disalbe Right click

Saturday, January 27, 2018

தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவு ரத்து!


அனுமதி பெறாமல் தொடர்ந்து, 'ஆப்சென்ட்' ஆன ஊழியரை வேலை நீக்கம் செய்தது சரிதான் என்று சென்னை உயர் நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல்கட்ட நடவடிக்கை
சேலத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தின், ராமலிங்கம் என்பவர் பணிபுரிந்து வந்தார். அவர் மேலதிகாரியிடம் உரிய அனுமதி பெறாமல், வேலைக்கு வராமல் இருந்ததற்காக, 1998ம் ஆண்டில், அவருக்கு, 'மெமோ' வழங்கப்பட்டது.
பணி நீக்கம்
மெமோ பெற்றுக் மொண்ட அவர் அளித்த விளக்கம் திருப்தி இல்லாத காரணத்தால், ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி துறைரீதியான விசாரணை நடத்தி, நிர்வாகத்துக்கு அறிக்கை அளித்தார். இதையடுத்து, 1999ம் ஆண்டில் பணி நீக்கம் செய்யப்பட்டார்
தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவு
இதனால், ராமலிங்கம் சேலம், தொழிலாளர் நீதிமன்றத்தில் முறையிட்டார். வழக்கை விசாரித்த, தொழிலாளர் நீதிமன்றம், மீண்டும் ராமலிங்கத்தை பணியில் அமர்த்தும்படி, போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டது.
நிஎவாகம் செய்த மேல்முறையீடு
சென்னை உயர் நீதிமன்றத்தில், போக்குவரத்து கழகம் சார்பாக இதனை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது
மனுவை, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் அவர்கள் விசாரித்தார்
போக்குவரத்து கழகம் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பரமசிவதாஸ் அவர்கள், தனது வாதத்தில் ''அனுமதியின்றி, பணிக்கு வராமல் இருந்தது, இப்போது மட்டும் அல்ல; 1993ம் ஆண்டில் இருந்து, நீண்ட நாட்களுக்கு, அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல், பணிக்கு வராமல் இருந்துள்ளார். ''அதற்காக, ராமலிங்கத்திற்கு  சிறிய அளவில் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. 
ஷை தொழிலாளி திருந்துவதற்கு வாய்ப்புகளை நிர்வாகம் வழங்கியும்,தொடர்ந்து இவ்வாறு செயல்பட்டதால், பணி நீக்கம் செய்யப் பட்டார்,'' என்றார். தொழிலாளி ராமலிங்கம் சார்பில், வழக்கறிஞர், கே.வி.சண்முகநாதன் அவர்கள் ஆஜராகி, ''கண் பார்வை பிரச்னை இருந்ததால், ராமலிங்கம் சிகிச்சை பெற்று, அதற்குப்பின், ஓய்வில் இருந்துள்ளார். போக்குவரத்துக் கழக. நிர்வாகத்திடம், திருப்திகரமான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், விசாரணை அதிகாரி  அவர்கள் அதனை பரிசீலிக்கவில்லை,'' என்றார்.
முடிவில், நீதிபதி, ஆர்.சுரேஷ்குமார் அவர்கள் பிறப்பித்த உத்தரவு:
அனுமதியின்றி பணிக்கு வராமல் இருந்தது, முதல் முறையாக அல்ல.1993ல், பணிக்கு வராமல் இருந்த காரணத்திற்காக தொழிலாளி ராமலிங்கம் கண்டிக்கப்பட்டுள்ளார். இவரது நடவடிக்கைக்காக 1995ம் ஆண்டில், 45 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது; 1996ம் ஆண்டில், அவரது ஊக்க ஊதியம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், 1997ம் ஆண்டில், அனுமதியின்றி,  இரண்டு மாதங்கள் பணிக்கு வராததால், மீண்டும் ஊக்க ஊதியம் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், 1997ம் ஆண்டில், 10 நாட்கள் வராமல் இருந்ததற்காக, 40 ரூபாய் அபராதம், 97 - 98ம் ஆண்டில்,, நான்கு மாதங்கள் தொடர்ந்து பணிக்கு வராததற்காக, ஊக்க ஊதியம் நிறுத்தப் பட்டுள்ளது. சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை பரிசீலிக்கும் போது, ஷை தொழிலாளி  அனுமதியின்றி பணிக்கு வராமல் இருந்ததுதொடர்ந்து நடந்திருப்பது தெரிகிறது. சிறிய அளவில் நிர்வாகத்தால் தண்டனை விதிக்கப்பட்டும், அவரது செயல்பாட்டை அவர் மாற்றிக் கொள்ளவில்லை. எந்த காரணமும் இல்லாமல், வார கணக்கிலும் மாத கணக்கிலும் பணிக்கு வராததை, அவர்  வழக்கமாக கொண்டுள்ளார்.
இப்படி பொறுப்பில்லாமல் ஒரு நிறுவனத்தில் ஊழியர்கள்பணியாற்றினால், ஒருவரை போல மற்றவர்களும் ஈடுபட்டால், எந்த ஒரு நிறுவனமும் அன்றாடம் இயங்க முடியாது. போக்குவரத்து கழகம், அத்தியாவசிய சேவையை வழங்கி வருகிறது.
அனுமதியின்றி தொடர்ந்து பணிக்கு வராமல் இருந்தால், பொது மக்களுக்கு அத்தியாவசிய சேவை வழங்குவது அந்த போக்குவரத்து நிர்வாகத்திற்கு கஷ்டமாகி விடும். உடல் நலத்தை அவர் காரணமாக காட்டினாலும், மருத்துவ சான்றிதழ் எதையும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.
தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவு ரத்து!

