disalbe Right click

Monday, March 12, 2018

வாகன ஓட்டிகளின் உரிமைகள் என்னென்ன?

வாகன ஓட்டிகளின் உரிமைகள் என்னென்ன?
சாலையில் செல்கின்ற வாகனங்களை தணிக்கை செய்வதற்காக போக்குவரத்து காவலர்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் சில வேளைகளில் பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்தி விடுகிறது. வாகன ஓட்டிகளுக்குள்ள உரிமைகளைத் தெரிந்து கொண்டால், அவர்கள் போக்குவரத்து காவலர்களுக்கு பயப்பட வேண்டியதே இல்லை.  
அங்கே, இங்கே என்று அலைய வேண்டுமே! என்றுதான் உரிய ஆவணங்கள் இல்லாத அல்லது ஹெல்மேட் போடாத வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்கள் நிற்கச் சொல்லியும் நிற்காமல் போகிறார்கள். இதனால் தேவையில்லாமல் தங்களது உயிரையும் இழக்கிறார்கள். ஆனால், இதுபோன்று போக்குவரத்து காவலர்கள் நிறுத்தும்பட்சத்தில், தங்களுக்குள்ள உரிமைகளை வாகன ஓட்டிகள் தெரிந்து வைத்துக் கொண்டால், இது போன்ற சம்பவங்கள் கண்டிப்பாக நிகழாது.
வாகன தணிக்கை யார் செய்ய முடியும்?
சீருடையுடன் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி அல்லது போக்குவரத்து துறை அதிகாரி  ஆகியோர் எந்தவொரு வாகனத்தையும் ஆய்வு செய்யலாம். போக்குவரத்து வாகனச் சட்டம் பிரிவு 130 ன் கீழ் இதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. உங்கள் வாகனத்தை ஆய்வுக்காக அவர்கள் நிறுத்த சைகை காட்டினால், உங்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாவிட்டாலும்கூட, உங்களது வாகனத்தின் வேகத்தை குறைத்து, சாலையின் ஓரமாக நிறுத்துங்கள்
காவலர்களுக்கு என்ன அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது?
சாதாரண போக்குவரத்து காவலருக்கு (கான்ஸ்டபிள்) உங்களது வாகனத்தின் ஆவணங்களை கேட்பதற்கோ, வண்டியிலிருந்து சாவியை எடுப்பதற்கோ அதிகாரம் இல்லை. ஏஎஸ்ஐ, எஸ்ஐ மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மட்டுமே ஸ்பாட் ஃபைன் போட அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. ஏஎஸ்ஐ ரேங்கிற்கு கீழே உள்ள தலைமை காவலர் மற்றும் காவலர்கள் செல்லான் போட முடியாதுஅபராதம் விதிக்கும் டிராஃபிக் போலீசாரிடம் அதற்குண்டான சலான் புத்தகம்      அல்லது எலக்ட்ரானிக் மெஷின் கைவசம் இருக்க வேண்டும்இல்லாதபட்சத்தில்  அவர்கள் அபராதம் விதிக்க முடியாதுபணியில் இருக்கும் காவலரின் சீருடையில்அவருடையபெயர் மற்றும் அவரது பெல்ட் எண் ஆகியவை இருக்க வேண்டும்.
போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் அதன் தன்மை குறித்து குறிப்பெடுக்க, அதுகுறித்து காவல்துறை புகார் பதிவு மையத்திற்கு தகவல் அளிக்க காவலர்களுக்கு அதிகாரம் உண்டு. 
கைது செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறதா?
சாதாரண போக்குவரத்து காவலர்களுக்கு வாகன ஓட்டி ஒருவரின் வாகனத்தை பறிமுதல் செய்யவோ அல்லது வாகன ஓட்டி வருபவர்களை கைது செய்யவோ முடியாது. அந்த வாகன புகை பரிசோதனை சான்றைக்கூட அவர்களுக்கு கேட்க அதிகாரம் இல்லை. அது போக்குவரத்து அதிகாரிகளால் மட்டுமே கேட்க அதிகாரம் உள்ளது. வண்டியிலிருந்து சாவியை பிடுங்குவதற்கும் அவர்களுக்கு அதிகாரம் இல்லை
