disalbe Right click

Monday, May 8, 2017

சென்னையில் பிச்சை எடுக்கவைக்கப்பட்ட 94 குழந்தைகள் மீட்பு!

சென்னையில் பிச்சை எடுக்கவைக்கப்பட்ட 94 குழந்தைகள் மீட்பு!
சில மாதங்களுக்கு முன்பு, சென்னை வால்டாக்ஸ் சாலை நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்த 8 மாத ஆண்குழந்தை  மற்றும் 9 மாத பெண் குழந்தை  இருவரையும் காரில் வந்த கும்பல் தூக்கிச்சென்றது. இதையடுத்து, எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர் நிர்மல்சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் வழக்குத் தொடர்ந்தார். பிச்சை எடுக்கவைக்கவே குழந்தைகள் கடத்தப்பட்டிருக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பிச்சை எடுக்கும் குழந்தைகள் தொடர்பாகதமிழகக் காவல்துறை அறிக்கை அளிக்குமாறு  நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்திருந்தது. பின்னர்பிச்சை எடுக்கவைக்கப்பட்ட 94 குழந்தைகளை மீட்டதாக, சென்னை தெற்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் சங்கர் தெரிவித்தார். சென்னையில் மீட்கப்பட்டுள்ள குழந்தைகளில் 17 பேரின் பெற்றோர்களை மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கோவையில் மட்டும் 91 குழந்தைகள் மீட்கப்பட்டு, பாதுகாப்பு இல்லங்களில் வைக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர கமிஷனர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். 
"குழந்தைகளைக் கடத்தி, இப்படியான செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கை ஜூன் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  
வரவனை செந்தில்
 நன்றி : விகடன் செய்திகள் - 09.05.2017


No comments:

Post a Comment