disalbe Right click

Showing posts with label இந்திய தண்டணைச் சட்டம். Show all posts
Showing posts with label இந்திய தண்டணைச் சட்டம். Show all posts

Monday, July 18, 2016

பொய் ஆவணம் தயாரித்தல்


பொய் ஆவணம் தயாரித்தல் - என்ன செய்ய வேண்டும்?
ஒருவர், அவர் கையெழுத்து போட வேண்டிய இடத்தில் கையெழுத்தைப் போடாமல், அவரது பெயரை அவரே எழுதி்னால்கூட, அவர் பொய் ஆவணம் புனைந்தவர் ஆகிறார்.
உதாரணம் - 1
ராமசாமிக்கு வயதாகிவிட்டதால், பிள்ளைகளுக்கு தனது சொத்துக்களை பிரித்துக் கொடுக்க எண்ணி, இருக்கும் சொத்துக்கள் தன் மகன் முருகனுக்கும், தன் மகள் கோமதிக்கும் சரிசமமாக சேரவேண்டும் என்று உயில் எழுதுகிறார். அந்த உயிலில் இருந்த தனது சகோதரியின் பெயரை முருகன் அகற்றி விடுகிறார். முருகன் பொய் ஆவணம் தயாரித்தவர் ஆகிறார்.
உதாரணம் - 2
கணேஷ் என்பவரால் கையெழுத்து போடப்பட்டு கொணர்பவர் பெறக்கூடிய (Bearer cheque) தொகை நிரப்பப்படாத காசோலை ஒன்றை மூர்த்தி என்பவர் பாதையில் கண்டெடுக்கிறார். அதில் 10,000 ரூபாய் என்ற தொகையை மூர்த்தி நிரப்புகிறார். மூர்த்தி பொய் ஆவணம் புனைந்தவர் ஆகிறார்.
தண்டணை என்ன?
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 465ன்படி, பொய் ஆவணம் புனையும் எவரும் இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டணை அல்லது அபராதம் அல்லது இரண்டுமோ விதித்து தண்டிக்கப் படுவார்கள்.

******************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி 

Sunday, July 10, 2016

காவல்துறை அதிகாரியையும் கைது செய்ய


காவல்துறை அதிகாரியையும் கைது செய்ய வைக்கலாம்!
என்ன செய்ய வேண்டும்?
                             ஒருவர் அரசு அதிகாரியாக இருந்து, நீதிமுறை நடவடிக்கையின் எந்தக் கட்டத்திலும், சட்டத்திற்கு முரணானது என்று தெரிந்து இருந்தும், அவரால் அளிக்கப்படுகின்ற அறிக்கை, கட்டளை அல்லது தீர்ப்பு வேறு எதையாவது நெறிகேடான முறையில் அல்லது குரோத மனப்பான்மையுடன் செய்கின்ற அல்லது பகிர்கின்ற (காவல்துறை அதிகாரி மட்டுமல்ல) யாராக இருந்தாலும் ஏழு ஆண்டுகள் வரை நீடிக்கக் கூடிய தண்டணை விதித்து தண்டிக்கப்படுவார். அபராதமும் விதிக்கப்படுவார். அல்லது இரண்டுமே விதித்து தண்டிக்கப்படுவார்.
                   கைது செய்யப்படக்கூடிய குற்றம் செய்தவரை, கைது செய்யாமல் விட்டு வைக்கும் காவல்துறை அதிகாரி இப்பிரிவின் கீழ் தண்டிக்கப் படுவார்.
                              முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டிய புகாரில், சி.எஸ்.ஆர். மட்டும் பதிவு செய்கின்ற காவல்துறை அதிகாரி இப்பிரிவின் கீழ் தண்டிக்கப் படுவார்.
                           
                              சட்டத்துக்கு முரணாக தீர்ப்பு வழங்கினாலும், ஊழல் முறையில் அல்லது தீய நோக்கத்துடன் தீர்ப்பு வழங்கினாலும் நீதிபதியைக்கூட   இந்தப்பிரிவின் கீழ் தண்டணைக்கு உள்ளாக்கலாம்.

Saturday, July 9, 2016

பொய்யாவணம் புனைதல்-தண்டணை


பொய்யாவணம் புனைதல்-தண்டணை-என்ன செய்ய வேண்டும்?

பிறரை ஏமாற்றவேண்டும் என்ற எண்ணத்தோடு ”பயன்படுத்தப்படுகின்ற ஒரு ஆவணத்தை பொய்யாக புனைபவர்” இந்தப் பிரிவின் கீழ் குற்றம் செய்தவர் ஆவார்.

உதாரணமாக, 
பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் சில தீர்மானங்கள் அந்த சங்க நிர்வாகிகளால் நிறைவேற்றப் படுகின்றன. அதனை ஏற்றுக் கொண்டு உறுப்பினர்கள் கையெழுத்து போட வேண்டும். தேவையான கையெழுத்துக்களைப் போட அதிகமான உறுப்பினர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. 
உறுப்பினர்கள் அதிகம் கலந்து கொண்டார்கள் என்பதை மாவட்டப் பதிவாளர் அவர்களிடம் நிரூபிப்பதற்காக பொய்யான பல கையெழுத்துக்கள் அந்த சங்க நிர்வாகிகளால் போடப் படுகிறது. மாவட்டப் பதிவாளர் அவர்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக பொய்யாவணம் தயாரிக்கப் படுகிறது. இதில் ஈடுபட்ட சங்க நிர்வாகிகள் இந்தப் பிரிவி்ன் கீழ் தண்டிக்கப்படுவார்கள்.
அளிக்கப்படுகின்ற தண்டணை
பிறரை ஏமாற்றவேண்டும் என்ற எண்ணத்தோடு ”பயன்படுத்தப்படுகின்ற ஒரு ஆவணத்தை பொய்யாக புனைபவர்” ஏழு ஆண்டுகள்வரை நீடிக்கக் கூடிய சிறைத் தண்டணைக்கு உள்ளாக்கப் படுவார். மேலும் அவருக்கு அபராதமும் விதிக்கலாம்.

மேலும் இதற்கு பிடியாணை தேவையில்லை. ஜாமீனும் கிடையாது.