disalbe Right click

Friday, March 9, 2018

முன்பதிவு ரயில் டிக்கெட்

மற்றொருவருக்கு மாற்ற என்ன செய்ய வேண்டும்?
ஒரு பயணத்திற்காக ரயில் டிக்கட் முன்பதிவு செய்திருப்போம். ஏதோ ஒரு காரணத்தால் அந்தப் பயணத்தை ரத்து செய்ய வேண்டியதிருக்கும். அந்த நேரத்தில்  பெரும்பாலானோர்  அந்த  டிக்கெட்டை ரத்து செய்து விடுவோம்.  அல்லது  அதை அப்படியே விட்டுவிடுவோம்.
முன்பதிவு செய்யப்பட்ட ரயில்வே டிக்கெட்டை நாம் வேறொருவர் பெயருக்கு மாற்றிக் கொள்ள தற்போது முடியும்! 
அதற்கு என்ன வழிமுறை என்பதைப் பற்றி கீழே காண்போம். 
ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ள புதிய முறை
எந்தவிதமான தொகை பிடித்தமும் இல்லாமல்  முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை மற்றொருவருக்கு எளிதாக  மாற்றிக்கொள்ளும் முறையை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்குரிய வழிகாட்டி முறைகளை கீழே காணலாம்.
  ரயில் டிக்கெட்டை யாருக்கு மாற்ற வேண்டும்பெயரை மாற்ற வேண்டும்இருக்கைபடுக்கையை மாற்ற வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் கொண்டமுக்கிய ரயில் நிலையங்களில் முன்பதிவு செய்யும் அலுவலகங்களில் உள்ள தலைமை கண்காணிப்பாளரை நாம் முதலில் அணுகவேண்டும்.
❤ முன்பதிவு செய்த நீங்கள் அரசு ஊழியராக இருந்தால், பயணம் செய்வதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக எழுத்துப்பூர்வமாக ஒரு கடிதத்தை எழுதி அதில் யார் பெயருக்கு டிக்கெட்டை மாற்ற வேண்டும் என்பதை தெரிவித்தால் போதுமானது.  பயணச்சீட்டு   மாற்றித் தரப்படும்.
 நீங்கள் உங்களது முன்பதிவு டிக்கெட்டை உங்களது குடும்ப உறுப்பினர்களான தாய், தந்தை, சகோதரர், சகோதரி, மகன்மகள், மனைவி, கணவர் ஆகியோருக்கு மாற்ற விரும்பினால், பயணத்துக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக, கடிதம் மூலம் முன்பதிவு நிலைய தலைமை கண்காணிப்பாளரிடம் தெரிவித்தால் போதுமானது.  பயணச்சீட்டு   மாற்றித் தரப்படும்.
ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்து மாணவர்கள் சுற்றுலா செல்வதற்கு முன்பதிவு செய்திருக்கும் போது, அதில் சில மாணவர்கள் திடீரென வரவில்லை என்ற சூழ்நிலையில்  அதற்கு பதிலாக வேறு மாணவர்களை அழைத்துச் செல்லலாம் என்று பள்ளி / கல்லூரி நிர்வாகம் முடிவு செய்தால். பயணத்தின் 48 மணி நேரத்துக்கு முன்பாக, கல்வி நிறுவனத்தில் இருந்து வேண்டுகோள் கடிதம் ஒன்றை பெற்று வந்து முன்பதிவு நிலைய தலைமை கண்காணிப்பாளரிடம் கொடுத்து பெயர்மாற்றம் செய்து பயணிக்கலாம்
ஒரு திருமணத்துக்காகவோ அல்லது ஒரு நிகழ்ச்சிக்காகவோ மொத்தமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மற்றும் பள்ளி / கல்லூரிகளில் N.C.C or N.S.S பிரிவு மாணவர்களும் பயணத்துக்கு 24 மணிநேரத்துக்கு முன்பாக முன்பதிவு   நிலைய    தலைமை  கண்காணிப்பாளரிடம் கொடுத்து கடிதம் எழுதிக் கொடுத்து   மாற்றிக்கொள்ள முடியும்.
************************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 10.03.2018 

Wednesday, March 7, 2018

47 ஆண்டுகளுக்கு முன் பலாத்காரம் செய்ததாக புகார்.

