disalbe Right click

Monday, May 8, 2017

போலி கையெழுத்து தயார் செய்த தேர்தல் அதிகாரி மீது விசாரணை

போலி கையெழுத்து தயார் செய்த தேர்தல் அதிகாரி மீது விசாரணை

போலி கையெழுத்து தயார் செய்த தேர்தல் அதிகாரி மீது விசாரணை நட‌த்த உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவு
பேரூராட்சி தலைவர் தேர்தலின் போது உறுப்பினரின் கையெழுத்தை போலியாக தயார் செய்த தேர்தல் அதிகாரி மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு  செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் பனைமரத்துப்பட்டி பேரூராட்சி உறுப்பினர் முத்துசாமி சென்னை உய‌‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் தாக்கல் செய்துள்ள மனு‌வி‌ல், பனைமரத்துப்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கடந்த 2006ஆம் ஆண்டு தேர்தல் நடந்தது. தேர்தல் அதிகாரியாக எஸ்.பெருமாள் நியமிக்கப்பட்டார்.

என்னை சேர்த்து 8 உறுப்பினர்களை வாக்களிக்க அனுமதிக்காமல் பேரூராட்சி தலைவராக பாஞ்சாலை வெற்றி பெற்றதாக அறிவித்து விட்டார். இதை தொடர்ந்து அன்று மதியம் நடைபெற்ற துணை தலைவர் தேர்தலை நாங்கள் புறக்கணித்தோம். 15 உறுப்பினர்கள் கொண்ட அவையில் பெரும்பான்மைக்கு தேவையான 8 உறுப்பினர்கள் கலந்து கொண்டால் மட்டுமே தேர்தல் நடத்த வேண்டும்.

நாங்கள் 8 பேர் தேர்தலை புறக்கணித்த நிலையில் எனது கையெழுத்தை ஆள்மாறாட்டத்தின் மூலம் போலியாக தயார் செய்து தேர்தலை நடத்தி துணை தலைவராக செல்வக்குமார் வெற்றி பெற்றதாக அறிவித்து விட்டார். இது சட்டவிரோதமானது.
இது குறித்து காவ‌ல்‌நிலைய‌த்‌திலு‌ம், தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடு‌க்க‌ப்பட‌வில்லை.

இதை தொடர்ந்து உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழக்கு தொடர்ந்தோம். இந்தப் பிரச்சனை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்த உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவிட்டது. எனது கையெழுத்தை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அது போலி என்பது உறுதியானது.

இதையடுத்து தேர்தல் அதிகாரி பெருமாள் மீது சி.பி.சி.ஐ.டி காவ‌ல்துறை‌ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஆனால் துறை ரீதியாக எவ்வித விசாரணையும் த‌மிழக அரசு எடுக்கவில்லை. 6 பிரிவுகளில் பெருமாள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு மனு கொடுத்தோம். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே பெருமாள் மீது துறை நடவடிக்கை எடுக்க ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவிட வேண்டும். அவரை தற்காலிகமாக பணிநீக்கம் செய்ய வேண்டும் எ‌ன்று மனு‌வி‌ல் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி கே.என்.பாட்ஷா மு‌ன்‌னிலை‌யி‌ல் இ‌ன்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தது. மனுதாரர் சார்பாக ஆஜரான வழ‌க்க‌றிஞ‌ர் கே.செல்வராஜ், மன்ற உறுப்பினரின் கையெழுத்தை போலியாக தயார் செய்து தேர்தல் நடத்திய தேர்தல் அதிகாரி பெருமாள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய பேரூராட்சி செயல் அலுவலர் பெருமாள் மீது துறை நடவடிக்கை எடுக்கக்கோரி மனுதாரர் கொடுத்த மனு மீது த‌‌மிழக அரசு 6 வாரத்துக்குள் விசாரணை நடத்தி முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.


நன்றி : http://tamil.webdunia.com - 07.05.2017

No comments:

Post a Comment