disalbe Right click

Saturday, December 30, 2017

வீட்டில் தோட்டம் அமைக்கலாம்!

இன்றைக்கு இருக்கின்ற பரபரப்பான வாழ்க்கையில் பெண்களுக்கு இருக்கும் பெரிய கவலை, இன்னைக்கு என்ன குழம்பு வைக்கலாம்? என்பதே. காய்கறிக் கடைக்குச் சென்று அங்குள்ள காய்கறிகளுள் கிடைத்தவற்றை வாங்கி ஏதோ குழம்பு வைத்தோம், எதற்கோ சாப்பிட்டோம்? என்ற நிலைதான் இன்றைக்கு பெரும்பாலான குடும்பங்களில் நடக்கிறது. 
வீட்டிலேயே  காய்கறி கிடைத்தால்?
நமக்குத் தேவையான காய்கறிகள் வீட்டிலேயே கிடைத்தால் எப்படி இருக்கும்? அலைச்சல் மிச்சம். விருப்பமானதை சமைக்கலாம். சுத்தமாகவும் இருக்கும். சுகாதாரமும் கிடைக்கும். இதற்கு நமக்கு நமது அரசும் உதவுகிறது.
குறைந்த செலவில் வீட்டுத்தோட்டம் அமைக்கலாம்
உங்கள் வீட்டிலேயே தோட்டம் அமைக்க நமது அரசு ஐந்து வகையான அருமையான காய்கறி விதைகளை 12 ரூபாய்க்கு அளிக்கிறது. இன்றைக்குள்ள ஜனத்தொகைக்கு காய்கறிகளை உற்பத்தி செய்யவும், அவற்றை சந்தைப் படுத்தவும் முடிவதில்லை. இதனை ஆய்வு செய்த தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத்துறை  மேற்கண்ட வாய்ப்பை மக்களுக்கு வழங்குகிறது.  இதன்படி கத்தரி, தக்காளி, புடலை, பாகல், பீர்க்கன், கீரை, மிளகாய் வகைகள், கொத்தவரை உள்ளிட்ட காய்கறி விதைகளில் ஏதேனும் ஐந்து மட்டும் மக்களுக்கு வழங்க தோட்டக்கலைத்துறை உத்தரவிட்டுள்ளது. 20 ரூபாய் மதிப்புள்ள  இந்த விதைகளை 12 ரூபாய்க்கு அந்தப் பகுதியில் இருக்கும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களில் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம்,   தங்களுக்கு பிடித்த காய்கறிகளை பொதுமக்கள் வீட்டிலேயே உற்பத்தி செய்து பயன்படுத்த இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டுகிறேன். 
உதவி தோட்டக்கலை இயக்குனர்,         
1118, Z Plaza, அண்ணாநகர் மேற்கு,    
சென்னை - 600040            
தொலைப்பேசி: 044-25554443
உதவி தோட்டக்கலை இயக்குனர்,      
இணை வேளாண்மை இயக்குனர் அலுவலகக் கட்டிடம், தரைத் தளம்,
பஞ்சுப்பேட்டை, காங்சீபுரம் - 631502          தொலைப்பேசி: 044-27222545
உதவி தோட்டக்கலை இயக்குனர்,             
எண்: 36, பாரதிதாசன் தெரு,   
திருவள்ளூர் - 602001       
தொலைப்பேசி: 044-2265294
உதவி தோட்டக்கலை இயக்குனர்,          
 87, தனலட்சுமி கார்டன்,
திருச்சி ரோடு,
விழுப்புரம் - 605602      
தொலைப்பேசி: 04147-224020
உதவி தோட்டக்கலை இயக்குனர், எண்:21, 3வது குறுக்குத் தெரு,         இராஜாஜி நகர், அரியலூர் - 621702, பெரம்பலூர் மாவட்டம்             தொலைப்பேசி: 04329-277270உதவி தோட்டக்கலை இயக்குனர்,     இணை வேளாண்மை இயக்குனர், அலுவலகக் கட்டிடம்,                         அரசு பாலிடெக்னிக் எதிரில், தோரப்பாடி, வேலூர் - 632001                       தொலைப்பேசி: 04156-2221531
உதவி தோட்டக்கலை இயக்குனர்,     
 எண்: 1, மெயின் ரோடு, காந்தி நகர், திருவண்ணாமலை - 606602
தொலைப்பேசி: 04175-224220
உதவி தோட்டக்கலை இயக்குனர்,
ஆசிரியர் காலனி,
ஈரோடு - 638001.
தொலைப்பேசி: 0424-2274496
உதவி தோட்டக்கலை இயக்குனர்,   
எண்: 8, தடாகம் ரோடு, ஜி.சி.டி போஸ்ட், கோயமுத்தூர் - 641013        
தொலைப்பேசி: 0422-2453578
உதவி தோட்டக்கலை இயக்குனர்,           
எண்: 4/1, 2வது வடக்குத் தெரு,
ஹோம்லேண்ட், சந்தைப்பேட்டை, புதூர்,
நாமக்கல் - 637001         
தொலைப்பேசி: 04286-233828
உதவி தோட்டக்கலை இயக்குனர்,            
136, நெடுஞ்சாலை நகர்,
சேலம் - 636005    
தொலைப்பேசி: 0427-2447347
உதவி தோட்டக்கலை இயக்குனர்,      
தர்மபுரி மாவட்ட வளர்ச்சி மைய
அலுவலகக் கட்டிடம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 2வது தளம்,            தர்மபுரி - 636705         
தொலைப்பேசி: 04342-232226
உதவி தோட்டக்கலை இயக்குனர்,              
32, வில்லியம் ரோடு,
சுங்க இலாக்கா அலுவலகம் எதிரில்,