எந்த சூழ்நிலைகளில் வண்டியை ஒப்படைக்க வேண்டியதிருக்கும்?
சிக்னல் ஜம்ப், குடிபோதையில் டிரைவிங், மொபைல்போனில் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்குவது மற்றும் அதிக பாரம் ஏற்றுதல் போன்ற குற்றங்களுக்காக ஸ்பாட் ஃபைன் போடப்பட்டால், அதனை உடனே கட்ட இயலாத சூழல் இருந்தால் மட்டுமே, டிரைவிங் லைசென்ஸை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டியதிருக்கும்.   அதேநேரத்தில்அதற்குண்டான   உரிய சலான் இல்லாமல் உங்களது டிரைவிங்   லைசென்ஸை   டிராஃபிக்  போலீஸ் எடுத்து செல்ல முடியாதுஎனவேஅதற்குண்டான உரிய ஆவணத்தை வாகன ஓட்டிகள் கேட்டு பெறுவது அவசியம்.  நீதிமன்றத்தில் அபாரதத்தை கட்டிய பிறகு, அந்த ரசீதை அவர்களிடம் கொண்டு சென்று காட்டி, லைசென்ஸை திரும்ப பெற முடியும்
ஒரு வேளை அரசால் நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிக அபராதம் விதித்தால், நான் அபராதத்தை கோர்ட்டில் கட்டி விடுகிறேன் என்று கூறிவிட்டு அவர்கள் எழுதிய சலானை  பெற்றுக் கொண்டு வந்துவிடலாம்
காரை எடுத்துச் செல்ல அதிகாரம் உண்டா?
காரினுள் யாராவது அமர்ந்திருக்கும்போது, காரை போலீசார் வேறு வாகனம் (car toe) டோ செய்து எடுத்துச் செல்ல முடியாது. அவர்களிடம் பேசி விபரத்தைத் தெரிவித்து இறக்கிவிட்டு காரை கொண்டு செல்லலாம்.
பெண்கள் வாகனத்தை ஓட்டி வந்தால்...
மாலை 6 மணிக்கு மேல் பெண் வாகன ஓட்டிகள் அல்லது பெண்களை ஏற்றி வரும் வாகனங்கள் போலீசாரால் நிறுத்தப்பட்டால், அவர்களை பெண் காவலர் மூலமாகவே ஆய்வு செய்ய வேண்டும். பெண் காவலர் இல்லை என்றால், அவரை வரவழைத்து அவர்களை ஆய்வு செய்யுங்கள்! என்று கூறவும் பெண்களுக்கு உரிமை உண்டு
போக்குவரத்து விதிகளை மீறினால்....
சாலை விதியை மீறிய நிலையில், உங்களது டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகனத்தின் இன்ஸ்யூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை போக்குவரத்து போலீசாரிடம் காட்டுவது அவசியம்ஆனால், ஒப்படைக்கும் அவசியம் இல்லை.  
போக்குவரத்து அதிகாரிகள் வாகன ஓட்டியை கைது செய்தால்.... 
போக்குவரத்து விதிகளை  மீறியதற்காக ஒருவரை கைது செய்யும்பட்சத்தில், நேராக காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அங்கிருந்து 24 மணி நேரத்திற்குள் அவரை போலீசார் கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும்
இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளை வாகன ஓட்டிகள் அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள். உரிய ஆவணங்களை உடன் வைத்துக் கொள்ளுங்கள். பயம் கொள்ளாதீர்கள். உங்களை நம்பி பலபேர்கள்  இருப்பதை எண்ணி  பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள். 
***************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 13.03.2018 

