disalbe Right click

Showing posts with label கடன். Show all posts
Showing posts with label கடன். Show all posts

Friday, October 27, 2017

கல்வி கடன் முகாம்: பள்ளிகளுக்கு உத்தரவு

கல்வி கடன் முகாம்: பள்ளிகளுக்கு உத்தரவு
சென்னை: பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்கள், உயர் கல்வியில் சேர, கல்விக் கடன் வழங்குவற்கான முகாம்களை, பள்ளிகளில் நடத்த, இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
'பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்கள், உயர் கல்வியில் சேர வசதியாக, அவர்களுக்கு, வங்கிகள் வாயிலாக, கல்விக் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும்' என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.
அதன்படி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் அனுப்பிய சுற்றறிக்கையில், 'மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில், கல்விக் கடன் முகாம் நடத்த குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுக்களுடன் இணைந்து, பள்ளி களில் கல்விக் கடன் முகாம்கள் நடத்தி, மாணவர்களின் உயர் கல்விக்கு உதவ வேண்டும்' என, கூறியுள்ளார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 28.10.2017 

Monday, October 2, 2017

புரோ நோட்டு எனப்படும் கடன் உறுதிச் சீட்டு

புரோ நோட்டு எனப்படும் கடன் உறுதிச் சீட்டு
ஒருவர் மற்றொருவரிடம் கடன் வாங்கியதற்கு அத்தாட்சியாக எழுத்து மூலம் உறுதி செய்து கொள்வதற்கு பயன்படுத்தப்படுகின்ற தாளையே,  PROMISSORY NOTE  என்று   கூறுகிறோம்தமிழில் சுருக்கமாக “ புரோ நோட்என்று சொல்கிறோம்.
கடன் கொடுத்தவர் கடனை கேட்டவுடன் கடன் வாங்கியவர் எந்தவித நிபந்தனையும் இன்றி வாங்கிய கடனை அவருக்கு திருப்பிக் கொடுக்க  வேண்டும். இதுவே இந்த புரோ நோட்டின் சாராம்சம் ஆகும்.
மாற்றுமுறை ஆவணச் சட்டம்
குறிப்பிட்ட ஒரு நபருக்கோ அல்லது அவரது உத்தரவு பெற்றவருக்கோ அல்லது முறைப்படி அந்த உத்தரவை கொண்டு வருபவருக்கோ குறிப்பிட்ட ஒரு தொகையைக் கொடுப்பதாக நிபந்தனை ஏதுமின்றி கடன் பெற்றவர் எழுதி கையொப்பம் இட்டுக் கொடுக்கும் முறையே ஆவணக்கடன் உறுதிச் சீட்டு ஆகும்! என்று புரோ நோட்டு பற்றி மாற்றுமுறை   ஆவணச் சட்டம்,   நான்காவது   விதியில்  குறிப்பிடப்பட்டு உள்ளது.
புரோ நோட்டின் சிறப்பு
இதனை முத்திரைத் தாளில் எழுத வேண்டியதில்லை.
எங்கும் பதிவு செய்ய வேண்டும் என்பதில்லை.
 சாட்சிகளிடம் முதலிலேயே கையெழுத்து வாங்க வேண்டியதில்லை.
ரூ.50,000/- வரை கடைசி நேரத்தில் நிரப்பிக் கொள்ளலாம்.  
சாதாரணத் தாளில் எழுதி, ஒரு ரூபாய் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டினால் போதுமானது.
கடன் கொடுப்பவர் நிபந்தனைகள் விதிக்க வேண்டியதில்லை.
முக்கிய விதிகள்
கடன் வாங்கியவர் எந்தவித நிபந்தனையும் இன்றி, வாங்கிய  கடனை,    கேட்டவுடன்  கடன் கொடுத்தவருக்கு திருப்பிக் கொடுக்க  வேண்டும்
 ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டாமல், கடன் வாங்கியவர் புரோ நோட்டில் கையெழுத்து போட்டால் அந்த புரோ நோட்டு செல்லாது.
நிபந்தனைகள் விதிக்கப்பட்ட புரோ நோட்டுகள் செல்லாது.
புரோ நோட்டு எழுதப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு பிறகு செல்லாது.
கடன் வாங்கியவர் வட்டியோ அல்லது அசலோ கடன் பெற்றவரிடம் கொடுக்கும்போது புரோ நோட்டின் பின்புறத்தில் எழுதி அவரது கையெழுத்தை வாங்கிக் கொள்ளவேண்டும்.
அசலும் வட்டியுமாக மொத்தத் தொகையையும் கடன் வாங்கியவர் செலுத்திவிட்டால், புரோநோட்டில் கடன் கொடுத்தவரிடம் எழுதி வாங்கிக் கொள்ள வேண்டும்.
முழுப்பணமும் செலுத்திய பிறகு, எக்காரணத்தை முன்னிட்டும் புரோநோட்டை வாங்க மறக்கக் கூடாது.
புரோநோட்டை வாங்காமல் விட்டுவிட்டால், கடன் கொடுத்தவர், அதனை வேறு ஒருவருக்குமேடோவர்முறையில் எழுதிக் கொடுத்துவிட வாய்ப்பு உண்டு.
வட்டி மற்றும் அசல் கடன் வாங்கியவர் செலுத்தும்போது, அதனை பெற்றுக் கொண்டு கடன் கொடுத்தவர் தருகின்ற ரசீது செல்லாது.
கடன் வாங்கியவர் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால், காவல்நிலையத்தில் புகார் அளிக்க முடியாது. சிவில் வழக்கு தான் போடவேண்டும்.
புரோ நோட்டின் மாதிரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.Related image
****************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

