disalbe Right click

Saturday, April 1, 2017

பழசுக்கு புதுசு - நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு

Image may contain: text

பழசுக்கு புதுசு - நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு

பழுதான ஜெனரேட்டருக்குப் பதிலாக, புதிய ஜெனரேட்டர் வழங்குவதுடன், மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோருக்கு ரூ.10 ஆயிரம் தரவேண்டும் என, ஜெனரேட்டரை தயாரிக்கும் நிறுவனத்துக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகர், கசாப்புக்காரர் தெருவைச் சேர்ந்தவர் மாரீஸ் சுதாகர். இவர், மருந்துக் கடை வைத்துள்ளார். இவர், 19.10.2010இல் விருதுநகர்-மதுரை சாலையில் உள்ள ஒரு ஏஜென்ஸியில் ஜெனரேட்டர் ரூ. 29,200-க்கு வாங்கியுள்ளார். உத்தரவாத அட்டை கேட்டபோது, அந்த ஏஜென்ஸியினர் தரவில்லையாம்.

ஆனால், மூன்றே நாளில் ஜெனரேட்டர் பழுதாகிவிட்டதாம். உடனே, சம்பந்தப்பட்ட கடைக்கு கொண்டு சென்று, பழுது நீக்கிவிட்டு மீண்டும் இயக்கிய போது, கடையில் உள்ள அனைத்து மின்சாதனங்களும் பழுதாகிவிட்டதாம். பின்னர், ஜெனரேட்டரை எடுத்துச்சென்று பழுது நீக்கி கொடுத்துள்ளனர். மறுபடியும் பழுதாகிவிட்டதாம்.

அதையடுத்து, விருதுநகர் ஏஜென்ஸியினர் ஜெனரேட்டரை, சென்னை செயின்ட் தாமஸ் மவுண்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் பழுதுநீக்குவதற்காக அனுப்பி வைத்துள்ளனர். அவர்கள் 1 மாதம் கழித்து 1.12.2010 இல் பழுது நீக்கிவிட்டதாய் கூறி திருப்பி அனுப்பிவைத்துள்ளனர். அதன் பின்னரும், ஜெனரேட்டர் வேலை செய்யவில்லையாம்.

பின்னர், 17.2.2013இல் ஜெனரேட்டரை திரும்ப எடுத்துச்செல்ல மாரிஸ் சுதாகர் கூறியுள்ளார். ஆனால், அவர்கள் திரும்ப எடுத்துச்செல்ல மறுத்துவிட்டனராம்.

எனவே, மாரீஸ் சுதாகார் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி வி. பாலசுந்தரகுமார், உறுப்பினர்கள் எஸ். சங்கர், எஸ். கற்பகசெல்வி ஆகியோர், விருதுநகரிலுள்ள அந்த ஏஜென்ஸி மற்றும் சென்னையில் உள்ள நிறுவனம் ஜெனரேட்டரை எடுத்துக்கொண்டு புதிய ஜெனரேட்டரை வழங்கவேண்டும். அல்லது ரூ. 29,200 வழங்கவேண்டும். மேலும், நுகர்வோர் அடைந்த மனஉளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்குச் செலவுக்கு ரூ. 2 ஆயிரத்தையும் சேர்த்து வழங்கவும் உத்தரவிட்டனர்.

தினமணி நாளிதழ் செய்தி - 01.04.2015

No comments:

Post a Comment