திருச்சி - 620001 
தொலைப்பேசி: 0431-2423464
உதவி தோட்டக்கலை இயக்குனர்,              
சுங்க கேட்,
கரூர் - 639003     
தொலைப்பேசி: 04324-230499
உதவி தோட்டக்கலை இயக்குனர்,    
32/890, பிள்ளுக்காரத் தெரு,         
தஞ்சாவூர் - 613001          
தொலைப்பேசி: 04366-251798
உதவி தோட்டக்கலை இயக்குனர்,           
19D/1, பெரிய மில் தெரு,
இணை வேளாண்மை இயக்குனர்,
அலுவலகக் கட்டிடம் அருகில்,
திருவாரூர் - 610001 
தொலைப்பேசி: 04366-251798
உதவி தோட்டக்கலை இயக்குனர்,              
 எண்: 61, மேலக்கோட்டை வாசல் தெரு, நாகப்பட்டிணம் - 611001       
தொலைப்பேசி: 04365-253067
உதவி தோட்டக்கலை இயக்குனர்,
மகாத்மா காந்தி அரசு தோட்டக்கலை பண்ணை, காந்தநாதபுரம், 5வது தெரு,
புதுக்கோட்டை - 622001       
தொலைப்பேசி: 04322-228394
உதவி தோட்டக்கலை இயக்குனர்,     
முந்திரி வளர்ச்சித் திட்டம்,
தேவக்கோட்டை - 623302,                
சிவகங்கை மாவட்டம்            
தொலைப்பேசி: 04575-246161
உதவி தோட்டக்கலை இயக்குனர்,
கன்மாய் மேலத் தெரு, தல்லாகுளம்,
இணை வேளாண்மை இயக்குனர்,
அலுவலக வளாகம், மதுரை - 635002      தொலைப்பேசி: 0452-2532351
உதவி தோட்டக்கலை இயக்குனர்,              
171, கம்பம் மெயின் ரோடு, பழனிச்செட்டியாப்பட்டி (தபால்),                  
தேனி மாவட்டம்         
தொலைப்பேசி: 04546-264780
உதவி தோட்டக்கலை இயக்குனர்,     
இணை வேளாண்மை இயக்குனர்,
அலுவலக வளாகம், 2வது தளம்,
சேதுமதி நகர்,
இராமநாதபுரம் - 623535
தொலைப்பேசி: 04567-230328
உதவி தோட்டக்கலை இயக்குனர்,
மாபெரும் பழப்பண்ணை,
111, மேலரத தெரு,
வில்லிப்புத்தூர், 626125
 விருதுநகர் மாவட்டம்.           
தொலைப்பேசி: 04562-252393
உதவி தோட்டக்கலை இயக்குனர்,             
49, நேருஜி நகர்,
திண்டுக்கல் - 624005  
தொலைப்பேசி: 0451-2432702
உதவி தோட்டக்கலை இயக்குனர்,
இங்கிலீஷ் சர்ச் ரோடு,
பாளையம்கோட்டை,                
திருநெல்வேலி - 627002    
தொலைப்பேசி: 0462-2560360
உதவி தோட்டக்கலை இயக்குனர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
கோரம்பள்ளம்,
தூத்துக்குடி - 628003   
தொலைப்பேசி: 0461-2340681
உதவி தோட்டக்கலை இயக்குனர்,               
19, இயேசுவடியான் தெரு,     
நாகர்கோவில் - 629001,               
கன்னியாகுமரி மாவட்டம்          
தொலைப்பேசி: 04652-2340681
உதவி தோட்டக்கலை இயக்குனர்,
மாபெரும் பழப்பண்ணை,
கருமந்துரை,
சேலம் மாவட்டம் - 636178
உதவி தோட்டக்கலை இயக்குனர்,
காந்திநகர், ஆத்தூர்,                             
சேலம் மாவட்டம் - 636102
உதவி தோட்டக்கலை இயக்குனர்,
ப்ரையன்ட் பூங்கா,                 
கொடைக்கானல் - 624001 
தொலைப்பேசி: 04542-241210
உதவி தோட்டக்கலை இயக்குனர்,
பயிற்சி மையம்,   
உதகமண்டலம் - 643001,                      
நீலகிரி மாவட்டம்                    
தொலைப்பேசி: 0423-2444056
உதவி தோட்டக்கலை இயக்குனர், (இடுபொருட்கள்),                       
உதகமண்டலம் - 643001,                     
நீலகிரி மாவட்டம்
உதவி தோட்டக்கலை இயக்குனர்,                      பயிர் பரிசோதனை மையம்,
நஞ்சநாடு,
நீலகிரி மாவட்டம்
உதவி தோட்டக்கலை இயக்குனர்,        
பயிற்சி மையம்,
கோத்தகிரி - 643217,
நீலகிரி மாவட்டம்
உதவி தோட்டக்கலை இயக்குனர்,
பயிற்சி மையம்,
கூடலூர் - 643211
உதவி தோட்டக்கலை இயக்குனர்,    
அரசுத் தாவரவியல் பூங்கா,
உதகமண்டலம் - 643001,                        
நீலகிரி மாவட்டம்
உதவி தோட்டக்கலை இயக்குனர்,                          பயிற்சி மையம்,
குன்னூர் - 643101,
நீலகிரி மாவட்டம்
உதவி தோட்டக்கலை இயக்குனர்,
தேவாலா பண்ணை,
நடுக்காணி (தபால்),
கூடலூர் - 643211,
நீலகிரி மாவட்டம்
 மேலதிக விபரங்களுக்கு: http://agritech.tnau.ac.in/
**************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 30.12.2017

