disalbe Right click

Monday, December 26, 2016

பினாமி சொத்து வைத்திருந்தால் 7 வருடங்கள் சிறை!


பினாமி சொத்து வைத்திருந்தால் 7 வருடங்கள் சிறை!

பினாமி சொத்து வைத்திருந்தால் 7 ஆண்டுகள் சிறை; சொத்து பறிமுதல்: மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்
பினாமி சொத்து வைத்திருப் போருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அத்துடன் அந்த சொத்தும் பறிமுதல் செய்யப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பு நீக்கம் என்ற அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து நேற்று முன் தினம் ‘மன் கி பாத்’ (மனதில் குரல்) வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 1988-ல் கொண்டு வரப்பட்ட பினாமி சொத்து பரிவர்த்தனை தடைச் சட்டம் கடுமையான திருத் தங்களுடன் விரைவில் அமல்படுத் தப்படும் என தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து வருமான வரித் துறை உயரதிகாரிகள் கூறியதாவது:

பணமதிப்பு நீக்க நடவடிக்கை யின் அடுத்த கட்டமாக சந்தேகப் படும்படியான ரியல் எஸ்டேட் சொத்துகளையும் அரசு கண் காணிக்க வேண்டும் என எதிர்பார்த் தோம். அதற்கு ஏற்றபடி பிரதமர் நரேந்திர மோடியும் கடுமையான விதிகளுடன் பினாமி சொத்து பரிவர்த்தனை தடைச் சட்டத்தை அமல்படுத்தப் போவதாக தெரி வித்துள்ளார். எனவே கடந்த ஜூலை வரை தாக்கல் செய்யப் பட்ட வருமான வரி கணக்கின் அடிப்படையிலும், வங்கி பரி வர்த்தனைகள் அடிப்படையிலும் சந்தேகப்படும்படியான ரியல் எஸ்டேட் சொத்துகள் பற்றிய தக வல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்தச் சூழலில் பினாமி சொத்து பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் அடிப்படையில் பினாமி சொத்து வைத்திருப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். அத்துடன் அந்த சொத்தும் பறிமுதல் செய்யப்படும்.

தற்போதைய கணக்கெடுப்பின் படி ஒவ்வொரு நகரத்திலும் 5 முதல் 10 சதவீத ரியல் எஸ் டேட் நிலங்கள் வரி ஏய்ப்பு செய்பவர்களால் வாங்கப் பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 27.12.2016

No comments:

Post a Comment