47 ஆண்டுகளுக்கு முன் பலாத்காரம் செய்ததாக நடிகர்  மீது புகார்!
ஷிம்லா: பிரபல பாலிவுட் நடிகர், ஜிதேந்திரா, 47 ஆண்டுகளுக்கு முன், பாலியல் பலாத்காரம் செய்ததாக, அவர் உறவுப் பெண் அளித்த புகாரின்படி, போலீசார், எப்..ஆர்., எனப்படும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து உள்ளனர்.
Image may contain: 1 person, hat
பாலிவுட்டைச் சேர்ந்த பிரபல நடிகர், ஜிதேந்திரா. இவருக்கு இப்போது வயது 75 ஆகிறது. இவர் மீது, அவரது நெருங்கிய உறவுப் பெண் ஒருவர் (வயது 65)  ஹிமாச்சல பிரதேச காவல்துறைக்கு இமெயில் மூலமாக அளித்த புகாரில்,  நடிகர் ஜிதேந்திரா, 47 ஆண்டுகளுக்கு முன்தனக்கு 18 வயதாக இருக்கும் போது    ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள, ஷிம்லா நகரில் நடக்கும் சினிமா படப்பிடிப்பை பார்ப்பதற்கு வருமாறு, என்னை அழைத்ததாகவும், ஷிம்லா நகர ஓட்டல் அறையில் தங்கியிருந்த போது, இரவில் தனது அறைக்கு வந்த ஜிதேந்திரா,தன்னை பலாத்காரம் செய்ததாகவும். அவர் மீது, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
உடனே எப்..ஆர்
இந்த புகாரின்படி, ஜிதேந்திராவுக்கு எதிராக, ஷிம்லா காவல்துறையினர், எப்..ஆர்., பதிவு செய்து உள்ளனர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 08.03.2018
********************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 08.03.2018 

ஆசிரியரை தாக்கிய எஸ்.ஐ.,க்கு அபராதம்

ஆசிரியரை தாக்கிய சார்பு ஆய்வாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
சென்னை - விழுப்புரம் மாவட்டம், பொன் அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர், மோகன்குமார்  என்பவர், கடந்த 2008ம் ஆண்டில் ஒருநாள், விழுப்புரம் நகரில் அவரது தந்தைக்குச் சொந்தமான கடையில் தனது மகளுடன் இருந்திருக்கிறார். அவர்களது கடையில் இளவரசன் என்பவர் வேலையாளாக இருந்திருக்கிறார். 
அப்போது, சீருடையில் ஒரு போலீஸ்காரரும், சீருடை இல்லாமல் ஒரு போலீஸ்காரரும் அவரது கடைக்கு வந்துள்ளனர். கடையில் பணியாற்றும் இளவரசனைப் பற்றி மோகன்குமாரிடம் விசாரித்துள்ளனர்.  உரிமம் இல்லாமல், வாகனத்தை ஓட்டியதற்காக இளவரசன், 650 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என, சீருடையில் இல்லாத போலீஸ்காரர் கூறியுள்ளார். அவர் இன்று வேலைக்கு வரவில்லை, அவர் வந்ததும், காவல் நிலையம் அனுப்பி வைக்கிறேன்' என்று மோகன்குமார் அவர்களிடம் கூறியுள்ளார். உடனே, சீருடையில் இல்லாத போலீஸ்காரர்  மோகன்குமாரை தகாத வார்த்தையால் பேசி, அங்கிருந்து காவல் நிலையம் வரை, அடித்துக் கொண்டே அழைத்துச் சென்றுள்ளார்.
காவல்துறையினரின்  செயலால், நானும், என் குடும்பமும் மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம். எனவே, சம்பந்தப்பட்ட, சார்பு ஆய்வாளர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இதுபற்றி மாநில மனித உரிமைகள் ஆணையத்தில், மோகன்குமார் புகார்  செய்தார். 
இந்த மனுவை விசாரித்து, நீதிபதி, ஜெயச்சந்திரன் அவர்கள்,  சார்பு ஆய்வாளர் மீது, குற்றம் நிரூப்பிக்கப்பட்டுள்ளது. 'எனவே, பாதிக்கப்பட்ட மோகன்குமாருக்கு, இன்னும் இரண்டு மாதத்தில், தமிழக அரசு, 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், அந்த தொகையை, எஸ்.., குமாரிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்' என்றும் உத்தரவிட்டார்.
*************************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 08.03.2018 

