disalbe Right click

Tuesday, July 25, 2017

துப்புரவு வேலைக்கு ஆங்கில விளம்பரம்!

துப்புரவு வேலைக்கு ஆங்கில விளம்பரம்! 
ஐகோர்ட் பதிவாளருக்கு 'நோட்டீஸ்'
சென்னை: துப்புரவு பணியாளர்கள் பணிக்கு, ஆங்கிலத்தில் விளம்பரம் செய்தது தொடர்பாக, தலைமை பதிவாளருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுநல மனு : சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் புகழேந்தி தாக்கல் செய்துள்ள பொது நல மனு: சென்னை உயர் நீதிமன்றத்தில், துப்புரவு தொழிலாளர்கள் பணி இடங்களை நிரப்பு, உயர் நீதிமன்ற பதிவாளர், சமீபத்தில், பத்திரிகைகளில், ஆங்கிலத்தில் விளம்பரம் கொடுத்துள்ளார். இப்பணிக்கு, 8ம் வகுப்பு கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இக்கல்வி தகுதி உள்ளவர்களுக்கு, ஆங்கிலம் தெரிய வாய்ப்பில்லை.

விசாரணை : இதனால், தகுதி உள்ள நபர்களுக்கு விளம்பரம் தெரியாமல் போய்விடும். விளம்பரத்தை தமிழில் வெளியிட, பதிவாளருக்கு உத்தரவிடவேண்டும்.இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.இம்மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அலுவல் மொழி : வழக்கில், உயர் நீதிமன்றம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக ஆங்கிலம் உள்ளதால், ஆங்கிலத்தில் விளம்பரம் செய்யப்பட்டது' என்றார். மனுவிற்கு பதில் அளிக்க, உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டனர்.

நன்றி : தினமலர் நாளிதழ் செய்தி - 24.07.2017

No comments:

Post a Comment