disalbe Right click

Thursday, August 23, 2018

வீட்டு வாடகை மசோதா என்ன சொல்கிறது?

வீட்டு வாடகை மசோதா என்ன சொல்கிறது?
பல்வேறு மாநில அரசுகள் மேற்கண்ட சட்டத்தின் அடிப்படையில் வீட்டு வாடகை சட்டத்தை இயற்றி நடைமுறைப்படுத்தி இருக்கின்றன.
மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட, மாதிரி சட்டத்தை பின்பற்றி, நமது தமிழ்நாடு அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறைதமிழ்நாடு, சொத்து உரிமையாளர்கள், வாடகைதாரர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டம்2017என்ற சட்டத்தை இயற்றி  கடந்த 15.07.2018 அன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து இருக்கிறது.
அந்த சட்டத்தின்படி, குத்தகைதாரர், வாடகைதாரர் இடையில் எற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்யப்படுவதோடு, இரு தரப்பினரின் உரிமைகள், பொறுப்புகள் ஆகியவையும் சீர் செய்யப்படும் என்று நம்பப்படுகிறது.  
அந்த சட்டத்திலுள்ள பல்வேறு அம்சங்கள்
குத்தகை உரிமை ஒப்பந்தம், கால அளவு, வாரிசு உரிமை, உள்வாடகைக்கான கட்டுப்பாடுகள், செலுத்தப்பட வேண்டிய வாடகையை மாற்றி அமைப்பது, அதற்கான வாடகை அதிகாரி, பிணைத்தொகை வைப்பீடு, வாடகை ஒப்பந்தம், வாடகை ரசீது, சொத்து பழுது பார்ப்பு, பராமரிப்பு, காலி செய்யாத பட்சத்தில் நஷ்டஈடு ஆகியவை இந்த சட்ட மசோதாவில் இடம் பெற்றுள்ளன.
மசோதாவில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
⧭ உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்  ஆகிய இரு தரப்பினருக்கும் இடையில் எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் செய்யப்படாமல் கண்டிப்பாக வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ  விடக்கூடாது.
⧭ மேற்கண்ட இருவரின் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டால்  மாவட்ட கலெக்டர் நிலையில் நியமிக்கப்பட்ட வாடகை அதிகாரிகள் அதனை விசாரிப்பார்கள். வாடகை குறித்த சிக்கல்களை நீதிமன்றம் மற்றும் அதற்கான தீர்ப்பாயம் ஆகியவை விசாரிக்கும்.
⧭ அரசு நிறுவனங்கள் மற்றும் மத நெறி சார்ந்த வழிபாட்டு ஸ்தலங்களுக்குச் சொந்தமான  சொத்துகள் மேற்கண்ட  சட்ட வரம்புக்குள் வராது.
⧭ வீட்டு வாடகைக்குச் செல்பவர்கள், அந்த வீட்டின் உரிமையாளரிடம் முதலில் ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும். அந்த ஒப்பந்தத்தை வாடகை அதிகாரியின் ஒப்புதல் பெற்று பதிவு செய்து கொள்ள வேண்டும். அதற்குரிய பதிவு எண் அதிகாரியால் வழங்கப்படும்.
⧭ வாடகை ஒப்பந்தம் முடிவதற்குள் அந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பினால் இரு தரப்பும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு புதிய ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். ஒரு வேளை ஒப்பந்தம் புதுப்பிக்காவிட்டால் அல்லது ஒப்பந்த காலத்துக்கு பின்னரும் வீட்டை காலி செய்யாவிட்டால் ஒப்பந்தம் முடிந்த ஆறு மாதங்கள் வரை மட்டும் வீட்டில் இருக்க முடியும். அதன்பின் வாடகைதாரர் கண்டிப்பாக காலி செய்ய வேண்டும்.
⧭ ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள வாடகை தொகையை மட்டுமே வீட்டு உரிமையாளர் பெற வேண்டும். மேலும், வாடகையை அதிகரிப்பதாக இருந்தால் மூன்று மாதங்களுக்கு முன்னர் எழுத்துப்பூர்வ அறிவிப்பை பதிவுத்தபால் மூலம் வாடகைதாரருக்கு வழங்க வேண்டும்.
⧭ வாடகைக்கு வந்ததும், கட்டிடத்தின் இடவசதியை அதன் உரிமையாளர்  குறைத்தாலோ அல்லது ஏதாவது இடர்களை ஏற்படுத்தினாலோ வாடகையை குறைக்கும்படி, தனி அதிகாரியிடம் வாடகைதாரர் கோரிக்கை அளிக்கலாம்.
⧭ வீட்டின் உரிமையாளர் முன்பணமாக மூன்று மாத வாடகை மட்டுமே வாங்க வேண்டும். அதற்கு அதிகமாக பெறுவது சட்ட விரோதமாகும். வாடகைதாரர் காலி செய்த ஒரு மாதத்திற்குள் அந்த முன்பணத்தை வீட்டு உரிமையாளர் திருப்பிக் கொடுக்க வேண்டும்.  ஒவ்வொரு மாதமும் வாடகையை பெற்றுக்கொண்டதற்கான ரசீதை வீட்டு உரிமையாளர்  வாடகைதாரருக்கு வழங்க வேண்டும்.
⧭ வீட்டின் உரிமையாளர் வாடகைக்கு விட்ட வீட்டில் எல்லா நேரமும் நுழைய இயலாது. ஒரு நாளுக்கு முன் தகவல் அளித்த பின்பே வீட்டுக்குள் நுழையலாம்.
இது சம்பந்தமாக தந்தி டி.வி.யில் வெளியான செய்தியைக் காண கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்யவும்.
******************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 23.08.2018 