Friday, December 29, 2017

ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம்

ஒவ்வொரு நாடுகளுக்கும் இடையே இருக்கின்ற  ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் அந்தந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நாடுகளுக்கு அந்நிய செலாவணி ஈட்டித் தருவதில் முக்கிய பங்கு ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்துக்கு உண்டு. அதனால்தான் அரசாங்கத்தால் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் ஊக்குவிக்கப்படுகிறது.
உலகச் சந்தையில் நமது நாட்டின் ஏற்றுமதி அளவு 1.7% ஆகும். இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 சதவீதமாக உயரலாம் என்று சொல்கிறது ஒரு புள்ளிவிவரம். அப்படிப்பட்ட ஏற்றுமதி தொழில் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்கான நடைமுறைகள் என்ன என்பதை நாம் முதலில் பார்க்கலாம்.
எந்த நாட்டுக்கு. என்ன பொருள் அனுப்பலாம்?
நாம் முதலில் கவனிக்க வேண்டியது எந்த நாட்டுக்கு எந்த பொருள் தேவையாக இருக்கிறது என்பதுதான். எடுத்த ஆர்டர்களுக்கு பொருட்களை அனுப்பிவைக்க திட்டமிட்டாலும், இந்த விபரமும் கண்டிப்பாக  நம்மிடம் இருக்க வேண்டும்முதலில் சிறிய அளவில் ஆர்டர்கள் எடுத்து அதனை சரியாக அனுப்பி வைத்து கொஞ்சம் அனுபவம் பெற்ற பிறகு. பெரிய ஆர்டர்களை எடுக்கலாம்.
தரம், நிரந்தரம்!
நாம் செய்கின்ற ஏற்றுமதி பொருட்களுக்கு தரம்தான் மிகவும் முக்கியம். இதற்கு ஏற்ப தர அளவுகோல்களை கடைபிடிக்க வேண்டும். இதில் நாம் கவனக்குறைவாக இருந்தால் பொருட்கள் திருப்பி அனுப்பிவிடுவார்கள். அனுப்பிய போக்குவரத்துச் செலவு, திரும்பி வந்த செலவு, டேமேஜ் என்று இது மிகுந்த நஷ்டத்தை ஏற்படுத்தும். தரமாகவும், பாதுகாப்பாகவும் அனுப்பி வைப்பது இந்த தொழிலுக்கு முக்கியம்.
எந்த நாட்டுக்கு எந்த எந்த பொருள் தேவை என்பதை ஏற்றுமதி முகவர் அமைப்புகளே நமக்கு  கொடுத்து உதவுகின்றன. அடுத்து ஏற்றுமதி இறக்குமதியாளர் லைசென்ஸ் வாங்கிவிட்டால் இந்த தொழிலில் நாம் இறங்கிவிடலாம். ஏற்றுமதி செய்ய உள்ள பொருளை நாம் முடிவு செய்த பிறகு அதற்கான மேம்பாட்டுக் குழுவில் சேர்ந்து கொள்ள வேண்டும். ஏற்றுமதி சலுகைகள் மற்றும் பிற உதவிகளையும் இந்தக் குழுவின்  மூலமாகக் பெற்றுக் கொள்ளலாம்.
எந்த பொருட்களை ஏற்றுமதி செய்யலாம்?
