disalbe Right click

Friday, January 20, 2017

மாநில தகவல் ஆணையம்


மாநில தகவல் ஆணையம்

நமது நாட்டில் நடைபெறுகின்ற ஊழல்களை வெளிக் கொண்டு வந்ததில் முக்கிய பங்கு வகிப்பது, “தகவல் அறியும்  உரிமைச் சட்டம்-2005” என்றால், அது மிகையாகாது.

சமூக ஆர்வலர்களாக இருந்தாலும் சரி, சாதாரணமானவர்களாக இருந்தாலும் சரி, மேற்கண்ட சட்டத்தை பயன்படுத்தாமல் இருந்திருக்க மாட்டார்கள் என்று சொல்லும் அளவிற்கு இதனது பயன்பாடு இருந்திருக்கிறது. 

சிலரது பெயருக்கு முன்னால் இந்த சட்டத்தின் சுருக்கச் சொல்லானது  (RTI) இணைந்து, அவர்களுக்கு ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

இந்த சட்டத்தைப் போல வேறு எந்த சட்டத்தையும் மக்கள் அதிக அளவு பயன்படுத்தி இருப்பார்களா? என்றால், அது சந்தேகமே.

ஆரம்பத்தில் இருந்த வேகம் மற்றும் கடுமையான நடவடிக்கைகள் எதுவும்  இதனை செயல்படுத்தும் ஆணையத்தில்  தற்போது இல்லை என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய, வருத்தம் தரக்கூடிய விஷயம்.

இருந்தபோதிலும் இந்த சட்டத்திற்கு ஆதரவு இன்னும் குறையவில்லை. பயன்படுத்துபவர்களும் அதனைப் பற்றி விசாரிப்பவர்களும் அதிகமாகிக் கொண்டே போகிறார்கள்.

மாநில தகவல் ஆணையத்திற்கென்று தனியாக  http://www.tnsic.gov.in/ இணையதளம் ஒன்று உள்ளது. 

அதற்குள் சென்று பார்த்தால் 

* தகவல் அறியும் உரிமைச் சட்டம்

* மாநில தகவல் ஆணையம்

* தகவல் எப்படி கோருவது

* தகவல் ஆணைய முடிவுகள் மற்றும் ஆணைகள்

* நடைபெற இருக்கும் வழக்கு பற்றிய விபரங்கள்

* மாநில தகவல் ஆணையத்தின் முகவரி

* மற்ற மாநில தகவல் ஆணையங்களின் இணைப்புகள்

ஆகியவற்றைப் பற்றிய ஏராளமான தகவல்கள் நமக்கு கிடைக்கிறது.

மத்திய தகவல் ஆணையத்தின் இணைப்பிற்கு இதனை கிளிக் செய்யுங்கள்.

http://www.cic.gov.in/

*****************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி**

No comments:

Post a Comment