disalbe Right click

Saturday, April 1, 2017

சேதமான பொருட்களுக்கு நஷ்ட ஈடு


சேதமான பொருட்களுக்கு நஷ்ட ஈடு

சென்னையிலிருந்து லாரியில் கொண்டு வரப்பட்ட பொருள்கள் சேதம் அடைந்த வழக்கில், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.25,500-ஐ லாரி நிறுவனம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ராஜபாளையம், பராசக்திநகரைச் சேர்ந்தவர் தசரதன் மனைவி ராஜலட்சுமி. இவர் சென்னையிலிருந்து வீட்டை காலி செய்து, ராஜபாளையத்திற்கு வருவதற்காக, சென்னை திருவான்மியூர், அண்ணா தெருவில் உள்ள தனியார் நிறுவனத்தை அணுகியுள்ளார். அவர்கள் வீட்டில் உள்ள பொருள்களை 44 மூட்டைகளில் கட்டி, 16.3.13-ஆம் தேதி குறிப்பிட்ட லாரியில் ஏற்றி, மறுநாள் ராஜபாளையத்தில் பொருட்களை இறக்கிவிடுவதாகக் கூறியுள்ளனர். ஆனால் மார்ச் 18-ஆம் தேதி மாலை வேறொரு லாரியில் பொருள்கள் வந்துள்ளன.
இதில், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் சேதம் அடைந்துவிட்டதாம். மேலும் ரூ.13,500 மதிப்புள்ள பொருள்கள் இருந்த மூட்டையைக் காணவில்லையாம். இதனால் மன உளச்சல் அடைந்த ராஜலட்சுமி, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி வி.பாலசுந்தரகுமார், உறுப்பினர்கள் எஸ்.சங்கர், எஸ்.கற்பகசெல்வி ஆகியோர் குறிப்பிட்ட லாரி நிறுவனம், பொருள்கள் செலவிற்கு ரூ.18,500-ம், மன உளச்சலுக்கு ரூ.5ஆயிரமும், வழக்குச் செலவிற்கு ரூ.2 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டனர்.
தினமணி நாளிதழ் செய்தி - 31.03.2015

No comments:

Post a Comment