disalbe Right click

Thursday, August 10, 2017

தூத்துக்குடி காவல்துறையின் புதிய முயற்சி

தூத்துக்குடி காவல்துறையின் புதிய முயற்சி
தூத்துக்குடி காவல்துறையின் புது ஐடியா
பொதுமக்கள், தங்களது புகார்கள் மற்றும் கருத்துகளைத் தெரிவிப்பதற்கு வசதியாக, தூத்துக்குடி காவல்துறை சார்பில் புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது..

பொதுமக்கள், தங்களது புகார்கள், கருத்துகள், குற்றவாளிகளைப் பற்றிய ரகசியத் தகவல்கள், போதைப் பொருள் கடத்தல், பாலியல் தொந்தரவுகள் போன்ற ரகசியத் தகவல்களை, வாட்ஸ்அப் மூலம் தெரிவித்துவருகிறார்கள்..
அவற்றை ஒருங்கிணைத்து நவீனப்படுத்தும் விதமாக, மாவட்ட காவல்துறை சார்பில் 
94898 86262 என்ற  வாட்ஸ்அப் எண்ணும், www.thoothukudipolice.com என்ற இணையதளமும் அறிமுகப்படுத்தி, இன்று தொடங்கப்பட்டுள்ளது.
.இந்தத் திட்டம் குறித்து தெரிவித்த மாவட்ட கண்காணிப்பாளர் அஸ்வின்கோட்னீஸ்..'ஒட்டுமொத்த தமிழ்நாட்டை ஒருங்கிணைத்துப் புதிதாக விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள TAMILNADU POLICE என்ற ஃபேஸ்புக் திட்டத்துக்கு முன்னோடியாக, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் thoothukudi district police என்ற ஃபேஸ்புக் பக்கமும் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.. 

இந்த ஃபேஸ்புக் பக்கத்தின் மெசென்ஜர் மூலமாகவும் பொதுமக்கள் தகவல்களைத் தெரிவிக்கலாம்..
காவல்துறையின் தகவல்கள், அறிவிப்புகளுக்குப் பொதுமக்களிடமிருந்து லைக்ஸ், ஷேர்ஸ், கமென்ட்ஸ் ஆகியவை வரவேற்கப்படுகின்றன..
இதில் பொதுமக்களின் புகார்கள், தகவல்கள் அனைத்தும் ரகசியமாகவே வைக்கப்படும். இந்தத் திட்டங்களின் ஒருங்கிணைப்பாளராக, தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி செல்வ நாகரத்தினம் செயல்படுவார்..
பொதுமக்கள், காவல்துறையுடன் தடையின்றித் தகவலைப் பரிமாறிக்கொள்ளும் விதமாகவே, இந்த இணையதளத் திட்டம் துவக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தகவல் உதவி : வழக்கறிஞரும் எனது நண்பருமான Counsel Sree 

No comments:

Post a Comment