கமாட்டோங்க!
அசல் ஓட்டுநர் உரிமம்: காவல்துறை புதிய விளக்கம்!
அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பதுகுறித்து, காவல்துறை புதிய விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
போக்குவரத்து காவல்
தமிழகத்தில், 'இன்று முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமைத்தை வைத்திருக்க வேண்டும்' என்று போக்குவரத்துத்துறை தெரிவித்திருந்தது. அப்படி அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கு, 500 ரூபாய் அபராதம் மற்றும் மூன்று மாதம் சிறைதண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இதனிடையே வாகனச் சட்டப்பிரிவு 139-ன்படி ஓட்டுநர்கள், ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது அவசியம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில் அசல் ஓட்டுநர் உரிமம் குறித்து காவல்துறை விளக்கமளித்துள்ளது.
அதன்படி, "அதிக வேகம், அதிக சுமை ஏற்றுதல், அதிக ஆட்களை ஏற்றிச் செல்லுதல், குடி போதையில் வாகனம் ஓட்டுதல், சிக்னலில் எல்லையைத் தாண்டுதல், செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 6 குற்றங்களில் ஈடுபட்டால் மட்டுமே அசல் ஓட்டுநர் உரிமம் கேட்கப்படும்" என்று போக்குவரத்துக் காவல்துறை விளக்கமளித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும், இந்த ஆறு குற்றங்களில் ஈடுபட்டதாக, தமிழகத்தில் 52,064 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, 'அசல் ஓட்டுநர் உரிமத்துக்காக என்று தனியாக சோதனை ஏதும் நடத்தப்படவில்லை' என்று காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. .
இரா.குருபிரசாத்
நன்றி : விகடன் செய்திகள் – 01.09.2017