மினிமம் பேலன்ஸ் அபராத கட்டணம்

எஸ்பிஐ வங்கியில் மினிமம் பேலன்ஸ் அபராத கட்டணம் குறைப்பு!
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான STATE BANK OF INDIA கடந்த 06.03.2018 செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்ட அறிவிப்பில் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்காத சேமிப்புக் கணக்குகளுக்கான அபராதத் தொகையை ஏப்ரல் 1 முதல் குறைப்பதாகத் தெரிவித்துள்ளது
எந்தக் கிளை அக்கவுண்டுக்கு எவ்வளவு அபராதம்?
மெட்ரோ நகரங்கள் மற்றும் புற நகர் பகுதி STATE BANK OF INDIA வங்கி கிளைகளில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் 3,000 ரூபாய்க்கும் குறைவாக இருப்புத் தொகையினை நிர்வகிக்கவில்லை என்றால்..... 
 சேமிப்புக் கணக்குகளில் 50 சதவீதம் வரை இருப்புத் தொகை வைத்து இருக்கும் அக்கவுண்டுக்கு முன்பு 30 ரூபாய் + ஜிஎஸ்டி அபராதம் ஆக இருந்தது. அது தற்போது 10 ரூபாய் + ஜிஎஸ்டியாகக்  குறைக்கப்பட்டு உள்ளது
  50 முதல் 70 சதவீதத்திற்கும் குறைவாக வைத்து இருந்தால் 40 ரூபாய் + ஜிஎஸ்டி என்று இருந்த கட்டணமானது 12 ரூபாய் +  ஜிஎஸ்டியாகக்  குறைக்கப்பட்டு உள்ளது  
  75 சதவீதத்திற்கும் குறைவாக வைத்து இருந்தால் 50 ரூபாய் + ஜிஎஸ்டி என்று இருந்த கட்டணத்தினை 15 ரூபாய்ஜிஎஸ்டியாகக்  குறைக்கப்பட்டு உள்ளது
நகரப் புகுதிகள் உள்ள வங்கிக் கிளைகளில்.....
நகரப் பகுதிகளில் உள்ள STATE BANK OF INDIA வங்கி கிளைகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை 2,000 ரூபாய் வரை நிர்வகிக்க வேண்டும். இல்லை என்றால், 
  சேமிப்புக் கணக்குகளில் 50 சதவீதம் வரை இருப்புத் தொகை வைத்து இருந்தால் முன்பு 20 ரூபாய் + ஜிஎஸ்டி அபராதம் ஆக இருந்த கட்டணமானது, தற்போது 7.50 ரூபாய்ஜிஎஸ்டியாகக்  குறைக்கப்பட்டு உள்ளது
  50 முதல் 70 சதவீதத்திற்கும் குறைவாக இருப்புத் தொகை வைத்து இருந்தால் 30 ரூபாய் + ஜிஎஸ்டி என்று இருந்த கட்டணமானது 10 ரூபாய்ஜிஎஸ்டியாகக்  குறைக்கப்பட்டு உள்ளது.
  75 சதவீதத்திற்கும் குறைவாக இருப்புத் தொகை வைத்து இருந்தால் 40 ரூபாய் + ஜிஎஸ்டி என்று இருந்த கட்டணமானது 12 ரூபாய் +ஜிஎஸ்டியாகக்  குறைக்கப்பட்டு உள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள வங்கிக் கிளைகளில்.... 
கிராமப்புற STATE BANK OF INDIA வங்கி கிளைகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக 1,000 ரூபாய்  இருக்கவேண்டும். அதனை நிர்வகிக்கவில்லை என்றால்....
  சேமிப்புக் கணக்குகளில் 50 சதவீதம் வரை இருப்புத் தொகை வைத்து இருந்தால் முன்பு 20 ரூபாய் + ஜிஎஸ்டி அபராதம் ஆக இருந்த கட்டணமானது, தற்போது 5 ரூபாய்ஜிஎஸ்டியாகக்  குறைக்கப்பட்டு உள்ளது
  50 முதல் 70 சதவீதத்திற்கும் குறைவாக வைத்து இருந்தால் 30 ரூபாய் + ஜிஎஸ்டி என்று இருந்த கட்டணமானது 7.50 ரூபாய்ஜிஎஸ்டியாகக்  குறைக்கப்பட்டு உள்ளது
  75 சதவீதத்திற்கும் குறைவாக வைத்து இருந்தால் 40 ரூபாய் + ஜிஎஸ்டி என்று இருந்த கட்டணமானது 10 ரூபாய்ஜிஎஸ்டியாகக்  குறைக்கப்பட்டு உள்ளது
மினிமம் பேலன்ஸ் தேவையில்லாத கணக்குகள் 
நாடு முழுவதிலுமுள்ள STATE BANK OF INDIA வங்கியில் மொத்தம்  41 கோடி சேமிப்புக் கணக்குகள்   இருக்கிறது. இவற்றில் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா மற்றும் அடிப்படை சேமிப்புக் கணக்குகளுக்கு மினிமம் பேலன்ஸ் தேவையில்லை. அது மட்டும் இல்லாமல் 21 வயதுக்கும் குறைவாக உள்ள மாணவ, மாணவியர்களின் சேமிப்பு கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகை நிர்வகிக்க அவசியமில்லை
********************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 13.03.2018 

