disalbe Right click

Wednesday, January 10, 2018

ஆதார் - மாற்று எண்

ஆதார் அட்டையால் தனிநபருடைய ரகசியம் பறி போகும் பிரச்னைக்கு...
மாற்று அடையாள எண் வழங்கும் திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
தனிநபருடைய சுதந்திரம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக, மாற்று அடையாள எண்களை, 'ஆதார்' இணையதளத்தில் இருந்து பயனாளிகளே உருவாக்கிக் கொள்ளும் முறையை, ஆதார் அடையாள அட்டை ஆணையம் தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. இதுபோன்று உருவாக்கப்படும் மாற்று அடையாள எண்களை, மொபைல் போன், 'சிம் கார்டு' பெறுவதற்கு அடையாளம் சரிபார்க்க பயனாளிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நமது நாடு முழுவதும், 120 கோடி மக்களுக்கு, ஆதார் அட்டைகள் இதுவரை வழங்கப்பட்டு உள்ளன. இந்த அட்டையில், தனிநபருடைய கைரேகைகள், கருவிழி ரேகை மற்றும் முகவரி ஆகிய தகவல்கள் இடம் பெற்றிருக்கும். இவ்வாறு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளால், தனிநபர் சுதந்திரம் மற்றும் அவர்களின் ரகசிய தகவல்கள் கேள்விக்குறியாகி இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டில் சமூக ஆர்வலர்கள், வழக்குகள் தொடர்ந்து உள்ளனர்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம்
ஆதார் தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளதாக, அமெரிக்காவைச் சேர்ந்த, 'விக்கி லீக்ஸ்' இணையதள நிறுவனர், எட்வர்டு ஸ்நோடென், சமீபத்தில் எச்சரித்திருந்தார்.இந்நிலையில், தனிநபர் சுதந்திரம், ரகசிய தகவல்கள் கசியும் அபாயம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வாக, 'விர்ச்சுவல்'எனப்படும், 16 இலக்க எண்கள் உடைய, மாற்று அடையாள எண்ணை
Unique Identification Authority Of India
யு..டி..., எனப்படும்இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது.
இதை,பயனாளிகள் ஆதார் ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து, 'டவுன்லோடு' செய்ய முடியும்
இந்த மாற்று அடையாள எண் ஒருவரிடம் இருந்தால், அவர் தனது ஆதார் அட்டையில் உள்ள, 12 எண்களை சொல்ல வேண்டியதில்லை.  இதனை பயனாளிகளே உருவாக்கிக் கொள்ளலாம். 
தேவையான தகவல்கள் மட்டுமே
மொபைல் போன் மற்றும் சேவை நிறுவனங்கள்  இந்த 16 இலக்க அடையாள எண் மூலம், விண்ணப்பதாரரின் பெயர், விலாசம் மற்றும் புகைப்படம் ஆகியவை உள்ளிட்ட அடையாள சரிபார்ப்புக்கு தேவையான தகவல்களை மட்டுமே பெற முடியும்.
எத்தனை முறை வேண்டுமானாலும்
இத்திட்டத்தின் கீழ் ஒரு பயனாளர், எத்தனை முறை வேண்டுமானாலும், தன்னுடைய மாற்று எண்ணை உருவாக்க முடியும். புதிய குறியீடு எண் உருவாக்கப்பட்ட உடன், பழைய குறியீடு எண், தானாகவே ரத்தாகி விடும் என்பது இத்திட்டத்தின் சிறப்புஇந்தத்திட்டம், 01.03.2018  முதல் அமலுக்கு வருகிறது
ஆனால், 01.06.2018ல்  இருந்துதான்  வங்கி, மொபைல் போன் சேவை உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும், மாற்று அடையாள எண்ணை ஏற்றுக் கொள்வது, கட்டாயம் ஆக்கப்படுகிறது.
KYC
Know Your Customer எனப்படும், வாடிக்கையாளர்களின் தகவல்களை தெரிந்து கொள்ளும் நடைமுறைக்கு, மொபைல் போன் சேவை நிறுவனம் போன்றவை, ஒரு நபரின் எந்த தகவல்களைக் கேட்கிறதோ, அவை மட்டுமே தெரிவிக்கப்படும்.
இணையதளம் இணைப்பு
******************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 11.01.2018 

No comments:

Post a Comment