விருப்பப்பட்டால் வேலைக்கு வருவது, இல்லையென்றால், வேலைக்கு வராமல் இருப்பது என அந்த ஊழியர் செயல்பட்டு உள்ளார். எனவே, தொழிலாளர் நீதிமன்றத்தின் முடிவில் இந்த நீதிமன்றம் குறுக்கிட வேண்டியுள்ளது. அந்த உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 27.01.2018 

Monday, January 22, 2018

தேசிய தகுதித் தேர்வு 2018

தேசிய தகுதித் தேர்வு 2018
உதவி பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதி தேர்வு, ஜூலை, 8ம் தேதியில் நடத்தப்படும் என்று, யு.ஜி.சி., அறிவித்துள்ளது
உதவி பேராசிரியர் பணியில் சேர
முதுநிலை படிப்பு முடித்தோர், தேசிய அளவில் உள்ள கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, 'நெட்' என்ற, தேசிய தகுதி தேர்வில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்லுாரி மற்றும் பல்கலைகளில் படிக்கும், இளநிலை ஆராய்ச்சி மாணவர்கள், கல்வி உதவி தொகை பெறவும், நெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறைதான், இந்த நெட் தேர்வு நடத்தப்படுகிறது. பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி.,யின் இந்த தேர்வை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.., நடத்தி வருகிறது.  நாடு முழுவதும், 2018ல் ஜூலை, 8ல், நெட் தேர்வு நடக்கும் என, யு.ஜி.சி., நேற்று அறிவித்துள்ளது. 
தேர்வு விதிகள்
இரண்டு தாள்கள் எழுத வேண்டும் ஒவ்வொரு தாளுக்கு தலா, 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதல் தாளில், 50 மற்றும் இரண்டாம் தாளில், 100 வினாக்கள் இடம் பெற இருக்கின்றன. முதல் தாளில் பொதுவான வினாக்களும், இரண்டாம் தாளில், தேர்வர்கள் தேர்வு செய்யும் பாடத்தில் இருந்தும், வினாக்கள் இடம் பெறும்.
தேர்வுக்கான அதிகாரபூர்வ அறிவிக்கை, பிப்ரவரி1ம் தேதி, https://cbsenet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இந்த தேர்வுக்கு தகுதியுள்ளவர்கள் மார்ச், 6-ம் தேதி முதல், ஏப்ரல் 25-ம் தேதி வரை, 'ஆன்லைனில்' தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். 
வயது வரம்பில் மேலும் சலுகை
இளநிலை ஆராய்ச்சி மாணவர்கள், கல்வி உதவி தொகை பெறுவதற்கு, நெட் தேர்வு கண்டிப்பாக எழுத வேண்டும். தேர்வு விதிகளின்படி28 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே, நெட் தேர்வில் இதுவரை பங்கேற்க முடியும். இந்த வயது உச்சவரம்பு, இந்த ஆண்டு முதல் வரும், ஜூலையில் நடக்கும் தேர்வில், 30 வயது வரை உள்ளவர்கள், நெட் தேர்வை எழுதலாம் என, சலுகை வழங்கப்பட்டுள்ளது.
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 23.01.2018 