மத்திய, மாநில அரசுகள் தடை செய்துள்ள பொருட்களைத் தவிர வேறு எந்த பொருட்களையும் நாம் ஏற்றுமதி செய்யலாம். மேலும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற  உணவுப்பொருட்களுக்கு வெளி நாடுகளில் விற்பனை வாய்ப்பு நன்றாக உள்ளது. காய்கறிகள், பழங்கள், மூலிகைகள், கைவினைப் பொருட்கள் என அனைத்தையும் நாம் ஏற்றுமதி செய்யலாம். வீடுகளில் தோட்டம் அமைப்பதற்காக தேங்காய் மட்டை நார்கூட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
நிறுவனத்தை தொடங்குவது எப்படி?
தனிநபராக நாம் ஏற்றுமதி செய்ய முடியாது. ஒரு நிறுவனமாக பதிவு கொண்டால்தான் ஏற்றுமதியாளருக்கான லைசென்ஸ் நமக்குக் கிடைக்கும்எனவே முதல் வேலையாக நமது நிறுவனத்தை பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு நாம் என்ன தொழிலில் இறங்கப்போகிறோம்? என்பதை முடிவு செய்ய வேண்டும். அதாவது பொருட்களை பிறரிடமிருந்து வாங்கி ஏற்றுமதி செய்யப் போகிறோமா? பொருட்களை நாமே உற்பத்தி செய்யப் போகிறோமா? பிறரிடமிருந்து வாங்கி மதிப்பு கூட்டி ஏற்றுமதி செய்யப் போகிறோமா?  இதில் எந்த வகையில் நாம் இறங்கப்போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். இதை முடிவு செய்து கொண்டு நிறுவனத்திற்கு பொருத்தமான பெயரை  தேர்வு செய்ய வேண்டும்.
நிறுவனப் பெயர்
நமது விருப்பதிற்கு ஏற்ப பெயரை நாம் வைத்துக் கொள்ளலாம் என்றாலும், இறக்குமதியாளர்கள் அதனைப் பார்த்தவுடன் புரிந்து கொள்ளும்படி எளிமையாகவும், சர்வதேச தொழில் என்பதை உணர்த்தும் வகையிலும் அந்தப் பெயர் இருக்க வேண்டும். குறிப்பாக நிறுவனத்தின் பெயர் Exports, International , Overseas என்ற வார்த்தையுடன்  முடியுமாறு இருந்தால் நல்லது.
லைசென்ஸ்( IE CODE)
கம்பெனிக்கு பெயரை முடிவு செய்த பிறகு இமெயில் ஐடி, விசிட்டிங் கார்டு, லேட்டர் பேட், ரப்பர் ஸ்டாம்புகள், போன்றவை தயார் செய்ய வேண்டும். நிறுவனத்தை பதிவு செய்வதற்கு இது மிகவும்  அவசியம். மேலும் வங்கிக் கணக்கு நிறுவனத்தின் பெயரில் தொடங்க லைசென்ஸ் (IE Code) அவசியம். இவை எல்லாம் தயாரான பிறகு மத்திய அரசின் தொழில் வணிகத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வாணிகத்திற்கான இயக்குநரகத்தில் நமது நிறுவனத்தின் பெயரை பதிவு செய்து நாம்  லைசன்ஸ் வாங்க வேண்டும்.
வெளிநாட்டு வாணிகத்திற்கான இயக்குனரகம்
சென்னை முகவரி:
Chennai Director General Of Foreign Trade 
Shastri Bhawan Annex, 

26, Haddows Road, Nungambakkam, 
Chennai 600006 
E-Mail: zjdgft@tn.nic.in 
Tel: 044-28283404/08 Fax: 044-28283403