Monday, March 5, 2018

800 சதுர அடி மனைக்கும் கட்டட அனுமதி

நீண்ட கால சிக்கலுக்கு தீர்வு கண்ட தமிழக அரசு!
வீட்டு மனைகளின் அளவு, 800 சதுர அடியாக இருந்தாலும், கட்டிடம் கட்ட அனுமதி தரும் வகையில், தமிழக அரசு, கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளதால், ரியல் எஸ்டேட் துறை இனி நல்ல வளர்ச்சியைக் காணும் என்பதில் சந்தேகமில்லை.
மனை வாங்கவே முடியவில்லை!
நடுத்தர மக்களின் கனவு ஒரு மனையை வாங்கி, நமக்குத் தகுந்தாற்போல் சின்னதாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பதுதான். ஆனால், சென்னை பெருநகர் பகுதிகளில் உருவாக்கப்பட்ட மனைகளின் சதுர அடி குறைந்தபட்சம் 1500 சதுர அடி இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் இருந்ததால், பெரும்பாலானோர் தங்களது வீடு கட்டும் கனவை நனவாக்க முடியாமல் கனவாகவே வைத்திருந்தனர். ஏனென்றால் ஒரு மனை வாங்கவே பல லட்சங்கள் தேவைப்படும். இதில் வீடு எப்படி கட்டுவது?
விதியைத் தளர்த்திய தமிழக அரசு!
நடுத்தர மக்களின் கனவை நனவாக்கும் விதமாக தமிழக அரசு விதிகளைத் தளர்த்தியுள்ளது.  புதிய லே - அவுட்களில், மனைகளின் குறைந்த பட்ச அளவு, 800 சதுரடியாக நிர்ணயிக்கப்பட்டு, கட்டுமான அனுமதியை, தற்போது சி.எம்.டி.., வழங்குகிறது. சென்னையைத் தவிர, பிற பகுதிகளில், கட்டுமான அனுமதியை, நகர், ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி., தருகிறது. மனையின் முன்பகுதியின் அளவு  30 அடியாகவும், மனையின் நீளம், 50 அடியாகவும் இருக்க வேண்டும் என இருந்த விதிகள் இருந்தன. இனி மனையின் முன்பகுதியின் அளவு  20  அடியாகவும், மனையின் நீளம், 40 அடியாகவும் இருந்தால் போதுமானது என்று நகர் ஊரமைப்பு   துறையானடி.டி.சி.பி, தெரிவித்துள்ளது.
டி.டி.சி.பி., புதிய சுற்றறிக்கை
மனைகளின் குறைந்தபட்ச அளவை மாற்றி அமைப்பது குறித்து, சமீபத்தில் நடந்த உயர் நிலை குழு கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டு, மனைகளின் குறைந்தபட்ச அளவு, 1,500 சதுர அடியில் இருந்து, 800 சதுர அடியாக குறைக்கப்பட்டு. முகப்பு அகலம், 20 அடி; நீளம், 40 அடியாக இருக்கலாம் என, தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், திறந்த வெளி ஒதுக்கீடாக, சாலைக்கு ஒதுக்கிய இடத்தை தவிர்த்து, மற்ற இடங்களில், 10 சதவீதத்தை ஒதுக்கும் வகையிலும், சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக டி.டி.சி.பி., புதிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
************************************************ அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 05.03.2018