Monday, August 14, 2017

படித்த வேலையற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க

படித்த வேலையற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க 
படித்த வேலையில்லாத இளைஞர்கள் தொழில் தொடங்க இணையதளத்தில் விண்ணப்பிக்கும் புதிய சேவை
படித்த வேலையில்லாத இளைஞர்கள் தொழில் தொடங்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்ட இணையதள சேவை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கே.முத்து (பொறுப்பு) தெரிவித்ததாவது:
படித்த வேலையில்லாத இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பொருட்டு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் 2010-ம் ஆண்டு முதல் செயல் படுத்தப்படுகிறது. விண்ணப்ப தாரர்கள் மாவட்ட தொழில் மையத்துக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கும் சிரமத்தை தவிர்க்கும் வகையில் இணையதள சேவையை தமிழக அரசு கடந்த 1-ம் தேதி தொடங்கியது. எனவேதகுதியுள்ள நபர்கள் இனி www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
பின்னர்பதிவிறக்கம் செய்யப் பட்ட தங்களின் விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் இரு தொகுப்பு கள் இணைத்து திருவள்ளூர் மாவட்ட தொழில் மையத்துக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். பின்னர்அவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
இத்திட்டத்தில் 
உற்பத்தி தொழிலுக்கு ரூ.10 லட்சமும்
சேவை தொழிலுக்கு ரூ.லட்சமும்
வியாபாரத்துக்கு ரூ.லட்சமும்  வங்கிகள் மூலமாக பெற்றுத் தரப்படும். 
8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 முதல் 35 வயதுக்குள் (எஸ்சிஎஸ்டிஎம்பிசிபிசிமுன்னாள் ராணுவத்தினர்மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிருக்கு வயது 45-க்குள்) உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருபவர்கள் இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
கடன் தொகையில் 25 சத வீதம் அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
மேலும்விவரங்கள் பெற திருவள்ளூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை (தொலைபேசி எண். 044-27663796, 044-27666787) தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் முத்து தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம்
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள்
பொது மேலாளர் அலுவலகம்,
மாவட்ட தொழில் மையம்,
மதுரை. 
என்ற முகவரியிலோ அல்லது  0452 - 253 7621 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 14.08.2017

