disalbe Right click

Thursday, January 4, 2018

ரயில்பயணியிடம் கொள்ளை நடந்தால்

ரயில்வே துறையே பொறுப்பு'
'பாதுகாப்பான, வசதியான பயணத்தை அளிக்கும் பொறுப்பை, ரயில்வே துறை, தட்டிக்கழிக்க முடியாது; பயணத்தின்போது ரயில் பயணியிடம் கொள்ளை  நடந்தால், அந்த இழப்பை, ரயில்வேதான் ஈடுகட்ட வேண்டும்' என, தேசிய நுகர்வோர் கமிஷன் - National Consumer Disputes Redressal Commission (NCDRC) உத்தரவிட்டு உள்ளது
முதல் வகுப்புப்பெட்டியில்....
கடந்த, 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 8-ம் தேதி  ஜாஸ்மின் மான் என்ற பெண்மணி, டில்லியில் இருந்து கங்காநகருக்கு, சூப்பர் பாஸ்ட் ரயிலில், 'ஏசி' வகுப்பில் சென்றார்அப்போது,  அதிகாலையில், அவர் பயணித்த பெட்டியில் கதவு திறந்திருந்ததால், உள்ளே நுழைந்த திருடன், அவரை தாக்கி, ரூ.2,30,000/- மதிப்புள்ள நகைகளையும், பணத்தையும் பறித்துச் சென்றான்.  அந்த நேரத்தில் அந்தப் பெண்மணி அலறி, ரயில்வே ஊழியர்களை உதவிக்கு அழைத்த போதும், யாருமே வரவில்லை. இதுபற்றி அவர் அடுத்த ஸ்டேஷனில் உள்ள (RPF) ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்தில்  புகார் பதிவு செய்தார். 
நுகர்வோர் கமிஷனில் புகார்
இது தொடர்பாகஜாஸ்மின் மான் மாவட்ட நுகர்வோர் கமிஷனில்,  புகார் அளித்தார்புகாரை விசாரித்த நுகர்வோர் கமிஷன், 'பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு, 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், திருடு போன பொருட்களுக்கான பணமும் சேர்த்து, 2.70 லட்சம் ரூபாயை, வட்டியுடன் தர வேண்டும்' என, ரயில்வேக்கு உத்தரவிட்டது.
மேல்முறையீடு 
இந்த உத்தரவை எதிர்த்துரயில்வே ராஜஸ்தான் நுகர்வோர் கமிஷனில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அது.  தள்ளுபடி செய்யப்பட்டதால், தேசிய நுகர்வோர் கமிஷனில், ரயில்வே சார்பில், இரண்டாம்  மேல்முறையீடு செய்யப்பட்டதுகமிஷன் முன் ஆஜரான, ரயில்வே வழக்கறிஞர், 'பயணியரின் பொருட்களுக்கு, ரயில்வே பொறுப்பாக முடியாது. ரயில்வேயின் ஏஜன்ட் அல்லது பணியாளரிடம், பதிவு செய்து ரசீது பெறப்பட்டிருந்தால் மட்டுமே, ரயில்வே பொறுப்பேற்க முடியும்' என, வாதிட்டார்
தேசிய நுகர்வோர் கமிஷன் பிறப்பித்த உத்தரவு
இதை தேசிய நுகர்வோர் கமிஷன் ஏற்க மறுத்தது, நுகர்வோர் கமிஷன் பயணியரின் பொருள் இழப்பு, ரயில்வே ஊழியர்களின் அலட்சியத்தால் அல்லது ஏஜன்டுகளின் அலட்சியத்தால் ஏற்பட்டது என, பயணியால் நிரூபிக்க முடியாவிட்டால் மட்டுமே, (இழப்பிற்கு) அதற்கு, ரயில்வே பொறுப்பேற்க முடியாது
தற்போதைய வழக்கில், ரயில்வே ஊழியர், 'ஏசி' அறையின் கதவை, அலட்சியமாக திறந்து விட்டு சென்றுள்ளார். அதனால்தான், திருட்டு நடந்துள்ளதுதன் பொருட்களை பாதுகாக்க,  (பயணி) மனுதாரர் குரல் எழுப்பி உள்ளார். ஆனால், ரயில்வே ஊழியர்கள் யாருமே உதவிக்கு வரவில்லை. பயணிகளுக்கு பாதுகாப்பான, வசதியான பயணத்தை அளிக்கும் பொறுப்பை, ரயில்வே துறை, தட்டிக்கழிக்க முடியாது; ரயில் பயணியிடம் கொள்ளை நடந்தால், அந்த இழப்பை ரயில்வேதான், ஈடுகட்ட வேண்டும். எனவே, மாவட்ட நுகர்வோர் கமிஷன் அளித்த உத்தரவு ஏற்கப்படுகிறது
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
***************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 05.01.2018 
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
தீர்ப்பு நகல்கள் உதவி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj  அவர்கள்

No comments:

Post a Comment