அனுமதி கோரும் இந்த விண்ணப்பத்தில் நமது நிறுவனத்தைப் பற்றிய சிறு விவரம் இணைக்க வேண்டும். மேலும் இதற்கான கட்டண வரைவோலை (DD) , வங்கியின் அத்தாட்சி கடிதம் இணைக்க வேண்டும். தவிர, ஏற்றுமதி செய்பவர்களின் இரண்டு புகைப்படங்கள், ஆதார் கார்டு, பான் கார்டு ஜெராக்ஸ் போன்றவை இணைக்க வேண்டும்.
இந்த அனுமதி கிடைத்து, ஏற்றுமதிக்கான ஒப்பந்தங்களும் நமக்கு கிடைத்துவிட்டால் உடனே தொழிலை தொடங்கி விட வேண்டியதுதான். ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை மீறாமல் இருந்து, தரமான பொருட்களை குறிப்பிட்ட நேரத்தில் அனுப்பி வைத்தால் ஏற்றுமதி தொழில் எப்போதும் லாபம் தரும்.
மேலும் உதவிக்கு..
இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் சம்மேளனம்
Federation of Indian Export Organisations 
Unit No.706, Spencer Plaza, 
7th Floor, 769, Anna Salai, 
Chennai-600 002. 
Ph:+91-44-28497766/ 28497755/28493333, 
Fax: +91-44-28496666 
Email: fieosr@fieo.org
************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி-30.12.2017 

ஸ்மார்ட் கார்டு' பிழை திருத்தம்

புதிய ஸ்மார்ட் கார்டு எங்கு இடைக்கும்?
- சேவை மையங்களில் புதிய ஸ்மார்ட் கார்டு வழங்க தாமதம் ஏன்
நடைமுறை என்ன?
தமிழகத்தில் உள்ள, அனைத்து  (1.93 கோடி) ரேஷன் கார்டு தாரர்களுக்கு, 'ஸ்மார்ட் கார்டு' என்ற, கையடக்க அட்டை தமிழக அரசால் வினியோகிக்கப்பட்டு வருகிறது. அதில், புதிய பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் செய்தல் போன்ற திருத்தங்களை செய்ய, அரசு - - சேவை மையங்களில் பொதுமக்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். பொது வினியோகத் துறை  www.tnpds.gov.in  இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம். அதற்கு, கட்டணமாக, 60 ரூபாய் பெறப்படுகிறது. இந்நிலையில், ஸ்மார்ட் கார்டுகளை பொதுமக்கள் பெறுவதில் சிக்கல் இருந்து வருகிறது.
இது குறித்து, தகவல் தொழில்நுட்பத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பொதுவாக இ - சேவை மையங்களுக்கு வரும், ஸ்மார்ட் கார்டு தொடர்பான மனுக்கள், (Taluk Supply Officer) வட்ட வழங்கல் அதிகாரி அவர்களின் பரிசீலனைக்கு செல்லும். அவர்கள் ஒப்புதல் அளித்த பின், பதிவு செய்யப்பட்ட மனுதாரரின் மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., (SMS) செய்தி அனுப்பப்படும். அதற்கு பிறகு தான், ஸ்மார்ட் கார்டு பெற,  - சேவை மையங்களுக்கு, மக்கள் வர வேண்டும்; ஆனால், அது பலருக்கு தெரிவது இல்லை. சில, நேரங்களில் வட்ட வழங்கல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டும், தாமதம் செய்கின்றனர். சமீபத்தில், நாமக்கல் மாவட்டத்தில், புதிய கார்டுக்கு விண்ணப் பித்தவரிடம், 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஒரு அதிகாரி பிடிபட்டுள்ளார்இதுபோன்ற மோசமான அதிகாரிகளால் தான், எஸ்.எம். எஸ்., அனுப்புவதில் தாமதம் ஏற்படுகிறது.  'ஸ்மார்ட் கார்டு - பிரின்ட் - அவுட்' அரசு கேபிள் நிறுவனம் நடத்தும் மையங்களில் மட்டும் தான் கிடைக்கும். அது தெரியாமல், மற்ற, ' - சேவை' மையங்களுக்கு பொதுமக்கள் செல்வதால், பிரச்னை ஏற்படுகிறது.
எனவே பொதுமக்கள் தங்களது ஸ்மார்ட் கார்டைப் பெற தங்களது மொபல் போனுக்கு குறுஞ்செய்து வந்த பின்பு அரசு கேபிள் நிறுவனம் நடத்தும் மையங்களுக்கு (மட்டும்) செல்ல வேண்டப்படுகிறார்கள்.
******************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 30.12.2017