Friday, August 11, 2017

கல்விக் கடன் எளிதாகக் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

கல்விக் கடன் எளிதாகக் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
‘‘வங்கிகளிலிருந்து கல்விக் கடன் பெற நீங்கள் அலைந்ததெல்லாம் கடந்த ஆண்டுடன் முடிந்துவிட்டது. இப்போது நீங்கள் கல்விக் கடன் பெற வங்கிக் கிளைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் அல்லது ஒரு கம்ப்யூட்டா் பிரவுஸிங் சென்டாில் இருந்தோகூட கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க முடியும்.
மத்திய அரசு, கல்விக் கடனுக்காக பிரத்யேகமாகத் துவங்கியுள்ள வித்யா லட்சுமி இணையதளத்தில் (www.vidyalakshmi.co.in) சென்று முதலில் நீங்கள் பதிவு செய்துகொள்ள வேண்டும். தற்சமயம் 40-க்கும் மேற்பட்ட வங்கிகள் வழங்கும் 70-க்கும் மேற்பட்ட கல்விக் கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் உங்களுக்குப் பொருத்தமான திட்டத்தைத் தேர்வு செய்து விண்ணப்பிக்க முடியும்.
இந்த இணையதளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் காலவிரயம், தட்டிக்கழித்தல்களை எளிதில் தவிா்த்துவிடலாம். இந்த இணையதளத்தில் பதிவு செய்யாமல் வங்கிகளில் கல்விக் கடன் பெற வேண்டுமென்றால், அந்தந்த வங்கிகளின் இணையதளத்துக்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிப்பது நல்ல பலன் அளிக்கும்.
நாடு முழுக்க உள்ள 130-க்கும் மேற்பட்ட வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தங்களுக்கு நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான கிளைகள் மூலம் செயல்படுத்திக் கொண்டிருக்கும் 200-க்கும் மேற்பட்ட கல்விக் கடன் திட்டங்கள் உள்ளன.
கிராம வங்கியிலும் வாங்கலாம்
கல்விக் கடன் என்றாலே பெரும்பாலானோர்களுக்கு ஒரு சில பொதுத் துறை வங்கிகள்தான் முதலில் நினைவுக்கு வரும். பொதுத் துறை வங்கிகள் மட்டுமல்லாமல், தனியாா் வங்கிகள், கிராம வங்கிகள், மாநிலக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்திய அரசின் நிா்வாகத்தின் கீழ் செயல்படும் பல்வேறு நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களும் கல்விக் கடன் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. இவை தவிர இன்னும் சில அமைப்புகள்
1. தேசிய பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
2. தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
3. தேசிய சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
4. தேசிய தாழ்த்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
5. தேசிய துப்புரவுத் தொழிலாளா்கள் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
6. தேசிய பழங்குடியினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
அந்தந்தப் பிாிவினாின் மேம்பாட்டுக்காக இவை கல்விக் கடன்களை வழங்கி வருகின்றன. இவை நேரடியாக மக்களுடன் இணைந்து செயல்படுவதில்லை. அந்தந்த மாநிலங்களில் உள்ள மாநிலப் பொருளாதார மேம்பாட்டுக் கழகங்கள், மாநிலக் கூட்டுறவு வங்கிகள், கிராம வங்கிகள், பொதுத் துைற மற்றும் தனியாா் வங்கிகளுடன் இணைந்து தங்களது கடன் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு வருகின்றன.
வட்டி குறைவு
பொதுவாக, பிற வணிக வங்கிகளின் வட்டி விகிதங்களைவிட இந்த நிறுவனங்களின் வட்டி விகிதம் மிகவும் குறைவு. பிற வங்கிகளில் ஆண்டு வட்டி விகிதம் 12% மற்றும் அதற்கும் மேல் உள்ள நிலையில், இந்தப் பொருளாதார மேம்பாட்டுக் கழகங்களின் ஆண்டு சராசாி வட்டி விகிதம் 6% என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும்கூட மத்திய அரசின் வட்டி மானியத் திட்டத்துக்குத் தகுதியுடையதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்களின் பிள்ளைகளுக்கான மத்திய அரசின் கல்விக் கடன் வட்டி மானியத் திட்டங்களைப் பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும். உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளில் படிக்க வாங்கும் கல்விக்கடனுக்கும் வட்டியை மத்திய அரசே பகிர்ந்துகொள்ளும் வகையில் பல்வேறு வட்டி மானியத் திட்டங்களும் உள்ளன.
எவ்வளவு கிடைக்கும்?
பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள, அதாவது ஆண்டுக்கு சுமாா் ரூ.4.50 லட்சத்துக்கும் குறைவான வருமானமுடைய பெற்றோா்களின் பிள்ளைகள் பெறும் கல்விக் கடனுக்கான வட்டியை மத்திய அரசு செலுத்தும் (Central Scheme to Provide Interest Subsidy) திட்டம். மாணவா்கள் படிக்கும் காலம் முடிந்து மேலும் ஓராண்டுக்கும் அல்லது வேலை கிடைத்து ஆறு மாதங்கள் கழித்து இதில் எது முதலில் வருகிறதோ, அதுவரையிலான காலகட்டத்துக்கு உண்டான வட்டியை மாணவா்கள் சாா்பாக மத்திய அரசே வங்கிகளுக்கு நேரடியாகச் செலுத்தும்.