ஆங்கில வார்த்தைகளின் சுருக்கம்

நாம் தினமும் அடிக்கடி பேசும் போது பல ஆங்கில சுருக்க வார்த்தைகளை பயன்படுத்தி வருகிறோம். அதில் பல ஆங்கில சுருக்க வார்த்தைகளின் விரிவாக்கம் என்ன என்பது தெரிந்து வைத்திருக்க மாட்டோம். நன்றாக தெரிந்த வார்த்தையைப் போல தான் இருக்கும். ஆனால், யாராவது அதன் விரிவாக்கம் என்ன? என்று திடீரென கேள்வி எழுப்பினால் திருதிருவென முழிப்போம். நாம் அடிக்கடி பேச்சுவழக்கில் உபயோகிக்கும் ஆங்கில சுருக்க வார்த்தைகளின் விரிவாக்கங்களை தொகுத்து தந்திருக்கிறேன். அறிந்து கொள்ளுங்கள்.
PDF 
நாம் மெயில்களின் மூலமாக அனுப்புகின்ற பைல்களை PDF பைல்களாகவே அனுப்புகிறோம். இதனால், அதனை பெறுபவர்களுக்கு நாம் அனுப்புகின்ற செய்தி தோற்றம் மாறாமல் அப்படியே கிடைக்கும். இந்த PDF என்பதன் விரிவாக்கம் Portable Document Format ஆகும்.
DP
ஃபேஸ்புக், வாட்ஸ்-அப், ட்விட்டர் என அனைத்து சமூக செயலிகளிலும் முகப்பு படம் என்று ஒன்று வைத்திருப்போம். பெரும்பாலும் அந்தப்படம் நமது உண்மையான படமாக இருப்பதில்லை. இருந்தாலும், அது நம்மை அடையாளம் காட்டும் படமாக திகழ்கிறது. இதை சுருக்கமாக DP என்று ஆங்கிலத்தில் கூறுகிறோம். இதன் விரிவாக்கம் Display Picture ஆகும்.
ROFL
சில சமயங்களில் ஃபேஸ்புக்வாட்ஸ்-அப்ட்விட்டர் போன்றவைகளில் நீங்கள் ஏதேனும் காமெடியான படம், வீடியோ அல்லது ஸ்டேட்ஸ் பகிர்ந்திருந்தாலோ, பல சமயங்களில் உங்கள் முகப்பு படத்திற்கு கீழேயும் இப்படி ROFL என சிலர் கமெண்ட் செய்ததை நீங்கள் பார்த்திருக்கலாம்.. இதை விரிவாக்கம் Rolling On Floor Laughing. அதாவது விழுந்து, விழுந்து சிரிச்சேன் என்ற அர்த்தம் கொண்ட வாசகம்.
SMS 
செல்போன் மூலமாக நாம் அனுப்புகின்ற செய்திகளை SMS  என்கிறோம். இதன் விரிவாக்கம் Short Message Service ஆகும்.
DSLR
 உன்னோட DSLR கொடேன், எங்க காலேஜ்ல இருந்து டூர் போறாங்க என்று உங்கள்  நண்பர்கள் உங்களிடம் கேட்டிருக்கலாம். இந்த DSLR-ன் விரிவாக்கம் Digital Single Lens Reflex.
OTP
நீங்கள் ஆன்லைன் மூலமாக  பண பரிமாற்றம் செய்தாலும், டிக்கெட்டுகள் புக் செய்தாலும் இந்த OTP உங்கள் மொபைல் எண் குறுஞ்செய்திக்கு அந்த நிறுவனத்தால் அனுப்பப்படும். இதன் விரிவாக்கம் One Time Password  ஆகும்.
AM ,  PM
மொபைல், கணினி, லேப்டாப், வ்ரிஸ்ட் வாட்சுகளில் நேரத்தை பிரித்துக் காண உதவுகின்ற வார்த்தை AM / PM ஆகும்.   இதன் விரிவாக்கம் AM என்றால் Ante Meridiem, PM என்றால் Post Meridiem ஆகும்.
YOLO
பெரும்பாலும் யோ-யோ மக்கள் தான் இத்தகைய சுருக்க வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். YOLO என்றால் You Only Live Once என்பதாகும். நீ வாழும் வாழ்க்கை ஒரு முறையானது என்பதை இது குறிக்கிறது.