Wednesday, August 22, 2018

மதம் மாறினாலும் ஜாதி மாறாது - தீர்ப்பு

ஹிந்துவாக மாறிய பெண்ணின் பணியை உறுதி செய்தது ஐகோர்ட்
சென்னை, 'கிறிஸ்தவ மதத்தில் இருந்து, ஹிந்து மதத்துக்கு மாறிய, ஆதிதிராவிட பெண்ணின், பணி நியமனம் சரியே' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிறிஸ்துவ மதத்திலிருந்து.......
திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, சிக்கத்தம்பூப்பாளையத்தைச் சேர்ந்தவர், டெய்சி ப்ளோரா; கிறிஸ்தவ ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர். பின், ஹிந்து மதத்துக்கு மாறி, மேகலை என, பெயர் சூட்டிக் கொண்டார்
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்
ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவரை, 1999-ல், திருமணம் செய்து கொண்டார்இளநிலை உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்து, 2004-ல், தேர்வு எழுதினார். அதிக மதிப்பெண் எடுத்தும், தேர்வு செய்யப்படவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது, அவரது ஜாதி சான்றிதழ் ஏற்கப்படவில்லை என்பது தெரிய வந்தது
உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில், மேகலா வழக்கு தொடுத்தார்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவைத் தொடர்ந்து2005-ல், பணியில் சேர்க்கப்பட்டார். பின், கல்வி தகுதியின் அடிப்படையில்2007-ல், பட்டதாரி ஆசிரியராக நியமிக்கப்பட்டார்
பிரதான இந்த வழக்கு, நீதிபதி, ஆர்.சுரேஷ்குமார் முன், விசாரணைக்கு வந்தது. மேகலா சார்பில், வழக்கறிஞர், ஆர்.முத்துகண்ணு ஆஜரானார்.
மனுவை  விசாரித்த,  நீதிபதி  பிறப்பித்த  உத்தரவு:
  • ஹிந்து மதத்துக்கு மாறி, ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவரை, மேகலா திருமணம் செய்து கொண்டுள்ளார்
  • கிறிஸ்தவ மதத்தில் இருக்கும்போதும், ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர் தான். இதில், எந்த சர்ச்சையும் இல்லை.
  • ஹிந்து மதத்துக்கு மாறியதை, அந்த சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளதா; அதை நிரூபிக்க ஆதாரம் உள்ளதா; மதம் மாறிய பின், ஹிந்து மத சடங்குகளை பின்பற்றுகிறாரா என்கிற, சர்ச்சைக்கு தான் தீர்வு காணப்பட வேண்டும்.
  • ஹிந்து மதத்துக்கு மாறிய நிகழ்ச்சி, அதை ஏற்றுக் கொண்டதற்கு ஆதாரமாக, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு அளித்த சான்றிதழ் தாக்கல் செய்யப்பட்டது
  • மேலும், கிராம நிர்வாக அதிகாரி, தாசில்தார், வருவாய் ஆய்வாளரின் பரிந்துரைகள் பற்றியும் தெரிவிக்கப்பட்டது
  • மதம் மாறிய பின், அரசு இதழிலும் அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
  • சர்வதேச அளவில், புகழ் பெற்ற அமைப்பாக, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளது. ஹிந்து மதத்தின் மகத்துவம், அதன் சடங்குகள், நடைமுறைகளை, நாடெங்கும் பரப்பி வருகிறது
  • மதம் மாற்றத்துக்கான பூஜை, 'சுத்தி சடங்கு' நடத்தப்பட்டு, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
  • இந்த சடங்குகளை, 'பண்டிட்' ஒருவர் நடத்தி உள்ளார்.எனவே, நாடு முழுவதும் கிளைகள் கொண்ட, புகழ் பெற்ற ஹிந்து அமைப்பு, மத மாற்றத்தை ஏற்றுக் கொண்டு, சான்றிதழ் வழங்கி உள்ளது.
  • ஹிந்து மத சடங்குகளை மனுதாரர் பின்பற்றுவதாக, அந்தப் பகுதியில் வசிப்பவர்களும், வருவாய் அதிகாரிகளிடம், வாக்குமூலம் அளித்துள்ளனர்
  • அதனால், ஹிந்து ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர் என, மனுதாரர் கோருவதில், எந்த சந்தேகமும் இருக்க முடியாது.
  • மனுதாரரின் ஜாதி பற்றி, இன்னும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. அவரது ஜாதிஅந்தஸ்தின் அடிப்படையில், பணியில் தேர்வு செய்து நியமிக்கப்பட்டதை, உறுதி செய்ய வேண்டும்
  • அதன்படி தற்போது, பட்டதாரி ஆசிரியராக பணியாற்றுவது,உறுதி செய்யப்படுகிறது
  • ஜாதியை காரணம் காட்டி, இவரது நியமனத்தில் தொந்தரவு கூடாது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
********************************நன்றி : தினமலர் நாளிதழ் -22.08.2018 செய்தி