வெளிநாட்டில் படிக்க
அடுத்ததாக, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பெற்றோா்களின் பிள்ளைகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த பெற்றோா்களின் பிள்ளைகள், வெளிநாடுகளில் படிக்க செல்ல வாங்கும் கல்விக் கடனுக்கான வட்டி மானியத் திட்டம், டாக்டா் அம்பேத்கா் கல்விக் கடனுக்கான வட்டி மானியத் திட்டம் (Dr.Ambedkar Central Sector Scheme of Interest Subsidy on Educational Loan for Overseas studies for other backward classes (OBCS) and Economically Backward Classses (EBCS)) என்கிற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை படிக்கும் மாணவா்கள் இந்த வட்டி மானியத் திட்டத்தால் பயன் பெற முடியும்.
கிட்டத்தட்ட இதே அடிப்படையில் பதோ பிரதேஷ் (Padho Pradesh) என்ற பெயாில் வட்டி மானியத் திட்டம் சிறுபான்மை மக்களுக்காகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
யாருக்குக் கடன் கிடைக்கும்?
சாி, யாா் யாரெல்லாம் கல்விக் கடன் வாங்கலாம் என்றால், இந்தியக் குடிமகன்கள் அனைவரும் கல்விக் கடன் வாங்கலாம். ஆனால், இந்தியாவில் படிக்கும் வெளிநாட்டவா்கள் கல்விக் கடன் வாங்க முடியாது.
பொதுவாக, கல்விக் கடன் வரையறைகளை மூன்று பிாிவுகளாகப் பிரித்துப் பாா்க்கலாம். இது இந்தியாவில் படிப்பதற்கும் வெளிநாட்டில் படிப்பதற்கும் பொதுவானது.
முதலாவது சுமாா் நான்கு லட்சம் ரூபாய் வரையிலான கடன். இதைப் பெறுவதற்கு பெற்றோா் அல்லது மாமனாா், மாமியாா் ஆகியோா்களில் ஒருவா் இணைக் கடன்தாரராகச் சோ்க்கப்பட்டு அவா்களது கையெழுத்து மட்டும் இருந்தால் போதுமானது. இந்தக் கடனைப் பெறுவதற்கு வேறு பிணையமோ, பொறுப்போ தேவையில்லை.
இரண்டாவதாக, சுமாா் ரூ.7.50 லட்சம் வரையிலான கல்விக் கடன் பெறுவதற்கு மேற்கண்ட நிபந்தனைகளுடன், மாதச் சம்பளம் பெறுபவரோ அல்லது வருமான வரிச் செலுத்துபவரோ யாராவது ஒருவா் கூடுதலாக ஜாமீன் கையெழுத்துப் போடவேண்டும்.
மூன்றாவதாக, ரூ.7.50 லட்சத்துக்கு மேற்பட்ட கல்விக்கடனுக்கு கட்டாயம் பிணையம் தேவைப்படும். அது கட்டடமாகவோ, நில மாகவோ, அரசாங்க முதலீட்டுப் பத்திரங்களா கவோ, பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளா கவோ, மியூச்சுவல் ஃபண்டு களாகவோ, வங்கி வைப்பு நிதியாகவோ யூ.டி.ஐ, என்.எஸ்.ஸி, கே.வி.பி மற்றும் காப்பீட்டுப் பத்திரங்களாகவோ இருக்கலாம்.
எப்போது கடன் வாங்கலாம்?
பொதுவாக, கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க கால நிா்ணயம் எதுவும் கிடையாது. ஆண்டு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். முதலாம் ஆண்டில் கல்விக் கடன் வாங்காமல், இரண்டாம் ஆண்டோ அல்லது இடைப்பட்ட காலத்தில் எப்போது வேண்டுமானாலும் கல்விக் கடன் பெற முடியும்.
கல்விக் கடன் கிடைக்கவிட்டால்…?
கல்விக் கடன் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது முக்கியமான கேள்வி. கல்விக் கடனுக்கு விண்ணப்பித்தபின் இந்திய ரிசா்வ் வங்கி மற்றும் மத்திய நிதி அமைச்சகம் ஏற்படுத்தியுள்ள வழிகாட்டுதல்களின்படி வங்கிக் கிளைகள் செயல்படாவிட்டால், முதலில் மாவட்ட ஆட்சியரின் புகாா் மனுப் பிரிவில் வெள்ளைத் தாளில் எழுதி புகாா் அளிக்கலாம். அவா் மாவட்ட முன்னோடி வங்கி மூலம் உங்களது குறைகளைக் களைய நடவடிக்கை எடுப்பாா்.
இரண்டாவதாக, சம்பந்தப்பட்ட வங்கியின் மண்டல மேலாளரை அணுகி, அவா் மூலம் உங்கள் குறைகளைத் தீா்த்துக்கொள்ளலாம். அடுத்ததாகச் சம்பந்தப்பட்ட வங்கியின் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பலாம்.
எல்.கே.ஜி-க்கும் உண்டு கல்விக் கடன்!
கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மேற்படிப்புக்காக மட்டுமே கல்விக் கடன் பெற முடியும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது உண்மையல்ல. எல்.கே.ஜி முதல் 12-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.சி மற்றும் ஐ.சி.எஸ்.சி மற்றும் மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் பள்ளி மாணவர்கள், ஐ.டி.சி மற்றும் பாலிடெக்னிக்கில் படிக்கும் மாணவர்களும் கல்விக் கடன் பெறலாம். சிஏ படிப்பவர்கள், 55-வது வயது வரை கல்விக் கடன்கள் பெற முடியும். இதற்கான வாய்ப்புகளைச் சில வங்கிகள் வழங்குகின்றன. மேலும், வேலையில் இருப்பவர்கள் மேற்படிப்பு படிக்கவும், தங்கள் வேலைத்திறனை மேம்படுத்தும் பயிற்சிக் கல்வியைப் பெறவும் கடன் உதவி கிடைக்கும்.
நன்றி : நாணயம் விகடன் – 13.08.2017