JPEG
பெரும்பாலும் நாம் இணையத்தில் இருந்து ஒரு புகைப்படத்தை பதிவிறக்கம் செய்தால் அதன் டீடெய்ல்ஸ்-ல் Format என்ற இடத்தில் .JPEG என்று இருக்கும். இதன் விரிவாக்கம் Joint Photographic Experts Group என்பதாகும்.
அதேபோல வாட்ஸ்-அப்பில் GIF என்ற பெயரில் சிறிய வீடியோ போல சில பகிர்வுகள் வரும். இதன் விரிவாக்கம் Graphic Interchange Format ஆகும்.
BYE
Bye னா ஏன்ன? டாட்டா, See You சொல்ற மாதிரி ஒரு வார்த்தை அல்ல.  BYE என்பதற்கு ஒரு விரிவாக்கம் இருக்கிறது. BYE என்றால் Be With You Every time அர்த்தம். நான் எல்லா நேரத்திலும் உன்னுடன் இருப்பேன் என்பதை இது குறிக்கிறது.
ZIP
விண்ணப்பங்களை  நீங்கள் ஃபில் செய்யும் போது நகரம் என்பதற்கு பக்கத்தில் ZIP என்ற பெட்டி இருக்கும் அங்கே நாம் வசிக்கும் இடத்தின் குறியீட்டு எண்னை பதிவு செய்வோம். 600001, 641008, 560011 என ஒவ்வொரு நகரத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் இப்படி ஒரு குறியீட்டு என் இருக்கும். இதன் விரிவாக்கம் Zone Improvement Plan Code ஆகும்.
SIM
செல்போன் வைத்திருப்பவர்கள் அனைவரும் அடிக்கடி சொல்லக்கூடிய வார்த்தை இது.   இந்த SIMன் விரிவாக்கம்  Subscribers Identification Module ஆகும். 
QR Code
 நாம் Bar Code  பற்றி அறிந்திருக்கிறோம். சில வருடங்களுக்கு முன்னால்தான் இந்த QR Code நமக்கு அறிமுகம் ஆனது. நாம் வாங்குகின்ற எல்லா பொருளிலும், சில பில்களிலும் கூட இந்த Code நாம் பார்க்கலாம். இதன் விரிவாக்கம் Quick Response Code ஆகும்.
TRP
இன்றைய சூழலில் பல தொலைக்காட்சி நிகழ்சிகள் மிகமிக மோசமாக தான் நடத்தப்படுகின்றன. சில மோசமான நிகழ்சிகளை காணுகின்ற நாம்  இவனுங்க டிஆர்பி-காக தான் இப்படி பண்றாங்க... என்போம். இதன் விரிவாக்கம் Television Rating Point ஆகும்.
GPS
ஒருவர் எங்கே இருக்கிறார்?, எங்கே சென்றிருக்கிறார்? அவர் எந்த திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்? என அனைத்தையும் GPS உதவியுடன் நாம் அறிந்துக் கொள்ள முடியும். பெரு நகரங்களில் கால் டாக்ஸி புக் செய்துவிட்டு அது எங்கு வந்து கொண்டிருக்கிறது என்பது இதை வைத்துத்தான். இதன் விரிவாக்கம் என்னவெனில், Global Positioning System ஆகும்.
RIP
இரங்கல் செய்திகளுக்குக் கீழே RIP என்று சுருக்கமாக கமெண்ட் செய்வதை நீங்கள் பார்த்திருக்கலாம். அது இறந்தவர் ஆத்மா சாந்தி அடையட்டும் என்ற அர்த்தத்தைக் குறிக்கும் வார்த்தை ஆகும். இதன் விரிவாக்கம் requiescat in pace ஆகும்.
************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 22.01.2018