பெரியம்மாவுக்கு ஜீவனாம்சம்

சின்னம்மா பிள்ளைகள் பெரியம்மாவுக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டுமா?
இந்த வழக்கில் ராதாபாய் என்பவர் ஒருவருக்கு முதல் மனைவி ஆவார். அவருக்கு குழந்தைகள் இல்லாததால், அவரது சம்மதத்துடன், அவர் கணவர் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். அந்த இரண்டாம் தார மனைவிக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றனர். அந்தக் குழந்தைகளில் ஒருவர் டாக்டர் ஆகவும், மற்றொருவர் இன்ஜினியர் ஆகவும் ஆகிறார்கள். இந்நிலையில் இவர்களின் தந்தை இறந்து போய்விடுகிறார். இறக்கும் போது, அவரது பெயரில் சில சொத்துக்களை விட்டுச் சென்றார். அந்த சொத்துக்களை இரண்டாம் தார மனைவியின் பிள்ளைகளே அனுபவித்து வந்தனர்
ஜீவனாம்சம் வழங்க வேண்டும்!
கணவர் இறந்து விட்டதால் வயதான முதல் மனைவியான ராதாபாய் அனாதை ஆகி விடுகிறார்.  தன் கணவரின் இரண்டாம் தார பிள்ளைகளிடமிருந்து ஜீவனாம்சம் கேட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்கிறார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராதாபாய்க்கு மாதம்தோறும் கணவரின் இரண்டாம் தார பிள்ளைகள் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். அதனை எதிர்த்து இரண்டாம் தார மனைவியின் பிள்ளைகள் இந்த மேல்முறையீட்டு மனுவை பாம்பே உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
மாற்றாந்தாய் ஜீவனாம்சம் கேட்க முடியாது!
இரண்டாம் தார பிள்ளைகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், மாற்றாந்தாய் ஒருவர் ஜீவனாம்சம் கேட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று கூறி பாம்பே உயர்நீதிமன்றம் "ரமாபாய் Vs தினேஷ்" என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை மேற்கோள் காட்டினார். அந்த வழக்கில் பாம்பே உயர்நீதிமன்றம், ஒரு மாற்றாந்தாய்க்கு உள்ள சட்டப்பூர்வமான உரிமைகளை குறித்து விவாதித்திருந்தது. மேலும் கு. வி. மு. பிரிவு 125 ல் கூறப்பட்டுள்ள தாய் என்கிற விளக்கத்திற்குள் மாற்றாந்தாய் வருவதில்லை என்றும் அந்த வழக்கில் கூறப்பட்டிருந்தது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்ன சொல்கிறது?
முதல் மனைவியும், மாற்றாந்தாயுமான ராதாபாய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், உச்சநீதிமன்றம் "D. வடோடரியா Vs குஜராத் மாநில அரசு (1996-4-SCC-497)" என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை மேற்கோள் காட்டினார். அதில் கு. வி. மு. பிரிவு 125 ன் கீழ் மாற்றாந்தாய்க்கு ஜீவனாம்சம் கோருவதில் உள்ள உரிமைகள் குறித்து விவரிக்கும் பொழுது கீழ்க்கண்டவாறு கூறியுள்ளது.
" குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125 , அந்த பிரிவு இயற்றப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் எளிமையாக பயன்படுத்த வேண்டும். குழந்தை இல்லாத மாற்றாந்தாய் தன்னுடைய கணவனின் மற்றொரு மனைவி மூலம் பிறந்த மகனிடம், தான் ஒரு விதவை அல்லது கணவரால் பராமரிக்க முடியாத நிலையில் இருக்கும் பெண் என்கிற காரணங்களின் அடிப்படையில் ஜீவனாம்சம் கோரலாம் என்று கூறியுள்ளது.
மேலே சொல்லப்பட்ட தீர்ப்பை பாம்பே உயர்நீதிமன்றம் "சரோஜ் கோவிந்த் முக்கவார் Vs சந்திரகலா பாய் (2009-ALLMR-CRL-1139)" என்ற வழக்கில் மேற்கோள் காட்டி தீர்ப்பு கூறியுள்ளதாகவும் கூறி வாதிட்டார்.
ஜீவனாம்சம் பெறத் தடையில்லை!
எனவே மாற்றாந்தாய் ஒருவர் தன் கணவனின் இரண்டாம் தார பிள்ளைகளிடமிருந்து ஜீவனாம்சம் பெற எவ்வித தடையும் இல்லை என்று பாம்பே உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
Criminal Appeal No - 1486/2001 Dr.Ravi Kumar and others Vs Radha Bai and Others
2013-1-DMC-509


நன்றி : முகநூல் நண்பரும், வழக்கறிஞருமான Dhanesh Balamurugan
*********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 12.03.2018