disalbe Right click

Monday, January 1, 2018

மத்திய அரசு பணி

மத்திய அரசின்குரூப்-பிபணிகளுக்கான வயது வரம்பு 27-ல் இருந்து 30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் ஓபிசி பிரிவினரின் வயது வரம்பு 33 ஆக இருக்கும்.
மத்திய அரசின் கீழ் இயங்கி வருகின்ற பல்வேறு துறைகளில் உதவியாளர், வருமான வரி ஆய்வாளர், உதவி அமலாக்க அதிகாரி, அஞ்சலக ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு இந்த வயது வரம்பு உயர்வு உத்தரவு பொருந்தும். கடந்த ஆண்டு துவக்கம் முதல் இது அமுலுக்கு வந்துள்ளது.
மத்திய அரசின்குரூப்-அதிகாரிகள் அனைவரும் யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
GROUP - B அதிகாரிகள்
அதேபோல், மத்திய அரசின் சார்நிலைப்பணி அதிகாரிகள் அதாவது GROUP - B அதிகாரிகள் பணியாளர் தேர்வாணையம் (ஸ்டாப் செலக்சன் கமிஷன்) மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். அடிப்படை சம்பளம் ரூ.9,300 மற்றும் தர ஊதியம் ரூ.4,200 முதல் ரூ.4,600 வரையிலான பதவிகள் இந்த GROUP - B ன் கீழ் வருகின்றன.
இதற்கு முன்னால் GROUP - B பணிகளுக்கான வயது வரம்பு 27 ஆக இருந்து வந்தது. 27 என்பது பொதுப் பிரிவினருக்கான (ஓசி) வயது வரம்பு ஆகும்.
தற்போது மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பணியாளர் தேர்வாணையத்தால் ரூ.4200, ரூ.4600, ரூ.4,800 தர ஊதியத்துடன் கூடிய பணிகளுக்கான வயது வரம்பை 27-லிருந்து 30 ஆக உயர்த்தி மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை கடந்த ஆண்டு ஓர் உத்தரவைப் பிறப்பித்தது.. அந்த உத்தரவின்படி பின்வரும் பணிகளுக்கான வயது வரம்பு 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய உதவியாளர்
உள்துறை அமைச்சக உதவியாளர்
ரயில்வே அமைச்சக உதவியாளர்
வெளியுறவு அமைச்சக உதவியாளர்
பாதுகாப்பு அமைச்சக உதவியாளர்
(மேற்கண்ட பதவிகள் அனைத் துக்கும் தர ஊதியம் ரூ.4,600)
இதர அமைச்சகங்களில் உதவியாளர் (தர ஊதியம் ரூ.4,200, ரூ.4,600)
வருமான வரி ஆய்வாளர்
மத்திய கலால் ஆய்வாளர்
கடத்தல் தடுப்பு ஆய்வாளர்
ஆய்வாளர்
உதவி அமலாக்க அதிகாரி
(மேற்கண்ட பதவிகள் அனைத் துக்கும் தர ஊதியம் ரூ.4,600)
அஞ்சலக ஆய்வாளர்
கோட்ட கணக்காளர்
போதைப் பொருள் தடுப்பு ஆய்வாளர்
(மேற்கண்ட பதவிகள் அனைத்துக்கும் தர ஊதியம் ரூ.4,200)
GROUP - B பணிகளுக்கான வயது வரம்பு 30 ஆக உயர்த்தப்படுவதால் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான வயது வரம்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எஸ்சி, எஸ்டி வகுப்பினரின் வயது வரம்பு 35 ஆகவும், ஓபிசி பிரிவினரின் வயது வரம்பு 33 ஆகவும், மாற்றுத்திறனாளிகளின் வயது வரம்பு 40 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
****************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 02.01.2018

No comments:

Post a Comment