disalbe Right click

Sunday, June 25, 2017

எச்சரிக்கை! நர்சிங் பள்ளிகளில் 17 போலி படிப்புகள்:

எச்சரிக்கை! நர்சிங் பள்ளிகளில் 17 போலி படிப்புகள்:
மாணவர்கள் உஷார்
தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத, 'டுபாக்கூர்' நர்சிங் பள்ளி, கல்லுாரிகளில், 17 வகையான போலி படிப்புகள் நடத்தப்படுவது தெரிய வந்துள்ளது. 'விபரம் தெரியாமல், மாணவர்கள் இவற்றில் சேர்ந்து ஏமாற வேண்டாம்' என, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் எச்சரித்து உள்ளது.
தமிழகத்தில், ஜூலை, 17ல், மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் துவங்க உள்ளது. அடுத்த கட்டமாக, நர்சிங் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நடைபெறும்.
வேலை கிடைக்கும்
இந்நிலையில், தமிழகத்தில், அனுமதியின்றி செயல்படும், 'டுபாக்கூர்' நர்சிங் பள்ளி, கல்லுாரிகளில், 17 வகையாக, போலியான நர்சிங் படிப்புகள் நடத்தப்படுவது தெரிய வந்துள்ளது. இதில், சேர்ந்து ஏமாற வேண்டாம் என, நர்சிங் கவுன்சில், எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் பதிவாளர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு:
தமிழகத்தில், நர்சிங் பள்ளி, கல்லுாரிகளுக்கு, இந்தியன் நர்சிங் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் மூலம் அங்கீகாரம் வழங்கப்படு கிறது. இவற்றின் அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளில் படித்தால் மட்டுமே, அந்த சான்றிதழ்கள், நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்யப்படும்; அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
எனவே, நர்சிங் படிக்க விரும்பும்மாணவர்கள், தாங்கள் தேர்வு செய்யும் பள்ளி, கல்லுாரி மற்றும் நர்சிங் படிப்பு ஆகியவை, அங்கீகாரம் பெறப்பட்டதா என, சரிபார்த்து சேர வேண்டும். கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற, கல்லுாரி, படிப்பு விபரங்களை, /www.tamilnadunursingcouncil.com என்ற, இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
ஆனால், நர்சிங் பயிற்சி என்ற பெயரில், சில பெரிய, சிறிய மருத்துவமனைகள், நிறுவனங்கள், பல்கலைகள், கல்லுாரிகள், பள்ளிகள் போன்றவை, 17 வகையான, போலி நர்சிங் படிப்புகளை நடத்து கின்றன.
இந்த படிப்பை முடிக்கும் மாணவர்கள், பெறக்கூடிய சான்றிதழ்களை, நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்ய முடியாது. அரசுப்பணியில் சேர முடியாது. எந்த மருத்துவமனையிலும், செவிலியர்களாக பணியாற்ற முடியாது.
போலி படிப்பை நடத்தும் நிறுவனங்கள்,பள்ளி, கல்லுாரி, பல்கலைகள் ஆகியவை மீது, தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலின் சட்டப்படி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; அபராதம் விதிக்கப்படும்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, போலி நர்சிங் பயிற்சி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே, போலி படிப்பு நடத்தும் நிறுவனங்கள், தாங்களாகவே போலி படிப்பு நடத்துவதை நிறுத்திக் கொள்வது நல்லது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
போலி படிப்புகள் என்ன?
ஆறு மாத படிப்புகள்
டிப்ளமா இன் நர்சிங் அசிஸ்டென்ஸ் கோர்ஸ்
இரண்டு ஆண்டு படிப்புகள்:
டிப்ளமா இன் நர் சிங்,
டிப்ளமா இன் பர்ஸ்ட் எய்ட் நர்சிங்,
வில்லேஜ் ஹெல்த் நர்சிங்,
டிப்ளமா இன் நர்சிங் எய்ட்,
டிப்ளமா இன் பர்ஸ்ட் எய்ட் அண்ட் பிராக்டிகல் நர்சிங்
ஓர் ஆண்டு படிப்புகள்:
சர்டிபிகேட் இன் நர்சிங்,
அட்வான்ஸ்ட் டிப்ளமா இன் நர்சிங் அசிஸ்டென்ட்,
டிப்ளமா இன் ஹெல்த் அசிஸ்டென்ட்,
நர்ஸ் டெக்னிசியன் கோர்ஸ்,
ஹெல்த் கெய்டு கோர்ஸ்
சான்றிதழ் படிப்புகள்:
ஹெல்த் அசிஸ்டென்ட்,
ஹாஸ்பிடல் அசிஸ்டென்ட்,
பெட் சைட் அசிஸ்டென்ட்,
பேஷண்ட் கேர்,
ஹோம் ஹெல்த் கேர்.
நன்றி : தினமலர் நாளிதழ் – 26.06.2017



No comments:

Post a Comment